அப்படி என்னதான் இருக்கிறது அந்த ‘370‘ல்?

க்னி நட்சத்திரம் முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? இல்லை, இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் இந்(து)த வெப்பம் நீடிக்கும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதியை வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு இனியும் நீடிப்பதா என்ற விவாதத்தை எதிர்பார்த்தது போலவே தொடங்கிவைத்து உக்கிரமான உஷ்ணத்தைக் கிளப்பிவிட்டுள்ளது பா.ஜ.க அரசு.
பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஜிதேந்திர சிங், காஷ்மீர் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370–வது பிரிவின் நிறை, குறைகளை பற்றி விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

இந்த பிரச்சினையை, பா.ஜனதா, தொழில்முறையாக அணுகி வருகிறது. காஷ்மீரில் நிறைய சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்தோம். அதில், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது குறித்து சிலரை சம்மதிக்க செய்து விட்டோம். சம்மதிக்காதவர்களை சம்மதிக்க செய்ய முயற்சி நடந்து வருகிறது“ என்று நெருப்பைப் பற்ற வைத்தார். 370ஐ நீக்கினால் இந்தியாவின் பகுதியாக காஷ்மீர் இருக்காது என்கிறார் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல்வர் ஒமர் அப்துல்லா 370வது பிரிவை நீக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்கிறது பா.ஜ.கவை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு.. எக்காரணம் கொண்டும் 370வது பிரிவை நீக்கக்கூடாது என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத்.

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் குரலும் இதேபோல ஒலிக்கிறது. மாநில சுயாட்சியை வலியுறுத்தும் தி.மு.க போன்ற மாநிலக்கட்சிகள் 370வது சட்டப்பிரிவை ஆதரித்தே வருகின்றன. 370ஐ எதிர்ப்பவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்றவர்கள் தரப்பின் குரலாகவும், அதனை ஆதரிப்பவர்களின் குரல் தேர்தல் களத்தில் இம்முறை படுதோல்வி அடைந்தவர்களின் குரலாகவும் உள்ளது. ‘வென்றவர் சொல்வதே வேதம்’ என்பது மக்களின் மனநிலை. இந்தியாவில்தானே காஷ்மீர் மாநிலமும் இருக்கிறது அதற்கு எதற்கு தனிப்பட்ட சட்டம் எனத் திருவாளர் பொதுஜனத்திடமிருந்தும் குரல்கள் கேட்கின்றன?

இந்தியாவில்தான் காஷ்மீர் இருக்கிறது. ஆனா, அது எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்பதை இன்றைய திருவாளர் பொதுஜனத்தில் பெரும்பான்மை யானவர்கள் அறியமாட்டார்கள். இந்தியா சுதந்திரம் பெற்றபோது 526 சமஸ்தானங்கள் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவுடன் இணைந்துவிட்டன. இணைய மறுத்த ஹைதராபாத் சமஸ்தானத்தை ராணுவ பலத்தால் இணைத்தார் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல். காஷ்மீர் சமஸ்தானத்தை இந்து மன்னரான ஹரிசிங் ஆட்சி செய்தவந்தார். அங்கே உள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்கள். இதனால் காஷ்மீர், இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்தா னுடன் இணைவதா என்ற குழப்ப நிலை நீடித்தது.

பாகிஸ்தானுடன் இணைந்தால் தனி சமஸ்தானத் தகுதியுடன் நீடிக்கலாம் என்றும், இந்தியாவுடன் இணைந்தால் ஏற்கனவே உள்ள மாநிலங்களில் ஒன்றாகி, தனித்தன்மையை இழக்கவேண்டி வரும் என்றும் மன்னர் ஹரிசிங்கிடம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, தனது பூர்வீகமான காஷ்மீர், இந்தியாவுடன் இணைந்திருக்கவேண்டும் என விரும்பினார். இதனை கௌரவப்பிரச்சினையாகக் கருதினார். காஷ்மீரைத் தன்னுடன் இணைப்பதில் விருப்பம் காட்டிய பாகிஸ்தான் தனது ராணுவத்தை நிலை நிறுத்தியது. இந்தியாவின் உதவியை நாடினார் மன்னர் ஹரிசிங்.

இந்திய எல்லையிலிருந்து இந்திய ராணுவமும், பாகிஸ்தான் எல்லையிலிருந்து அந்நாட்டு ராணுவமும் காஷ்மீருக்குள் ஊடுருவின. காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக் கொண்டது. அது சுதந்திர காஷ்மீர் (Azad Kashmir) என்று பாகிஸ்தான் கூறுகிறது. அதனை ஆக்கிரமிப்பு காஷ்மீர் (Pakistan Occupeid Kashmir-POK) என்று இந்தியா கூறுகிறது. பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதி போக, எஞ்சிய மூன்றில் இரு பங்கு பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றிக் கொண்டது. காஷ்மீர் மீதான உரிமைக்கு இருநாடுகளும் போட்டியிட்டன.

இந்த விவகாரம் 1948-ல் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 21-4-1948 அன்று தீர்மாணம் (எண் 47) நிறைவேறியது. இதன்படி இருநாடுகளும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யவேண்டும். ஊடுருவிய பகுதியிலிருந்து ராணுவம் வெளியேறவேண்டும். ஆனால், இது நிறைவேறவில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் தனது செயலைச் சட்டப்பூர்வமானது என்று நிரூபிக்க இயலாததால், காஷ்மீர் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி தீர்வு காண்பதாக ஐநா சபையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்களா? பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது தனிநாடாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறார்களா? என்ற மூன்று கேள்விகள் அடிப்படையில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், ஓட்டெடுப்பின் மூலம் கிடைக்கும் மக்கள் கருத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் மன்னரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் ஐ.நா. அவையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம்.

காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணையவேண்டும் என்கிற நேருவின் கருத்துக்கு ஆதரவாக இருந்தார் மாநில முதல்வரான (அப்போது அதற்கு பிரதமர் பதவி எனப் பெயர்) ஷேக் அப்துல்லா. அவருக்கு ஐ.நா.சபையின் தலையீடு பிடிக்கவில்லை. பொதுவாக்கெடுப்பிலும் ஆர்வமில்லை. நேரு தலைமையிலான இந்திய அரசாங்கமோ பொதுவாக்கெடுப்புக்கு ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் தன்னுடைய ராணுவத்தை வெளியேற்றினால்தான் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என இந்தியா கூறியது.

நேருவுடன் ஷேக்அப்துல்லா நட்பு பாராட்டுவதாலும், இந்திய ராணுவம் நிலை கொண்டிருப்பதாலும் காஷ்மீர் மக்களால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாது என பாகிஸ்தான் கூறியது. உலகநாடுகளின் தலையீட்டில் இருதரப்பு ராணுவத்தையும் வெளியேற்றலாம் என்றும் பாகிஸ்தான் தெரிவித்தது. காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை விரும்பவில்லை எனக்கூறி, பாகிஸ்தானின் யோசனையை நிராகரித்த இந்தியா, பொதுவாக்கெடுப்பு என்கிற ஒப்பந்தத்தையும் நிறைவேற்றாமல் கைகழுவியது.


அதே நேரத்தில் காஷ்மீரைத் தக்கவைத்துக்கொள்வதில் இந்தியா முழுமையாகக் கவனம் செலுத்தியது. அதன் விளைவுதான், காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதி தரும் 370வது அரசியல் சட்டப் பிரிவின் உருவாக்கம். இந்த சிறப்புத் தகுதியைப் பெறுவதன் மூலம் காஷ்மீரின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாக்கலாம் என நினைத்தார் ஷேக் அப்துல்லா. பொதுவாக்கெடுப்பைத் தவிர்க்க இது நல்ல வழி என நினைத்தது நேரு அரசாங்கம். 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த சட்டப் பிரிவு நடைமுறைக்கு வந்தது.


இந்திய அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக சிறப்புத் தகுதியை அளிக்கிறது. இந்த சிறப்புத் தகுதியின்படி இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மட்டுமே பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் மாநில ஆட்சி 6 ஆண்டுகளாகும்.
காஷ்மீர் மக்கள் தங்களுக்கு என்று சிறப்புச்சட்டங்கள் இயற்றி அதன்கீழ் வாழ்கிறார்கள். இதில் குடியுரிமை, சொத்துரிமை, அடிப்படை உரிமைகள் போன்றவை அடங்கும்.
இந்த சிறப்பு சட்ட பாதுகாப்பு காஷ்மீருக்கு மட்டுமல்லாமல், இமாசலபிரதேசம், அருணாசல பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவு, நாகாலாந்து உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கிற பழங்குடியி னருக்கும் உண்டு.சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இந்திய பாராளுமன்றத்தில் ராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம் ஆகிய துறைகளைத் தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாது.

