விழி பிதுங்கி நிற்கும் விஞ்ஞானிகள் நம் நாட்டு மன்னர்களுக்கு மட்டுமே தெரிந்த திடுக்கிடும் ரகசியங்கள்

இந்தியா என்றாலே ஆன்மீகத்துக்கும், அரசியலுக்கும் பெயர் பெற்றது என்று உலக அளவில் பேசிக்கொள்கிறார்கள். அந்த அளவுக்கு உலகுக்கே கலாச்சாரம் பண்பாடு கற்றுத் தந்த இந்தியாவில் அது மட்டுமா.. அதனுடன் இணைந்த மர்மங்களும், அவிழ்க்கப்படாத முடிச்சுகளும் நிறைந்தே உள்ளன. அப்படி மன்னர்கள் காலத்து கோயில்களிலும் கோட்டைகளிலும் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் அண்டை நாட்டு விஞ்ஞானிகள் கூட விழிபிதுங்கி நிற்கின்றனர். அப்படிபட்ட இடங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாமா? சாயா சோமேஸ்வரர் கோயில் சாயா சோமேஸ்வரர் கோயில் வெளிநாட்டு விஞ்ஞானிகளும் விழிபிதுங்கி வேடிக்கை பார்க்கும் அளவுக்கு பல அதிசயங்களை கொண்டுள்ளது இந்த கோயில் கருவறை முடிச்சு Adityamadhav83 கருவறை முடிச்சு கண்டூர் சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோயில் அமைப்பில் மூன்று கருவறைகள் உள்ளது. அந்த மூன்று கருவறைகளிலும் மூன்று விதமான மர்மங்கள் உள்ளது. முதல் கருவறை முதல் கருவறை இதன் முதல் கருவறை லிங்க கருவறை ஆகும். இங்குள்ள லிங்கத்துக்குப் பின்னால் ஒரு தூணின் நிழல் காணப்படும்.  அதிசய நிழல் அதிசய நிழல் நிழலில் என்ன அதிசயம் என்றால் காலை முதல் மாலை வரை அந்த நிழல் அசைவதே இல்லை. மர்மம் தெரியுமா மர்மம் தெரியுமா மர்மம் என்னவென்றால் இரவு நேரத்தில்கூட அந்த நிழல் இந்த இடத்தை விட்டு மறைவதே இல்லை. பிரம்மா கருவறை இரண்டாவதாக உள்ள கருவறை பிரம்மா கருவறை ஆகும். இந்த கருவறைக்கு எதிரே ஒருவர் நின்றால் அவர் தனது நான்கு நிழல்களை பார்க்கமுடியும். பிரம்மா கருவறை மர்மம் இதுதான் எப்படி ஒரு உருவத்துக்கு நான்கு நிழல்கள் உருவாகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. லிங்கக் கருவறை இது மூன்றாவது கருவறை ஆகும். இந்த கருவறைக்கு எதிரே ஒருவர் நின்றால் அவரின் நிழல் அவருக்கு எதிரே எப்போதும் விழும் அதிசயம் இங்கு நிகழ்கிறது.  மர்மம் இதுதான்அதிசயம் ஆனால் உண்மை நிழல் எப்படி எதிர்த்திசையில் விழும் என்பது ஆராய முடியாத ஒன்றாகவே உள்ளது. கோயிலின் பெயர்க்காரணம் சாயா என்றால் நிழல் என்று பொருள். அதனால்தான் அக்காலத்திலேயே இந்த கோயிலுக்கு சாயா சோமேஸ்வரர் என்று பெயர் வைத்துள்ளனர். நிழல் மர்மங்கள் இந்த நிழலோடு தொடர்புடைய பல மர்மங்கள் அமானுஷ்யமோ, அதிசயமோ அல்ல..  அதிசயம் ஆனால் உண்மைஇது அறிவியல். ஆனால் இந்த நிழல் மர்மங்களின் பின் உள்ள அறிவியலை அறிய முடியாமல் வெளிநாட்டு விஞ்ஞானிகளும் குழம்பி வருகின்றனர். எங்குள்ளது இந்த கோயில் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது. எப்படி செல்லலாம் இந்த கோயில் நல்கொண்டா நகரத்திலிருந்து 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது

வெறும் 2 ரூபாய்க்கு கிடைக்கும் இது, 100 வயாகராவுக்கு சமம் என தெரியுமா?

