உங்கள் புத்தாண்டு சபதம் என்ன?

மகிழ்ச்சி, துக்கம், சாதனை, சந்தோஷம், வேதனை, கோபம், போட்டி, ஏமாற்றம், ஏக்கம் என உணர்வுகளாலும் நிகழ்வுகளாலும் கட்டப்பட்ட 365 நாட்கள் முடிவுக்கு வருகிறது. திரும்பிப் பார்த்தால், அசைபோட நிறைய நினைவலைகள் எல்லோருக்குமே இருக்கும்.
புத்தாண்டில் அடியெடுத்து வைக்க தயாராகிவிட்ட நமக்கு முதலில் பொறி தட்டுவது 'இந்த ஆண்டுக்கான சபதம்'. இது வெறும் சம்பிரதாயம்தான் என்று உள் மனது ஏளனம் செய்தாலும்கூட, நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள இதைவிட பெரிய வாய்ப்பு நமக்கு தெரிவதில்லை.
எனவேதான், முதல் முயற்சியாக புத்தாண்டு விடியும் போது புது சபதம் போடத் தவறுவதில்லை.
அது சிகரெட்டை நிறுத்துவதாக இருக்கலாம், இல்லை பிடித்தவருடனான ஒரு நிலவொளி நடைபயணமாக இருக்கலாம், கொஞ்சம் சீரியஸாக ஏதோ சமூக சேவையாக இருக்கலாம். அனைத்தையும் பட்டியிலிட முடியாதல்லவா? எனவே உங்கள் 'புத்தாண்டு சபதம்' என்னவென்று இங்கே பகிருங்களேன்.

ஐ.டி. நிறுவனங்களின் அக்கிரமங்கள்: இப்படி பண்றீங்களேம்மா!



