கருணைக்கொலை தூக்கு தண்டனை விதிக்க சட்டம்- மத்திய அரசு ஆலோசனை

புதுதில்லி, ஜுலை.8 (டிஎன்எஸ்) ஜாதி  மாறி கலப்பு திருமணம் செய்யும் காதல் ஜோடிகளை, ஈவு இரக்கமின்றி கொலை செய்வது வட மாநிலங்களில் அதிகமாக காணப்படுகிறது. தனி நபர் மட்டுமின்றி பஞ்சாயத்துக்களிலும் இத்தகைய கொலைக்கு உத்தரவிடும் கொடூரமும் நடந்து வருகிறது.
 
வட மாநிலங்களில் இத்தகைய கொலைகளை கருணைக்கொலை என்கிறார்கள். இதைத் தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
 
தற்போதுள்ள சட்டப்படி கருணைக்கொலை செய்பவர்களுக்கு 5 ஆண்டு அல்லது ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம். எனவே கருணை கொலைகளை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
 
கருணைக்கொலை செய்பவர்களுக்கு தூக்குத்தண்டனை கொடுக்க, சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜுலை.8) நடந்தது. அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
 
அமைச்சர்கள் குழு ஒன்று கருணை கொலைகளை தடுக்க சட்டதிருத்தம் செய்வது தொடர்பாக முடிவு எடுக்க அமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அம்பிகா சோனி இன்று நிருபர்களிடம் கூறினார்.
 
இது தொடர்பாக மாநில அரசுகளிடமும் கருத்துக்கள் கேட்டு சட்ட திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. விரைவில் பாராளுமன்றச் கூட்டத்தொடரில் இந்த சட்டத்திருத்தத்துக்கு ஒப்புதல் பெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது. (டிஎன்எஸ்

No comments:

Post a Comment