இன்று நமது வாழ்வியல் மற்றும் உணவியல் மாற்றங்களால் ஆண்மை குறைபாடு அதிகரித்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இதற்கு தீர்வாய் வயாகரா போன்ற மருந்து மாத்திரை தேர்வு செய்வது நிச்சயம் பக்கவிளைவுகளை அளிக்கும். ஆனால், இதற்கு மாற்றாக, 
#3நமது இயற்கை உணவுகளே சில ஆண்மை பெருக சக்தி அளிக்கிறது. அவற்றுள் ஒன்று தான் வெறும் இரண்டு ரூபாயில் கிடைக்கும் ஜாதிக்காய். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் #1 ஜாதிக்காய் மன அழுத்தத்தை குறைக்கும் பயனளிக்கும் குணாதிசயம் கொண்டது. இது மன அழுத்தம் குறைத்து, ஆண்கள் மத்தியில் உணர்ச்சி மேலோங்கவும், விந்தணு எண்ணிக்கை மற்றும் வீரியம் அதிகரிக்கவும் பயனளிக்கிறது. #2 நரம்பு தளர்த்து, ஆண்மை குறைவு, மலட்டுத்தன்மை போன்ற குறைபாடுகளுக்கு ஜாதிக்காய் ஒரு சிறந்த மூலிகை மருந்தாகும். #3 மேலும், நீர்மமான விந்து பிரச்சனைக்கும் ஜாதிக்காய் சிறந்த தீர்வளிக்கிறது. இதனால், விந்தணு நீந்து சக்தியும், விந்தணுக்களின் ஆரோக்கியம், வலிமை மேம்படும். ஜாதிக்காய் பால் | செய்முறை #1 முதலில் ஜாதிக்காயை நெய் ஊற்றி இளம்சூட்டில் வறுத்துக்க வேண்டும். ஜாதிக்காய் பால் | செய்முறை #2 பிறகு நெய்யில் வறுத்த ஜாதிக்காயை பொடியாக்கி தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஜாதிக்காய் பால் | செய்முறை #3 பொடித்து எடுத்து ஜாதிக்காய் பொடியை பசும்பாலில் காய்ச்சி குடித்து வர வேண்டும். நன்மை! தினமும் காலை, மாலை என இருவேளை நெய்யில் வறுத்து பொடியாக்கிய ஜாதிக்காய் பவுடரை பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை பெருகும்

உங்களது கல்லீரலில் அதிகப்படியான நச்சுக்கள் உள்ளது என்பதற்கான அறிகுறிகள்!

கல்லீரல் மட்டுமே உடலின் மிகப்பெரிய உள்ளுறுப்பு என்று சொல்லிவிட முடியாது... ஆனால் இது உடலின் மிக முக்கியமான உள்ளுறுப்பு ஆகும். இது உடலின் சக்தியை சேமித்து வைக்கிறது. இது ஹார்மோன்களின் இயக்கத்திற்கு காரணமாக உள்ளது. மேலும் இது இரத்தத்தை சுத்திகரிக்கும் பணியையும் செய்கிறது. அப்படியென்றால் இதனுடைய முக்கியத்துத்தை பற்றி உங்களிடம் சொல்ல தேவையில்லை.. உங்களுக்கே இதன் முக்கியத்துவம் பற்றி புரிந்திருக்கும் அல்லவா...? கல்லீரல் கோளாறு என்பது மிகவும் ஆபத்தை தரும் ஒன்று. கல்லீரல் பழுதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், அந்த பிரச்சனையை எளிதாக சரி செய்து விடலாம்.
seven signs of you have toxic liver  ஆனால் இதனை நீங்கள் அப்படியே விட்டுவிட்டால் அது பெரிய ஆபத்திற்கு காரணமாக அமைந்துவிடும். இதன் ஆரம்ப கால அறிகுறிகளை வைத்து இது தான் பிரச்சனை என்று கண்டறிவது மிகவும் கடினம். ஆனால் உடலில் நிகழும் சில முக்கியமான மாற்றங்களை கவனிப்பதன் மூலமாக உங்களது கல்லீரலின் நிலையை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த பகுதியில் உங்களது கல்லீரலில் நச்சுக்கள் அதிகப்படியாக படிந்திருக்கிறது என்பதை உறுதி செய்யும் ஏழு அறிகுறிகளை பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை படித்து பயனடையுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் களைப்பு வழக்கத்திற்கு மாறான களைப்பு மற்றும் சோர்வு என்பது கல்லீரல் கோளாறுடன் சம்பந்தப்பட்டதாகும். நீங்கள் எந்த ஒரு வேலையையுமே செய்யாமல் இருந்தாலும் கூட மிகவும் சோர்வாகவும் களைப்பாகவும் உணர்வது, உங்களது கல்லீரலில் உள்ள பாதிப்பை விளக்குகிறது. இந்த சோர்வுடன் சேர்த்து வாந்தி, கவனக் குறைவு, வயிற்றுப் போக்கு போன்றவை உண்டாகும். இதை மன சோர்வு மற்றும் உறுதியற்ற தன்மை என கொள்ளலாம். இவை கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகளின் அறிகுறிகள் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இவை ஆரோக்கிய குறைப்பாட்டிற்கான காரணங்களாகவும் உள்ளன. இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் மருத்துவரை மறக்காமல் சந்திக்க வேண்டியது அவசியமாகும். மஞ்சள் காமாலை மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் பாதிப்புடன் சம்பந்தப்பட்டதாகும். மஞ்சள் காமலை என்பது உங்களது சருமம் மற்றும் நகங்கள் மஞ்சள் நிறம் வெளிப்படும். இது தலைசுற்றல், இனம் புரியாத உடல் வலிகள், வாந்தி போன்றவற்றை உண்டாக்கும். மஞ்சள் காமலை அறிகுறிகள் தெரிந்தால் உங்களது கல்லீரலில் பிரச்சனைகள் உள்ளது என்று அர்த்தமாகும். இதனை அப்படியே விட்டுவிட்டால் அது நாளடைவில் கல்லீரல் புற்றுநோயாக மாறவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே மஞ்சள் காமலை அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதிக கொழுப்பு அதிக கொழுப்பு அளவு என்பது உடலில் பலவகையான ஆரோக்கிய கோளாறுகள் உண்டாக காரணமாகின்றது. இது இருதய கோளாறுகள், சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறுகள், உடலில் அதிக எடை உண்டாதல், கல்லீரல் பிரச்சனைகள் போன்றவற்றிற்கு காரணமாகிறது. நீங்கள் உடலில் உள்ள கொழுப்பு அளவுகளை அதிகமாக ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். உங்களது உடலில் அதிகளவு கொழுப்பு இருப்பது உங்களது கல்லீரலில் கொழுப்பு அளவு அதிகமாக இருப்பதை காட்டும். இந்த் பிரச்சனைகளை போக்க உங்களது இரத்தத்தில் எவ்வளவு கொழுப்பு இருக்கிறது என்பதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இரத்தம் உறைதல் பொதுவாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரணமானவர்களுக்கு இரத்தம் உறையும் வேகத்தை விட வேகமாக தங்களுக்கு இரத்தம் உறைந்து விடுவதை உணர்வார்கள். இது கல்லீரலில் உள்ள அதிகப்படியான நச்சுக்களால் உண்டாகலாம். கல்லீரல் என்பது இரத்தம் உறைதல் மற்றும் இரத்தில் உள்ள கொழுப்புகளின் செயல்பாடுகளை கவனிக்க உதவியாக உள்ளது. இந்த கல்லீரலுக்கு தனது செயல்பாடுகளை செய்வதற்கு தடை உண்டாகும் போதும் இந்த இரத்தம் உறைதல் வழக்கத்தை விட வேகமாக இருக்கும். எனவே உடனடியாக மருத்துவரின் அறிவுரையை பெற்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கவனக் குறைவு கல்லீரலில் நச்சுக்கள் சேர்ந்திருந்தால் எதிலும் சோர்வு, கவனக்குறைவாக இருப்பது போன்ற பிரச்சனைகள் உண்டாகும். சாப்பிட கூட தோன்றாமல் போய்விடும். மேலும் சீக்கிரமாக உடல் எடை குறைவது, மன அழுத்தம் உண்டாவது போன்ற பிரச்சனைகள் உண்டாகிவிடும் சூழல் உருவாகும். இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரிடம் சென்று உங்களது உடல் நலனை கவனித்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். கால்கள் மற்றும் அடிவயிற்றில் வீக்கம் உங்களது வீக்கமான கால்களும், வீக்கமான அடிவயிறுமே உங்களது கல்லீரல் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை பற்றி சொல்லிவிடும். மேலும் வீக்கமான கால்கள் மற்றும் அடிவயிறு ஆகியவை என்றுமே உடல் ஆரோக்கியத்திற்கான அறிகுறியாக இருக்காது. இது போன்ற அறிகுறிகள் தோன்றினால் நீங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும். சரும பிரச்சனைகள் உங்களது கல்லீரலானது உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்யும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் உங்களது கல்லீரல் பலவீனமாகிவிடும் போது அது பல வகையான சரும பிரச்சனைகளை தோற்றுவிக்கும். உங்களுக்கு அலர்ஜிகள் எல்லாம் உண்டானால் அது சருமத்தில் தான் வெளிப்படும். அதே போல தான் கல்லீரல் பாதிப்படைந்தாலும் அதை உங்களது சரும காட்டிக் கொடுத்து விடும். மலத்தில் நிற மற்றம் கல்லீரல் பாதிக்கப்படும் போது இது போதுமான பித்த நீரை உற்பத்தி செய்யாது இதனால் மலத்தில் நிற மாற்றம் ஏற்படும்.இவ்வாறு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். நீர் கோர்த்தல் இது ஒரு பொதுவான அறிகுறி ஆகும்.கல்லீரல் பாதிப்பு அடைந்தால் கணுக்கால் மற்றும் கால்களில் நீர் தேங்கி வீங்கி காணப்படும்.இவ்வாறு நேர்ந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். திரவங்கள் வெளிப்புற திசுக்களில் தேங்குவதால் வீக்கம் ஏற்படும்.சிறுநீரகக் கோளாறுகள்,ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகள்,இதய செயலிழப்பு மற்றும் நிணநீர் நோய் போன்ற காரணங்களாலும் நீர் தேங்கிவிடும். பூண்டு கல்லீரலில் சுரக்கும் நொதிநீர்களை தூண்டி நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. பச்சை காய்கறிகள் பச்சையம் நிறைந்த பசலைக்கீரை, வெந்தயக்கீரை, புரோக்கோலி, முட்டைக்கோஸ் முதலிய நச்சுப் பண்பு நீக்கிகள் (detoxifiers) கல்லீரலுக்கு நல்லது. மஞ்சள் பொறியல் வகைகளுக்கு மட்டுமல்லாமல் உணவுப் பொருட்களில் இருக்கும் புற்றுநோய் காரணிகளை கல்லீரலிலிருந்து வெளியேற்றவும் உதவுகிறது. எலுமிச்சை காலையில் எலுமிச்சை சாறு குடிப்பது கல்லீரலை தூண்டுகிறது. எனவே தினமும் காலையில் எலுமிச்சை சாறை பருகுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பீட்ரூட் இது கல்லீரலில் தேங்கியுள்ள நச்சுகளை ரத்தத்துடன் கலப்பதை தடுத்து, அவற்றை வெளியேற்றும் பணியை செய்கிறது. திராட்சை வைட்டமின் சி மறும் ஆன்டி ஆக்ஸிடெண்ட் இதில் அதிக அளவில் உள்ளன. கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கக் கூடியது.