கோப்புப் படம்
கோப்புப் படம்
எல்லா கதைகளுக்கும் ஒரு தொடக்கம் இருக்கும். ஐ.டி நிறுவனங்களைப் பற்றி நான் முதலில் புரிந்துகொள்ளத் தொடங்கியது கல்லூரியின் நான்காம் வருடத்தில்தான்.
கேம்பஸ் இண்டர்வியூவுக்கு பல கனவுகளுடன் ஐ.டி நிறுவனங்களின் செயல்பாடு எப்படி? எந்தெந்த டெக்னாலஜியில் நம்மை வளர்த்துக் கொண்டால் உதவிகரமாக இருக்கும் என்றெல்லாம் நாங்கள் தேடித் தேடி படித்து வந்தோம். சரி, இப்போது இதுதான் நமது பாதை என்று ஆகிவிட்டது; இனி இந்த பயணத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் முன்பே சிலர் சிந்திக்கத் தொடங்கினர்.
கல்லூரி காலம் முடியும் முன்னரே நிறைய பேருக்கு நிறுவனத்தில் சேர்வதற்கான அழைப்புக் கடிதம் (Call Letter) வந்தது.
ஜூலை மாதத்தின் கடைசியில் வரிசை வரிசையாக நண்பர்கள் சேரத் தொடங்கினர். ஆகஸ்ட் மாதத்தில் எனது பயணமும் தொடங்கியது, ஆனால் கால் லெட்டருக்குக் காத்திருந்தபடியே சில நண்பர்கள் தங்கள் நாட்களை கடத்தினர்.
முதலில் 'நீங்க என்னடா அதுக்குள்ள வேலைக்கு சேர்ந்துடீங்க கொஞ்ச வாழ்க்கையையும் வாழுங்க' என்றெல்லாம் கேலி செய்து வந்தனர். நாட்கள் நகர நகர எனது ட்ரெய்னிங் முடிந்தது, ப்ராஜெக்ட்டிற்காக நான் காத்திருந்த நாட்களில் எனது நண்பன் அவனது கால் லெட்டருக்காகக் காத்திருந்தான்.
பெஞ்ச் படலம்
டிசம்பர் மாதம் ஐ.டி. நிறுவனங்களின் இலையுதிர் காலம் வெளிநாட்டில் எங்கும் கிறிஸ்துமஸ், நியூ இயர் கொண்டாட்டம் என்பதால் ப்ராஜெக்ட் கிடைப்பது குதிரைக் கொம்புதான். இருந்தாலும் தினந்தோறும் அலுவலகம் வந்தபடி வாய்ப்புகள் தேடிக் காத்திருந்தேன் நண்பர்களுடன்.
இந்தக் காத்திருக்கும் படலத்தின் பெயர் 'பென்ச்' (Bench). ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் ப்ராஜெக்ட்டும் கிடைத்தது. அன்றும் நண்பன் தனது ப்ராஜெக்டிற்காக காத்திருந்தான். கல்லூரியில் பயோ டெக்னாலஜி படித்த அவன் கேம்பஸ் இன்டர்வியூ'வில் மூன்று நிறுவனங்கள் நடத்திய இன்டர்வியூவையும் அசத்தி ஒரே நாளில் மூன்று வேலைகளை வாங்கினான். மூன்றில் ஒன்று எடுக்க வேண்டிய தருணம் அன்று.
ஐ.டி. நிறுவனத்தில் வேலைப் பார்க்கச் சென்றாலும் தான் படித்த படிப்பு வீண்போகக் கூடாது என்பதில் குறியாக இருந்தான். மற்ற இரண்டு நிறுவனங்களை காட்டிலும் 'அச்சில்' நிறுவனத்தில் சம்பளம் சற்று குறைவுதான் என்றாலும் தான் படித்த படிப்பை இணைக்கும் வகையில் ஐ.டி.யில் லைஃப் சயின்ஸ் பிரிவில் வேலைப் பார்க்கிற வாய்ப்பு என்கிற ஒரே காரணத்திற்காக, அச்சில் நிறுவனத்தில் வேலை செய்வதாக உறுதி கொடுத்தான். அவனுடன் சேர்த்து 2012 ஆம் ஆண்டு அச்சில் நிறுவனத்தில் வேலை கிடைத்த பலருக்கும் அந்த வருடத்தில் 'கால் லெட்டர்' வரவில்லை.
காலாவதியான கால் லெட்டர்கள்
நான் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமானது. அப்போது வரை நிறுவனத்திலிருந்து அவனுக்கு எந்த பதிலும் கிடைக்காமல் இருந்தது. நாட்கள் காத்திருப்பை அதிகரித்துக் கொண்டே வந்தன. இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாதோ? என்கிற வருத்தம், நண்பர்கள் எல்லாம் வேலைக்கு போகும்போது என்னால் போக முடியவில்லையே என்ற விரக்தி, இன்று வந்திடுமோ நாளை வந்திடுமோ இப்படி ஐயத்திலே ஒவ்வொரு நாளும் காத்திருப்பில் கடந்தது.
அந்த வருடத்தில் கால் லெட்டர் கிடைத்த சிலருக்கும் கால் லெட்டர் வந்துவிட்டதால் உங்கள் அனைவருக்கும் வேலை நிச்சயம் என்று கிடையாது. 'ஒரு தேர்வு எழுத வேண்டும். அதில் வெற்றி பெறுபவர்கள் மெரிட் அடிப்படையில் அழைக்கப்படுவார்கள். மற்றவர்களைப்பற்றி நாங்கள் பின்பு கூறுவோம்' என்று நிறுவனம் உரைத்த செய்தி அந்த வருடத்தில் சேர்ந்த பல ஊழியர்களை பாதித்தது.
இனிமேலும் காத்திருந்து என்ன நடக்கப் போகிறது? இந்த ஐ.டி'லாம் நமக்குப் பகல்கனவு தான். இனியும் காத்திருப்பதில் பயன் ஏதும் இல்லை என்கிற சிந்தையில் பேங்க் தேர்வு எழுதி வெற்றி பெற்று கிளெர்க்காக வேலைக்குச் சேர்ந்தான்.
சவுக்கடி மின்னஞ்சல்
நான்கு வருடம் பொறியியலை காதலுடன் படித்தவனுக்கு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலைப் பார்க்கவில்லையே என்கிற வருத்தம். 2012 ஆம் ஆண்டு வேலைக்கு சேர வேண்டியவனுக்கு ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் கழித்து நிறுவனத்திடம் அழைப்புக் கடிதம் வந்தது:
'வாழ்த்துக்கள் நீங்கள் அடுத்த மாதம் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்து கொள்ளலாம். ஒருவேளை உங்களுக்கு இந்த வேலையில் சேர விருப்பம் இல்லை என்றால், உடனடியாக இரண்டு நாட்களுக்குள் சொல்லி விடவும்' என்று அக்கடித்தில் எழுதப்பட்டிருந்தது.
அதைப் படித்து அமைதியாக தான் எடுத்த முடிவு தான் சரி என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டான். இதே கடித்ததை பெற்ற என் தோழி ஒருத்தி இதைக் கண்டு வெகுண்டெழுந்தாள் 'ஒன்றரை வருடங்கள் ஆகிறது, எனக்கு உங்கள் நிறுவனத்தில் வேலை கிடைத்ததே மறந்து போச்சு. இன்று உங்கள் கடிதத்தை கண்டதும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நாங்கள் உங்களுக்காக வருடங்களாக காத்திருக்கிறோம்... உங்களால் உங்களது மெத்தனத்திற்கு ஒரு மன்னிப்பு கூட கேட்க முடியாதா? எத்தனை திறமைசாலிகளின் கனவை நீங்கள் உடைத்துள்ளீர்கள் என்று தெரியுமா? எவ்வளவு ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அது என்ன இரண்டு நாட்களுக்குள் பதிலை சொல்லு என்று கெடு விதிக்கின்றீர்கள்? எங்களது மின்னஞ்சல்களுக்கு பதில் சொன்னீர்களா? அழைப்புகளுக்கு பதில் சொன்னீர்களா? இருந்தாலும் நான் உங்களுக்கு பதில் சொல்கிறேன் 'பங்குச் சந்தையில் உங்கள் நிறுவனத்தின் நிலை என்னவென்று எனக்குத் தெரியும். மீண்டும் உங்களது பங்குகள் இறங்குவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது; அப்படி கீழிறங்கும் பட்சத்தில் என்னைப் போன்றவர்களை வேலையிலிருந்து நீக்குவதற்கு நீங்கள் கொஞ்சமும் தயங்கமாட்டீர்கள் என்று நான் நன்கு அறிவேன். மனிதர்களை மதிக்கத் தெரிந்த ஒரு நிறுவனத்தில் நான் இப்போது வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். மனிதாபிமானமற்ற உங்கள் நிறுவனத்தின் வேலை எனக்கு நிச்சயம் வேண்டாம். இதை நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் கொண்டு செல்லுங்கள், எனக்குக் கவலையில்லை' என்று சவுக்கடி வரிகளில் ஒரு மின்னஞ்சல் அனுப்பினாள்.
தமிழகத்தில் அமைந்துள்ள சேவை சார்ந்த ஐ.டி நிறுவனங்கள் பலவும் மனித உயிர்களை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்வதில்லை.
நாங்க இருக்கோம்
'ஆமாண்ணா.. இங்க வாங்க.. அவர் சொன்னத நாம எப்படி மூணு மாசத்துக்குள் முடிக்கறது? இதுல இருக்குற வேலையை பார்த்தா டெவெலப்மென்ட், டெஸ்டிங் எல்லாம் சேர்த்து குறைந்தது ஐந்து மாதங்கள் ஆகுமே!' என்று நண்பன் ஒருவரிடம் கேட்டான். அவர் 'இல்லைடா, அது மூன்று மாசம் இல்லை இன்னும் இரண்டு மாசத்துக்குள் முடிக்கணும். ஆமா, என்னை ஏன் நீங்க அண்ணான்னு கூப்படறீங்க? நானும் உங்க பேட்ச் தான், இந்த ப்ராஜெக்டல நாங்க மூணு மாசமா வேலை செய்யறோம். அப்பவே இத முடிக்க ஒரு வருஷம் ஆகும்ன்னு ஒருத்தர் சொன்னாரு. அது இப்போ தான் இவங்களுக்கு புரிஞ்சிருக்கு. இன்னும் இரண்டு மாசத்துல முடிச்சாகணும்னு புடுங்கறாங்க. நான் மூணு வாரமா இங்கயே இரண்டு மணி வரைக்கும் வேலை பார்க்கிறேன். சில சமயத்துல 48 மணி நேரம் தொடர்ந்து வேலைப் பார்க்கிற மாதிரி ஆகுது.. சன்டேவும் எங்களுக்கு விடுமுறை கிடையாது' என்றார்.
