குன்னூர் - உறங்காத பள்ளத்தாக்குகள்!

குன்னூர்,பயணிகள் உள்ளத்தில் நீடித்து நிற்கும் ஒரு அபிப்ராயத்தை உண்டுபண்ணக் கூடிய ஒரு மலை வாசஸ்தலம் ஆகும். இவ்விடம் எளிமையான, மகிழ்ச்சிகரமான நினைவுகள் நிறைந்த குழைந்தப் பருவ ஞாபகங்களை நினைவுறுத்துகிறது. உலகப் புகழ் பெற்ற கோடை வாசஸ்தலமான உதகமண்டலத்திற்கு மிக அருகில் இருக்கும் இங்கு வந்தால் நீங்கள் ஆச்சரியத்தில் மெய்மறந்து போவீர்கள். கடல் மட்டத்திலிருந்து 1850 மீட்டர் உயரத்தில் உறங்கி வழியும் இந்த சிறிய நகரத்தின் சுற்றுச் சூழல்  உங்களை  உடனடியாக  காதலில் வீழ்த்துகிறது.  தனிப்பட்ட  மணத்திற்கும் சுவைக்கும்  பெயர் பெற்ற  நீலகிரி  தேயிலையின் உற்பத்திக்கு இவ்விடம் புகழ் பெற்றது.  
குன்னூர் புகைப்படங்கள் - சிம்ஸ் பூங்கா 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க
குன்னூர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள  நகராட்சிகளில் ஒன்றாகும்.இது ஊட்டியை தலைமையகமாக கொண்ட மாவட்ட ஆட்சி தலைவரின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இங்கு பல ஊர்களில் இருந்து , சில சமயம் பல நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த மக்கள் நிறைந்துள்ளனர்.
நீங்கள் குன்னூரில் எப்போது சென்று தங்கினாலும் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் இருப்பதைக் காண இயலாது. பயணிகள்  குன்னூர் வரும் காலத்தைப்  பொருத்து மழைத் தூறல் அல்லது பெருமழை என வேறுபட்ட காட்சிகளோடு காணப்படுகிறது.
பயணிகளின் ஆர்ப்பாட்டத்தால் நிறைந்து வழிந்தாலும் அமைதியாக  காணப்படும் இவ்விடம் எப்போதும்  ஆள் நடமாட்டத்துடன்  காணப்படுவதால் உறங்கா பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.

நீலகிரி மலை ரயில் : நீலகிரியின் இதயத்துக்குள் ஒரு பயணம்

நீலகிரி வரும் எந்த ஒரு பயணியும், எல்லாப் பயணிகளும், கண்டிப்பாகத் தவற விடக் கூடாத  ஒரு அனுபவம் குன்னூர் மற்றும் ஊட்டி வரை செல்லும் மலை ரயில் பயணம்.
யுனெஸ்கோவின் புள்ளிவிவரப்படி டார்ஜீலிங் மலை ரயில் பாதைக்கு  இணையான உலகப் பாரம்பரியம் மிக்க  பாதையாக இது கருதப் படுகிறது. உலகிலேயே மிகச் சில இடங்களில் மட்டுமே உள்ள மரத்தாலான அடுக்கு பற்சக்கர அமைப்பு இங்கு உள்ளது.
ஆங்கிலேயர்களால் அமைக்கப் பட்ட இந்தப்பாதையில் 1908 முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டது. மதராஸ் ரயில்வே அதிகாரத்திற்குட்பட்டது என்றாலும் இந்திய ரயில்வேயின் சேலம் பிரிவு மூலமாகவே இயக்கப் படுகிறது.
இன்னமும் இது நீராவி எஞ்சின் மூலமாகவே இயங்குகிறது. பணம் மற்றும் நேரத்தை சேமிக்கும் பொருட்டு டீசல் என்ஜினாக மாற்றும் திட்டங்களும் தீட்டப்பட்டு வருகின்றன.
நீலகிரி மலை ரயில் பாதையில் பயணம் செல்லாமல் குன்னூருக்குச் சென்ற பயணம் நிறைவுற்றதாக கருதப்படாது. மேட்டுப்பாளையத்தில் தொடங்கி மலைப்பாதை வழியாக குன்னூர் சென்று , பின்னர் ஊட்டிக்கு செல்கிறது . செல்லும் வழியில் இயற்கை அழகும் , மலைப்பூட்டும் காட்சிகளும்  பயணிகளைக் கட்டிப்போடும் திறன் வாய்ந்தவை.

