01. ஒரு முட்டைக்குள் தங்கம் மறைந்திருக்கிறது என்று கற்
பனைசெய்யுங்கள். இனி ஒவ் வொரு பிரச்சனையையும் ஒரு முட்டையாகக் கற்பனை செய் யுங்கள். அதற்குள் ஒரு தங்கம் மறைந்திருக்கிறதாக நினையு ங்கள், இதுவே பிரச்சனையை வெற்றியாக்கும் வழியாகும்.
02. ஒரு பிரச்சனையைத் தீர்ப்ப தற்கு 20 வழிகள் இருக்கின்றன என்று கூறுகிறார்கள். முதலில் ஐந்து வழிகளை தேர்வு செய்யுங்கள், தேடலை ஆரம்பியுங் கள் அதிலிருந்து புதிதாக 20 வழிகள் பிறக்கக் காண்பீர்கள். இதுதான் படைப்பாற்றல் அதாவது படைப்பாற்றலின்
தாயே புதிய சிந்தனைதான்.
0
3.ஒருபிரச்சனையை வேதனை என்று கருதாதீர்கள் அப்படிக் கருதினால் அந்த வேதனை யை உங்கள் பிள்ளைகளுக்கு கொடு த்துவிடுவீர்கள். பிரச்சனையை ஒரு முட்டையாகவும் அதில் தங்கம் மறைந்திருக்கிறது என் றும் நினைத்தால் நீங்களே அந் தப் பிரச்சனைக்கு தீர்வைக் காண்பீர்கள்.
04.உங்கள்மனதை சுறுசுறுப்பாக்க 20 வழிகளைக்காணு ங்
கள், அதுபோல சேம்பேறிக ளாக இருக்கும் பிள்ளைகளி ன் மனதையும் உற்சாகமாகத் தூண்டி விடுங்கள்.
05. ஆர்வமும் துடிப்பும் உள் ள சக்தியை நீங்கள் உருவா க்கினால் உங்கள் குடும்பம் பயனுள்ள ஓர் இலட்சியத் தை அடை யும்.
06. நீங்கள் வார்த்தைகளை கடுமையாக உச்சரித்தால் அன்பு
என்ற மலர் கசங்கிவிடும் என்ப தைப் புரிந்து கொள்ளுங்கள்.
07. வெறுப்பு என்பது கூடாத செயல் அது நமது எண்ணத்தில் இருந்துதான் பிறக்கிறது, வெறு ப்பு வரும்போதெல்லாம் உள்ளே கூடாத எண்ணம் ஒன்று ஓடுவ தைக் கண்டு பிடியுங்கள்.
08. சுவர்க்கம் என்பது ஓர் இடமல்ல மன அழுத்தமில்லாத,
இலேசாக, கனமில்லாத உணர்ச்சி யை அனுபவிக்கும் நிலைதான் சுவ ர்க்கமாகும்.
09. நமது கையில் ஆண்டவன் தந் து புவிக்கு அனுப்பி வைத் திருக்கும் அறிவாயுதம் விலை மதிப்பற்றதா கும், அதைப்பயன்படுத்தாவிட்டால் கழுதை சந்தனக்கட்டையை சுமந் து சென்று அதன் வாசம் புரியாமலே ஒருநாள் செத்தது போ ன்ற கதையாகிவிடும்.
11. நமது தூய உணர்வின் தரத்தை உயர்த்திக் கொள்ளாததா ல்தான் மனம் திரும்பத் திரும்ப பேசுகிறது. ஒரு புலி இரை யை உன்னிப்பாக நோக்குவது போல எண்ணங்க ளை அவதானித்து ஒன்று இரண்டு என்று இலக்கமிடுங்கள் ஒரு கட்ட த்தில் அவை நின்று மனம்
சாந்தியடையும்.
12.ஆணவத்தை விட்டு சரணடையும் போதுதான் ஆன்மீக உடல் வெளிப்படு கிறது. அப்போது இறைவன் அமுதக்கட லாக இருந் து உங்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பதைக் காண்பீர்கள்.
1
3. நாம் வாழ்க்கையின் கீழ் மட்ட த்தில் வாழ்ந்து கொண்டிருப்பதா ல் அதன் உயர்ந்த பரிமாணங்க ளைப்பற்றி பகுத்தறிந்து வாழும் ஆனந்தத்தை இழந்துவிடுகிறோம்
14. நீங்கள் தொடர்ந்து நல்ல வழி யில் சிந்தித்தால் நீங்கள் வெறும னே உள்ளமும் உடலும் மட்டுமல் ல அதற்கும் அப்பாலும் உள்ளவர் என்பதைக் கண்டு கொ ள்வீர்கள்.
15. உள் மன நிலைமைகளை விவேகத் துடன் கையாண்டு
உங்களை அவமானப்படுத்தியதால் வரும் துன்பங்களை மறக்கக் கற்று க்கொள்ளுங்கள். அதை மனதில் வைத்திருந்தால் நல்ல சிந்தனைக ளின் வீச்சுக்கு தடையாகிவிடும்.
16. உள்மன நிலையை மாற்றிக் கொண்டால் அமைதியான வராக வும் அதிக சக் தி மிக்கவராகவும் நீங்கள் மாறிவிடுவீர்கள். வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களில் மாட்டுப்பட்டு தவிக் கமாட்டீர்கள்.
18. இந்தக் கணத்தை ஆனந்தமாகக் கழி… நேற்றைய கெட்ட தினத்தையே எண்ணிக் குமைந்து கொண்டிருக்காதே.
20. நீங்கள் டென்சனாக இருப்பதால்தா ன் சகல பிரச்சனைகளும் வருகிறது. பாம்மை டென்சனுடன் அணுகினால் தீண்டி விடும், இயல் பாக இருந்தால் வந்த வழியே போ ய்விடும்.
21. எதிரியையும் அன்புடன் நேசித்தால் பகை தானாக விலகி
விடும். எந்தக் காரிய ம் செய்தாலும் அன் பின் சக்தியை பிர யோகியுங்கள்.
22. கோபமாக இருக் கும்போது மனம் பார மாக இருக்கும் அன் பாக இருக்கும்போது காற்றில் மிதக்கும் இதுதான் இறைவ னுடைய அருள் சுரக்கும் விதி.
23. புண்ணினால் ஆன காயம் ஆற சிறிது காலம் எடுப்பதை ப்போல கஷ்டங்களின் காயம்ஆறவும் சிறிதுகாலம் எடுக்கு
ம் என்பதைப் புரிந்துகொள்ளுங் கள்.
24.உடல், உணர்ச்சி, அறிவு ஆ கிய மூன்றையும் ஒன்றாக இ ணைத்து சமமாக ஓடவிட்டா ல் மாஜாஜாலம் போல பெரும் சக்தி உருவாகும். அப்போ து இந்தப் பிரபஞ்சம் தேஜோமயமாக மாறி சொல்ல முடியா
த ஆனந் தத்தை ஏற்படுத்தும்.
25. யோகாவின் முக்கிய அம் சமே உடலை டென்சன், படப டப்பு இல்லாமல் தளர்ச்சியா க வைத்துக் கொள்வதுதான். அப்படி இருந்தால் உங்கள் உட லில் ஆரோக்கியமான இரசாயனங்கள் சுரக்கும்.