அண்ணா x அன்னா


பிறப்பு:

அண்ணா செப்டம்பர் 15- 1909 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்தார். ராணி அம்மாள் என்பவரை மணந்தார்.

அன்னா ஹசாரே ஜுன் 15- 1937-ல் மும்பை பிங்காரில் பிறந்தார். இவர் செல்லப் பெயர் கிசான் பாபு ராவ் ஹசாரே. இவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.


படிப்பு:

அண்ணா 1934-ல் பி.ஏ. (ஹானர்ஸ் ) சென்னை பச்சையப்பா கல்லுரியில் படித்து பட்டம் பெற்றார். பின் அதே கல்லுரியில் எம். ஏ. பட்டம் பெற்றார்.

அன்னா ஹசாரே ஏழாம் வகுப்போடு , குடும்ப சூழ் காரணமாக நின்று விட்டார்.

இளமை பருவம்:

அண்ணா ஆங்கிலப் பேராசிரியராக பச்சையப்பா உயர் நிலைப் பள்ளியில் சில காலம் பணியாற்றினார்.

அன்னா ஹசாரே , சிறு வயதிலேயே தன் குடும்பத்தைக் காப்பாற்ற , மும்பை தாதரில் பூ வியாபாரம் செய்து வந்தார். பின் ,ஒரு பூக்கடைக்குச் சொந்தக்காரராகி, தன் இரு சகோதரர் வசம் ஒப்படைத்தார்.


வேலை வாய்ப்பு:
அண்ணா சிறிது காலம் "ஜஸ்டிஸ் மேகசின் " பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக பணியாற்றி விட்டு "விடுதலை" பத்திரிக்கையில் ஆசிரியராக பொறுப்பேற்றார். கூடவே "குடியரசு" வார இதழிலும் பங்கேற்றார்.

அன்னா ஹசாரே - 1962-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் ஓட்டுனராக வேலையில் சேர்ந்தார்.


அரசியல்:


1944-ல் ஜஸ்டிஸ் கட்சி, பெரியார் தலைமையில் "திராவிடர் கழகம்" என பெயர் மாற்றப்பட்டு, தேர்தலில் நிற்க தயாரானது.

பெரியாரிடம் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக 1953-ம் ஆண்டு திரு. இ.வி.கே. சம்பத் அவர்களுடன் இனைந்து, "திராவிட முன்னேற்றக் கழகம்" அண்ணா தலைமையில் உருவானது.

"திராவிட நாடு திராவிடருக்கே" என்ற கொள்கயை முன் வைத்து, "தமிழ் நாடு தமிழருக்கே" -என்பதில் உறுதி ஏற்று மேடைகளில் முழங்கினார்.

பின்னர் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து, தமிழ், ஆங்கிலம் மட்டுமே தேவை, இந்தி திணிப்பு கூடாது என, மத்திய அரசை எதிர்த்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் குதித்தார். சிறைத் தண்டனையும் பெற்றார்.

அன்னா ஹசாரே , 1965 - இந்தியா பாகிஸ்தான் சண்டையில் பாகிஸ்தான் பார்டரான கேம்கரன் என்ற இடத்தில் ராணுவ டிரக் ஓட்டுனராக பணி புரிந்த போது , நடந்த சம்பவம் ஹசாரே வாழ்வில் ஒரு திருப்பு மனைய ஏற்படுத்தியது.

அங்கு நடந்த குண்டு மழையில், அனைவரும் உயிரிழந்து ஹசாரே மட்டுமே பிழைத்தார்.

அதிலிருந்து, வாழ்க்கை என்பது நிரந்தரமல்ல, உயிருடன் இருக்கும் வரை ,மற்றவருக்காக வாழ வேண்டும் என உறுதி எடுத்து, ராணுவத்தில் இருந்து கட்டாய விருப்பு ஓய்வு எடுத்துக் கொண்டு தன் கிராமத்திற்குத் திரும்பினார்.

தன் கிராமத்தை , இந்தியாவின் முன் மாதிரி கிராமமாக மாற்ற , கிராம மக்களுடன் சேர்ந்து ,உழைத்து அதில் வெற்றியும் கண்டார்.

புகழ்:


1967-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் , பெரும்பான்மை வெற்றி பெற்று, அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் நாட்டில் ஆட்சி அமைத்தது. அண்ணா தமிழக முதலமைச்சர் ஆனார்.

அண்ணாவின் ஆட்சியில் அவருக்கு புகழ் சேர்த்த திட்டங்கள்

1) ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டம்.
2) சுய மரியாதை திருமண்ம்.
3) தமிழ் நாடு பெயர் மாற்றம்.
4)இரு மொழிக் கொள்கை.

அன்னா ஹசாரே - 1991 - முதல் "ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் " - ஒன்றை ஏற்படுத்தி, இன்று வரை போராடி வருகிறார்.

பட்டங்கள்:

அண்ணா வாங்கிய பட்டங்களில்முக்கியமானவை

1) அமெரிக்க யேல் பல்கலைக் கழக முனைவர் பட்டம்.
2) அண்ணாமலைப் பல்கலை கழக டாக்டரேட் பட்டம்.

அன்னா ஹசாரே வாங்கிய பட்டங்கள்.


1) பத்ம ஸ்ரீ (1990 )
2) பத்ம பூசன் ( 1992 )

வாங்கிய பதக்கங்கள்

1) சைன்ய சேவா பதக்கம்
2) ஒன்பது வருட ராணுவ சேவை பதக்கம்
3) சங்க்ரம் பதக்கம்
4) 25-வது சுதந்திர ஆண்டு விழா பதக்கம்
5)பெசிமி நட்சத்திர பதக்கம்.

தியாகம்:

அண்ணாவும், அன்னா ஹசாரேவும் தன்னலமற்ற தியாகிகள் என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இருவருமே தனக்காக எதுவுமே சேர்த்துக் கொள்ளாமல் நாட்டுக்காக உழைத்த உத்தமர்கள்.

அண்ணா கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு 1969ஆம் ஆண்டு பிப்.3-ல் உயிர் நீத்தார்.

அன்னா ஹசாரே, லோக்பால் மசோதா மூலம், உலகப் புகழ் பெற்று ,வாழ்ந்து கொண்டு இருக்கும் இவரையாவது நம் நாட்டு மக்கள் பயன் படுத்தி, இந்தியாவை, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கனவு கண்ட, வல்லரசாக மாற்ற அனைவரும் பாடுபடுவோம்.

No comments:

Post a Comment