தேயிலை மற்றும் சாக்லேட்டின் சுவை

குன்னூரின் பொருளாதாரம் பெரும்பாலும் தேயிலை வர்த்தகத்தை சார்ந்து இருக்கிறது. இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் தேயிலை பயிரிடுவது தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது  ஆகியவற்றையே தங்களது வாழ்வாதாரமாக கொண்டிருக்கின்றனர்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் நீலகிரியின் சிறப்பு . குன்னூரும் இதற்கு விதி விலக்கல்ல. குன்னூரின் எந்தத் தெருவிலும் நீங்கள் இதைப் பெற இயலும். கண்டிப்பாக தவற விடக் கூடாத ஒன்று இந்த சாக்லேட்.
குன்னூர் தாவரவளர்ப்பு மற்றும் தோட்டக் கலைக்கு பெயர் பெற்றது . பல அரிய வகை ஆர்க்கிட்கள் மற்றும் பல வகைப் பூக்கள் இங்கு செடிகளாக வளர்க்கப்பட்டு விற்கப்படுகின்றன. உலகில் வேறெங்கிலும் காணக் கிடைக்காத அரிய வகைப் பூக்கள் இங்கு உள்ளது மன நிறைவான அனுபவத்தை தரும்.
மலைவாசஸ்தலம் ஆனதால் குன்னூர் இதன் காலநிலைக்குப் பெயர் பெற்றது. குளிர் காலங்கள் அதிகபட்ச குளிருடனும், கோடைக்காலங்கள் மிதமான தட்பவெப்பத்துடனும் காணப்படும்.
குன்னூர் பயணப்பட விரும்பும் பயணிகள் மழைக்காலத்தில் இதன் அருகில்  செல்லக் கூட ஆசைப்பட மாட்டார்கள். அதிக மழை மற்றும் தாங்க முடியாத குளிர் காணப்படும் என்பதால்  மழைக்காலங்களை தவிர்ப்பது சிறந்தது.
குன்னூரை அடைவது மிக எளிது. கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் ரயிலில் சென்று, அங்கிருந்து குன்னூருக்கு நீலகிரி மலை ரயில் மூலமாகச் செல்லலாம்.
கோயம்புத்தூரில் இருந்து ஊட்டி செல்லும்  ஏறி வழியில் குன்னூரில் இறங்கிக் கொள்ளலாம். கோயம்புத்தூரில் இருந்து குன்னூர் செல்ல மூன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.
அழகிய காட்சிகள், சுற்றிப்பார்க்க பல இடங்கள், சாக்லேட்டுகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் இனிமையான காலநிலை போன்றவை குன்னூரை சுற்றுலாப் பயணிகள் மற்றும் தேனிலவுத்  தம்பதிகள் அதிகம் நாடி வரும் இடமாக செய்துள்ளது.

குற்றாலம்

‘தென்இந்தியாவின் ஸ்பா’ என்று பிரபலமாக அறியப்படும் குற்றாலம், தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். மேற்கு தொடர்ச்சி மலைகளின் மீது கடல் மட்டத்திலிருந்து 167 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குற்றாலம், எண்ணற்ற சுகாதார ஓய்வு விடுதிகள், கிளினிக்குகள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட நீர்வீழ்ச்சிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
குற்றாலம் புகைப்படங்கள் - குற்றாலம் அருவி - ஐந்தருவி 
Image source: commons.wikimedia.org
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க
எண்ணற்ற அருவிகளும் மற்றும் ஆறுகளும் இவ்விடத்தின் கண்களை கவரும் அழகை மேலும் அதிகரிக்க செயவதால் இன்று மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