(இந்த சட்டப்பிரிவு பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள விரும்புவோருக்காக அதன் விவரங்கள், கட்டுரையின் இறுதிப்பகுதியில் தரப்பட்டுள்ளது)..
இந்த 370வது பிரிவின் மீது, இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையும் நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தவருமான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் விருப்பம் காட்டவில்லை. ஷேக் அப்துல்லாவுடன் இவ்விவகாரத்தில் அவர் முரண்பட்டிருந்தார்.

பிரதமர் நேருவின் நம்பிக்கைக்குரியவரும் அவரது அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தவரும், காஷ்மீர் மகாராஜாவான ஹரிசிங்கின் முன்னாள் திவானுமான தமிழகத் தைச் சேர்ந்த கோபால்சாமி அய்யங்கார்தான் இச்சட்டப்பிரிவை வடிவமைப்பதில் முன்னின் றார். உள்துறை அமைச்சர் பட்டேலின் ஒத்துழைப்பையும் கோபால்சாமி அய்யங்கார் பெற்றார். இதன் காரணமாக, 370வது சட்டப்பிரிவு நிறைவேறியது.

மேலும், இந்தியாவுக்குத் தனியாக அரசியல் சாசனம் இருப்பது போல் காஷ்மீருக்குத் தனியாக அரசியல் சாசனம் உருவாக்கிக் கொள்ள இந்திய அரசு ஒப்புக்கொண்டு அதன் படி காஷ்மீருக்குத் தனி அரசியல் சாசனச் சட்டம் உருவாக்கப்பட்டு 17-11-1956ல் நிறைவேற்றப்பட்டது. இது, 26-1-1957ல் இந்தியாவின் 8வது குடியரசு நாளில் நடைமுறைக்கு வந்தது. காஷ்மீருக்கெனத் தனி தேசியக்கொடியும் அமைத்துக்கொள்ள சட்டம் அனுமதித்தது. அதன்படி, காஷ்மீர் தேசியக்கொடியும் உருவானது. (விவரங்கள் கட்டுரையின் இறுதியில் உள்ளன)

பொது வாக்கெடுப்பு நடத்தாமல் காஷ்மீரைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பிய இந்தியா, எக்காரணம் கொண்டும் காஷ்மீரை இழந்துவிடக்கூடாது என நினைத்ததால்தான் சிறப்புத் தகுதி வழங்கும் 370வது பிரிவுக்கு வழி வகுத்தது. 1974ஆம் ஆண்டு போடப்பட்ட இந்திராகாந்தி-ஷேக் அப்துல்லா ஒப்பந்தத்திலும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவின்படி ஜம்மு-காஷ்மீரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும், இதனை மாற்று வழிகளில் அடிக்கடி மீற முயற்சிப்பது இந்தியத் தரப்பின் வழக்கமாக இருக்கிறது. பாதுகாப்பு என்ற பெயரில் அளவுக்கதிகமாக ராணுவத்தைக் குவிப்பது, மாநில அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமைப்பது, தீவிரவாதிகளை ஒடுக்குவது என்ற பெயரில் இளைஞர்களை வேட்டையாடுவது, பெண்களை பாலியல் கொடுமைகளுக்குள்ளாக்குவது என 370வது பிரிவுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகள் காஷ்மீரில் அதிகம்.

சிறப்புத் தகுதியை வழங்கும் 370வது பிரிவினால் காஷ்மீர் மக்களுக்கு நேரடிப் பலன் தரும் அம்சங்கள் சில மட்டுமே. அவற்றில் முக்கியமானது, காஷ்மீரிகளைத் தவிர வேறுயாரும் அங்குள்ள நிலங்களை வாங்க முடியாது என்பதாகும். இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மலிவு விலையில் நிலத்தை தாரை வார்க்கும் புதிய பொருளாதாரக் கொள்கையின் முயற்சி அங்கு பலிக்கவில்லை. அதேநேரத்தில், காஷ்மீரில் நிரந்தரமாக வாழ்பவர்களுக்கே நிலம் உரிமை என்பதால், வெளிமாநிலத் தவரைத் திருமணம் செய்துகொள்ளும் காஷ்மீர் பெண்களுக்கு நிலம் தொடர்பான சொத்துகளில் உரிமை இல்லை என மறுக்கப்பட்டது. எனினும், வெளிமாநிலப் பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் காஷ்மீர் ஆண்களுக்கு நிலமும் அதனைச் சார்ந்த சொத்துகளும் உரிமையுடையனவாக இருந்தன.

இந்தப் பாலின பாகுபாட்டுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், 2002 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வு வழங்கிய தீர்ப்பின் மூலம், வேறு மாநிலத்தைச் சேர்ந்ததவரைத் திருமணம் செய்துகொண்டாலும் காஷ்மீர் பெண்களுக்கான சொத்துரிமை நீடிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் ஏன் இந்த சிறப்புத் தகுதி என்று பொதுவாகக் கேட்கப்பட்டாலும், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் சிலவற்றுக்கும் அந்தந்த மாநிலங்களின் தன்மைக்கேற்ப இதுபோல சிறப்புத் தகுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் 371வது பிரிவின்படி மகாராஷ்ட்ராவின் விதர்பா, மரட்வாடா, குஜராத்தின் சவுராஷ்ட்ரா, கட்ச் ஆகிய பகுதிகளுக்கும் வளர்ச்சி நோக்கத்தின் அடிப்படையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. 371.ஏ பிரிவு நாகலாந்தில் உள்ள ஒரு மாவட்டத்திற்கும், 371 ஜே பிரிவு ஹைதராபாத்துக்கும் சிறப்புத் தகுதிகளை வழங்குகிறது.

நமது அரசியல் சாசனத்தின் தொடக்கத்திலேயே, “இந்தியா, அதாவது பாரதம் பல மாநிலங்களின் ஒன்றியம்’ (INDIA that is Bharat, shall be a Union of States) என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொழி,இனம், பண்பாடு, மக்களின் வாழ்க்கைமுறை இவற்றின் அடிப்படையில் அவர்களின் உரிமைகள் காக்கப்பட சில சிறப்பு சட்டப்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்துத்வா என்கிற நெ(வெ)றியைத்தவிர வேறெதுவும் இந்த மண்ணில் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்படும் பா.ஜ.கவும் அதன் மூளையான ஆர்.எஸ்.எஸ்ஸூம் காஷ்மீர் மாநிலத்திற்குத் தரப்பட்டுள்ள சிறப்புத் தகுதியை நீக்குவதற்கான முதற்கட்ட முயற்சிகளை, இத்தகைய விவாதங்கள் மூலம் தொடங்கியுள்ளன. பதவியேற்ற இரண்டாம் நாளிலேயே தேசிய அளவிலான இத்தகைய சர்ச்சை உருவாகியிருப்பது குறித்து 48 மணி நேரம் வரை பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து எந்த வார்த்தையும் வெளிப்படவில்லை. (இக்கட்டுரை பதிவேறும்வரை அவர் எதுவும் தெரிவிக்கவில்லை) குஜராத் கலவரத்தின்போதே இரண்டு நாட்கள் கண்டுகொள்ளாமல் இருந்து, அதன்பின் ‘அமைதி’யை உருவாக்கிய வளர்ச்சியின் நாயகராயிற்றே அவர்! காஷ்மீரிலும் ‘அமைதி’யை நிலைநாட்டக்கூடும்.
370 வது பிரிவு கூறுவது என்ன?

370. (1) இந்த அரசியல் சாசனத்தில் யாது கூறப்பட்டிருப்பினும்

அ) 238 ஆவது கோட்பாட்டில் உள்ளவற்றை ஜம்மு நாடாளுமன்றத்திலுள்ள அதிகாரம்

(ஆ) அந்த மாநிலம் சம்பந்தமாக சட்டம் இயற்றுவத்ற்கு நாடாளுமன்றத்திலுள்ள அதிகாரம்

(1) அந்த மாநிலத்தைக் குடியேற்ற நாடான இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்ட ஆவணத்தில் அந்த மாநிலம் பற்றிக் குடியேற்ற நாடான இந்தியாவுக்குச் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரமுள்ளதாகக் குறிப்பிடப்பட்ட விவகாரங்களுக்கும் அதோடு ஒத்திருக்கும் விவகாரங்களுக்கும் மத்தியப் பட்டியலிலும் மத்திய மற்றும் மாநிலப் பட்டியலில் இருக்கின்றவை எனக் குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்படும் விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசைக் கலந்தாலோசித்த பின்னரும்

(2) அந்த மாநில அரசின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவர் தம் உத்தரவில் குறிப்பிடத்தக்க அத்தகைய பட்டியல்களில் உள்ள வேறு விவகாரங்கள் பற்றியும் மட்டுமே சட்டம் இயற்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

விளக்கம் : இந்தக் கோட்பாட்டில் வரும் மாநில அரசாங்கம் என்ற சொல் குடியரசுத் தலைவரால் தற்காலிகமாக ஜம்மு காஷ்மிரின் மகாராஜா என்று அங்கீகரித்துள்ள நபரைக் குறிக்கும். அந்த மகாராஜா 1948 மார்ச்சு மாதம் 16 ஆம் நாள் வெளியிட்டுள்ள பிரகடனப்படியுள்ள தம் அமைச்சரவையின் அறிவுரைக்கு ஏற்பச் செயல்பட வேண்டும்.

