வாஷிங்டன், ஜுன்.25 (டிஎன்எஸ்) உலகப் புகழ் பெற்ற பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று (ஜுன்.25) அனுசரிக்கப்படுகிறது.
சென்ற ஆண்டு இதே நாளில்தான் மைக்கேல் ஜாக்சன் காலமானார். இந்நாளையொட்டி உலகம் முழுவதும் உள்ள பாப் இசை ரசிகர்கள் மைக்கேல் ஜாக்சனுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். மேலும் பல நகரங்களில் அவரின் நினைவை கூறும் வகையில் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
பல நகரங்களில் அவரை நினைவு கூறும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மைக்கேல் ஜாக்சன் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். (டிஎன்எஸ்)
மீண்டும் பெக்காம்
ஜோகனஸ்பர்க், ஜுன்.30 (டிஎன்எஸ்) இங்கிலாந்து அணிக்காக பெக்காம் மீண்டும் களம் இறங்குகிறார்.வருகிற செப்டம்பரில் தொடங்க உள்ள ஐரோப்பிய கோப்பை தகுதி சுற்று ஆட்டங்களில் அவர் விளையாடுகிறார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் கேலக்சி அணிக்காக விளையாடி வருகிறார். உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக, அவர் ஏ.சி.மிலான் அணிக்காக 6 மாத காலம் லோனில் விளையாடினார்.கடந்த சீசன் சீரி 'ஏ' போட்டியில் ஜெனோவா அணியுடன் ஏ.சி.மிலான் மோதியது. இந்த போட்டியின் போது,பெக்காமுக்கு கனுக்காலில் தசைநார் கிழிந்து 6 மாதகாலம் ஓய்வெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அவர் விளையாடவில்லை. ஆனால் அணியின் துணை பயிற்சியாளராக அவர் தென்ஆப்பிரிக்கா சென்றிருந்தார்.
இதற்கிடையே அவரது காயம் விரைவாக குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து 2012ம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி தகுதி சுற்று ஆட்டங்களில் அவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவார் எனத் தெரிகிறது. ஐரோப்பிய கோப்பை தகுதி சுற்று போட்டியில் வருகிற செப்டம்பர் 3ந் தேதி பல்கேரியாவுடனும் 7ந் தேதி சுவிட்சர்லாந்து அணியுடனும் இங்கிலாந்து மோதுகிறது.மேலும் பெக்காம் மீண்டும் இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. (நன்றி tamilsportsnews.com)

Subscribe to:
Comments (Atom)