'இப்போ தான் இந்த வேலை முடிக்க ஆள் தேவைன்னு உங்களலாம் சேர்த்திருக்காங்க, காசாகும்.. ப்ராஜெக்ட் பட்ஜெட்ன்னு சொல்லி சீனியர்களையும் சேர்க்கல. இந்த மேனேஜர்க்கும் டெக்னிகலா எதுவும் தெரியல. எதாவது வடை சுட்டு முடித்துக் கொடுக்கிறோம்ன்னு வாக்கு கொடுத்திடராறு. அதுக்கு ஏற்ற மாதிரி ஆளுங்களையும் எடுக்கணும்.'
'சரி எதுக்கு பாஸ், இப்படிலாம் கஷ்டப்படறீங்க? உங்க பிரச்சினைய HR - Human Resource (மனிதவளம்) பார்வைக்கு கொண்டு போக வேண்டியதுதானே?' என்றேன்.
'பாஸ் அதுலாம் உங்களுக்கு தான் நான் பச்சை டாக் (Green Tag) போட்டிருக்கேன் உங்கள மாதிரி ப்ளூ டாக் (Blue Tag) போடலை. நாங்கலாம் டெம்ப்ரவரி வொர்க்கர். இங்க இரண்டு வருஷம் இப்படி வேலை பார்த்தாதான் இந்த மேனேஜர் ரெகமெண்ட் செய்து எங்களை பெர்மனேன்ட் ஆக்குவாறு!' என்று பதில் வந்தது.
ஏன் பாஸ் நீங்க இன்ஜினியரிங் படிக்கலியா? என்றேன். 'இல்லை பாஸ் நான் பீ.ஈ. கம்ப்யூட்டர் சைன்ஸ் தான். நான் ரூரல்ல (Rural) படிச்சேன் நான் படிச்ச கல்லூரியில கேம்பஸ் ப்ளேஸ்மென்ட் கிடையாது. வேலை தேடி அலைஞ்சி பாருங்க அப்போ உங்களுக்கு தெரியும் ஒரு வேலை வாங்கறர்து எப்படின்னு! நாங்கலாம் உங்களுடைய இப்போதைய லெவல் தொடுவதற்கு இரண்டு வருஷமாவது கடினமாக உழைக்கணும். அப்போ கூட இவங்க என்ன செய்வாங்கன்னு தெரியாது.
பரீட்சை எனும் வேலி
என் உறவினர் வேலை பார்க்கும் மற்றொரு பிரபலமான ஐ.டி நிறுவனத்தில் பி.எஸ்.சி படித்தவர்களை பொறியியளார்கள் பணியில் அமர்த்தி பணி நேரத்திற்கு பிறகு ட்ரெய்னிங் அளிக்கின்றனர். விடுமுறை நாட்களில் அவர்கள் புகழ்பெற்ற கல்லூரியில் ஆன்லைன் முறையில் தேர்வுகள் எடுத்து வார முடிவுகளில் வகுப்புகளில் பங்குபெற்று கம்ப்யூட்டர் சயின்ஸ்சில் முதுகலை படித்து முடிக்க வேண்டும். அப்படி படித்து முடித்தால் மட்டுமே அவர்களால் இருபதாயிரத்தை பார்க்க முடியும்.
பாட அமைப்பு அவர்களை குறைந்த பட்சம் மூன்று வருடமாவது படிக்க வைக்கும்படி அமைந்திருக்கும். மூன்றாம் வருடத்தின் இறுதியில் சுமார் அறுபது சதவீத மக்கள் தான் தேர்ச்சி பெறுவார்கள். மீதமுள்ளவார்கள் மீண்டும் படிக்க வேண்டும். அப்போது தான் நிரந்தரமாக்கப்படுவார்கள்.
இது ஒருவகையான நூதனமான திருட்டு இது. 'ஒரு மனித வளத்திற்கு குறைந்தது ஒரு லட்ச ரூபாய் வெளிநாட்டு வாடிக்கையாளரிடமிருந்து கட்டணம் வாங்குகிறார்கள். அதுவும் பொறியியல் படித்து கேம்பஸ் இன்டர்வியுவில் வேலைக்கு வரும் ஊழியனுக்கு குறைந்தது இருபதாயிரம் அளிக்கப்பட வேண்டும் என்பதால் அவனுக்கு பதிலாக ஒரு பி.எஸ்.சி படித்தவனை எடுத்தால் பத்தாயிரம் கொடுத்தால் போதுமானது. அதுவும் இந்த முதுகலை படித்து முடிக்கும் வரை அவன் வேறு நிறுவனங்களைத் தேட மாட்டான். அதுவரை அவனுக்கு அளிக்கும் சம்பளமும் நிறுவனத்திற்கு பெரிய லாபத்தைத் தான் அளிக்கப் போகிறது என்கிற எண்ணம்.
ரிசோர்ஸ் கட் டவுனின் (Resource Cut Down) பின்புலம்
இந்த அநியாயங்களின் அடுத்த உச்சம் தற்போது தேநீர்சிஸ் நிறுவனத்தில் நடந்து வரும் ரிசோர்ஸ் கட் டவுன் (Resource Cut Down). தற்போது நிறைய பேரை வேலையை விட்டு நீக்கியதற்கு, அவர்கள் சரியாக வேலைப் பார்க்காத காரணத்தால் நிறுவனம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக கூறுகிறது. இது உண்மை தானா? சற்று உற்று நோக்குவோம்.
நீக்கப்பட்டவர்கள் யார்?
முதலில் வேலையில் ஒருவன் புதிதாக சேர்கின்றபோது அவனுடைய போஸ்ட் 'Trainee' எனப்படும். அதன் பின் படிப்படியாக அவன் நிறுவனத்திற்கு பங்களிக்கின்ற விதம், அவனது பதவியை மேல் எடுத்துச் செல்கிறது. இன்று தேநீர்சிஸ் நிறுவனத்தால் நீக்கப்பட்ட பலரும் இரு வகையில் விழுகின்றனர் ஒருவர் 'Trainee' மற்றொருவர் 'Associate Consultant'.
ப்ராஜெக்ட் கிடைப்பதற்காக மாதங்களாக காத்திருப்பவர்கள் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பொதுவாக சிலர் ஏமாற்றும் எண்ணத்துடன் கிடைக்கின்ற ப்ராஜெக்ட்களுக்கு நொட்டை கூறி வேலை செய்யாமல் சம்பளம் வாங்கப் பார்ப்பதுண்டு. வேறு சிலர் நிறைய முயற்சிகள் எடுத்தும் ப்ராஜெக்ட் ஏதும் இல்லாத காரணத்தால் காத்திருப்பதும் உண்டு; இந்த இரண்டு பிரிவுகளில் உள்ளவரையும் கரிசனம் பார்க்காது நிறுவனம் வேலையைவிட்டு நீக்கியுள்ளது.
அடுத்ததாக consultant-களுக்கு வருவோம். யார் இவர்கள்? அடிப்படையாக ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகள் வேலை பார்த்தவர்களால்தான் இந்த பதவியை எட்ட முடியும். இன்று நிறுவனம் இந்த மனிதர்கள் பலரை எப்படி தகுதியற்றவர் எனக்கூறி நீக்கியுள்ளது? இவர்கள் உண்மையிலே தகுதியற்றவர்கள் என்றால் எதற்காக இத்தனை ஆண்டுகள் இவர்களை நிறுவனத்தில் வைத்திருக்க வேண்டும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
Associate Consultant பதவியில் இருப்பவர்கள் மாதத்திற்கு குறைந்தது ஐம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். இவர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டு இவர்கள் இடத்தில் வேறொரு ஆளை புகுத்தி விட்டால் அவர்களுக்கு இருபதிலிருந்து, முப்பதாயிரம் வரை சம்பளம் கொடுத்தால் போதும். அதுவும் புதிதாக இணைந்துள்ளவர்களைப் பயன்படுத்தினால் இருபதாயிரம் கொடுத்தால் போதுமானது. இதுதான் ஐ.டி. நிறுவனங்களின் காஸ்ட் கட்டிங் (Cost Cutting) முறை.
'ஷாக்' விளைவுகள்
நண்பன் கூறுகையில், இப்போதெல்லாம் என் டீம் லீட் தினமும் வந்தவுடன் மெயில் எதாவது வந்ததா என்று கேட்கிறார். எல்லோர் மீதும் அவருக்கு நம்பிக்கை போய் விட்டது. வெளிநாட்டிலும் இதுதான் நடக்கிறது. இங்கே டிஸ்மிஸல் லெட்டரை கொடுத்து ஒரு மாத ஊதியம் கொடுத்து ஒரே நாளில் கிளம்பச் சொல்கிறார்கள், வெளிநாட்டில் ஒரு மாத கெடுவாம்.
அங்க ஃபாரின்ல இருப்பவர் தினமும் போன் பண்ணி ஏதாவது சொன்னாங்களா? என்று தான் முதலில் கேட்கிறார். பக்கத்து டீம்'ல காத்தால வந்தவர் சாப்பிட போய் இருக்காரு. வந்தவருக்கு ஹெச்.ஆர்.கிட்டேந்து ஒரு மெயில் 'உங்கள வேலையை விட்டு தூக்கறோம்ன்னு' அப்படியே ஷாக்காகி உட்கார்ந்தவர் சாயங்காலம் வீட்டுக்கு கிளம்பிட்டார்.
அநியாயம் பண்றாங்க இங்க நிறைய பேர் ஹவுசிங் லோன், அது இதுன்னு இறக்கி விட்டுறுக்காங்க. பேமிலி மேன் - எங்கள வேலையை விட்டு தூக்கிட்டா நாங்க குடும்பத்த எப்படி காப்பாற்றுவதுன்னு ஒவ்வொரு நாளும் கவலைபடறாங்க. இந்த இடம் இப்போ வேலைப் பார்க்குற இடம் மாதிரியே இல்லை. நாளைக்கு இவங்களோட ஹெல்ப் இல்லாம நாங்கல்லாம் எப்படி வேலைப் பார்க்க முடியும்?
எத்தனையோ வருடம் தேநீர்சிஸ் நிறுவனம் ஸ்டாக் மார்க்கெட்டில் பெரிய பெரிய லாபங்களை ஈட்டிருக்கு. அப்பலாம் அதுக்கு காரணமா இருந்த ஊழியர்களுக்கெல்லாம் ஊதியத்தை ஏற்றியா கொடுத்திருக்கு? நிறுவனத்திற்காக உழைத்தவர்களை Poor Performers என்று பொய்யாக பட்டம் கட்டி வேலையை விட்டு அனுப்புவது அநீதியானது.
தன்னுடன் இருப்பவர்கள் எக்கேடு கெட்டாலும் கெடட்டும், தன் வேலை போகாமல் இருந்தால் சரி என்ற நோக்கத்துடன் பிற ஊழியர்கள் இன்னும் சுயநலமாக அமைதிகாப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது.
வளைந்து கொடுத்து வளைந்து கொடுத்தே பழகிய முதுகெலும்புகள் இன்று ரப்பர் துண்டாக மாறி வருகின்றன. முதலாளித்துவத்தின் உச்சபட்ச பசிக்கு இன்று உணவுகள் கூடிக் கொண்டே போகின்றன. தீராப் பசிக்கு உணவாக - என்றுதான் உறைக்குமோ?
கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி என்று, சமூக சேவைக்கு லட்சக் கணக்கில் பணம் ஒதுக்குகிறார்கள். உங்களிடம் வேலை பார்ப்பவனும் சமுதாயத்தில் ஓர் அங்கம் தானே? அவனுடைய நல்வாழ்வுக்கு யார் சார் ரெஸ்பான்சிபிள்?