(இ) இந்தக் கோட்பாடும் மற்றும் ஒன்றாவது கோட்பாடும் அந்த மாநிலத்துக்கு அனுசரிக்கப்பட வேண்டும்.

(ஈ) குடியரசுத் தலைவரின் உத்தரவில் குறிப்பிடும் விதி விலக்குகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டு இந்த அரசியல் சாசனத்தில் உள்ள மற்ற விதிகளும் அனுசரிக்கப்படலாம்.

ஆனால் (ஆ) கிளைக் கூறின் (1) ஆவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதும், அந்த அந்த மாநிலத்தை இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்டதுமான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது, இதற்கு முந்தைய விதியில் கூறப்படாத விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது.

(2) (1) வது கூறின் (ஆ) கிளைக் கூறின் (2)வது பத்தியில் உள்ளபடி அல்லது அந்தக் கூறின் (ஈ) இணைக் கூறின் இரண்டாவது விதியில் உள்ளபடி மாநில அரசாங்கத்தின் சம்மதத்தை அந்த மாநிலத்தின் அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு முன்னர் பெற்றிருந்தால் அதனை அரசியல் நிர்ணய சபையில் அத்தகைய முடிவு எடுக்கப்படுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(3) இந்தக் கோட்பாட்டில் இதற்கு முன்னர் யாது கூறப்பட்டிருப்பினும் தாம் குறிப்பிடும் அத்தகைய நாளிலிருந்து இந்தக் கோட்பாட்டில் உள்ளவை செயல் இழக்கும் அல்லது அத்தகைய மாற்றங்களூக்கும் விதி விலக்குகளுக்கும் உட்பட்டுச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு பொது அறிவிக்கை மூலம் குடியரசுத் தலைவர் அறிவிப்பு தரலாம்.

எனினும் அத்தகைய அறிவிப்பை செய்வதற்கு முன் (2) வது கூறிலுள்ளபடி அந்த மாநிலத்தின் அரசியல் நிர்ணய சபையால் அந்த அறிவிப்பு பரிந்துரை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரைப் பகுதி இதுதான்..
ஜம்மு - காஷ்மீர் மக்களாகிய நாங்கள், 1947 அக்டோபர் 26 அன்று இம்மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவும், மேலும் இந்திய ஒன்றியத்தோடு இந்த மாநிலத்துக்கு உள்ள தொடர்பை வரையறை செய்ய வேண்டியும் ... ... எங்கள் மாநில அரசியல் அமைப்பு அவையில், 1956 நவம்பர் 17 அன்று நாங்கள் நிறைவேற்றியும் ஏற்றும் எங்களுக்கான இந்த அரசமைப்பை அமைத்துக் கொண்டோம்'' எனக் கூறுகிறது. இந்தியாவுடன் இணைக்கப்பட்டதை ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஜம்மு - காஷ்மீருக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவு - தொடர்பு பற்றிய ஒரு விளக்கத்தையும் அல்லது வரையறையையும் தங்களுக்குத் தாங்களே செய்து கொண்டனர்..-எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் விதி 144 அந்நாட்டுக்கு உரிய தேசியக் கொடியின் அமைப்பை விவரிக்கிறது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி நீண்ட சதுர வடிவத்தில் சிவப்பு வண்ணத்தில் இலங்கும். அக்கொடியின் கம்பை ஒட்டி சமமான இடைவெளிகளைக் கொண்ட சமமான அகலம் கொண்ட செங்குத்தான வடிவில் - வெள்ளை நிறத்தில் மூன்று கோடுகள் இருக்கும். கொடியின் நடுவில் வெள்ளை வண்ணத்தில் ஏர் வரையப்பட்டிருக்கும். ஏரின் முனை வெள்ளைக் கோடுகளை நோக்கி இருக்கும்.
(இணையத்தில் பெறப்பட்ட தகவல்களின் உதவியுடன்)

தமிழ்நாடு சுற்றுலா – ஒரு சிறப்புப் பார்வை!

தமிழ்நாடு சுற்றுலா, அதன் தன்னிகரில்லா கலாச்சரம், பழம்பெருமை, இயற்கைத்தன்மை மற்றும் அழகினால், தனிச்சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. எவ்வித பயணியாக இருப்பினும், ஆசுவாசமான மனோபாவம் கொண்ட ஒரு சுற்றுலாப் பயணியோ, அல்லது பயணத்தின் அனைத்து அம்சங்களையும் எடை போடக் கூடிய கூரிய திறனாய்வு கொண்ட ஒரு ஆர்வலரோ, யாராக இருப்பினும், அப்பயணியின் கற்பனைகள் மற்றும் உவகைகளுக்கு ஈடு கொடுக்கக்கூடியதாய் உள்ளது. தமிழ்நாடு, தன் தனிச்சிறப்பு வாய்ந்த புராதனப் பெருமையினால், சுற்றுலாப் பயணிகளின் மிக விருப்பமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.         
தமிழ்நாடு