எழுத்துச் சீர்திருத்தமும் பெரியாரும்

தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முக்கியப் பங்களிப்புச் செய்த பெரியார், அந்தச் சீர்திருத்தத்தை ‘குடிஅரசு’20.1.1935 இதழிலிருந்து நடைமுறைப்படுத்திய போது, அந்த இதழின் தலையங்கத்தில் எழுதினார்: ‘தமிழ் பாஷை எழுத்துக்கள் விஷயமாய் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அனேகருக்கு வெகுகாலத்துக்கு முன்பிருந்தே ஏற்பட்டிருந்த அபிப்பிராயமாகும். தோழர் குருசாமி அவர்கள் எழுதியிருந்ததுபோல பெருத்த பண்டிதர்களில்கூடப் பலர் எழுத்துச் சீர்திருத்த விஷயமாய் வெகு காலமாகவே பேசி வந்திருக்கிறார்கள்.’
பெரியார் பிறரது பங்களிப்புகளையும் அவர்களி டமிருந்து அறிந்துகொண்டதையும் மிகுந்த அடக்க உணர்வோடு ஒப்புக்கொண்டவர்: ‘நாம் 10 ஆவது வயதுக்கு மேல் எந்தப் பள்ளிக்கூடத்திலும் படிக்கவில்லை. நமக்குப் புத்தக ஆராய்ச்சி இல்லை. நமக்குள்ள அறிவு என்பதைக் கொண்டு நடுநிலை என்பதிலிருந்து ஆராய்வதன் மூலம் அறிவதும், ஆராய்ச்சிக்காரர்கள் என்பவர்களைச் சந்திக்கும்போது கேட்டு அறிவதும்தானே ஒழிய வேறில்லை என்பதைக் கண்ணியமாய் ஒப்புக்கொள்கிறோம்’ - குடிஅரசு, 25.12.1927. ‘நடுநிலை’ என்று இங்கு பெரியார் கூறுவது objective என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு உரிய பொருளில்.
துணிச்சல்தான் பெரியார்
எனினும் பெரியாரின் மூலச் சிறப்பு, அவர் தம் பட்டறிவில் கண்டறிந்தவை, பிறரிடமிருந்து கற்றறிந்தவை ஆகியவற்றைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்திலிருந்து புத்திணைவுக்குக் (synthesis) கொண்டுவந்து, அதனை வெகுமக்களும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைத்ததும் அவற்றைத் தம்மால் இயன்றவரை நடைமுறைப்படுத்தியதும், தமது சீர்திருத்த முயற்சியை அறுதியானதாகவும் இறுதியானதாகவும் கொள்ளாமல் இருந்ததும் ஆகும்: “உதாரணமாக நெருப்புக்கு - சுமார் நூறாயிரம், பதினாயிரம் வருடங்களுக்கு முந்தி சக்கிமுக்கிக் கற்கள்தான் ஏற்படுத்தப்பட்டிருந்தன. (தமிழ் மொழி) ‘கடவுளால்’ஆதியில் பொதிய மலையில் இருந்தோ, கைலாயமலையில் இருந்தோ கண்டுபிடிக்கப்பட்டதாகவோ, உபதேசிக்கப்பட்டதாகவோ இருக்கலாம். ஆனால் இன்று நெருப்புக்கு ஒரு பொத்தானை அமுக்குவதோ, ஒரு முனையைத் திருப்புவதோ ஆகிய காரியத்தில் வந்துவிட்டது. சாதாரணமாய், 500 வருடங்களுக்கு முந்தி இருந்த மக்களின் அறிவுக்கும் அவர்களுடைய வாழ்க்கை சவுகரியத்துக்கும் இன்று இருக்கும் மக்களின் அறிவுக்கும், வாழ்க்கை அவசியத்துக்கும் எவ்வளவோ மாறுதலும், முற்போக்கும் இருந்து வருகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது… அதுபோலவே, இன்னும் ஒரு 100 ஆண்டு அல்லது 500 ஆண்டுகள் சென்றால், இன்றைய நிலையிலிருந்து இன்னமும் எவ்வளவோ தூரம் மாற்றமடைந்து முன்னேற்றங்கள் என்பவை ஏற்படலாம். ஆகையால், மாறுதலைக் கண்டு அஞ்சாமல் அறிவுடைமையுடனும் ஆண்மையுடனும் நின்று விஷயங்களை நன்றாய் ஆராய்ச்சிசெய்து, காலத்துக்கும் அவசியத்துக்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளி, கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவு கொண்டவன் என்னும் மனிதனின் இன்றியமையாக் கடமையாகும் என்பதை அனேகர் உணர்ந்திருந்தாலும் அதன் பயனாய் இன்றைய தமிழ் எழுத்துக்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பல என்பதைப் பற்றிப் பலருக்கு அபிப்பிராயம் இருந்தாலும், எவரும் தைரியமாய் முன்வராமலே இருக்கிறார்கள்.’ இவ்வளவு பெரிய காரியத்துக்கு பாஷா ஞானம், இலக்கண ஞானம், பொதுக் கல்வி இல்லாத ஒரு சாதாரண மனிதன் முயற்சிக்கலாமா?’ என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கலாம். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், தகுந்த புலமையும், பாஷா ஞானமும், இலக்கண அறிவும் உள்ளவர்கள் எவரும் முயற்சிக்காவிட்டால் என் செய்வது? தவம் செய்வதா? அல்லது ஜெபம் செய்வதா? தமிழ் இன்றல்ல நேற்றல்ல; எழுத்துக்கள் ஏற்பட்டது இன்று நேற்றல்ல. ஆனால், எழுத்துக்கள் கல்லிலும் ஓலையிலும் எழுதும் காலம் போய் காகிதத்தில் எழுதவும், அச்சு வார்த்துக் கோக்கவும் ஏற்பட்ட காலம் தொட்டு இன்றுவரை, அவற்றில் யாதொரு மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், யாராவது ஒருவர் துணிந்து இறங்க வேண்டியதாயிற்று”.
அந்தத் துணிச்சல்காரர்தான் பெரியார். அன்று அவருக்குப் பக்கபலமாக இருந்தவர்களில் முக்கியமானவர், சுயமரியாதை இயக்கத்தில் பெரியாருக்கு இணையான சிந்தனையாளராகவும் துடுக்குத்தனம் கொண்டவருமாக இருந்த குத்தூசி குருசாமி.
அறிஞர்களின் பங்களிப்பு
பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம், ‘பகுத்தறிவு’ (நாள், வார, மாத ஏடுகள்), ‘புரட்சி’, ‘குடிஅரசு’, ‘விடுதலை’ ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப் பட்டு வந்தபோதிலும், அண்ணாவின் ‘திராவிட நாடு’மற்றும் திமுகவினர் நடத்திவந்த பல ஏடுகள் ஆகியவற்றில் பழைய எழுத்துமுறையே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. பெரியார் நூற்றாண்டு விழாவினையொட்டி விடுக்கப்பட்ட அரசாங்க ஆணை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை அதிகாரபூர்வமாக்கியது என்றாலும், அதை உடனடியாகப் பரவலாக்கி, தமிழ் பேசும் உலகம் முழுவதும் அதை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கான முதன்மைப் பாத்திரம் ‘தினமணி’யின் அன்றைய ஆசிரியராக இருந்த அறிஞர் ஐராவதம் மகாதேவனுக்கே உரியது (பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முழு மரியாதை அளிக்க வேண்டுமென்றால், அய்ராவதம் என்றுதான் எழுத வேண்டும் என்பது வேறு விஷயம்!) அதன் பிறகுதான் (கலைஞர்) மு.கருணாநிதியின்’முரசொலி’யும்கூட புதிய எழுத்து முறைக்கு வந்துசேர்ந்தது.
உயிரெழுத்துக்களில் ‘ஐ, ஒள’என்பன தமிழ் மொழிக்குத் தேவையில்லை என்ற பெரியாரின் கருத்தை முன்னெடுத்துச் செல்வதில் காலஞ்சென்ற தமிழறிஞர்கள் சாலை இளந் திரையன், சாலினி இளந்திரையன் (நடப்புக் காலத்தில்) ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் முதலியோர் பங்களிப்புச் செய்துள்ளனர். தமிழ் அல்லாத பிற இந்திய மொழிச் சொற்கள், அயல் நாட்டு வேற்று மொழிச் சொற்கள் ஆகியவற்றின் ஒலிகளைக் கூடுமான வரை தமிழில் கொண்டு வரவும் , அதேவேளை கிரந்த எழுத்துக்களைத் தவிர்க்கவும் தமிழ் எழுத்துக்களிலேயே சில குறியீடுகளைப் பயன்படுத்துவது பற்றி ஆழமாகச் சிந்தித்தவர் காலஞ்சென்ற சி.சு.செல்லப்பா.
கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் மட்டும் ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான புதிய சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பிற மாநில, பிற நாட்டுத் தொடர்புகள், மாநில - நடுவண் அரசாங்கங்களுக்கான உறவுகள், உயர் கல்வி முதலியன தொடர்பாக ஆங்கிலத்தின் தேவையைப் பற்றிப் பேசும் அரசியல் கட்சிகள், இன்று வரை நமக்குக் கிடைத்துள்ள ஒரே ஒரு நல்ல ஆங்கிலம் - தமிழ் அகராதி 1965-ல் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது மட்டுமே என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். பழைய தமிழ் எழுத்துக்கள் எப்படியிருந்தன என்பதை இந்தத் தலைமுறையினர் அறிந்துகொள்வதற்கும் அது இப்போது பயன்பட்டுவருகிறது.