ரஜினி: காலத்தை வீழ்த்திய கலைஞன்

நடிகர் ரஜினிகாந்த்| கோப்புப் படம்.
நடிகர் ரஜினிகாந்த்| கோப்புப் படம்.
ரஜினிகாந்த் பிறந்தநாள்: 12.12.1950
1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’ படம் வெளியானபோது, படத்தின் இறுதிக் காட்சியில் நின்ற நிலையிலேயே உயிரைவிட்டு, ஸ்ரீவித்யா தொட்டதும் சரிந்துவிழும் அந்த அறிமுக நடிகர், உச்ச நட்சத்திரமாக உயர்ந்து, 40 ஆண்டுகளுக்குப் பின்னரும் கதாநாயகனாக நடிப்பார் என்று அந்தக் கால ரசிகர்கள் கணித்திருப்பார்களா தெரியவில்லை. ஆனால், அலட்சியமான வேகத்துடன் கைகளால் மேல் கோட்டைப் பின்னோக்கித் தள்ளிவிட்டபடிநடக்கும் ‘லிங்கா’ படத்தின் ஸ்டில்களை இப்போது பார்க்கும் அந்த ரசிகர்கள், கண்முன்னே பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கும் கால மரத்தின் குன்றாத பசுமையை நிச்சயம் உணர்வார்கள்.
திரைவாழ்வில், எந்த நடிகரும் எட்டாத புதிய உயரத்தை அடைந்துகாட்டியவர் ரஜினிகாந்த். இவரது படம் வெளியாகும்போதுதான், நட்சத்திர நடிகர்கள் கூடப் பாமர ரசிகர்களாகி, திரையரங்குக்குப் படையெடுக்கும் அதிசயம் நிகழும். மிகச் சில தோல்விகளின் வடுக்களும், பிரம்மாண்டமான பல வெற்றி மகுடங்களும் கொண்ட 40 ஆண்டுகாலப் பயணம் அவருடையது.
கவர்ச்சியான போக்கிரி
70-களின் இறுதியில் இளையராஜா பாரதிராஜா - மகேந்திரன் - ரஜினி - கமல் என்று புதிய திறமைகளின் அலை ரசிகர்களை ஈர்த்தது. அப்போது வெற்றிப் படங்களுக்கு உத்தரவாதம் தரும் கலைஞராகவும், ரசிகர்களின் பெரும் விருப்பத்துக்குரியவராகவும், மளமளவென உயர்ந்தார் ரஜினி. வித்தியாசமான உச்சரிப்பு, உற்சாகமான வேகம், அலைபாயும் தலைமுடி என்று ரசிகர்களைக் கட்டிப்போடத் தொடங்கியிருந்தார். கவர்ச்சியான போக்கிரித் தோற்றம் அவரது பலங்களில் ஒன்றாக அமைந்தது.
முன்கோபம் கொண்ட முரட்டு இளைஞன் பாத்திரத்தில் அவர் நடித்த ‘பைரவி’, ‘தப்புத்தாளங்கள்’ போன்ற படங்கள் அவர் மீதான அனுதாபத்தை வளர்த்தன. மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ படத்தில் சுயஇரக்கமும், தன்மானமும் மிக்க முரடனாக அவர் நடித்த காளி பாத்திரம் இவற்றின் உச்சமாக அமைந்தது. முழுமையான நாயகனாக அவர் உருக்கொள்வதற்கு முன் வெளியான இந்தப் படம், அவரது நடிப்பின் நுட்பங்களைச் சாத்தியப் படுத்தியது. தான் முற்றிலும் வெறுக்கும் சரத்பாபு, தன் தங்கையைப் பெண் கேட்டு வந்த பின்னர் அவர் ஆடும் ருத்ரதாண்டவம் ரசிகர்களை மட்டுமல்ல, திரையில் இருக்கும் சக நடிகர்களையே உலுக்கி யெடுத்துவிடும்.
வில்லத்தனம் நிறைந்த நாயகன்
வில்லன்களின் உலகிலிருந்து நல்லவர்களின் பக்கம் வந்த நடிகர் ரஜினி, வில்லன்களுக்கு உரிய பலம், ஆக்ரோஷம், சூழ்ச்சி என்று அனைத்தையும் கைக்கொண்டிருக்கும் ஒருவர் நாயகனானபோது ரசிகர்களுக்குக் கிடைத்த பாதுகாப்பு உணர்ச்சி அவரது வெற்றிக்கு அடித் தளமாக அமைந்தது எனலாம். எனவேதான், பிரம் மாண்டமான மொட்டைத் தலை வில்லனைப் ‘பறந்து பறந்து’ ரஜினி அடித்தபோது, திரையரங்கில் விசில் பறந்தது. ரவுடிகளால் தள்ளிவிடப்படும் பெரியவர், தன் காலில் விழும்போது தூக்கிவிடும் ரஜினியைப் பார்த்துக் கைத்தட்டல்களால் அரங்கமே அதிர்ந்தது. குழந்தைகள், பெண்களின் மதிப்பையும், அபிமானத்தையும் பெற்ற நடிகராக ரஜினி உயர்ந்ததன் ரகசியம் இதுதான்.
அந்தக் காலகட்டத்தில் அமிதாப் நடித்த ‘கோபக் கார இளைஞன்’ வேடத்தின் தமிழ் நகல்தான் என்றாலும், தனக்கே உரிய பிரத்யேக பாணியில் அதை மிளிரச் செய்தார் ரஜினி. வில்லனை வீழ்த்தும் அசுர பலம் கொண்டிருந்தாலும் சற்று நேரம் அவனிடம் அமைதியாகவும், போலியான பயத் துடனும் ரஜினி உரையாடும் காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்தன. காற்றில் கலைந்து புரளும் முடியைக் கைகளால் ஒதுக்கிக்கொண்டே புன்னகையுடன் வில்லன்களை எச்சரிக்கும் ரஜினியை யாருக்குத்தான் பிடிக்காது?
‘பாட்ஷா’வுக்குப் பிறகு
90-களின் மத்தியில் தமிழ்த் திரையுலகின் இசை, தொழில்நுட்பம் போன்ற தளங்களில் ஏற்பட்ட மாறுதலின் பின்னணியில் வெளியான ‘பாட்ஷா’, அவரது பிம்பத்தைப் பல மடங்கு பெருக்கியது. தமிழக அரசியலில் நிலவிய கொந்தளிப்பான சூழலைத் திரையில் பிரதிபலிக்கும் படங்களில் ரஜினி தொடர்ந்து நடித்தார். அது அரசியல் களத்தில் அவரை நிறுத்தாவிட்டாலும், ‘திரை அரசிய’லில் கோலோச்ச அவருக்கு உதவியது. ‘முத்து’ படம் ஜப்பானில் பிரபலமானதும், ‘படையப்பா’ அமெரிக் காவில் வெளியானபோது ‘வண்டி கட்டிக்கொண்டு’ திரையரங்குகளுக்கு ரசிகர்கள் படையெடுத்ததும், ரஜினியின் நட்சத்திர மதிப்பின் வீச்சை உணர்த்தியது.
எல்லையைக் குறுக்கிக்கொண்டவர்
சமகால நடிகரும் நண்பருமான கமல், பரிசோதனை முயற்சிகளில் இறங்கிவிட்ட பின்னர், வணிகப் படங்களே தனது பிரதேசம் என்ற முடிவுக்கு ரஜினி வந்துவிட்டார். இத்தனைக்கும் தமிழின் தரமான படங்கள் என்று பட்டியலிட்டால், அதில் ரஜினி நடித்த படங்களும் அடங்கும். ஒருகட்டத்தில் வணிக உலகின் திரையிலிருந்து மீளமுடியாமல் அதிலேயே தேங்கிவிட்டார் என்ற விமர்சனம் ரஜினி மீது உண்டு. ஆனால், உண்மையில், அமிதாப் நடித்த ‘சீனி கம்’ போன்ற, அசல் வயதுக்குரிய வேடங்களில் நடிக்கும் ஆர்வம் ரஜினிக்கு இருக்கிறது.
சமீபத்தில் பஞ்சு அருணாச்சலத்தைச் சந்திக்க இளையராஜாவுடன் சென்றபோது, இதை அவர் குறிப்பிட்டிருக்கிறார். ‘சந்திரமுகி’ வேட்டையன், ‘எந்திரன்’ சிட்டி எல்லாம்கூட அதன் வெளிப்பாடுதான் என்று கொள்ளலாம். தமிழில் இப்போது உருவாகியிருக்கும் ‘புதிய அலை’ இயக்குநர்களால் நிச்சயம் ரஜினியின் இந்த ஆசைக்குத் தீனிபோட முடியும். ரஜினி மீண்டும் அப்படியொரு படத்தில் நடிப்பதுதான் அவர் எதிர்கொள்ளும் மிகப் பெரிய வாழ்நாள் சவாலாக இருக்கும். ஆனால், அப்படி யான ஒரு சவாலை எதிர்கொள்வதில்தான் ஒரு அசலான கலைஞனின் ஆத்மார்த்த வெற்றி அடங்கியிருக்கிறது. எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது... நல்வரவு ரஜினி

துருக்கி நாட்டில் நடந்த மனதை நெகில வைத்த ஒரு உண்மை சம்பவம்!



இரண்டு வயதே ஆன தங்கள் பெண் குழந்தைக்கு திடீரென்று நோய் ஏற்பட்டதால் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தையை காப்பாற்றுவது சற்று கடினமே என்றனர்.
ஆனால் இதே நோயால் இதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட ஒருவரின் இரத்தம் பெறப்பட்டு குழந்தைக்கு ஏற்றப்பட வேண்டும் அப்படி செய்தால் குணமாவதற்கு வாய்ப்புகள் உண்டு.