தமிழ்நாட்டு மலை வாசஸ்தலங்கள் – அறைகூவல் விடுத்து சலனப்படுத்தும் பயணப் பிரதேசங்கள்!
தமிழ்நாட்டின் மலை வாசஸ்தலங்களில், முக்கியமாக, ஊட்டி மற்றும் கொடைக்கானல்போன்ற பெருஞ்சிறப்பு பெற்ற தலங்களில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடுகின்றனர்.
நீலகிரியின் மலை வாசஸ்தலங்களான ஊட்டிகுன்னூர்கோத்தகிரி ஆகியவை தங்களின் இயற்கை எழில் மற்றும் தேக ஆரோக்கியத்துக்கு உகந்த வானிலை ஆகியவற்றால், சுற்றுலாப் பயணிகளின் அளவில்லா கற்பனா சக்திக்கு உயிரூட்டக்கூடியனவாய், அவர்களுக்கு வரவேற்பு அறைகூவல் விடுக்கின்றன.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, தமிழ்நாட்டின், புகழ்பெற்ற மற்றொரு மலை வாசஸ்தலமாகும். அவ்வளவாக யாரும் இதுவரை சென்றிராத கொல்லிமலை மற்றும் வால்பாறை ஆகியவையும் கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுலாப் பயணிகளிடையே பரிச்சயமாகி வருகின்றன.
தமிழ்நாட்டு கடற்கரைகள் – கவர்ந்திழுக்கும் கரையோர வசீகரங்கள்!
தமிழகத்தின் கரையோர சுற்றுலாத்தலங்கள், முடிவின்றி அகல விரிந்திருக்கும் கடல்நீரின் அழகு சூழ, அனைத்து அம்சங்களும் பொருந்தியனவாய், ஒரு முழுமையான கடற்கரை விடுமுறையை அளிக்கவல்லனவாக உள்ளன.
கடற்கரை விடுமுறை என்றாலே, மஹாபலிபுரம் கடற்கரை நம் கண் முன்னே விரியும். மெரீனா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை ஆகியவை, தமிழ் நாட்டின் தலைநகரான சென்னைக்கு வருவோர்க்கு பயண விருந்தளிப்பனவாய் உள்ளன.
மஹாபலிபுரம் மற்றும் சென்னை கடல் நீரின் விரிவாக்கமாக விளங்கும் கோவளம்கடற்கரை, அதற்குரிய அழகோடு சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கிறது.    
நாகப்பட்டின மாவட்டம், தமிழ்நாட்டின் முக்கியமான சில கரையோர சுற்றுலாத்தலங்களானநாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், கோடியக்கரைவேதாரண்யம், மன்னார்குடி மற்றும்தரங்கம்பாடி ஆகியவற்றை, உள்ளடக்கியுள்ளது.
நாகூர், வங்காள விரிகுடாவின் கரையோரத்தில், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின் எல்லையோரத்தில் அமைந்துள்ள, இனிய முரண்பாடுகளைக் கொண்ட ஒரு சிறிய நகரமாகும்.   பூம்புஹார், ஒரு கடற்கரையோர தலமாக இருப்பதோடல்லாமல், வரலாற்றுச் சிறப்பு பெற்று, புகழ் பெற்ற தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் இடம் பெற்றதாகத் திகழ்கிறது.  
கன்னியாக்குமரி, இந்தியாவின் தெற்குக் கடைக்கோடியில், வங்காள விரிகுடா, அரேபியக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவை சங்கமமாகும் இடத்தில் அமையப்பெற்றுள்ளது.
இதன் பூகோள அமைப்பு மற்றும் சுண்டி இழுக்கும் சுற்றுலா அம்சங்களினால், இது தமிழ்நாடு சுற்றுலாவின், அதீத மவுசு கொண்ட தலமாக விளங்குகிறது. திருச்செந்தூர் மற்றும் இராமேஸ்வரம் ஆகியவை கடற்கரையோரம் அமைந்துள்ள சில முக்கிய வழிபாட்டுத் தலங்களாகும்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய முனைகள் ! கலாச்சார மையங்கள்!
தமிழ்நாட்டின் சில சுற்றுலாத் தலங்கள், அவற்றின் வலிமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சார மணம் கமழும் தன்மைக்காகவே, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளிடையே பெரும் புகழ் பெற்றுள்ளன.
இவ்வகை தலங்களில் முதன்மையானது, செட்டிநாடு பகுதியில், மிகப் பிரபலமாய் இருக்கும்காரைக்குடி ஆகும். இங்குள்ள சமையற்கலை, நெசவுகள், ஏராளமான கோயில்கள் மற்றும் சொகுசு விடுதிகளாக மாற்றப்பட்டுள்ள மாளிகைகள், ஆகியவை தமிழ் கலாச்சாரத்தின் முக்கிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன.
கொங்கு கலாச்சாரம் தவழும் கோயம்புத்தூர், கோயில் நகரங்களான மதுரை மற்றும்தஞ்சாவூர் ஆகியவையும் தமிழ் கலாச்சாரத்தின் உறைவிடங்களாக விளங்குகின்றன. இவை, இந்த நவீன யுகத்திலும், கலாச்சாரப் பெருமை பொதிந்து காணப்படுகின்றன.
தமிழ்நாட்டுக் கோயில்கள் – ஆவலை தூண்டும் அற்புதங்கள்!
தமிழ்நாட்டின் கோயில்கள், தமிழ்நாடு சுற்றுலாவின், முத்திரை பதித்த மிக முக்கியமான தலங்களாகும். இங்குள்ள கோயில்களின் கோபுரங்கள் உயர்ந்தோங்கிய வண்ணம், தேர்ந்த சிற்ப வேலைப்பாடுகளும், அடுக்கடுக்கான சித்திர வேலைப்பாடுகள் மற்றும் வடிவங்களும் கொண்டவையாக மிளிர்கின்றன.
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ஆகியவற்றின் தெய்வாம்சம் மற்றும் இவற்றை ஆண்ட அப்போதைய மன்னர்களால் நிறுவப்பட்டுள்ள கட்டிடக்கலை அற்புதங்களை பார்க்கவென்றே சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து குவிகின்றனர். 
தாராசுரம், மயிலாடுதுறைதிருவாரூர், திருமணஞ்சேரி, திருக்கருக்காவூர் ஆகியன கட்டாயமாக சென்று வரக் கூடிய சில முக்கிய கோயில்களாகும்.
பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டுள்ள மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில், தமிழ்நாட்டின் கட்டிடக்கலைக்கு உன்னதமானதோர் சான்றாக, அற்புதமான சிற்ப வடிவங்களை கொண்ட கோயிலாக, உயரிய கட்டிடக்கலை அதிசயமாக விளங்குகிறது.
அலைகளற்ற அமைதியான கடற்கரையில் அமைந்துள்ள இராமேஸ்வரம் கோயில், சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றை கொண்டுள்ள சிறப்பு வாய்ந்ததாகும். தமிழ்நாட்டில், பாடற்பொருள் சார்ந்த கோயில்கள், ஆன்மீக சுற்றுலாக்களில் முக்கிய இடம் வகிக்கின்றன.
தஞ்சாவூரை சுற்றியுள்ள நவக்கிரக கோயில்கள் (ஒன்பது கிரகங்கள்), ஒன்பது கிரகங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டவை ஆகும். இக்கோயில்களுக்கு, நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
ஆலங்குடி (வியாழன்), திருநள்ளாறு (சனி), கஞ்சனூர் (வெள்ளி), திருவேற்காடு (புதன்),திருநாகேஸ்வரம் (பாம்பு கிரகம்), கீழ்பெரும்பள்ளம் (பாம்பு கிரகம்), சூரியனார் கோயில் (சூரியக் கடவுள்), திங்களூர் (சந்திரன்) மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) ஆகியனவே அந்த ஒன்பது நவக்கிரக கோயில்களாம்.  
பஞ்சபூதக் கோயில்கள் (ஐம்பூதங்கள்) – சிவபெருமான், ஐம்பூதங்களின் ஆதாரமாகவும், அவற்றின் திவ்ய தரிசனமாகவும் போற்றப்பட்டதால், இக்கோயில்கள், அவருக்காக அர்ப்பணிக்கப்பட்டவை ஆகும்.
திருவானைக்காவல், திருவண்ணாமலைகாஞ்சிபுரம் மற்றும் சிதம்பரம் ஆகியவை தமிழ்நாட்டில் அமைந்துள்ளன; காளஹஸ்தி மட்டும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது.
வீரம் மற்றும் விவேகம் நிரம்பியவராய் வர்ணிக்கப்படும், சுப்ரமண்யர் என்றும் அழைக்கப்படும் தமிழ்க் கடவுளான முருகனின், ஆறு போர் முகாம்களான பழநி,திருப்பரங்குன்றம்திருச்செந்தூர்பழமுதிர்ச்சோலைதிருத்தணி மற்றும் சுவாமிமலைஆகியவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு தனிச்சிறப்புடன், கோயில்களுள் ஐம்பொன்னாய் ஜொலிக்கின்றன.
தமிழ்நாட்டின் நகரங்கள்
சென்னை, கோயம்புத்தூர்மதுரைதிருச்சிசேலம்ஈரோடுவேலூர்திருப்பூர்,திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்கள், மாநிலத்தின் வெவ்வேறு ஊர்களுக்கும் செல்வதற்கான முக்கிய பயண தலங்களாக விளங்குகின்றன.  

பாண்டிச்சேரி - பழம் பெருமையுடைய காலனீய நகரம்!

புதுச்சேரி என்று 2006-ம் ஆண்டிலிருந்து அலுவல் ரீதியாக அழைக்கப்பட்டு வரும் பாண்டிச்சேரி, அதே பெயரையுடைய மத்திய அரசின் நேரடி ஆட்சிப்பகுதியான பாண்டிச்சேரியின் தலைநகரமாகும். இந்த நகரமும், அதன் பிற ஆட்சிப் பகுதிகளும் பிரெஞ்சு காலனியாதிக்கதில் நெடுங்காலம் இருந்து, அதன் விளையாக பல்வேறு தனித்தன்மையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பெற்றிருக்கின்றன.
பாண்டிச்சேரி புகைப்படங்கள் - பாண்டிச்சேரி பீச் 
Image source: commons.wikimedia.org
மூன்று இந்திய மாநிலங்களில் பரவியிருக்கும் கடற்கரை நகரங்களை கொண்ட யூனியன் பிரதேசம் தான் பாண்டிச்சேரி. ஆந்திரபிரதேசத்தில் யானாம், தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையில் பாண்டிச்சேரி, காரைக்கால் மற்றும் கேரளாவின் மேற்கு கடற்கரையிலுள்ளமாஹே ஆகியவைதான் இந்த நான்கு ஆட்சிப்பகுதிகள்.
வங்காள விரிகுடா கடல் தழுவி நிற்கும் சோழமண்டல கடற்கரையில் இருக்கும் பாண்டிச்சேரி நகரம் சென்னையிலிருந்து 162 கிமீ தொலைவில் உள்ளது. பிரெஞ்சு அரசின் முக்கிய காலனிப் பகுதியாக இருந்து வந்த பாண்டிச்சேரி 1674-ம் ஆண்டு முதல் 1954-ம் வரை பிரெஞ்சு ஆட்சிப் பகுதியாகவே இருந்தது.
கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்கு யாருடைய இடையூறும் இல்லாமல் பாண்டிச்சேரியை ஆண்டு வந்த கலைகளின் தாயகம் பிரான்ஸ், வளமான கலாச்சாரத்தையும் மற்றும் அற்புதமான கட்டிடக்கலையையும் இந்த நகரத்திற்கு வழங்கியுள்ளது.

