இந்தியாவின் பிரபலமான சினிமா ஷூட்டிங் ஸ்பாட்ஸ்!!!

இந்தியாவில் எக்கச்சக்கமான சினிமா படப்பிடிப்பு தளங்கள் உள்ளன. இயற்கையும், கலாச்சாரமும், தொன்மையும் பின்னிப்பிணைந்து கிடக்கும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் எந்நேரமும் சினிமாக்காரர்களின் கூட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல மூலைகளிலிருந்தும் பல்வேறு நாடுகளிலிருந்து இங்கு வந்து படப்பிடிப்பு நடத்திச் செல்கின்றனர். அந்தவகையில் இந்தியாவின் மிகவும் பிரபலமான படப்பிடிப்பு தளங்களாக திகழும் இடங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். இவை மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களாகவும் திகழ்வதோடு, சினிமா ஷூட்டிங்கும் நடத்தப்படுவதால், அவற்றைக் காணும் ஆர்வத்தோடு ஆயிரக்கணக்கான பயணிகள் இவ்விடங்களுக்கு வந்து செல்கின்றனர். படித்துப் பாருங்கள் : டாப் கதாநாயகர்களின் பிறந்த இடங்கள்! படித்துப் பாருங்கள் : கனவுக்கன்னிகளின் பிறந்த இடங்கள்! இந்தியாவின் பிரபலமான சினிமா ஷூட்டிங் ஸ்பாட்ஸ்!!!1/31 பேக்கல் கோட்டை பாம்பே படத்தில் அரவிந்த்சுவாமி காதலின் ஏக்கத்தில் உருகியுருகி பாடிக்கொண்டிருக்க, மனிஷா கொய்ராலா அவரைத் தேடி ஓடி வரும் காட்சியை மறக்க முடியுமா?!...அந்தப் பாடல் காட்சி படம்பிடிக்கப்பட்ட இடம்தான் பேக்கல் கோடை. கேரளாவின் மிகப்பெரிய கோட்டையாக அறியப்படும் இந்தக் கோட்டை, காசர்கோட் மாவட்டத்தில் உள்ள பேக்கல் நகரில் அமைந்துள்ளது. பேக்கல் ஹோட்டல்கள்

பேக்கல் கோட்டை

பாம்பே படத்தில் அரவிந்த்சுவாமி காதலின் ஏக்கத்தில் உருகியுருகி பாடிக்கொண்டிருக்க, மனிஷா கொய்ராலா அவரைத் தேடி ஓடி வரும் காட்சியை மறக்க முடியுமா?!...அந்தப் பாடல் காட்சி படம்பிடிக்கப்பட்ட இடம்தான் பேக்கல் கோடை. கேரளாவின் மிகப்பெரிய கோட்டையாக அறியப்படும் இந்தக் கோட்டை, காசர்கோட் மாவட்டத்தில் உள்ள பேக்கல் நகரில் அமைந்துள்ளது. பேக்கல் ஹோட்டல்கள் 

அதிரப்பள்ளி அருவி


அருவியை இந்தியாவின் நம்பர் ஒன் ஷூட்டிங் ஸ்பாட் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இங்கே சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன. உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'புன்னகை மன்னன்' படத்தில் வரும் அதிர்ச்சியூட்டும் தற்கொலைக் காட்சியை யாராவது மறக்க முடியுமா? அதேபோல இராவணன் படத்தில் வரும் 'உசுரே போகுது' பாடல், பையாவின் 'அடடா மழைடா', அசோகா (இந்திப்படம்) உள்ளிட்ட எண்ணற்ற திரைப்படங்கள் இங்கே படம்பிடிக்கப்பட்டுள்ளன. அதிலும் டூயட் பாடல்கள் எடுக்கவேண்டுமென்றால் படப்பிடிப்பு குழுவினருக்கு அதிரப்பள்ளி அருவிதான் நியாபகத்துக்கு வரும்!

பொள்ளாச்சி


மணிரத்னம், பாலச்சந்தர், கே.பாக்யராஜ், ஷங்கர் உள்ளிட்ட தமிழ் திரைப்பட இயக்குனர்களின் எண்ணற்ற திரைப்படங்கள் பொள்ளாச்சியில் படம்பிடிக்கப்பட்டிருப்பதோடு, ஹிந்தி, மலையாளம் போன்ற பிறமொழி படங்களும் அதிக எண்ணிக்கையில் பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டுள்ளன
பாங்காங் ஏரி


2006-ஆம் ஆண்டில் "தி ஃபால்" மற்றும் 2010-ல் "3 இடியட்ஸ்" ஆகிய திரைப்படங்களில் பாங்காங் ஏரியின் அழகுக் காட்சிகள் படமாக்கிக் காட்டப்பட்டுள்ளன. இந்தத் திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்த ஏரிப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
ஆலப்புழா


உயிரே படத்தில் ஷாரூக்கானும், பிரீத்தி ஜிந்தாவும் காதலில் உருகித் திளைத்த 'நெஞ்சினிலே நெஞ்சினிலே...' பாடல் ஆலப்புழாவின் படகு வீடுகளில்தான் படம்பிடிக்கப்பட்டது.