இரத்தத்திற்கு நீங்கள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோரிடம் தெரிவித்தனர்.
பெற்றோர்களின் முகத்தில் உடனே ஒரு நம்பிக்கை ஒளி பிறந்தது.

தற்போது ஐந்து வயதிலுள்ள அவர்களது இன்னொரு மகன் குழந்தைப் பருவத்தில் அதே நோய்க்குள்ளாகி அபூர்வமாக குணமடைந்திருந்தான். இதை மருத்துவர்களிடம் சொன்ன போது மருத்துவர்களுக்கும் நம்பிக்கை அதிகரித்தது.

மருத்துவர்கள் சிறுவனை உட்கார வைத்துவிட்டு அன்பாக நிலமையை எடுத்து சொல்லி, "உனது தங்கையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரத்தம் வழங்க விருப்பமா" என்று கேட்டனர். சிறுவன் சிறிது நேரம் மௌனமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

பிறகு என் ரத்தம் எடுத்து அவளுக்கு கொடுப்பதின் மூலம் அவள் காப்பாற்றப்படுவாள் என்றால் தாராளமாக எடுத்து கொள்ளுங்கள் என்றான். சிறுவனிடமிருந்து இரத்தம் பெறப்பட்டு நேரடியாக குழந்தைக்கு ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

சிறுவனுக்குப் பக்கத்தில் பெற்றோரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பெற்றோர் சிறுவனைதைரியம் ஊட்டி கொண்டிருந்தனர். பின்னர் இரத்தப் பரிமாற்றம் ஆரம்பமானது.சிறுவன் புன்முறுவலுடன் தனது தங்கையுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

நேரம் செல்லச்செல்ல குழந்தையிடமிருந்து அசைவுகள் தெரிய ஆரம்பித்தன. ஆனால் சிறுவனது முகம் வாடிக்கொண்டே சென்றது. சிறுவன் மருத்துவரை பார்த்து,
"டாக்டர், இறக்கும் போது கஷ்டமாக இருக்குமா!?"
என்று சோகமான குரலில் கேட்டான்.

சிறுவனின் இந்த கேள்வியால் பெற்றோர்கள்மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே டாக்டர், ’ரத்தம் கொடுப்பதால் இறப்பதற்கு வாய்ப்பு இல்லை’ என்பதை சிறுவனிடம் எடுத்துக் கூறினார்.

"சிறுவன், ஆரம்பத்தில் தனது உடம்பிலிருந்து முழு இரத்தத்தையும் எடுக்கப்போவதாக நிணைத்திருந்தான்.
தன் தங்கைக்காக தனது உயிரையே தியாகம் செய்ய முன்வந்திருந்தான் " யாருக்கு வரும் இந்த தியாக உணர்வு.."

அவன் தியாக உணர்வை கண்டு பெற்றோரும்,
செவிலியர்களும் மருத்துவரும் கண்ணீர் சிந்தின

மழை வந்தால் இனி குடை வேண்டாம்..!!



ஒரு வாரமாக மழை கொட்டித் தீர்க்கிறது. மழையில் நனையாமல் இருக்க குடை, ஷவர் கேப், ரெயின் கோட்டு என எடுத்துக்கொண்டு வெளியே கிளம்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ரெயின் கோட் போட்டால் பார்க்கவே பயங்கரமாக இருக்கும். குடை பிடித்தபடி இரு சக்கர வாகனங்களை ஓட்ட முடியாது. நடந்து சென்றால்கூடப் பேருந்து ஏறி இறங்கும்போது குடையை விரித்து, மடக்குவதற்குள் நனைந்துவிடுவோம். இவை எல்லாவற்றிற்கும் ஓர் எளிய தீர்வைக் கண்டு பிடித்திருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் குழு.

சீனாவில் இருக்கும் நான்ஜிங்க் பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர்கள் புரட்சிகரமான ஒரு குடையை உருவாக்கியுள்ளார்கள். குடையின் முக்கிய பாகம் என்ன? அரை வட்டத்தில் ஒரு விரிப்பு போன்ற வடிவம் தானே. இவர்கள் கண்டு பிடித்திருக்கும் குடைக்கு விரிப்பே கிடையாது.

அட குடையே இல்லாத குடையா? எப்படி? இது ‘காற்றுக் குடை’. அதி வேகமாக வீசப்படும் காற்றின் மூலம் மழைத் துளிகள் நம் உடல் மேல் விழாமல் சிதறியடிக்கும் நவீனத் தொழில்நுட்பம் கொண்ட குடை. மைக் போன்ற காற்றுக் குடை பிளாஸ்டிக் மைக் போல் காட்சியளிக்கிறது இந்தக் காற்றுக் குடை.

இதன் உட்புறத்தில் ஒரு மோட்டார், மற்றும் லித்தியம் பாட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. வெளிப்புறத்தில் ஒரு பட்டன் இணைக்கப்பட்டுள்ளது. பட்டனை அழுத்தியதும், மோட்டார் சுற்றுப்புறக் காற்றை உள்ளிழுத்து பின்பு அதி வேகமாக அதே காற்றை உந்தித் தள்ளும். அப்போது வெளியே வரும் காற்று கிட்டத்தட்ட 1 மீட்டர் நீளம்வரை மழை நீரைச் சிதறியடிக்கும்.

இதை நீங்கள் கையில் பிடித்துக்கொண்டு சென்றால் ஏதோ மாயாஜால வித்தை புரிவது போல பார்ப்பவர்கள் ஆச்சரியப்படுவார்கள். ஒரு சமயத்தில் இருவர் இந்தக் குடையைப் பிடித்தபடி நனையாமல் பயணிக்கலாம். “எல்லா இடங்களிலும் இருப்பது காற்று. காற்றின் வேகம் கூடக் கூட அதிக ஆற்றல் உருவாகும். பொருள்களின் பாதையைக்கூடக் காற்றால் மாற்ற முடியும். நாங்கள் காற்று வீசும் விதத்தைப் பயன்படுத்திக்கொண்டோம் அவ்வளவுதான்” என்கின்றனர் காற்று குடையை உருவாக்கிய இளம் பொறியாளர்கள். கிக்ஸ்டார்ட் ஆன கிக்ஸ்டார்ட்டர் காற்றுக் குடையைப் பெரிய அளவில் தயாரிப்பதற்காக கிக்ஸ்டாட்டர் கேம்பெய்ன் (Kickstarter Campaign) என்ற அமைப்பை நிறுவி நிதி திரட்டி வருகிறது இந்தக் குழு.

இவர்களை ஊக்குவிக்கும் வகையில் இதுவரை 3 கோடியே 68 லட்சம் ரூபாய் உலகின் பல்வேறு முனைகளிலிருந்து வந்து குவிந்துள்ளது. ஆனால், இந்தக் காற்றுக் குடையில் ஒரு சிக்கல் இருக்கிறதாம். நம்ம தமிழ் பேய்ப் படங்களில் ஹீரோவைப் பேயிடமிருந்து காப்பாற்ற ஒரு அமானுஷ்யமான சாமியார் மந்திரிக்கப்பட்ட தாயத்தை ஹீரோ கையில் கட்டிவிடுவார். ஆரம்பத்தில் தாயத்து இருக்கும் தைரியத்தில் ஹீரோ பேயை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குவார். ஆனால் கொஞ்ச நேரத்துல தாயத்தோட பவர் ஃபியூஸ் போயிடும். அது போல, காற்றுக் குடையில் 30 நிமிடங்கள்தான் பாட்டரி சார்ஜ் நிற்கும்.

நல்ல மழை கொட்டும்போது காற்றுக் குடையை ஸ்டைலாகத் தலை மேலே தூக்கிப் பிடித்துக்கொண்டு கிளம்பினால் ரிஸ்க் இருக்கு. அரை மணி நேரத்திற்குள் அந்த இடத்தைச் சென்றடையவில்லை என்றால் 30 நிமிடங்கள் கடந்த அடுத்த நொடியில் குடையில் இருந்து காற்று அடிப்பது நின்றுவிடும். அவ்வளவுதான் தொப்பலாக நனைந்துவிடுவோம். ஆனால் கேலி செய்வதற்கில்லை. இந்தத் துடிப்பான இளைஞர் படையினர் காற்றுக் குடையின் தோற்ற அழகு, பயன்பாட்டுத் திறன், பாட்டரி வாழ் நாள் உள்ளிட்டவற்றை மேம்படுத்த தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இப்போது ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் இவர்களுடைய ஆராய்ச்சி 2015-ல் முடியுமாம்.

