பிரிட்டிஷ் மன்னராட்சி முறை முட்டாள்தனமானது: சல்மான் ருஷ்டி பேட்டி

லண்டன், செப்.26 (டிஎன்எஸ்) பிரிட்டிஷ் மன்னராட்சி முறையும் அதன் பாரம்பரியமும் முட்டாள்தனமானது என்று பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (63) கூறியுள்ளார்.

லண்டனில் இருந்து வெளிவரும் "த சண்டே டைம்ஸ்" பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பின்னர் ஏன் நீங்கள் "நைட்ஹுட்" பட்டத்தை ஏற்றுக் கொண்டீர்கள் என்று கேட்டதற்கு, "இலக்கியத்துக்காக பிரான்ஸ் நாட்டின் பட்டத்தை நான் ஏற்கெனவே பெற்றுள்ளேன். இந்நிலையில், எனது நாட்டின் பட்டத்தை மறுப்பது சரியாக இருக்காது என்பதால் 'நைட்ஹுட்' பட்டத்தை ஏற்றுக்கொண்டேன். இதற்கு எனது நன்றி." என்றார் ருஷ்டி.

இந்தியாவில் மும்பையில் பிறந்த சல்மான் ருஷ்டி, பிரிட்டன் குடியுரிமை பெற்று லண்டனில் வசிக்கிறார். சென்னையைச் சேர்ந்த பத்மா லட்சுமி உட்பட 4 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து செய்தவர். (டிஎன்எஸ்

ஈரான் அணு உலை மைய கம்ப்யூட்டர்களை தாக்கிய புதிய வைரஸ்

ஈரான், செப்.27 (டிஎன்எஸ்) ஈரான் புஷெர் அணு உலை மையத்தில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களை புதிய வைரஸ் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வைரசுக்கு 'ஸ்டக்ஸ்நெட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. புஷெர் மையம் மூலம் ஒரு குழு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பல்வேறு கம்ப்யூட்டர்களில் வைரஸ் கொன்ட புரோகிராமை நீக்குவதற்கு முயற்சி நடந்து வருகிறது. ஜெர்மனியை சேர்ந்த கம்ப்யூட்டர் வல்லுனர்கள் இந்த வைரஸினை ஜுலை மாதம் கண்டுபிடித்தனர்.

அந்த வைரஸ் ஈரான், இந்தோனேஷியா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களை பெரிதும் தாக்கியுள்ளதாக தெரிகிறது. ஆகஸ்டு மாத நிலவரப்படி, ஈரானில் 60,000 கம்ப்யூட்டர்களும், இந்தோனேஷியாவில் ஏறத்தாழ 10,000 கம்ப்யூட்டர்களும் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (டிஎன்எஸ்)
Sep 27, 2010