உடல் பருமனால் 8.8 சதவீதம் பேருக்கு ஆஸ்துமா: குழந்தைகளுக்கும் அதிகளவில் பரவுவதாக அதிர்ச்சி தகவல்


நுரையீரலில் நோய்த் தொற்று இருந்தால் ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. தொடர்ந்து சளி தொல்லை, மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவை ஆஸ்துமாவின் அறிகுறிகள். இதற்கு முறையாக சிகிச்சை எடுக்காதபட்சத்தில் அவை ஆஸ்துமா நோயை ஏற் படுத்தி விடும்.
கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர் ச்சி, பரபரப்பு, மனக்குழப்பம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகளும் ஆஸ்துமாவை வரவழைக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நோய் பற்றிய விழிப் புணர்வு ஏற்படுத்த உலக ஆஸ்துமா தினம் ஒவ்வொரு ஆண்டும் மே முதல் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மே 2-ம் தேதி வருகிறது. இந்த தினத்தையொட்டி மதுரையை சேர்ந்த நுரையீரல் மருத்துவ நிபுணர் எம்.பழனியப்பன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
உலகம் முழுவதும் 30 கோடி மக்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 சதவீதம் நோயாளிகள் இந்தி யாவில் உள்ளனர். இவர்களில் 7.5 சதவீதம் குழந்தைகளாக உள்ளனர். பொதுவாக புகைப்பிடிப்பது, அதனை சுவாசிப்பவர்கள், சில இடங்களின் சீதோஷ்ண நிலை போன்றவை ஆஸ்துமா நோய் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பெருகிவரும் மக்கள் தொகை, போக்குவரத்து மற்றும் நோய் அறிகுறிகள் ஏற்பட்டபின் தொடக்கம் முதல் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. ஆஸ் துமா நோய்க்காக ஆங்கில மருத்துவத்தை தொடர்ந்தவர்கள், அந்த சிகிச்சையைக் கைவிட்டு திடீரென்று மாற்று மருத்துவத்தை நாடிச் செல்வதும் அந்நோயை கட்டுப்படுத்த முடியாமல் போ கிறது. சுற்றுச்சூழலை பாது காப்பது, முறையான மூச்சுப் பயிற்சி, சத்துமிக்க உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றை பின்பற்றினால் இந்நோயைத் தவி ர்க்கலாம்.
உடல் பருமன் அதிகரிப்பால் 8.8 சதவீதம் பேருக்கு ஆஸ்துமா நோய் வருகிறது. பெரிய வர்கள் புகைப்பிடிப்பதால் குழந் தைகளுக்கும், எதிரே முகத் தில் புகையை எதிர்கொள்வர் களுக்கும் ஆஸ்துமா பரவுகிறது.
கார், கழிப்பிட அறையில் அமர்ந்து கொண்டு புகைபிடிப் பதால் புகை காற்றில் படிந்து அப்படியே அந்த அறையில் நிற்கும். அதன்பிறகு அந்த அறைகளில் நுழைவோர் அந்த புகையை காற்றுடன் சேர்ந்து சுவாசிக்கும்போது அவர்களுக்கும் ஆஸ்துமா வருகிறது. இந்த விதத்தில் குழந்தைகளுக்கு அதி களவில் ஆஸ்துமா பரவுகிறது. அதனால், புகைப்பிடிப்பதை கண் டிப்பாக தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு ஆரம்பத்திலே இந்த நோயை கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பது கட்டாயம். இழுப்பு இருந்தால் மட்டுமே ஆஸ்துமா இருக்கும் என நினை ப்பது தவறு. இழுப்பு இல்லாமலே ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

5 கேள்விகள், 5 பதில்கள்: இறைச்சி சாப்பிடுவோருக்குப் பால் தேவையில்லை!- கார்த்திகேய சிவசேனாபதி

நாட்டு மாட்டினங்களைக் காப்பதற்காக 10 ஆண்டு களாக காங்கேயம் காளைகள் ஆராய்ச்சி மையத்தை நடத்திவருபவர் கார்த்திகேய சேனாபதி. அதே நோக்கத்துக்காகவே 2012 முதல் தொடர்ந்து ஜல்லிக் கட்டுக்காகக் குரல் கொடுத்தார். ‘இறுதிவரை’ போராடாமல் பின்வாங்கியதால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். அவருடன் ஒரு பேட்டி:
தை எழுச்சிப் போராட்டம்...
மாணவர்கள், இளைஞர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. எங்கள் அறக்கட்டளையின் 10 நோக்கங்களில் ஒன்று, நாட்டு மாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது. ‘அந்தப் பணியை ஒரு 25 ஆண்டுகளுக்குத் தள்ளிவைத்துவிடலாம்’ என்று நாங்கள் வேடிக்கையாகச் சொல்லும் அளவுக்குத் தமிழகத்தில் நாட்டு மாடுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அது ஏற்படுத்திவிட்டது.