“மேம்படுத்தப்பட்ட காற்றுக் குடையை உலகச் சந்தைக்கு 2015 டிசம்பரில் அறிமுகம் செய்வோம். அப்போது அனைவரும் விரும்பிப் பயன்படுத்தும் குடையாக இது இருக்கும்” எனத் தன்னம்பிக்கையோடு கூறுகிறார்கள் கிக்ஸ்டார்ட்டர் இளைஞர்கள்.

மருந்தின் பக்கவிளைவு : அழுகிய நிலையில் அழகியின் உடல்.!!!


மருந்தின் பக்கவிளைவால் தோல் உரியும் அழகிய பெண் உடல் , அவுஸ்ரேலியாவில் வலிப்பு நோயிற்காக இளம்பெண் ஒருவர் சாப்பிட்டு வந்த மருந்து, அவருக்கு பயங்கரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில் (Sydney) வசிக்கும் டானிகா ஹெரோன் (Danika Heron Age-19) என்ற இளம்பெண்ணுக்கு, தனது 18 வயது முதல் வலிப்பு நோய் இருந்துள்ளது.

எனவே அவர் மருத்துவரை நாடி மருந்துங்கள் உட்கொண்டு சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது 19 வது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில், திடீரென இவருக்கு உடலில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வலிப்புக்கான மருந்து அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் தவற விட்ட ஒரு லட்சம் டாலர் பணத்தை காவல் துறையிடம் ஒப்படைத்த ‪ அல்தாஃப்‬!

அமெரிக்கா சான்-ஜோஸ் என்னும் இடத்தில் துரித உணவககத்தை நிர்வகீது வரும் அல்தாஃப்..

மதிய உணவை சாப்பிட்டு யாரோ ஒருவர் விட்டு சென்ற பையை உரியவரிடம் சேர்ப்பதர்க்க்காக பத்திரப்படுத்தி..
யாருமே வரவில்லை என்ற பட்சத்தில் திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி அதனுள் கட்டு கட்டாக பணம் இருந்தது..



தொலைபேசியில் காவல்துறையை வரவழைத்தார். காவல் துறையோ பணம் ஒரு லட்சம் இருப்பதாக தெரிவித்தனர்.

காவல் துறையிடம் : ///அனாதையாக கிடைத்த பொருட்களை அதை உரியவரிடம் ஒப்படையுங்கள் என்று எங்கள் நபிகள் போதித்தது...////

அதேபோல் மற்றவர் பொருளுக்கு ஆசை படாதீர்கள் அப்படி இருந்தால் மறுமையில் அதர்க்கு கண்டிப்பாக நாங்கள்தான் பதில் அளிக்க வேண்டும் என்றார்.

காவல் துறை அவரை வெகுவாகவே பாராட்டி சென்றனர்.

ரியாத் -தம்மாம் அதி வேக ரயில் வந்து விட்டது!





எந்த ஆடம்பர விழாக்களும் இல்லை. 'தலைவர் வாழ்க' 'அம்மா வாழ்க' என்ற கோஷம் இல்லை. திறப்பு விழாவுக்கு மந்திரி வருகிறார் என்று ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக போக்குவரத்து தடை செய்யப்படவில்லை. சத்தமின்றி ஒரு சாதனை எந்த ஆரவாரமும் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் விரிவாக்க வேலைகளும் தொடர்கிறது.

அதி வேக விரைவு ரயில் தம்மாமுக்கும் ரியாத்துக்கும் இடையே இன்னும் 60 நாளில் ஓடத் துவங்கும். தம்மாம் அப்துல் அஜீஸ் துறைமுகத்தில் அதி வேக ரயில் கொண்டு வரப்பட்டுள்ளது. மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது இந்த ரயில். இதன் வேகம் மணிக்கு 180 கிலோ மீட்டராக பிறகு அதிகரிக்கப்படும்.

தற்போது ரியாத் முழுக்க மெட்ரோ பணி மிக வேகமாக நடந்து வருகிறது. இந்த வேலையும் முடிந்தால் ரியாத்தில் அதிக நேரம் சிக்னலில் காத்திருக்கும் அவலம் குறையலாம். இந்த பணியும் எந்த ஆரவாரமும் இல்லாமல் மிக துரிதமாக நடந்து வருகிறது.

அபுதாபி மாலில் டாய்லெட் சண்டையில் அமெரிக்க ஆசிரியையை குத்திக் கொன்ற பெண்!

அபுதாபி: அபுதாபியில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் பள்ளி ஆசிரியையான அமெரிக்க பெண்ணை இன்னொரு பெண் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அந்த ஆசிரியை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.  



கத்தியால் குத்தியவர் பர்தா அணிந்திருந்ததால் அவர் யார் என்பது தெரியவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண். விவாகரத்தான அவர் தனது 11 வயது இரட்டையர் மகன்களுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் தங்கி பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுத்து வந்தார். அபுதாபியின் ரீம் ஐலேண்டில் உள்ள பவ்டிக் ஷாப்பிங் மாலுக்கு திங்கட்கிழமை சென்றுள்ளார். அங்கு கழிவறை தொடர்பாக அவருக்கும், இன்னொரு பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

அப்போது ஃபர்தா அணிந்த பெண் ஆசிரியையை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த பெண் உடனடியாக ஷேக் கலிபா மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். 


இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளியை தேடி வருகிறார்கள். ஃபர்தா அணிந்து, கையுறைகள் அணிந்திருந்தது ஆணா, பெண்ணா என தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அபுதாபியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

துபாயில் பார்க்க வேண்டிய இடம் துபாய் மியூசியம்! ஒரு சிறப்பு பார்வை![படங்கள் இணைப்பு]

2014 டிசம்பர் 2 ஆம் நாள் அமீரகம் தனது 43வது தேசிய தினத்தை கொண்டாட உள்ள நிலையில், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த துபையை பற்றியும் கொஞ்சம் எழுதுப்பா என நண்பர்கள் உசுப்பேற்ற, நவீன துபையை பற்றி எழுத அதிகமானோர் உள்ளதால் நாம் பழமையை போற்றுவோம் என தீர்மானித்தோம்.

பர்துபை மற்றும் தேரா பகுதியில் கைகெட்டிய (காலுக்கெட்டிய) தூரத்தில் பலப்பல வரலாற்று பொக்கிஷங்கள் நிறைந்திருந்தாலும், நம்மில் எத்தனை பேர் அவைகளைப் போய் ஆர்வமுடன் பார்த்திருப்போம் என்பது மிகப்பெரும் கேள்விக்குறியே!

பொதுவாக நகரங்களில் மியூசியம் இருக்கும் பார்த்திருப்போம் ஆனால் மியூசியங்களுக்கு நடுவில் அமைந்துள்ளதோர் நகரம் துபை என்றால் அது மிகையில்லை எவ்வாறெனில் பர்துபை மியூசியம், நைஃப் போலீஸ் மியூசியம், முர்ஷித் பஜார் மியூசியம், அஹமதியா ஹெரிடேஜ் ஸ்கூல் மியூசியம், ஷிண்டாகா ஹெரிடேஜ் வில்லேஜ் என்ற பிரம்மாண்ட மியூசியத் தொடர் என ஆங்காங்கே பல அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன.

அனைத்தையும் இனி ஒவ்வொன்றாக பார்க்கலாம்...

முதலில் பர்துபை மியூசியம்.

இந்த அல் பஹீதி காவற்கோட்டையும் (AL FAHIDI FORT) அல் ஷிண்டாகா காவல் அரணும் அந்நியர்களின் கடல்வழி தாக்குதல்களிலிருந்து காப்பதற்காக CREEKஐ முன்னோக்கி கட்டப்பட்டது. இக்கோட்டைகளை சுற்றியும் பின்னும் தான் ஆரம்பகால குடியேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த அரண்களின் பாதுகாப்பின் கீழ் தான் CREEKன் இருபுறமும் அன்றைய OLD SOUK மற்றும் முர்ஷித் பஜார் ஆகியவை உருவாகி இன்றும் அதன் பழமை மாற தோற்றத்துடன் துபை மாநகருக்கு பெருமையையும் மிகப்பெரும் பொருளாதாரத்தையும் வழங்கிக் கொண்டுள்ளது.