பாண்டிச்சேரியைச் சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள்

மாறுபட்ட அனுபவங்களை விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாண்டிச்சேரி சிறந்த சுற்றுலாத் தலமாக இருக்கும். ப்ரோமெனேட் கடற்கரை (வீதி உலா கடற்கரை), பாரடைஸ் கடற்கரை, செரினிட்டி கடற்கரை மற்றும் ஆரோவில் கடற்கரை ஆகியவை பாண்டிச்சேரிக்கு விடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புத்துணர்ச்சியளிக்க காத்திருக்கும் நான்கு சிறந்த கடற்கரைகளாகும்.
கடற்கரைகள் மட்டுமல்லாமல், இந்தியாவின் மிகச்சிறந்த தியான மையங்களில் ஒன்றான அரவிந்தர் ஆசிரமமும் இங்கிருக்கிறது.
உதய நகரம் என்று அழைக்கப்படும் ஆரோவில் நகரம், சுற்றுலாப் பயணிகளை அதன் தனித்தன்மையான கலாச்சாரம், பாரம்பரிய சின்னங்கள் மற்றும் கட்டிடக்கலைகளால் ஈர்க்கிறது.
காந்தி சிலை, மாத்ரிமந்திர், பிரெஞ்சு போர் நினைவுச் சின்னம், ஜோசம் பிரான்கோயிஸ் டூப்ளிக்ஸ் சிலை, கௌபர்ட் அவென்யூவில் உள்ள பிரெஞ்சு வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க்-ன் சிலை ஆகிய பல்வேறு கலைநினைவுச் சின்னங்களையும், சிலைகளையும் பாண்டிச்சேரியில் பொலிவு குறையாமல் இன்றும் காண முடியும்.
பாண்டிச்சேரி அருங்காட்சியகம், ஜவஹர் பொம்மை காட்சியகம், தாவரவியல் பூங்கா, உட்சேரி நீர் நிலப்பகுதி, பாரதிதாசன் அருங்காட்சியகம் மற்றும் தேசிய பூங்கா, அரிக்கமேடு,டூப்ளிக்ஸ் சிலை மற்றும் ராஜ் நிவாஸ் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை கவரும் பிற பார்வையிடங்களாகும்.
இந்த நகரத்தில் இந்து கோவில்கள் மற்றும் கிறித்தவ தேவாலயங்கள் ஆகியவை ஒரே கலவையில் கலந்திருக்கின்றன. தி எக்லைஸ் டெ நாட்ரே டேம் டெஸ் ஆன்கஸ் சர்ச் (அவர் லேடி ஆப் ஆன்கஸ் சர்ச் என்றும் அழைக்கப்படுகிறது), ஜீசஸின் தூய இருதய தேவாலயம், அவர் லேடி ஆப் இம்மாக்குலேட் கன்ஷப்சன் தேவாலயம், ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் கன்னிகா பரமெஸ்வரி கோவில் ஆகியவை பாண்டிச்சேரி வரும் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களாகும்.

தனித்தன்மையான கட்டிடக்கலைகளையுடைய நகரம்

கடலையும், தனித்தன்மையான கட்டிடங்களையும் வரமாக பெற்றிருக்கும் பாண்டிச்சேரி நகரத்தை காலாற நடந்து சுற்றிப் பார்க்கும் போது சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக சிறந்த அனுபவத்தைப் பெறுவார்கள்.
இங்கு திட்டமிட்டு கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்கள், தெருக்களின் அமைப்புகளில் பிரெஞ்சு கட்டிடக்கலையின் நேரடி தாக்கத்தை காண முடிகிறது. பாண்டிச்சேரியில் பல்வேறு தெருக்கள் பிரெஞ்சு பெயர்களை தாங்கியுள்ளதாகவும் மற்றும் பிரம்மாண்டமான வீடுகளையும், தனி மாளிகைகளையும் காலனீய காலத்தைச் சோந்த கட்டிடக்கலையில் கட்டப்பட்டிருப்பதை காண்பது பார்வையாளரின் கண்களுக்கு சிறந்த விருந்தளிக்கும்.
இந்த நகரம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது—இதில் பிரெஞ்சுப் பகுதியானது வெள்ளை நகரம் அல்லது வில்லே பிளான்சே என்றும், இந்தியப் பகுதி கருப்பு நகரம் அல்லது வில்லே நோய்ரே என்றும் அழைக்கப்படுகின்றன.
முதல் பகுதி பிரம்மாண்டமான காலனீய வடிவ கட்டிடங்களையும், இரண்டாம் பகுதி பாரம்பரியமான தமிழக பாணியிலான கட்டிடக்கலைகளையும் கொண்டிருக்கின்றன. இந்த இரு கட்டிடக்கலைகளின் இணைவு பாண்டிச்சேரி நகரத்தின் தனித்தன்மை மற்றும் அழகுக்கு பெருமை சேர்க்கின்றன.

உணர்வுகளைத் தூண்டும் உணவுகள்

பிரெஞ்சு மற்றும் தமிழக கலாச்சாரங்களின் கலவையாக இருக்கும் பாண்டிச்சேரியின் உணவு வகைகளிலும் அவற்றின் தாக்கம் வெகுவாக இருக்கிறது. அதன் மூலம் சமையல் கலையில் ஆச்சரிய்படும் வகையிலான உணவுகளும் பரிமாறப்பட்டு வருகின்றன.
பிரெஞ்சு பாகெட்ஸ், பிரியோசேஸ் மற்றும் இதர பதார்த்தங்களை தமிழ் மற்றும் கேரள உணவுகளுடன் சேர்த்து பரிமாறும் இடம் தான் பாண்டிச்சேரி. லே கிளப், ப்ளூ டிராகன், ஸ்டாட்ஸங்கா, ரென்டஸ்வஸ், சீ கல்ஸ், லெ கஃபே, லா கோரமண்டலே மற்றும் லா டெர்ராஸே ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் நாவில் சுவையூட்டும் திறன் பெற்ற இடங்களாகும்.
ஷாப்பிங் செய்ய விரும்புபவர்களின் சொர்க்கமாக இந்த நகரத்தின் தெருக்களிலுள்ள கடைகள் உள்ளன. பல்வேறு வகைகளினாலான கைவினைப் பொருட்கள், துணி வகைகள், கற்கள், மர சிற்பங்கள், பாய்கள், பானை வகைகள், வாசனை பொருட்கள், நறுமணப் சாம்பிராணிகள், கண்ணாடி வேலைப்பாடுகள், விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகள் ஆகியவை இந்த கடைத்தெருவிற்கு வருபவர்களின் ஆர்வத்தை தூண்டும் விஷயங்களாகும்.
டிசம்பர் மாதங்களில் நடக்கும் சர்வதேச யோகா திருவிழா, ஆகஸ்டு மாதத்தில் நடக்கும் பிரெஞ்சு உணவு திருவிழா மற்றும் ஜனவரி மாதத்தில் நடக்கும் ஷாப்பிங் திருவிழா ஆகியவை பாண்டிச்சேரியில் நடத்தப்படும் புகழ் பெற்ற திருவிழாக்களாகும்.

பாண்டிச்சேரிக்கு செல்லும் வழிகள்

பாண்டிச்சேரி நகரம் ரயில் மற்றும் சாலை வழிகளால் மிகவும் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. நல்ல சுற்றுலாவிற்கேற்ற பருவநிலையை கொண்டிருப்பதால் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் வருடம் முழுவதும் வந்து செல்ல ஏற்ற இடமாக பாண்டிச்சேரி உள்ளது.

பாண்டிச்சேரிக்கு வருகை தர சிறந்த காலம்

தனித்தன்மையான கலாச்சார குணாதிசயங்கள், அருமையான உணவு வகைப்பாடுகள் மற்றும் மாறுபட்ட பார்வையிடங்களை உடைய பாண்டிச்சேரிக்கு, மாறுபட்ட சுற்றுலா அனுபவத்தைப் பெற விரும்புபவர்கள் எந்த நாட்களிலும் வரலாம்.

கேரளா சுற்றுப்பயணம் - கடவுளின் சொந்த தேசத்தில் பட்டாம்பூச்சிகளாய் சுற்றித் திரிவோம்!

கேரளா என்றாலும், சுற்றுலா என்றாலும் ஒரே அர்த்தத்தைதான் தரும். ஏனென்றால் கடற்கரைகளில் வரிசையாக அமைந்திருக்கும் தென்னை மற்றும் பனைமரங்களையும், அழகும் அமைதியும் நிரம்பிய உப்பங்கழிகளில் மிதக்கும் படகு இல்லங்களையும், எண்ணற்ற கோயில்களையும், ஆயுர்வேதத்தின் அற்புதத்தையும், வளமை குன்றா ஏரிகள் மற்றும் குளங்களையும், கவின் கொஞ்சும் தீவுகளையும் நீங்கள் கேரளாவை தவிர உலகில் வேறெங்கும் பார்த்திட முடியாது. இதன் காரணமாக உலகம் முழுவதிமிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கேரளாவுக்கு படையெடுத்து வருவதுபோல் வந்து கொண்டே இருக்கின்றனர்.
கேரளா

