ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின்(ஐ.ஏ.இ.ஏ) பிரதிநிதிகள் குழு இரண்டாவது முறையாக ஈரான் சென்றுள்ளது.
மேலும் தற்போது அணு சக்தி திட்டங்கள் குறித்த ஈரானுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக அக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதான்யாகுவை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சந்தித்து பேசவுள்ளார்.
எனினும் ஈரான் விமான பாதுகாப்பு படை ஒத்திகை நடத்த தயாராகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோல் அணு சக்தி நிலையங்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கும் அணுசக்தி நிலையங்களுக்குமான அச்சுறுத்தல்களை முறியடிக்கும் முகமாக தென் ஈரானில் பெருமளவில் இராணுவ பயிற்சிகள் நடத்தப்படவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.