நம்ம ஊர் இப்ராஹிம் அன்சாரி காக்கா போன்ற வரலாற்று எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் இவை. ஏனென்றால் துபையின் வரலாற்றை புரிந்து கொள்ள உள்ளே செல்லும் நாம் இந்தியாவின் பெருமைமிகு வரலாற்றை ஒரளவு அறிந்து கொண்டு வரலாம். ஆங்காங்கே (இந்தியவுடனிருந்த கடல்வழி வணிக தொடர்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது). பண்டைய இந்தியாவும் இன்றைய இந்தியர்களும் இல்லை என்றால் துபை மாநகரம் இன்றும் ஒரு குக்கிராமமாகவே இருந்திருக்கும் அல்லது அதன் வளர்ச்சி இன்னும் பல ஆண்டுகள் தாமதப்பட்டிருக்கும்.

3 திர்ஹம் அனுமதிக்கட்டணம் வாங்கிக் கொண்டு அனுமதிக்கிறார்களே 3 திர்ஹம் வாங்கும் அளவிற்கு இங்கே என்ன இருக்கு? என்ற குழப்பத்தோடு மேல்மட்டத்தை மட்டும் பார்த்து உள்ளே சென்ற நமக்கு 10 நிமிடத்தில் வந்த வேலை முடிந்து விட்டதாகவே தோன்றியது ஆனால் இந்த மியூசியத்தை பார்வையிட 30 திர்ஹம் கூட தரலாம் என தோன்றியது நிலவறைக்குள் இறங்கிய பின்னரே, அதாங்க மண்ணுக்கு அடியில் ஒரு நவீன மின் அருங்காட்சியகத்தை நிர்மாணித்து பிரமிக்க வைத்துள்ளனர்.

நிலவறை உள்நுழையும்போதே நம்மை வரவேற்குமுகமாக 1930 முதல் 2010 வரையான துபையின் ஒவ்வொரு 10 ஆண்டின் வளர்ச்சியை காணொளி ஆவணப்படமாக காட்சிப்படுத்தியுள்ளனர் மேலும் 1960ல் தான் துபை பொருளாதார வளர்ச்சியின் பக்கம் முதல் அடியை எடுத்து வைத்து இன்று உலகின் ஒரு அசைக்க முடியாத பொருளாதார வல்லரசாய் உயர்ந்து நிற்கிறது என்ற உண்மையை அறியும் போது உள்ளங்கால் சில்லிடுகிறது.

'இன்றைய நவீன மின் சாதனங்களின் துணை கொண்டு மிக அழகாக நம்மை பண்டைய துபைக்குள் பயணிக்க வைத்து', மீன்பிடித்தல் மற்றும் முத்துக்குளித்தலில் சிறந்து விளங்கிய துபை மக்களின் ஆட்சி, மக்கள், வணிகம், போர், பயணம், வெளியுலக தொடர்புகள், வாழ்க்கை முறை எவ்வாறு இருந்தது மற்றும் அகழ்வாய்வு பொருட்கள் மீதான நிறுவுதல்கள், இந்தியாவுடனிருந்த கடல் வணிகத் தொடர்பு குறித்த குறிப்புகள், துபை சர்வதேச கடல் வணிகர்களின் இளைப்பாருமிடமாக மாறியதால் ஏற்பட்ட தொழில் புரட்சி போன்ற வரலாற்றை ஒலி ஒளி வடிவில் வழங்கி அசரடித்து விடுகிறார்கள்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும் நேரில் பார்க்க விளைபவர்களின் ரசனைக்காக விட்டுவிட்டு புகைப்பட தோரணங்களாய் ரசிப்போம் வாருங்கள்...

அன்றும் இன்றும் நம் இந்தியாவை சார்ந்து தான் துபை, துபையை சார்ந்து தான் இந்தியா என்பதற்கான ஆதாரங்கள் அடுத்த தொகுப்பில் இன்ஷா அல்லாஹ். இங்கே மிகச்சிலவற்றை மட்டுமே புகைப்படங்களாய் தர முடிந்துள்ளது என்றாலும் இன்னும் காண வேண்டியவை, பதிய வேண்டியவை ஏராளம் உள்ளன.

இன்ஷா அல்லாஹ், ஷிண்டாகா அரண் மியூசியத்தின் விபரங்களுடன் விரைவில் உங்களை சந்திக்கவிருப்பது...

அதிரை அமீன்

நன்றி  : அதிரை நியூஸ்.

































உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா- ஐக்கிய நாடுகள் சபை

10 முதல் 24 வயதுக்குட்பட்ட வயதினராக 35.6 கோடி மக்களை கொண்ட நாடாக விளங்கும் இந்தியாவை உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடாக ஐக்கிய நாடுகள் சபை இன்று அறிவித்துள்ளது.

உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவைக் காட்டிலும் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருப்பினும், உலகின் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா திகழ்வதாக ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தால் நடத்தப்பட்டு இன்று வெளியிடப்பட்ட சர்வதேச மக்கள் தொகை ஆய்வின் அறிக்கை தெரிவித்துள்ளது.
சுமார் 35.6 கோடி இளைஞர்களுடன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்தியாவுக்கு (மொத்த மக்கள் தொகை 126 கோடியே 26 லட்சத்து 20 ஆயிரம்) அடுத்தபடியாக, உலகின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் (மொத்த மக்கள் தொகை 136 கோடியே 79 லட்சத்து 40 ஆயிரம்) இதே வயதையொத்த சுமார் 26.9 கோடி இளைஞர்கள் உள்ளனர் என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இதே பட்டியலில், சீனாவுக்கு அடுத்தபடியாக 6.7 கோடி இளைஞர்களை கொண்ட இந்தோனேசியா மூன்றாவது இடத்திலும், 6.5 கோடி இளைஞர்களை கொண்ட அமெரிக்கா நான்காவது இடத்திலும், 5.9 கோடி இளைஞர்களை கொண்ட பாகிஸ்தான் ஐந்தாவது இடத்திலும், 5.7 கோடி இளைஞர்களை கொண்ட நைஜீரியா ஆறாவது இடத்திலும், 5.1 கோடி இளைஞர்களை கொண்ட பிரேசில் ஏழாவவது இடத்திலும், 4.8 கோடி இளைஞர்களை கொண்ட வங்காளதேசம் எட்டாவது இடத்திலும் உள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.

மார்பெர்க்: இன்னொரு எபோலா?

எபோலாவை எதிர்கொள்ளவே இந்தியா தயாராகாத சூழலில் மார்பெர்க் தாக்கினால் சமாளிக்க முடியுமா?