நேஷனல் ஜாக்ரபிக்கின் 'டிராவலர்' பத்திரிக்கையில்  'உலகின் பத்து அற்புதங்கள்' , 'வாழ்நாளில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 50 சுற்றுலாத் தலங்கள்' மற்றும் '21-ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த பயணங்கள்' ஆகிய தலைப்புகளில் கேரளா குறிப்பிடப்பட்டு போற்றப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள மாநகரமாகட்டும்,  சிறிய கிராமமாகட்டும்  அது 'கடவுளின் சொந்த நாடு'என்ற மணிமகுடத்தை சுமந்துகொண்டு மிடுக்குடன் காட்சியளித்துக்கொண்டிருக்கின்றன.
கேரளாவின் பதினான்கு மாவட்டங்களான காசர்கோட், கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு,மலப்புரம்பாலக்காடுதிரிசூர், எர்ணாக்குளம், இடுக்கிகோட்டயம், ஆலப்புழா,பத்தனம்திட்டாகொல்லம், திருவனந்தபுரம் என்று அனைத்துமே தன்னளவிலே அற்புதமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகின்றன.
அதோடு இந்த மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் கண்களுக்கும், உள்ளத்துக்கும் அறுசுவை விருந்து படைக்கும் எண்ணற்ற சுற்றுலா மையங்கள் கொடி போல படர்ந்து வண்ண வண்ணப்பூக்களை சொரிந்துகொண்டிருக்கின்றன.கேரளாவின் மணற்பாங்கான கடற்கரைகளும், பேரின்பத்தை தரும் உப்பங்கழிகளும், இயற்கை எழிலால் போர்த்தப்பட்ட மலைவாசஸ்தலங்களும், பக்திமணம் கமழும் இடங்களும்  சுற்றுலாப் பயணிகளை உற்சாகமூட்டி அவர்களின் வாழ்நாளெல்லாம்  மறக்க முடியாத இன்பச் சுமையை சுமக்கச் செய்யும் பேரற்புதங்கள். 
மனதை கொள்ளை கொள்ளும் நீர்பரப்புகள்!
வர்கலா, பேக்கல்கோவளம், மீன்குன்னு, செராய், பய்யம்பலம், ஷங்குமுகம், முழுப்பிலங்காடு உள்ளிட்ட கடற்கரைகள் கேரள பிரதேசத்தை இணையற்ற சுற்றுலா மையமாக திகழச் செய்து கொண்டிருக்கின்றன.
கேரளாவின் மயக்கும் உப்பங்கழிகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ஆலப்புழாகுமரகம், திருவல்லம், காசர்கோட் போன்ற பகுதிகளில் நீங்கள் இருக்கும் ஒவ்வொரு வினாடியும் உங்கள் வாழ்வில் அதுவரை அனுபவவித்திடாத நொடிகளாகவே பேரின்பத்தை வாரி இறைத்து நகர்ந்து செல்லும்.
அதிலும் குறிப்பாக இந்த உப்பங்கழிகளில் மிதக்கும் கெட்டுவல்லங்களும், படகு இல்லங்களும் உங்களுக்குள் உண்டாக்கும் பரவசத்தை போன்று நீங்கள் உலகின் எத்துனை சிறந்த நட்சத்திர ஹோட்டல்களிலும் சுகித்துவிட முடியாது.
அதோடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் பாரம்பரிய 'ஸ்நேக் போட் ரேஸ்' அல்லது பாம்புப் படகுப் போட்டியில் உப்பங்கழிகளின் சலசலக்கும் நீரலைகளை கிழித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்லும் படகுகளை மெய்சிலிர்க்க வேடிக்கை பார்த்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் எல்லையற்றது.
வேம்பநாடு ஏரி, அஷ்டமுடி ஏரி, பூக்கோட் ஏரி, சாஷ்டாம்கொட்டா ஏரி, வீரன்புழா வெள்ளயாணி ஏரி, பரவூர் காயல், மனச்சிரா போன்ற ஏரிகள் கேரளாவின் வளமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் மிகச் சிறந்த உதாரணங்கள். இதில் வேம்பநாடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.  
கேரள மலைவாசஸ்தலங்கள் - இயற்கையன்னையின் இணையில்லா படைப்பு!
கேரளாவின் தொன்னலம் வாய்ந்த அற்புத மலைவாசஸ்தலமான மூணார் பிரதேசம் மற்ற தென்னிந்திய மலைப்பிரதேசங்களை போல இதுவரை வணிகமயமாக்கலின் பிடியில் சிக்காமல் அதன் தனித்துவத்தையும், புராதன பேரழகையும் காப்பாற்றிக் கொண்டு வருகிறது.
அதோடு வயநாடு மாவட்டத்துக்கு பிறகு மிகவும் பிரசித்தி பெற்ற தேன் நிலவு ஸ்தலமாகமூணார் மலைப்பிரதேசம் அறிப்படுகிறது. மேலும் கேரளாவில் வாகமன், பொன்முடி, தேக்கடி, பீர்மேடு உள்ளிட்ட கண்கவர் மலைவாசஸ்தலங்கள் ஏராளம் நிறைந்து கிடக்கின்றன.
இதில் தேக்கடி அதன் காட்டுயிர் வாழ்க்கைக்காகவும், சாகச வாய்ப்புகளுக்காகவும் பயணிகள் மத்தியில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. எப்படி பார்த்தாலும் கேரளாவின் மலைவாசஸ்தலங்களின் மடியில் உற்சாகம் பொங்கும் சுற்றுலா அனுபவங்கள் எக்கச்சக்கம் காத்துக்கிடக்கின்றன. 
கலாச்சாரம், சமயச் சிறப்பு, உணவு வகைகள் - ஒருங்கிணைந்த அதிசயம்!
இந்தியாவின் மாறுபட்ட கலாச்சாரங்களிலிருந்து வேறுபட்ட ஒரு கலாச்சாரத்தை கேரள மாநிலம் கொண்டுள்ளது. இதன் பலவகைப்பட்ட கலைவடிவங்களும், உணவு வகைகளும், ஆடை ஆபரணங்களும் கேரள மாநிலத்தை மற்ற இந்திய பகுதிகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானதாக காட்சிப்படுத்தி கொண்டிருக்கின்றன.
கேரள மாநிலம் பல்வேறு நடன வடிவங்கள், நாடக வடிவங்கள், நாட்டுப்புறக் கலைகள் என்று கலைமகளின் இருப்பிடமாக திகழ்ந்து வருகிறது. இதில் குறிப்பாக கதக்களியும், மோகினியாட்டமும் உலகப்பிரசித்தம்.
அதோடு பரிசமுட்டு, கூடியாட்டம், கிறிஸ்த்தவர்களின் சவுட்டு நாடகம், இஸ்லாமியர்களின் ஒப்பனா என்பன போன்ற புகழ்பெற்ற நடன மற்றும் நாடக வடிவங்களில் சமயச் சாயம் பூசப்பட்டிருப்பதையும் நீங்கள் பார்க்கலாம். மேலும் முண்டு என்ற பாரம்பரிய உடை உடுத்தும் கேரள மக்கள் கர்நாடக சங்கீதத்திலும் வல்லவர்களாகவே விளங்கி வருகின்றனர்.
புட்டு, இடியாப்பம், உன்னி அப்பம், பாலடை பிரதமன் (ஒரு வகை பாயசம்), நேந்திரம் பழ சிப்ஸ், மீன் உணவுகள், செவ்வரிசி போன்ற பதார்த்தங்கள் கேரளாவுக்கே உரித்தான உணவு வகைகள்.
இங்கு ஆடம்பரமான உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு, வாழை இலையில் பரிமாறப்படும் முறை 'சத்யா' என்று பிரபலமாக அறியப்படுகிறது. அதிலும் ஓணம் திருவிழாவின் போது இதே சத்யா பாணி விருந்து 'ஓணம் சத்யா' என்ற பெயரில் வெகு விமரிசையாகவும், ஆடம்பரமாகவும்  நடத்தப்படும்.
கேரளாவில் ஹிந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மூன்றும் முக்கிய மதங்களாக விளங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஹிந்துக் கடவுளான பகவதி அம்மனுக்கு கேரளா முழுக்க எண்ணற்ற கோயில்கள் இருக்கின்றன.
இவற்றில் சோட்டாணிக்கரா பகவதி கோயில், ஆட்டுக்கால் பகவதி கோயில், கொடுங்கல்லூர்பகவதி கோயில், மீன்குளத்தி பகவதி கோயில், மங்கோட்டு காவு பகவதி கோயில்உள்ளிட்டவை கேரளாவின் பிரதான மற்றும் பக்தர்கள் அதிகமாக கூடும் பகவதி கோயில்களாகும்.  
குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோயிலுக்கு உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தினமும் வந்து வழிபட்டு செல்கின்றனர். சபரிமலை அய்யப்பன் கோயிலை பற்றி சொல்லவே தேவையில்லை.
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கோயில்களில் சபரிமலை கோயிலுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இவைதவிர திரிசூரில் உள்ள அயிராணிக்குளம் மஹாதேவா கோயில்,திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில், திருவல்லா ஸ்ரீவல்லப கோயில் உள்ளிட்டவை கேரளாவின் பிற முக்கிய கோயில்களாக கருதப்படுகின்றன.
இந்தக் கோயில்களில் நடத்தப்படும் திருவிழாக்களில் மாமலை போன்று காட்சியளிக்கும் யானைகள் நன்றாக அலங்கரிக்கப்பட்டு தெய்வ விகரகங்களை சுமந்து கொண்டு வீதிகளில் ஊர்வலம் வரும் காட்சி சுற்றுலாப் பயணிகளின் நினைவுகளில் என்றும் அழியாச் சித்திரமாய் நிலைத்திருக்கும்.
கேரள மாநிலத்தின் சிறப்புகளுக்கெல்லாம் கிரீடம் வைப்பது போன்ற ஒரு செய்தி அத்வைத வேதத்தை தோற்றுவித்த ஆதி சங்கரர் காலடி என்ற கேரள மாநிலத்தின் சிறிய கிராமத்தில் பிறந்தார் என்பதே.
மலயாட்டூர் தேவாலயம், கொச்சி செயின்ட் பிரான்சிஸ் தேவாலயம், போர்ட் கொச்சியில் உள்ள சாண்டா குரூஸ் பெசிலிக்கா, கோட்டயத்தின் செயின்ட் மேரிஸ் போரன்ஸ் தேவாலயம் உள்ளிட்டவை கேரளாவின் பிராதன கிறிஸ்தவ தேவாலயங்களாக கருதப்படுகின்றன.
மேலும் பழயங்காடி மசூதி, மடாயி மசூதி, சேரமான் ஜூம்மா மசூதி, கஞ்சிரமட்டம் மசூதி,மாலிக் தீனர் மசூதி போன்றவை கேரளாவின் முக்கிய இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களாகும்