போடி மெட்டு




'மைனா' திரைப்படம் உட்பட எண்ணற்ற தமிழ் மற்றும் பிறமொழி படங்கள் போடி மெட்டு பகுதியில் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

தூத்சாகர் அருவி

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் சத்யராஜ் அறிமுகமாகும் சீன் இந்த அருவியின் பின்னணியில்தான் படமாக்கப்பட்டது. உலகின் மிக அழகிய அருவிகளில் ஒன்றாகவும், 310 மீட்டர் உயரத்திலிருந்து விழுவதால் இந்தியாவின் 5-வது உயரமான அருவியாகவும் கருதப்படும் தூத்சாகர் அருவி பனாஜி நகரிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் கர்நாடக-கோவா எல்லையில் அமைந்திருக்கிறது.

மூணார்





2012-ல் ஆஸ்கார் விருதுகளை அள்ளிக் குவித்ததோடு வசூலில் உலக அளவில் அசுர சாதனை படைத்த லைப் ஆஃப் பை திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது மூணாரில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. அதாவது மூணாரில் சுப்பிரமணியன் கோயில், மவுண்ட் கார்மல் சர்ச் மற்றும் இஸ்லாமிய மசூதி மூன்றும் ஒரே மலையில் அமைந்திருக்கும் அதிசயத்தை லைப் ஆஃப் பை படத்தில் காட்டியிருப்பார்கள்

.உதய்பூர்



ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில்தான் 1983-ஆம் ஆண்டு 'ஆக்டோபுஸி' என்ற ரோஜர் மூர் நடித்த ஜேம்ஸ் பாண்ட் படம் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் லேக் பேலஸ், ஜக் மந்திர் மற்றும் மன்சூன் பேலஸில் படம்பிடிக்கப்பட்டன. அதோடு ஷிவ் நிவாஸ் பேலஸ் என்ற ஹோட்டலில்தான் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் தங்கியிருந்தார். மேலும் உதய்பூரின் மயக்கும் அழகின் பின்னணியில் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் விறுவிறுப்பான சண்டை காட்சிகள் படம்பிடிக்கப்பட்ட விதம் அற்புதம்.
மணப்பாடு கடற்கரை, தூத்துக்குடி

தனுஷ் நடித்து வெளியான மரியான் பட சூப்பர் ஹிட் பாடல் 'சோனாபரியா' இந்தக் கடற்கரையில்தான் படம்பிடிக்கப்பட்டது. இந்த மணப்பாடு கடற்கரை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்படி கிரமமான மணப்பாடில் அமைந்துள்ளது.

ஒகேனக்கல் அருவி



ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து பட்டித்தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பிய 'சின்ன சின்ன ஆசை' பாடல் ஒகேனக்கல் அருவியில்தான் படம்பிடிக்கப்பட்டது. மேலும் 'மூங்கில் காடுகளே' (சாமுராய்), 'மழையே மழையே' (ரிதம்) உள்ளிட்ட எண்ணற்ற பாடல்கள் ஒகேனக்கல் அருவியில் படமாக்கப்பட்டுள்ளன.


ஊட்டி


மலைகளின் ராணியான ஊட்டியை சினிமாக்காரர்கள் விட்டுவைப்பார்களா?! ஊட்டியில் அபியும் நானும், அது ஒரு கனாக்காலம், அன்பே வா, பர்ஃபி, தெய்வத்திருமகள், கீதாஞ்சலி, ஜூலி கணபதி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

தாஜ் மஹால்



காதலின் அடையாளமாக கருதப்படும் தாஜ் மஹாலில் எண்ணற்ற காதல் பாடல்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. 'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை...' (வாரணம் ஆயிரம்), 'பனி விழும் இரவு...' (மௌன ராகம்), 'ரோஜா ரோஜா...' (காதலர் தினம்), 'வெண்ணிலா வெண்ணிலா...' (இருவர்) போன்ற எக்கச்சக்கமான பாடல்களில் தாஜ் மஹாலின் அழகு படம்பிடித்து காட்டப்பட்டுள்ளன.

கோவா



வெங்கட்பிரபுவின் 'கோவா' திரைப்படம், தல அஜித்தின் 'பில்லா 2' உள்ளிட்ட எண்ணற்ற திரைப்படங்கள் கோவாவில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. 

சிம்லா



கமல்ஹாசன், எஸ்.வி.சேகர் ஆகியோர் நடித்த சிம்லா ஸ்பெஷல் திரைப்படம் சிம்லாவில் படம்பிடிக்கப்பட்டது. அதே போல எண்ணற்ற தமிழ் மற்றும் பிறமொழி படங்கள் சிம்லாவில் படமாக்கப்பட்டுள்ளன

குலு மணாலி

ஆர்யாவும், விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துவரும் 'புறம்போக்கு' திரைப்படத்தின் சில காட்சிகள் குலு மணாலியில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. இதைப்போலவே எண்ணற்ற திரைப்படங்களில் குலு மணாலியின் அழகு படம்பிடிக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர்



மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ரோஜா' திரைப்படம் காஷ்மீரில்தான் படம்பிடிக்கப்பட்டது. ஆனால் காஷ்மீரின் அழகை முதன் முதலாக தமிழர்களுக்கு படம்பிடித்து காட்டிய பெருமை 'தேன் நிலவு' படத்தையே சேரும்.







No comments:

Post a Comment