டெல்லி விமானநிலையத்தில், 18 நவம்பர் 2014 அன்று லைபீரியாவிலிருந்து வந்த ஒருவர் எபோலா தாக்கம் கொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, தடுப்புச் சூழலில் வைக்கப்பட்டிருக்கிறார். விநோதம் என்ன
வென்றால், அந்தப் பயணி லைபீரியாவிலேயே எபோலா காய்ச்சல் கண்டவர் என அறியப்பட்டு, சிகிக்சை அளிக்கப்பட்டுக் குணமடைந்ததாகச் சான்றிதழும் பெற்றிருக்கிறார். அவரது ரத்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கையில் அவர் உடலில் எபோலா வைரஸ் இல்லை என்று சான்றளிக்கப்பட்டிருக்கிறது.
குணமடையும்போது எபோலா வைரஸ், உடல் திரவங்களின் வழியே வெளியேறும். அது ரத்த மாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இதனை அறிந்திருந்த இந்திய அதிகாரிகள், அவரது விந்து திரவத்தைப் பரிசோதித்து அதில் எபோலா இன்னும் இருப்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.
ஆனால், நமது தலைவலி இத்தோடு முடிந்துவிட வில்லை. இரு மாதங்களுக்கு முன் வந்த ஒரு தகவல் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.
செப்டம்பர்-11 என்றாலே அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்தான் நினவுக்கு வரும். மற்றொரு மோசமான செய்திக்கும் அந்த நாள் பிரபலமடைந்திருக்கிறது. உகாண்டாவின் தலைநகரான கம்ப்பாலாவில், மெங்கா என்ற மருத்துவமனையில் ஒரு செவிலியர் மார்பெர்க் ரத்தக் கசிவுக் காய்ச்சல் என்ற தொற்றுநோயால் அன்று மரணம் அடைந்திருக்கிறார். ஒருவர் மட்டுமே இறந்திருக்கும் இந்த நோய்க்கு ஏன் பயப்பட வேண்டும்?
மார்பெர்க் ரத்தக்கசிவுக் காய்ச்சல், எபோலாவின் சகோதரன் என்று சொல்லலாம். கிட்டத்தட்ட அதே அறிகுறிகள், அதே அளவிலான தொற்றும் தீவிரம், பரவும் வேகம், கொல்லும் குரூரம் என்ற வகையில், இது எபோலாவுக்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல. எபோலா முதன்முறையாகக் கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிய இதே வருடத்தில், இது மீண்டும் தோன்றியிருக்கிறது என்றால், பரபரப்பின் காரணம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.
ஜெர்மனியிலிருந்து…
1967-ல் ஜெர்மனியின் மார்பெர்க், ஃபிராங்க்ஃபர்ட் மற்றும் அன்றைய யூகோஸ்லாவியாவின் பெல்கிரேடு நகரங்களின் ஆய்வுக்கூடங்களிலிருந்து தொற்றி, வெளியேறி, பெரும் பீதியைக் கிளப்பிய இந்த நோயை மார்பெர்க் நகரின் பெயரையே சூட்டினார்கள். மார்பெர்க்கின் ஆய்வுக்கூடத்தில் உகாண்டாவிலிருந்து கொண்டுவந்திருந்த ஆப்பிரிக்கப் பச்சைக் குரங்கு களிடமிருந்து, அவற்றைப் பேணியவர்களுக்கு முதலில் தொற்றி, அவர்களிடமிருந்து நகரில் பரவியது இந்நோய். மோசமான செய்தி என்னவென்றால், எபோலா போலவே இதற்கும் மருந்துகள் இல்லை. தடுப்பு மருந்துகளும் இல்லை. பிழைத்தால் அதிர்ஷ்டம்.
ரத்தக் கசிவு நோய்கள் பலவகை உண்டு. எபோலா, லிஸ்ஸா, கிரிமீயன் காங்கோ போன்றவை தீவிர மானவை. இருப்பதிலேயே மோசமானது எபோலா என்றால், அதைவிட இறப்பு வீதம் அதிகம்கொண்டது மார்பெர்க்தான் (மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள்).
பழந்தின்னி வவ்வால்களிடமிருந்து…
மார்பெர்க் வைரஸ், எபோலா போன்று, ரூஸெட்டஸ் ஏஜிப்டியாக்கஸ் என்ற ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப்படும் பழந்தின்னி வவ்வால்களிடமிருந்தே பிற இனங்களுக்குப் பரவுகிறது. நைஜீரியா, கென்யா, உகாண்டா, காங்கோ, தென்னாப்பிரிக்க நாடுகளில் மார்பெர்க் காய்ச்சல் அவ்வப்போது தோன்றித் தணிந்த வரலாறு உண்டு. பழந்தின்னி வவ்வால்கள் அதிகம் காணப்படும் சுரங்கங்களில் பணிபுரியும் சுரங்கத் தொழி லாளர்களிடம் இந்த வைரஸ் தொற்றி, அவர்கள் மூலம் குடும்பங்களில் பரவித் தீவிரமடைகிறது. இந்த நாடுகளில் சுரங்கப் பகுதி நகரங்களில் சுத்தம், சுகாதாரம், மருத்துவக் கட்டமைப்பு அதிகம் இல்லாததால், நோய் பரவுவதும் வெகு எளிதாகிறது. சமீபகாலம் வரை, இந்தக் குடியிருப்புகளில் உள்ளவர்கள், மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்லும் வாய்ய்பு இல்லாமையால், நோய் அந்தப் பகுதியில் மட்டும் கட்டுப்பட்டிருந்தது. உகாண்டாவில் இறந்த செவிலியருக்கு மார்பெர்க் நோய் எப்படித் தாக்கியது என்பது இன்றும் புதிர். வவ்வால் நிறைந்த எந்தக் குகைக்கும் அவர் சென்றதாகத் தெரியவில்லை.
அதிசயமாக உயிர்பிழைத்தவர்கள்
மார்பெர்க்கின் தாக்கம் 2008-லும் நிகழ்ந்திருக்கிறது. நெதர்லாந்திலும் அமெரிக்காவிலும் உகாண்டா சென்றுவந்த இருவர் மார்பெர்க் நோயால் தாக்கப்
பட்டுப் பிழைத்திருக்கிறார்கள். இருவரும், உகாண்டாவின் தேசிய வனவிலங்குக் காப்பகத்துக்குச் சென்றதாகவும், அங்கிருக்கும் பிரபலமான குகையில் தகுந்த பாதுகாப்பு உறைகள் இன்றி நுழைந்ததாகவும் தெரியவந்தது. அந்தக் குகையில் பழந்தின்னி வவ்வால்கள் நிறைந்திருக்கும். வவ்வால்களின் எச்சங்கள், இறந்த வவ்வால்களின் உடல் திரவங்கள் இவர்கள்மீது பட்டு, அதன்மூலம் பரவியிருக்கக்கூடும் என எண்ணப்படுகிறது. தகுந்த சிகிக்சை இன்றியும் அவர்கள் அதிசயமாக உயிர்பிழைத்தனர்.
மார்பெர்க் காய்ச்சலில் இறப்பு விகிதம் குறித்து வேறுபட்ட கருத்து நிலவுகிறது. சுமார் 90% இறப்பு சாத்தியம் என்று ‘டைம்’ இதழ் கூறியிருக்கிறது. இதே அட்டவணைப்படி எபோலா 50% - 80% வரை இறப்பு விகிதம் கூறப்பட்டிருக்கிறது. இது சரியான தகவல்தானா என்று உறுதிப்படுத்தப் போதுமான, நம்பத் தகுந்த புள்ளிவிவரங்கள் இல்லை.
மார்பெர்க் ரத்தக் கசிவுக் காய்ச்சலுக்கு நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?
உகாண்டாவிலிருந்து வரும் பயணிகள், எபோலா கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதில்லை. மார்பெர்க் காய்ச்சலுடன் எளிதில் நோயாளிகள் கண்டங்கள் தாண்டி வந்துவிட முடியும். அவர்களுக்கு எபோலாவின் அறிகுறிகள் தோன்றி, அதற்கான மருந்து கொடுத்து அது பயன்பெறாமல் போகும் நேரமே மார்பெர்க் பற்றிச் சிந்திக்கத் தொடங்குவார்கள். அதற்குள் நிலைமை மோசமாகிவிட்டிருக்கும். அவர்களைக் கையாண்ட செவிலியரும் நோய் தாக்கம் கண்டிருப்பர். எபோலா போன்றே இதுவும் தீவிரமாகப் பரவுவதால், அறியாமைக்கும் அழிவுக்கும் இடையே உள்ள போராட்டமாக இது வெடிக்கும். ஒரே நேரத்தில் எபோலா, மார்பெர்க் என்று இரண்டு தீவிரமான தொற்று நோய்களை உலகம் சமாளிப்பது மிகக் கடினம்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
உகாண்டா மட்டுமல்ல, ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருக்கும் அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் நபர் களைக் கண்காணிக்க வேணடும். போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டுச் செயலாக்கம் செய்வது அத்தனை எளிதல்ல. பெருமளவில் சமூக, பொருளாதாரச் சிக்கல்களை உலகெங்கிலும் இந்தக் கட்டுப்பாட்டு விதிகள் ஏற்படுத்தக் கூடும். இதனை முன்னறிந்து, தயார்நிலையில் நாடுகள் இருக்க வேண்டும்.
மார்பெர்க் மற்றும் மற்றைய ரத்தக் கசிவுக் காய்ச் சல்களைப் பற்றிய பொதுஅறிவு மக்களிடையே பரவலாகப் பரப்பப்படுவது அவசியம். இதுவரை நாம் அறிந்திராத கிரீமியன்- காங்கோ, லிஸ்ஸா போன்ற நோய்கள்குறித்து ஊடகங்களும் சுகாதாரத் துறை போன்ற அரசு இயந்திரங்களும், மருத்துவத் துறையும் அடிக்கடி மக்களிடம் செய்திகளைக் கொண்டுசேர்க்க வேண்டும்.
இந்தக் காய்ச்சல் பரவியிருக்கும் பகுதிகளுக்குப் பயணம் செய்யாதிருத்தல், அங்கிருந்து வரும் உறவினர்கள்குறித்து முன்கூட்டியே அரசுக்கு அறிவித்தல், வந்தவர்கள் நோய்வாய்ப்பட்டால், அவர் களைத் தனிமைப்படுத்தி வைத்தல், உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அறிவித்தல், மருத்துவமனையிலும் அவர்களைப் பற்றிய விவரங் களைத் தயங்காது அறிவித்தல் போன்றவற்றால் மருத்துவர்கள், பேணுபவர்கள், செவிலியர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும்.