அந்தமான் நிகோபார் தீவுகள் – ஆழிசூழ் அமைதிக்கு நடுவே வீற்றிருக்கும் சொர்க்கத்தீவுகள்

பொதுவாக வெப்பப்பிரதேச கடற்கரைச்சுற்றுலா என்றாலே நாம் அனைவரும் தேடுவது சந்தடியற்ற, தனிமை கவிழ்ந்திருக்கும் எழிற்கடற்கரைகளைத்தான். அது பிரேசில் நாட்டு அமேசான் ஆற்றங்கரையாக இருந்தாலும் சரி ஸ்பெயின் நாட்டு ‘இபிசா’ கடற்கரையாக இருந்தாலும் சரி, ‘தனிமை’ மட்டுமே ஒரு சுற்றுலாப்பயணியை ‘சாந்த நிலை’க்கு இழுத்துச்சென்று இயற்கையோடு ஒன்ற வைக்கிறது. அப்படி ஒரு தனிமையான அமைதியான மாசுபடாத கடற்கரைச்சூழலை தேடும் பட்சத்தில், நீங்கள் செல்ல வேண்டிய இடம் - இந்த அந்தமான் நிகோபார் தீவுகள் அன்றி வேறில்லை.  வாழ்வில் ஒரு முறையாவது இந்தியப்பயணிகள் விஜயம் செய்யவேண்டிய தீவுச்சொர்க்கமே இந்த அந்தமான் தீவுப்பிரதேசம்.
அந்தமான் நிகோபார் தீவுகள்

அந்தமான் நிகோபார் தீவுகளின் புவியியல் அமைப்பு
அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் நிலப்பகுதியை விட்டு விலகி தென்கோடியில் வங்காளவிரிகுடாவில் அமைந்திருக்கும் மிகப்பெரிய இந்திய யூனியன் (தீவு) பிரதேசமாகும். சுமார் 8000 ச.கி.மீ க்கும் மேற்பட்ட பரப்பளவைக் கொண்டிருக்கும் இந்த தீவுகளில் மனித சுரண்டலுக்கு உட்படாத இயற்கை வளம் நிரம்பி வழிகிறது.
இந்த இந்திய யூனியன் பிரதேசமானது ‘அந்தமான்’ மற்றும் ‘நிக்கோபார்’ என்ற இரண்டு தனித்தனியான -10 டிகிரி வடக்கு அட்ச ரேகையால் பிரிக்கப்பட்ட - தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தின் தலைநகரமான போர்ட் பிளேர் நகரம் முக்கிய போக்குவரத்து இணைப்பான விமான நிலையத்தை கொண்டுள்ளதுடன், இந்த தீவுப்பகுதியிலேயே அதிகமான மக்கள் வசிக்கும் இடமாகவும் விளங்குகிறது.
போர்ட் பிளேர் நகரத்திலிருந்து மற்ற சிறு தீவுகளுக்கு விஜயம் செய்ய பலவிதமான போக்குவரத்து வசதிகள் உள்ளன. கடலுக்கடியில் வீற்றிருக்கும் ஒரு பெரிய மலைத்தொடரின் வெளிநீட்சிகளே இந்த தீவுகள் என்பது ஒரு வியப்பூட்டும் புவியியல் உண்மையாகும்.
இந்த கடலடி மலைத்தொடர் அமைப்பு தெற்கு வடக்காக 800 கி.மீ நீளத்துக்கு நீண்டு அமைந்துள்ளது. விமானமார்க்கம் தவிர, சென்னை மற்றும் கல்கத்தா துறைமுகங்களிலிருந்து ‘ஃபெர்ரி’ எனப்படும் ‘சொகுசு பயணக்கப்பல்’ மூலமாகவும் போர்ட் பிளேர் நகரத்துக்கு பயணம் மேற்கொள்ளலாம்.
அந்தமான் நிகோபார் தீவுகளின் விசேஷ அம்சங்கள்
முடிவடையாது நீண்டு செல்லும் தூய்மையான வெண் மணற்கடற்கரைகள் அலட்டல்கள் அற்ற அமைதியோடு அந்தமான் நிகோபார் தீவுகளில் படர்ந்து கிடக்கின்றன. கடல் ஆழத்தில் மூழ்கி அற்புதக்காட்சிகளை தரிசிக்க உதவும்‘ஸ்கூபா டைவிங்’ எனப்படும் அற்புதமான ‘கடலடி காட்சிப்பயணம்’,  விதவிதமான தாவரங்கள் மற்றும் வித்தியாசமான உயிரினங்கள், எந்தவித செயற்கை அழகூட்டலும் செய்யப்படாமல் இயற்கையாகவே உருவாக்கப்பட்டிருக்கும் அழகு ஸ்தலங்கள் போன்றவை இந்த தீவுப்பகுதிகளில் உங்களை திக்குமுக்காட வைத்துவிடும் என்பதை நேரில் பார்க்கும்போது புரிந்துகொள்வீர்கள். இந்திய பயணிகளுக்கு ‘விசா’ மற்றும் ‘பணமாற்றம்’ போன்ற எந்த சிக்கல்களும் இல்லாமல் மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய சொர்க்கத்தீவுகளுக்கு இணையான ஒரு சுற்றுலா அனுபவத்தை தருவதற்கு இந்த அந்தமான் நிகோபார் தீவுகள் காத்திருக்கின்றன. சிக்கனமான முறையில் ‘ஸ்கூபா டைவிங்’ அனுபவங்களை பெற இந்தியப்பயணிகளுக்கு இந்த தீவுகளை விட்டால் வேறு இடமில்லை என்பது ஒரு மறுக்கமுடியாத உண்மை.  
கன்னிமை குறையாத கடற்கரைகள் மற்றும் ஸ்கூபா டைவிங் மட்டுமல்லாமல் அந்தமான் நிகோபார் தீவுகள் அடர்ந்த வனப்பகுதிகளையும் கொண்டுள்ளன. இயற்கை வளம் நிரம்பிய இந்த காடுகளில் பல அரியவகை பறவைகளையும் வேறெங்கும் பார்க்க முடியாத மலர்த்தாவரங்களையும் காணலாம்.
இது போன்ற சூழல் தேனிலவுப்பயணிகளுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தீவுப்பகுதியின் இயற்கைச்சூழலை பயணிகள் சிரமமில்லாமல் ரசித்து மகிழ்வதற்காக இங்குள்ள உள்ளூர் மக்கள் இயற்கையோடு இயைந்த கட்டமைப்புகளையும், ரிசார்ட் வசதிகளையும் உருவாக்கி சூழலின் தூய்மை கெடாமல் ஒரு ஒழுங்குட்பட்டு பேணிவருகின்றனர். 
அந்தமான் நிகோபார் தீவுகளில் 2200 வகையான தாவர இனங்கள் காணப்படுகின்றன என்பதும், இவற்றில் 1300 வகைகள் இந்திய நிலப்பகுதியில் வளர்வதில்லை என்பதும் இந்த அந்தமான் நிகோபார் தீவுகளின் தனித்தன்மையான இயற்கை வளத்தை எடுத்துச்சொல்ல போதுமானது.
அலங்கார சங்குச்சிப்பிகள், முத்துச்சிப்பிகள், கடல் பொருட்கள் போன்றவற்றுக்கான வியாபாரக் கேந்திரமாகவும் இந்த அந்தமான் நிகோபார் தீவுகள் விளங்குகின்றன. இந்தியாவின் ரகசிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இந்த தீவுப்பகுதி குறிப்பிடப்படுவது ஏன் என்பதை இங்கு விஜயம் செய்தால் மட்டுமே உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
நீங்கள் இதுவரை சென்றதில்லை எனில் உங்களின் அடுத்த சுற்றுலாப்பயணத்துக்கான ஸ்தலமாக இந்த தீவுப்பகுதியை யோசிக்காமல் தேர்ந்தெடுத்துவிடலாம். இங்குள்ள ‘ஹேவ்லாக்’ தீவின் ‘ராதாநகர்’  கடற்கரையை ஆசியாவிலேயே மிக அழகான கடற்கரையாக ‘டைம்’ பத்திரிகை வர்ணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்படிகம் போன்று ஜொலிக்கும் நீலநிற கடல்நீருடன் பலவிதமான கடல் உயிரினங்கள் நீருக்கடியில் கூட்டம் கூட்டமாக காட்சி தரும் இந்த ‘ஹேவ்லாக்’ கடற்கரையின் அழகு இந்திய நிலப்பகுதிகளில் வேறு எங்குமே காணக்கிடைக்காத ஒன்று.
அந்தமான் தீவு பயணத்தின்போது பயணிகள் தவறவிடக்கூடாத மற்றொரு அம்சம் ‘ஜாலிபாய் தீவு’ ஆகும். மேலும், ஹேவ்லோக் தீவு, சின்கூ தீவு மற்றும் ஜாலிபாய் தீவு ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டங்கள் ‘மஹாத்மா காந்தி மரைன் நேஷனல் பார்க்’ (தேசிய கடற்பூங்கா) அல்லது ‘வாண்டூர் நேஷனல் பார்க்’ என்று அழைக்கப்படுகிறது.
சுற்றுப்புற மாசுப்படுத்தல், ஆக்கிரமிப்பு போன்றவை கடுமையாக தடைசெய்யப்பட்டு, சூழலியல் சுற்றுலாத்தலமாக பரமாரிக்கப்படும் இந்த தீவுப்பகுதிகளில் அப்பழுக்கற்ற தீவுக்கடற்கரையின் சொர்க்கம் போன்ற சூழலை பயணிகள் தரிசிக்கலாம். 
உயிர்த்துடிப்பின் பிரதிபலிப்பாக பல்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் நீந்தித்திரியும் கடலுயிர்கள், படிகம் போன்ற நீலப்பச்சை நீருக்கடியில் தரிசனம் அளிக்கும் பவழப்பாறை திட்டுகள்/வளர்ச்சிகள், விதவிதமான மலர்த்தாவரங்கள் மற்றும் காட்டுயிர்கள் என்று ‘இயற்கையின் அதிசயங்களை’ எல்லாம் சுமந்து வீற்றிருக்கும் இந்த அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு இந்தியர் அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது பயணம் மேற்கொள்வது அவசியம்.
தீவுச்சொர்க்கத்திற்கு கூட்டிச்செல்லும் போக்குவரத்து மார்க்கங்கள்
அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொள்வது மிக எளிமையான ஒன்றாகவே உள்ளது. இந்தியாவின் கல்கத்தா, சென்னை, புவனேஸ்வர் போன்ற நகரங்களிலிருந்து எல்லா விமானச்சேவை நிறுவனங்களும் ‘போர்ட் பிளேர்’க்கு விமான சேவைகளை இயக்குகின்றன.
இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான எம். வி. நான்கௌரி எனும் கப்பலுக்கு அந்தமான் தீவுகளில் ஒன்றான ‘நான்கௌரி’ எனும் தீவின் பெயரே சூட்டப்பட்டுள்ளது.
இந்த கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து மாதம் இருமுறையும், விசாப்பட்டிணம் துறைமுகத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் போர்ட் பிளேர்துறைமுகத்துக்கு இயக்கப்படுகிறது. இந்த கப்பல் பயணம் சிக்கனமானது என்றாலும் பயண நேரம் கூடுதலாக இருக்கும்

ஆந்திர பிரதேசம் சுற்றுலா -

இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையோரம் காண்பவர் கண்களை கண்டவுடன் கவரும் மனம் மயக்கும் சுற்றுலா மையமாக ஆந்திர பிரதேச மாநிலம் திகழ்ந்து வருகிறது. எங்கேயும் காணாத அற்புதங்கள் ஏராளம் எல்லையற்று உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த போகிறது இந்த தெலுங்கு தேச பூமியில்!...
ஆந்திர பிரதேசம்

உலக வரைபடத்தில் ஆந்திர மாநிலத்தை காணும் எவருமே இங்குதானே திருப்பதிவெங்கடேஸ்வரா கோயில் உள்ளது என்று பக்தி பரவசத்தில் ஆச்சரியம் குறையாமல் சொல்வதும், ஹைதராபாத்தை பற்றிய நினைவு வந்தவுடன் நிஜாம்களும், வரலாற்றுச் சின்னங்களும் நம் சிந்தையிலேயே உயிரோவியம் போல களங்கமற்று பிரதிபலிப்பதும் மிகச் சாதாரணமாக ஏற்படக்கூடிய அசாதாரண உணர்வுகள்.
ஆந்திராவின் வானிலையும், நிலவியலும்!
ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒவ்வொரு நகரமும், கிராமமும் அதனதன் புவியியல் அமைப்பு சார்ந்து வெவ்வேறு சீதோஷ்ண நிலையை கொண்டிருக்கின்றன. எனினும் பொதுவாக பார்க்கின்ற பொழுது ஆந்திராவின் கோடை காலங்கள் 20 மற்றும் 41 டிகிரிக்கு இடைப்பட்ட வெப்பநிலையுடன் மிகவும் சூடானதாகவும், ஈரப்பதம் மிகுந்ததாகவும் காணப்படும்.
அதோடு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் நல்ல மழைப்பொழிவையும் ஆந்திர மாநிலம் பெற்று வருகிறது. அதேவேளையில் நீண்ட கடலோரப் பகுதியை கொண்டிருக்கும் ஆந்திராவின் பனிக் காலங்களில் 12 முதல் 30 டிகிரி வெப்பநிலையுடன் இதமான வானிலையே நிலவும்.
ஆந்திர மக்கள் உதிர்த்திடும் மொழியும், சுவைத்திடும் உணவும்!
ஆந்திர மாநிலத்தில் பரவலாக பேசப்படுவதும், அதிகாரப் பூர்வ மொழியாகவும் தெலுங்கு மொழியே திகழ்ந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக உருது மற்றும் ஆங்கில பாஷைகள் அதிக எண்ணிக்கையில் பேசப்படுவதோடு, அங்குமிங்கும் ஹிந்தியும், தமிழும் நம் காதுகளில் விழும்.
ஆந்திராவின் உணவு வகைகள் குறித்து பேசும்பொழுது இந்தியாவில் ஆந்திர மக்களை போல எவரும் இவ்வளவு காரசாரமான உணவை உண்பதில்லை என்றே சொல்ல வேண்டும்.
இங்கு காய்கறிகளை கொண்டு தயார் செய்யப்படும் உணவுகளில் பேசராட்டு, ஆலசனந்த வடாலு, காரமான ஊறுகாய்கள், சட்னி வகைகள், அகுக்குற புலகுரா போன்ற பதார்த்தங்கள் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.
அதுமட்டுமல்லாமல் பிரியாணி, கொங்குரா-மாம்சம், மீன் குழம்பு, கோடி-வேப்புடு உள்ளிட்ட அசைவ உணவு வகைகளின் ருசி என்றென்றைக்கும் உங்கள் அடிநாக்கில் சுவைத்துக் கொண்டே இருக்கும்.
ஆந்திராவின் கலாச்சாரம்
ஆந்திர மாநிலத்தின் கலாச்சாரம் தனித்துவமானது மட்டுமல்லாமல், அது அந்த மாநிலத்து மக்களின் வாழ்கையிலும் பிரதிபலித்து சிறப்பானதொரு பீடத்தில் அம்மக்களை அமர்ந்திட செய்திருக்கிறது.
உலக அளவில் கர்நாடக சங்கீதம் என்றாலே அது தெலுங்கு கீர்த்தனைகள் என்றளவுக்கு பெருமை கொள்ளக்கூடிய தெலுங்கு மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக கொண்டிருப்பதும், ஆடைகள், தத்துவம், வரலாறு என்று அனைத்திலும் தனி முத்திரையை பதித்திடும் ஆந்திராவின் கலாச்சாரம் சார்ந்த சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆந்திராவில் சுற்றுலாத் துறை என்றுமே வளம் கொழிக்கும் துறையாக இருக்கின்ற காரணத்தினாலேயே ஆந்திர பிரதேச சுற்றுலாத் துறை 'கோஹினூர் ஆஃப் இந்தியா' என்று அதற்கு பெயரிட்டுள்ளது.
அதோடு திருமலா வெங்கடேஸ்வரா கோயில், ஹைதராபாத்விசாகப்பட்டணம்,விஜயவாடாகுண்டூர்கடப்பாகம்மம்நெல்லூர்புட்டப்பர்த்திநிஜாமாபாத் போன்ற நாட்டின் முக்கிய சுற்றுலாப் பகுதிகள் ஆந்திராவில் நிறைந்து கிடக்கின்றன.
ஆந்திராவை எப்படி அடைவது?
ஆந்திராவிற்கு நீங்கள் சுற்றுலா வருவதற்கு திட்டமிடுகிறீர்கள் என்றால் ஆந்திராவை எவ்வாறு அடைவது என்பது பற்றி கவலையே கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் இந்திய சுற்றுலாவையே தன் பக்கம் சுண்டி இழுக்கும் ஆந்திராவுக்கு உலகின் எந்த மூலையிலிருந்தும், விமானம், ரயில் என்று எந்த மார்கத்தின் மூலமும் சுலபமாக வந்து சேரலாம்.