மெரினாவில் கூடியது ஜல்லிக்கட்டுக்கான கூட்டம் மட்டும்தானா?
ஆமாம், ஜல்லிக்கட்டுக்காகக் கூடியவர்கள்தான். ஈழத் தமிழர் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை என்று எத்தனையோ விஷயங்க ளுக்காகப் போராடாமல் விட்டுவிட்டோம், இதற்காகவாவது போராடுவோம் என்று மாணவர்கள் கிளர்ந்தெழுந்தார்கள். அவர்கள் மற்ற கோரிக்கைகளை முழங்கியதில் தவறில்லை. ஆனால், ‘அவற்றையும் நிறைவேற்றினால்தான் இங்கிருந்து கிளம்புவோம்’ என்று சொல்வது சரியாகாது. கண்ணில் பிரச்சினை என்று கண் மருத்துவரிடம் போகிறோம். அவர் சிகிச்சை அளிக்கிறார். உடனே, எனக்கு மூட்டும் வலிக்கிறது. அதையும் குணப்படுத்தினால்தான் இங்கிருந்து செல்வேன்’ என்று அடம்பிடிப்பது நியாயமா? எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே போராட்டம் எப்படித் தீர்வாகும்?
ஜல்லிக்கட்டு மட்டுமே நாட்டு மாடுகளைக் காப்பாற்றி விடுமா?
சிந்து, ஜெர்ஸி பசுக்களை வளர்ப்பவர்கள்தான் சினை ஊசி போடுகிறார்கள். வெறுமனே, ஜல்லிக்கட்டு காளையால் மட்டுமே நாட்டு மாடுகளைக் காப்பாற்ற முடியாது. நாட்டுப் பசுக்களையும் வளர்க்க வேண்டும். அப்போதுதான் நாட்டு மாட்டினத்தைக் காக்க முடியும்.
இன்றைய பால் தேவைக்கு நாட்டு மாடுகள் போதுமா?
முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். முன்பெல்லாம், குழந்தைகள் மற்றும் சொந்தத் தேவைக் குத்தான் பசுக்களை வளர்த்தோமே தவிர, பால் விற்பதற்காக அல்ல. பாலை விற்பது நம் தென்னிந்திய கலாச்சாரமும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் பால் நமது உணவே அல்ல. தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பான்மையானோர் அசைவம் சாப்பிடுபவர்கள்தான். குறைந்தபட்சம் முட்டையாவது சாப்பிடுவார்கள். எஞ்சிய 2% பேர்தான் புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்காகப் பால் அருந்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். இப்போது நாம் எல்லோருமே, அளவுக்கு அதிகமாக பாலைப் பயன்படுத்துகிறோம். அதைத் தவிர்த்துவிட்டால், நாட்டு மாடுகளால் நிச்சயமாக நம் பால் தேவையைப் பூர்த்திசெய்ய முடியும்.
போராட்டத்தில் அரசியல் தலைவர்கள் புறக்கணிக்கப் பட்டது சரியா?
அரசியல்வாதிகளே வேண்டாம் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்களை எல்லாம், “வாங் கய்யா.. நீங்களும் எங்களோடு வந்து உட்காருங்கள்” என்று அவர் கள் சொல்லியிருக்க வேண்டும். கடைசியில் நமது கோரிக்கை களை நிறைவேற்றித் தரும் இடத்தில் அவர்கள்தானே இருக்கிறார் கள். அவர்கள் வேண்டாம் என்றால், டொனால்டு ட்ரம்ப்பிடம் போயா இந்தக் கோரிக்கைகளை நாம் முறையிட முடியும்?

சசிகலா: நியமனப் பதவியும் நீடிக்கும் சிக்கலும்!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது அதிமுக பொதுக்குழு. ஆனால், அந்த நியமனம் செல்லாது என்று புகார் சென்றதன் காரணமாக, விளக்கம் கோரும் கடிதம் ஒன்றை சசிகலாவுக்கு அனுப்பியுள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதிசெய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, அந்தக் கடிதத்துக்கு வருகின்ற 28-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டிய நிலை. அமைப்பு விதிகளைக் காரணம் காட்டி அளிக்கப்பட்டுள்ள புகார் என்பதால், சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
அதிமுகவின் அமைப்புச்சட்ட விதி 20(5)படி பொதுச்செயலாளர் பதவி காலியாகும்பட்சத்தில், புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, முந்தைய பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு கட்சியை வழிநடத்த வேண்டும். இந்த இடத்தில் ‘தேர்ந்தெடுக்கப்படும்’ என்ற பதம் மிக முக்கியமானது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா பொதுச்செயலாளராக ‘நியமனம்’ செய்யப்பட்டிருக்கிறார். இதுதான் சிக்கலைக் கொடுக்கும் முதன்மையான அம்சம்.
மேலும் மேலும் சிக்கல்
அதிமுக சட்டவிதிகளின்படி பொதுச்செயலாளர் இல்லாத நிலையில், அவரது அதிகாரங்களை ஏற்று துணைப் பொதுச்செயலாளர் செயல்பட முடியும். ஆனால், ஜெயலலிதா மறைந்தபோது அப்படியொரு பதவி அதிமுகவில் இல்லை. சிறை செல்வதற்கு முன்னால், கட்சி நிர்வாகப் பணிகளைக் கவனிக்க டிடிவி தினகரனைத் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார் சசிகலா. ஆனால், கட்சியின் பொதுச்செயலாளர் நியமனமே செல்லாத சூழல் உருவாகும் நிலையில், அவர் எப்படி துணைப் பொதுச்செயலாளரை நியமிக்க முடியும் என்ற கேள்வி இருக்கிறது.
அடுத்த மிக முக்கியமான சிக்கல், இரட்டை இலை சின்ன ஒதுக்கீட்டுக் கடிதம். (இங்கே ஒரு செய்தி: அதிமுகவின் அதிகாரபூர்வ சின்னத்தின் பெயர், இரட்டை இலை அல்ல, இரு இலைகள்). அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்க பொதுச்செயலாளர் கையெழுத்திட்ட கடிதம் தேவை. அதிமுக அமைப்பு விதிகளின்படி, அந்தக் கையெழுத்தைப் பொதுச்செயலாளர் மட்டுமே இட முடியும். விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் ஆகியவற்றில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்குப் பொதுச்செயலாளர் சசிகலாவின் நேரடிக் கையெழுத்து வேண்டும்.
என்ன செய்யும் தேர்தல் ஆணையம்?
இந்த இடத்தில் மூன்று சிக்கல் கள் எழுகின்றன. நியமனப் பொதுச் செயலாளர் கையெழுத்திடுவது செல் லுமா, செல்லாதா என்பது முதல் சிக்கல். அடுத்து, ஒவ்வொரு அதிமுக வேட்பாளரும் சிறையில் இருக்கும் சசிகலாவிடம் கையெழுத்து பெறுவது சாத்தியமா?
அப்படியே சாத்தியமானாலும் அது மக்கள் மத்தியில் எப்படியான உணர்வுகளை ஏற்படுத்தும் என்பது இரண்டாவது சிக்கல். அடுத்து, தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கும் குற்றவாளி ஒருவர் கொடுக்கும் பரிந்துரைக் கடிதத்தை ஏற்று, அதற்கேற்ப தேர்தல் ஆணையம் செயல்படுவது சாத்தியம்தானா, இதற் கான முன்னுதாரணம் இருக்கிறதா? இதனைத் தேர்தல் ஆணையம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது மூன்றாவது சிக்கல்.
இந்தச் சிக்கல்களை எதிர்கொள்ள சசிகலா முன்னுள்ள வாய்ப்புகள் சொற்பம். ஒன்று, நியமனத்திலிருந்து வெளியேறி தேர்ந்தெடுக்கப்படுவது, கட்சி அமைப்பு களின் முதன்மை உறுப்பினர்கள் சேர்ந்துதான் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு முதலில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும். அப்படிச் செய்யும் போது, கடந்த காலங்களில் இருந் ததுபோல ‘போட்டியின்றித் தேர்வு’ ஆவதற்கான வாய்ப்புகள் குறைவு. போட்டி ஏற்பட்டால், கட்சிக்குள் சிக்கல் ஏற்படலாம்.
சவாலின் பேருருவம்
இரண்டு, இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய பொதுச்செயலாளர் மட்டுமே கையெழுத்திட முடியும் என்ற சட்டவிதியில் திருத்தம் கொண்டுவர பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. அதன்படி, அங்கீகாரக் கடிதத்தில் கையெழுத்திடும் அதிகாரத்தைப் துணைப் பொதுச்செயலாளர் போன்ற வேறொருவருக்குத் தருவதன் மூலம் சிக்கலைத் தவிர்க்க முடியும். கட்சியின் பொதுச்செயலாளர் ‘தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்’ என்ற விதியைத்தான் மாற்றக் கூடாது என்று அமைப்பு விதிகளில் திட்டவட்டமாகக் கூறப்பட்டிருக்கிறதே தவிர, ஏனைய விதிகளில் மாற்றம் செய்வதற்குத் தடையில்லை.
மூன்று, நியமனப் பொதுச்செயலாளர் என்ற பதவியிலிருந்து நான்காண்டுகள் விலகியிருப்பது. இடைப்பட்ட காலத்தில் பொதுச் செயலாளரை முறைப்படி தேர்ந்தெடுத்து கட்சியை நிர்வகிக்கச் செய்வது. சிறைத் தண்டனை முடிந்ததும், அப்போது நிலவும் அரசியல் சூழலுக்கு ஏற்ப அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வது. இதுவும்கூட முள்ளில்லாத பாதையல்ல. புதிய பொதுச்செயலாளர் கையிலிருந்து கட்சி நழுவவும் செய்யலாம் அல்லது அவர் வசமே கட்சி முழுமையும் சென்றுவிடலாம்.
ஆக, சசிகலாவுக்கு முன்னால் ஒவ்வொரு சவாலும் பேருருவம் கொண்டு நிற்கிறது.