குற்றாலம் மற்றும் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

இந்த நகரத்தின் அழகை பறைசாற்றுவது மட்டுமின்றி, இந்நகரமானது அதன் அழகிய நீர்வீழ்ச்சிகளான பேரருவி, சிற்றருவி, செண்பகதேவி நீர்வீழ்ச்சி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, பழைய குற்றால அருவி, மற்றும் புலி அருவி போன்ற நீர்வீழ்ச்சிகளுக்கு புகழ்பெற்றது.
மேலும் இந்நகரில் பல்வேறு கோயில்கள் உள்ளன. அவை திருகுற்றால நாதர் கோவில், திருமலை கோவில், குமரன் கோவில், காசி விஸ்வ நாதர் கோவில், தக்ஷினாமூர்த்தி கோவில், பாப நாசம் உலகாம்பிகை மற்றும் சிவன் கோவில், ஐயப்பன் கோவில் முதலியன.
இந்நகரத்தை சுற்றியுள்ள மற்ற கண்கவர் இடங்கள் தெற்கு மலை எஸ்டேட், ஐந்தருவியை ஒட்டி அமைந்துள்ள படகு இல்லம், மற்றும் பழைய குற்றால அருவி. பாம்பு பண்ணையும், மீன் பண்ணையும் பேரருவிக்கு அருகில் அமைந்துள்ளன மற்றும் சிறுவர்களுக்கான பூங்காக்களும் நிறைய உள்ளன.
குற்றாலம் என்ற பெயர் உள்ளூர் மக்களால் இன்னும் பயன்படுத்தப்பட்டு வரும் குத்தாலம் என்ற பெயரின் திரிபாகும். இந்த அருவி முக்திவேலி, நன்னகரம், கந்தபிதூர், தீர்த்தபுரம், திரு நகரம் மற்றும் வசந்த பேரூர் என்ற பல பெயர்களால் அறியப்படுகிறது.
இந்த நகரத்தோடு தொடர்புடைய ஒரு பிரபலமான புராணக்கதை உள்ளது. சிவன் கைலாசமலையில் நடைபெறும் தனது திருகல்யானத்திற்கு செல்வதற்காக தெற்கில் முண்டியடித்த பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த அகஸ்திய முனிவரை அனுப்பினார் என்று நம்பப்படுகிறது.
குற்றாலத்திலுள்ள பெரும்பாலான கோவில்கள் சிவனிற்கு அர்பணிக்கப்பட்டுள்ளன. பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் பல்வேறு வரலாறுகள் இக்கோவில்களில் உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

குற்றாலத்தை அடைவது எப்படி?

சமீப காலமாக குற்றாலம் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாறி வருவதால் உலக தரம் வாய்ந்த தங்கும் விடுதிகள் இங்கு எழுப்பபட்டு வருகின்றன. குறிப்பாக சீசன் அதிகமாக உள்ள நேரங்களில் முன் பதிவு செய்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இந்நகரம் கேரளா மற்றும் தமிழ் நாடு மாநிலங்களுக்கு அருகில் இருப்பதால் இந்த இரு மாநிலங்களின் வழியாக எளிதில் அணுக முடியும்.
குற்றாலத்தில் இருந்து 85 கி. மீ தொலைவில் உள்ள தூத்துக்குடி குற்றாலம் அருகிலுள்ள நெருங்கிய விமான நிலையம் ஆகும். சென்னை மதுரை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களுடன் இது இணைக்கப்பட்டுள்ளது.
இதன் அருகிலுள்ள ரயில் நிலையம் செங்கோட்டை. எனினும் திருநெல்வேலி இதன் அருகிலுள்ள பெரிய ரயில் சந்திப்பாகும். தமிழ் நாடு மற்றும் கேரளாவின் பல்வேறு நகரங்களில் இருந்து பேருந்து மூலமாகவும் குற்றாலத்தை அடைய முடியும்.

குற்றாலம் வருவதற்கு சிறந்த பருவம்

குற்றாலத்தை சுற்றிப்பார்க்க சிறந்த பருவம் ஜூலை முதல் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட பருவமழை மற்றும் குளிர்கால பருவங்கள் ஆகும். கோடைகாலம் வெப்பமாகவும் வறண்டும் காணப்படுவதால் முக்கிய சுற்றுலா ஈர்ப்பான அருவிகள் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படும்.
பருவ மழை மாதங்களும் அதே போல் குளிர்கால மாதங்களும் மிகவும் இனிமையாக இருக்கும். ஆண்டின் இந்த பருவ மழை காலங்களில் காணப்படும் மழைச்சாரலும், இதமான காற்றும் இந்த காலகட்டத்தில் இந்நகரை சுற்றிப்பார்பதற்கு மேலும் வசீகரிப்பதன் மூலம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன.