லிஸ்ட் செக் பண்ணிக்கோங்க?- உலகளவில் பயன்படுத்தப்படும் டாப் 10 பாஸ்வேர்ட்கள்: எல்லாமே இப்படிதான்!

 2021 ஆம் ஆண்டின் மிகவும் பொதுவான கடவுச் சொற்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள பொதுவான டாப் 10 பாஸ்வேர்ட்கள் குறித்து பார்க்கலாம். அனைவராலும் எளிதாக கண்டுபிடிக்கக்கூடிய வகையிலும், மிக எளிதாக ஹேக் செய்யக் கூடிய வகையிலும் இருக்கும் பாஸ்வேர்ட்களான 123456, password, qwerty ஆகியவைகளை பயன்படுத்துபவர்களாக நீங்கள் இருந்தால் இந்த கடவுச்சொல்லை பயன்படுத்தும் நபர் நீங்கள் மட்டுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் அதிக நபர்கள் பயன்படுத்தும் டாப் 10 கடவுச்சொல்கள் விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.


உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஸ்மார்ட் ஹோம்சுக்கு உங்களை வரவேற்கிறோம்! மேலும் தெரிந்து கொள்ளுங்கள் உலகளவில் பொதுவாக பயன்படுத்தப்படும் டாப் 10 கடவுச்சொற்கள் உலகளவில் பொதுவாக பயன்படுத்தப்படும் டாப் 10 கடவுச்சொற்கள் அனைத்தும் பொதுவான வார்த்தைகளாகவே இருக்கின்றன. முதலிடத்தில் இருக்கும் பாஸ்வேர்ட் ஆனது 123456 ஆகும் இதை 103,170,552 பேர் பயன்படுத்துகின்றனர். இரண்டாவது இடத்தில் இருப்பது 123456789 ஆகும் இதை 46,027,530 பேர் பயன்படுத்துகின்றனர். மூன்றாவது இடத்தில் 12345 இருக்கிறது இதை 32,955,431 பேர் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு பகுதிக்கும் இணைய சேவை: 7287 கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்க திட்டம்- மத்திய அரசு அனுமதி! எளிதாக பயன்படுத்தும் கடவுச்சொற்கள் அதேபோல் Qwerty என்ற சொல் 22,317,280 பேர் பயன்படுத்துகின்றனர்.

தொடர்ந்து password என்ற சொல்லை 20,958,297 பேரும், 12345678 என்ற எண்ணை 14,745,771 பேரும், 111111 என்ற எண்ணை 13354149 பேரும் பயன்படுத்துகின்றனர். அதேபோல் எட்டாவது இடத்தில் 123123 என்ற எண் இருக்கிறது இதை 10244398 பேர் பயன்படுத்துகின்றனர். ஒன்பதாவது இடத்தில் 1234567890 என்ற எண் இருக்கிறது இதை 9646621 பேர் பயன்படுத்துகின்றனர். பத்தாவது இடத்தில் இருக்கும் சொல் 1234567 ஆகும் இதை 9396813 பேர் பயன்படுத்துகின்றனர். ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியுடன் ஒப்போ ஏ55எஸ் 5ஜி ஸ்மார்ட்போன்.! மில்லியன் கணக்கான கடவுச் சொற்கள் சுயாதீன ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து பாஸ்வேர்ட் மேலாண்மை சேவையான NordPass ஆனது மில்லியன் கணக்கான கடவுச் சொற்களை ஆராய்ந்து 2021-ல் உலகம் முழுவதும் பொதுவாக பயன்படுத்தப்படும் 200 கடவுச்சொற்களை அறிவித்துள்ளது. 50 நாடுகளின் தரவை பகுப்பாய்வு செய்து முடிவுகள் வழங்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் வைரலான ஒரு புகைப்படம்: இது ஓவியம் அல்ல.! எந்த இடம் தெரியுமா? பிரபலமான விளையாட்டுகளில் இருந்து வார்த்தைகள் பாஸ்வேர்ட்கள் தேர்வு செய்யும் போது பெரும்பாலும் கலாச்சார குறிப்புகளுடன் இணைக்கப்பட்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு பிரபலமான விளையாட்டுகளில் இருந்து வார்த்தைகளை பயனர்கள் பாஸ்வேர்களாக தேர்ந்தெடுக்கின்றனர். உதாரணமாக கால்பந்து விளையாட்டு பெயர்களை பலரும் தேர்ந்தெடுக்கின்றனர். இங்கிலாந்தை பொறுத்தவரை லிவர்பூல் என்ற வார்த்தையை 224160 பேர் பயன்படுத்துகின்றனர். இது மூன்றாவது கடவுச்சொல்லாக இருக்கிறது. அதேபோல் சில கால்பந்து கிளப் "கொலோகோலோ" என்ற பெயரை சிலியில் 15748 பேர் பயன்படுத்துகின்றனர்.

இது ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. மதம் தொடர்பான கடவுச்சொற்கள் அதேபோல் சில நாடுகளில் மதம் தொடர்பான கடவுச்சொற்கள் பிரபலமாக இருக்கிறது. உதாரணமாக நைஜீரியாவில் 19-வது பொதுவான கடவுச் சொல்லாக இருப்பது "கிறிஸ்து" என்ற வார்த்தை ஆகும். அதேபோல் "பிஸ்மில்லா" என்ற அல்லாஹ்வின் பெயரில் உல்ள அரபு சொற்றொடர் சவூதி அரேபியாவில் 1599 மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இது 30-வது மிகவும் பொதுவான சொல்லாகும். ஆண், பெண் போன்ற பாலின வேறுபாடுகள் அதேபோல் ஆண், பெண் போன்ற பாலின வேறுபாடுகள் அடிப்படையிலும் பாஸ்வேர்கள் பிரிக்கப்படுகிறது. அதாவது பெண்கள் Sunshine, iLoveYou போன்ற அன்பு வார்த்தளைகளை பயன்படுத்துகின்றனர். அதேபோல் ஆண்கள் பெரும்பாலும் விளையாட்டு தொடர்பான கடவுச்சொற்களையே பயன்படுத்துகின்றனர். அதேபோல் "onedirection", "Justinbieber" ஆகிய சொற்களும் பெண்கள் மத்தியில் பிரபலமான வார்த்தைகளாக இருக்கின்றன. அதேபோல் Metallica, Slipknot என்ற சொல் ஆண்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. பல பயன்பாடுகளுக்கும் பிரதானமாக இருக்கும் பாஸ்வேர்ட்கள் கணினிகள் மற்றும் நெட்வொர்க் சார்ந்த பல பயன்பாடுகளுக்கும் பிரதானமாக இருப்பது பாஸ்வேர்கள் தான். இதில் பலரும் பலவீனமான பாஸ்வேர்கள் தேர்வு செய்வது அவைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக மாற்றும் வகையிலேயே இருக்கிறது. இவை அனைத்தும் ஆன்லைன் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்க நேரிடும் வகையிலேயே இருக்கிறது. இதுபோன்ற பலவீனமான கடவுச்சொற்களை யூகிப்பது என்பது எளிதானதாகும். பாஸ்வேர்களை கவனமாக மேற்கொள்வதும் சற்று கடினமான முறையில் பதிவிடுவதும் அவசியமாகும். கடவுச்சொற்களில் கவனம் செலுத்த வேண்டும் வாழ்க்கையை எளிமையாக்க, கடவுச்சொற்களை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள நாம் சில நேரங்களில் பாஸ்வோர்டு தொடர்பான தகவல்களை ஏதேனும் ஒரு இடத்தில் சேமித்து வைக்கிறோம். மறதியிலிருந்து இது ஒரு புறம் நமக்கு உதவினாலும், மற்றொரு புறம் இது நடைமுறைக்கு நல்லது அல்ல என்றும், இது பாதுகாப்பானது இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதேபோல் ஒரே கடவுச்சொல்லைப் பல தளங்களில் பயன்படுத்த வேண்டாம். உங்கள் கணக்குகளில் ஒன்றை ஹேக் செய்ய யாராவது நிர்வகித்தால், அவர்கள் அதே கடவுச்சொல்லை மற்ற கணக்குகளிலும் பயன்படுத்த முயற்சிப்பார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெயர்களைக் கடவுச்சொற்களாகப் பயன்படுத்த வேண்டாம் பெயர்களைக் கடவுச்சொற்களாகப் பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக உங்கள் பெற்றோர், உடன்பிறப்புகள், கூட்டாளர்

அல்லது செல்லப்பிராணிகளின் பெயர்கள். உங்கள் காரின் பிராண்ட் பெயரையும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்களை சுற்றி இருப்பவர்கள் இவைகளை எளிதாக அடையாளம் கண்டு பயன்படுத்த வேண்டும். குறிப்பாக பலரும் செய்யும் தவறுகளில் ஒன்று அவர்களின் 10 இலக்கு மொபைல் எண்ணையே பாஸ்வேர்ட் ஆக பயன்படுத்துவது அதை ஒருபோதும் செய்ய வேண்டும். எதிலும் சேமித்து வைக்க வேண்டாம் அதேபோல் பிறந்த தினம், ஆண்டு போன்றவைகளையும் பாஸ்வேர்ட் ஆக பயன்படுத்த வேண்டாம். ஒரே கடவுச்சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டாம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு கடவுச்சொற்களை அனைத்துக்கும் பயன்படுத்த வேண்டாம், அதை குறிப்பாக எதிலும் சேமித்து வைக்க வேண்டாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.



இனி ஆப்பிள் ஐபோனை நீங்களே சர்வீஸ் செய்யலாம்.. ஆப்பிளின் இந்த புது திட்டம் பற்றி தெரியுமா?

 ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக செல்ப் சர்வீஸ் திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த எதிர்பாராத அறிவிப்பின் மூலம், நீங்கள் உங்களின் சொந்த ஆப்பிள் ஐபோன் சாதனத்தைச் சரிசெய்வதற்குத் தேவைப்படும் அசல் பாகங்களை நிறுவனத்திடமிருந்து பெற்று, ஆப்பிள் செல்ப் சர்வீஸ் வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் சாதனத்தைச் சரி செய்துகொள்ளலாம்.


ஐபோன் தயாரிப்பாளர் "செல்ப் ப்சர்வீஸ் சேவை" என்ற பெயரில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஸ்மார்ட் ஹோம்சுக்கு உங்களை வரவேற்கிறோம்! மேலும் தெரிந்து கொள்ளுங்கள் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள செல்ப் சர்வீஸ் திட்டம் இதில் சேரும் வாடிக்கையாளர்கள் அசல் பாகங்கள் மற்றும் கருவிகளை அணுகுவதன் மூலம் தங்கள் சொந்த பழுதுபார்ப்புகளை முடிக்க முடியும்.

இது ஆப்பிள் நிறுவனத்திற்கு வழக்கமான நடவடிக்கை அல்ல. அதன் அசல் பாகங்கள் மற்றும் கருவிகளை யாருக்கும் கிடைக்கச் செய்வது என்பது எதிர்பார்க்கப்படாத மிகப் பெரிய விஷயம். ஆப்பிள் அடிக்கடி சர்வீஸ் செய்யப்படும் மாட்யூல்களில் இருந்து பொதுவான பழுதுபார்ப்புகளில் கவனம் செலுத்துகிறது. இதில் ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 வரிசைகளுக்கான டிஸ்பிளே பழுது, பேட்டரி மாற்றுதல் மற்றும் கேமரா தொகுதிக்கான மாற்றம் ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும். M1 மேக் கணினிகளுக்கும் செல்ப் சர்வீஸ் சேவையா? இதற்குப் பிறகு, ஆப்பிள் அதன் M1 மேக் கணினிகளைத் தனது செல்ப் சர்வீஸ் பழுதுபார்க்கும் திட்டத்தில் சேர்க்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்கள் ஆப்பிளின் உண்மையான உதிரிப்பாகங்களுக்கு ஆர்டர் செய்ய முடியும், மேலும் பயன்படுத்திய பகுதி திரும்பப் பெற்றால் அவர்கள் வாங்கியதற்கான கிரெடிட்டைப் பெறுவார்கள். ஆப்பிளின் புதிய ஸ்டோர் 200க்கும் மேற்பட்ட தனிப்பட்ட பாகங்கள் மற்றும் கருவிகளை நிறுவனம் இந்த திட்டத்தின் மூலம் வழங்குகிறது. ஆப்பிள் நிறுவனம் முதன் முதலில் வடிவமைத்த கணினி ஏலத்திற்கு வந்தது.!

பழுதுபார்க்க பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழி இந்தத் திட்டத்தின் அறிவிப்பு இருந்தபோதிலும், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இன்னும் தொழில்முறை பழுதுபார்ப்பு வழங்குநரைப் பார்க்க வேண்டும் என்றும், உண்மையான ஆப்பிள் பாகங்களைப் பயன்படுத்தும் சான்றளிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் "பழுதுபார்க்க பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழி" என்றும் ஆப்பிள் இன்னும் பரிந்துரைக்கிறது. இந்த செல்ப் சர்வீஸ் சேவை 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் கிடைக்கும், மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் மேலும் பல நாடுகளுக்கு விரிவடையும். DIY செல்ப் சர்வீஸ் திட்டம் வரவேற்கப்படுமா? DIY பழுதுபார்ப்புகளுக்கான மாற்று பாகங்களை வாங்க ஆப்பிள் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப் போகிறது என்பதை அறிய நாங்கள் ஆர்வமாக உள்ளோம், மேலும் சாதனத்தை ஆப்பிள் ஸ்டோருக்கு எடுத்துச் செல்வதற்கு எதிராக அதைச் நாமே சரி செய்வது எவ்வளவு மலிவாக இருக்கும் என்று நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். ஆப்பிளின் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களின் நெட்வொர்க்கிற்கு வெளியே ஆப்பிள் சாதனத்தைப் பழுதுபார்ப்பதை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் கடினமாக்குவதாக ஆப்பிள் அடிக்கடி விமர்சிக்கப்படுகிறது. நீர் எதிர்ப்பு ஆதரவோடு மோட்டோ ஜி பவர் (2022): 3 கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி- விலை ரூ.14,700 மட்டுமே! ஐபோன் எக்ஸ்ஆர் சாதனத்தை இலவசமாகப் பயன்படுத்த அனுமதி இத்துடன் சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் எக்ஸ்ஆர் சாதனத்தை இலவசமாகப் பயன்படுத்த அனுமதிக்கும் என்று அறிவித்துள்ளது. ஆனால், சில குறிப்பிட்ட நிபந்தனைகளை மற்றும் சூழலில் மட்டுமே இதை வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. சில நேரங்களில் ஃபோன்கள் பழுதுபார்க்க சில நாட்களுக்கு மேல் ஆகலாம், மேலும் வாடிக்கையாளர்கள் தொலைப்பேசியைச் சேவை நிலையத்தில் விட்டுவிட வேண்டியிருக்கும். இவர்களுக்கு மட்டுமே இந்த இலவச ஆப்பிள் ஐபோன் XR சாதனம் கிடைக்கும் தற்போதைக்கு இரண்டாம் நிலை சாதனத்தைப் பயன்படுத்த முடியும் என்றாலும், பெரும்பாலான பயனர்கள் தங்களின் முதன்மைச் சாதனங்களில் பெரும்பாலான தரவைச் சேமித்து வைத்திருக்கிறார்கள். மேலும் நீண்ட காலத்திற்கு அதிலிருந்து விலகி இருப்பது கடினமாக இருக்கும். பயனர்களுக்கு ஏற்படும் இந்த சிரமத்தைப் போக்க, ஆப்பிள் ஒரு புதிய உத்தியை வகுத்துள்ளது. சாதனத்தைப் பழுதுபார்ப்பதற்கு அதிக நேரம் எடுக்கும் போது, ​​அதற்கு மாற்றாக ஐபோன் XR ஐ லோனர் சாதனமாக வழங்கத் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. நல்ல முன்னேற்றம்- கையில காசு இல்லனா கூகுள் பே-ல போடுப்பா: நூதன வழிப்பறி., அதிர்ந்து போன இளைஞர்!

தொலைப்பேசியைச் சேவை நிலையத்தில் விட்டுச் செல்ல இனி கவலை இல்லை இந்தச் சேவை அமெரிக்காவிலும் பிற பிராந்தியங்களிலும் கிடைக்கப் போகிறது. தற்போதைய நிலவரப்படி, ஆப்பிள் ஐபோன் 8 ஐ கடன் வாங்கும் சாதனமாக வழங்குகிறது. ஆனால் மேக்ரூமர்ஸின் அறிக்கையின்படி, ஆப்பிள் தனது தொலைப்பேசியைச் சேவை நிலையத்தில் விட்டுச் செல்ல வேண்டிய பயனருக்கு மட்டும் வழங்கும் என்று கூறியுள்ளது. நவம்பர் 4 ஆம் தேதி முதல் ஐபோன் எக்ஸ்ஆர் சாதனத்தை லொனர் சாதனமாக வழங்கத் தொடங்கும். A12 பயோனிக் சிப் நீண்ட காலத்திற்குப் பிறகு ஆப்பிள் நிறுவனம் இந்த முடிவை இப்போது நடைமுறைப்படுத்தியுள்ளது. ஐபோன் 8 இன் உற்பத்தி ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது என்பதனால் நிறுவனம் ஐபோன் XR அதன் மாற்றாகக் கருதப்படலாம் என்று கூறப்படுகிறது. பிந்தைய சாதனம் டூயல் சிம் ஸ்லாட்டுகள், A12 பயோனிக் சிப் மற்றும் மிகவும் அற்புதமான அம்சங்களுடன் வருகிறது. இருப்பினும், இந்த சேவை தற்போது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கிறது. விரைவில் மற்ற இடங்களுக்கும் கிடைக்கும். 14 நாட்களுக்குள் கடன் வாங்கிய சாதனத்தைத் திருப்பித் தர வேண்டுமா? இருப்பினும், ஒவ்வொரு வாடிக்கையாளரும் அதன் FAQ பக்கத்தில் நிறுவனம் அனுமதித்துள்ளபடி லொனர் சாதனத்திற்கு யாரெல்லாம் தகுதியானவர்கள் என்ற விபரத்தைப் பதிவிட்டுள்ளது. அதன் படி, உண்மையில் பயனர் சாதனத்தைச் சரி செய்ய நீண்ட நேரம் எடுக்கும் சாதனங்களுக்கு மட்டுமே லொனர் சாதனம் மாற்றுச் சாதனமாக வழங்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. மேலும், நுகர்வோர் தங்கள் அசல் சாதனம் பழுதுபார்க்கப்பட்ட பிறகு 14 நாட்களுக்குள் கடன் வாங்கிய சாதனத்தைத் திருப்பித் தர வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எந்த சிக்கலும் எழாது வாடிக்கையாளர்கள் லோனர் சாதனத்தில் சேமிக்கப்பட்ட அனைத்து தரவையும் நீக்கிய பின் நிறுவனத்திடம் திரும்பத் தரவேண்டும்.

வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஸ்டோர்ஸ் மற்றும் அமெரிக்கா மற்றும் பிற பிராந்தியங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வழங்குநர்களில் லொனர் வழங்கும் சாதனங்களைப் பெறலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பழுதுபார்க்கத் தொலைப்பேசியை வழங்கிய நபர்கள் அவர்களின் தொடர்புடன் இணைத்திருப்பதில் எந்த சிக்கலும் எழாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



000 வருடங்களில் நிகழ்ந்திடாத மிக நீளமான சந்திர கிரகணம் "இன்று".. எப்போது துவங்குகிறது?எங்கெல்லாம் பார்க்கலாம்

 1000 வருடங்களில் நிகழ்ந்திடாத வகையில் நீண்ட நேரம் நீடித்து நிகழும் பூமியின் மிக நீண்ட நேரச் சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்த 2021 ஆம் ஆண்டில் நிகழும் இரண்டாவது சந்திர கிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கடந்த 580 ஆண்டுகளில் தோன்றிடாத பகுதி வகை சந்திர கிரகணமாகவும் இது பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இதுவரை 1000 வருடங்களில் நிகழ்ந்திடாத மிக நீளமான சந்திர கிரகணம் இது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் எப்போது துவங்கும், எங்கெல்லாம் இதை மக்கள் பார்க்க இயலும் என்ற தகவலைப் பார்க்கலாம்.


உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஸ்மார்ட் ஹோம்சுக்கு உங்களை வரவேற்கிறோம்! மேலும் தெரிந்து கொள்ளுங்கள் பூமியின் மிக நீளமான சந்திர கிரகணம் நிகழும் நாள் "இன்று" பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது தான் சந்திர கிரகணம் என்ற இந்த நிகழ்வு நிகழ்கிறது. மேலும் சிறிது நேரம் பிந்தையவற்றில் அதன் நிழலை இந்த நிகழ்வு போடச் செய்கிறது. இந்த நிகழ்வின் போது நடைபெறும் பகுதி சந்திர கிரகணத்தின் மொத்த கால அளவு 3 மணி நேரம் 28 நிமிடங்கள் மற்றும் 24 வினாடிகள் ஆகும். இது பார்ட்சியல் எக்லிப்ஸ் (Partial Eclipse) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

பார்ட்சியல் எக்லிப்ஸ் என்பது நிலவின் முழு பகுதியில், ஒரு சிறிய பகுதி மட்டும் கிரகணத்தால் மறைக்கப்படாமல் இருப்பதாகும். 1,000 ஆண்டுகளில் நிகழாத மிக நீளமான சந்திர கிரகணம் கடந்த 1,000 ஆண்டுகளில் நிகழாத மிக நீளமான சந்திர கிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2021 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணமாக இந்த நிகழ்வு மாறப்போகிறது. இன்று நிகழும் இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இது என்று முன்பே தெரிவித்திருந்தோம், அதேபோல், மிக நீண்ட நேரம் நிகழும் சந்திர கிரகணம் இது என்பதையும் தெரிவித்திருந்தோம். இந்த சந்திர கிரகணத்தின் ஒட்டு மொத்த நிகழ்வு நேரம் என்பது, சுமார் 6 மணி நேரம் மற்றும் 1 நிமிடங்களுக்கு நீடித்து நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது. நடுக்கடலில் தோன்றிய ராட்சத 'கருப்பு துளை'.. சர்ச்சையை கிளப்பிய கூகிள் மேப்ஸ்.. உண்மை என்ன தெரியுமா? 580 ஆண்டுகளில் தோன்றிடாத மிக நீண்ட பகுதி நேரச் சந்திர கிரகணமும் இது தானா? இந்த சந்திர கிரகணம் கடந்த 580 ஆண்டுகளில் தோன்றிடாத மிக நீண்ட பகுதி நேரச் சந்திர கிரகணமாகவும் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு நீண்ட பகுதி சந்திர கிரகணம், இதற்கு முன்பு பிப்ரவரி 18, 1440 ஆம் ஆண்டு மட்டுமே நிகழ்ந்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேபோன்ற, நீண்ட சந்திர கிரகணம் அடுத்து நிகழும் போது நாம் யாருமே அதைப் பார்க்க முடியாது. காரணம் அடுத்த சந்திர கிரகணம் வரும் பிப்ரவரி 8, 2669 ஆம் ஆண்டில் தான் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக்கை பூர்ணிமா ஒரு சிறப்பு நிகழ்வா? சராசரியாகச் சொல்லப்போனால், அடுத்த 648 வருடங்களுக்குப் பிறகு தான் இது மீண்டும் தோன்ற வாய்ப்புள்ளது. 1,000 ஆண்டுகளில் தோன்றிடாத மிக நீண்ட சந்திர கிரகணம் இதுவாகும். சந்திர கிரகணம் எப்போதும் முழு நிலவு நாளில் நிகழ்கிறது. நவம்பர் 19 அன்று வரும் முழு நிலவான பீவர் நிலவு அல்லது ஃபிராஸ்ட் நிலவு என்று அழைக்கப்படும் நாளில் நிகழ்கிறது. நவம்பரில் வரும் முழு நிலவு இந்தியாவில் கார்த்திக்கை பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்துக்களுக்கு ஒரு சிறப்பு நிகழ்வாகும். இந்த நிகழ்வை மக்கள் தவறவிடாமல் பார்ப்பது சிறப்பானது. பிரமிக்க வைக்கும் கீழடி: பாண்டிய மன்னனின் 'மீன்' சின்னத்துடன் உறைக்கிணறு.. சங்ககாலத்தின் சான்றா இது? எந்த நேரத்தில் இந்த சந்திர கிரகணம் தோன்றுகிறது? எப்போது இதை பார்க்கலாம்? சரி, இந்த சந்திர கிரகண நிகழ்வு இந்தியாவில் என்ன நேரத்தில் துவங்குகிறது என்று இப்போது பார்க்கலாம், நவம்பர் 19, 2021 அன்று நிகழும் சந்திர கிரகணம் ஆனது இந்திய நேரப்படி சரியாக 12:48 IST க்கு தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. 12:48 மணிக்குத் தொடங்கும் சந்திர கிரகண நிகழ்வு 16:17 IST மணி வரை நீடித்து இறுதியாக முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சந்திர கிரகணம் சுமார் 14:34 IST மணி அளவில் உச்சம் அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பூமியின் நிழல் சந்திரனின் 97% பகுதியை மறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திர கிரகணம் எங்கெல்லாம் தெரியும்? நவம்பர் 19, 2021 அன்று பீவர் கிரகணத்தின் முழு அத்தியாயத்தையும் பார்க்கச் சிறந்த இடம் வட அமெரிக்கா தான் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள்

தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த சந்திர கிரகணம் பூமியில் உள்ள மற்ற இடங்களிலும் தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஆசியாவின் பல பகுதிகளிலும், ஐரோப்பா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளும் இது நன்றாகத் தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சரி, இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் எங்கெல்லாம் தெரியும் என்பதை இப்போது பார்க்கலாம். இதுவரை இல்லாத ராட்சத பச்சை நிற அரோரா நெருப்பால் சூழப்பட்ட பூமி.. சூரியனின் வித்தியாச நடத்தை தான் காரணமா? இந்திய மக்கள் இந்த சந்திர கிரகணத்தை எங்கெல்லாம் நேரடியாக பார்க்கலாம்? இந்தியாவில், இந்த சந்திர கிரகணத்தை மக்கள், நமது நாட்டின் வடகிழக்கு பகுதியில் இருந்து நேரடியாகக் கண்களால் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் ஒரு சிறிய பகுதியினர் கிரகணத்தைத் தெளிவாகப் பார்க்க முடியும். அதேபோல் உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய இடங்களில் இருந்து, கிரகணத்தின் இறுதிக் கட்டத்தை மட்டுமே மக்கள் நேரடியாகப் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திர கிரகணத்தை நேரடியாக பார்க்க முடியாத மக்கள் என்ன செய்யலாம்? இந்த கிரகணத்தை இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து பார்க்க முடியாது என்பது கவனிக்கத்தக்கது. மற்ற இடங்களில் உள்ள மக்கள் யூடியூப் மூலம் இந்த நிகழ்வை நேரலையில் காணலாம். இது போன்ற சுவாரசியமான செய்திகளுக்கும், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் தொடர்பான தகவல்களுக்கும் எங்கள் கிஸ்பாட் பக்கத்தை பார்வையிடுங்கள்