அமெரிக்க அதிபர் என்றாலே அடிக்கடி செய்திகளில் வரும் ஒரு முக்கிய பதவி தான். அமெரிக்க அதிபர் அந்த நாட்டுக்கு போனார். அமெரிக்க அதிபர் இந்த நாட்டுக்கு இத்தனை கோடி கொடுக்க இருக்கிறார் என்று தான் செய்திகள் வரும். ஆனால், தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப, தன் கடுமையான கருத்துக்களாலேயே நிறைய செய்திகளில் இடம் பிடித்துவிடுகிறார். அதோடு அவருடைய மிரட்டல் தொனி, அவர் பேச்சை கேட்பவர்களையும், படிப்பவர்களையும் பயம் கொள்ள வைக்கும் விதத்திலேயே இருக்கின்றன. அப்படி ஒரு விஷயத்தைச் சொல்லித் தான் இப்போது முதலீட்டாளர்களுக்கும் பயத்தைக் கிளப்பி இருக்கிறார். சில தினங்களுக்கு முன் அவர் பேசியதைப் பார்பப்தற்கு முன், ட்ரம்ப் அதிரடி காட்டிய தருணங்களை ஒரு முறை ரீவைண்ட் செய்து பார்ப்போம்.
அமெரிக்க சீன உறவு அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கொரோனா வைரஸை, "சீன வைரஸ்" "சீனாவில் உருவான வைரஸ்" எனச் சொல்லி சர்வதேச அளவில் சீனாவுக்கு எதிரான மன நிலையை வெளிப்படுத்தினார். அதோடு சீனா மீதான கோபத்தை, இப்படி பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். வெறுமனே குற்றம் சாட்டுவதோடு நிற்காமல் சில எச்சரிக்கைகளையும் செய்து இருக்கிறார். வரி விதிப்பேன் சீனா மீது அமெரிக்காவால் கூடுதலாக வரி விதிக்க முடியும். அதையும் செய்வேன் என தொடர்ந்து மிரட்டினார்ர். சீனாவும் தன் பங்குக்கு பதில்களைச் சொல்லி சமாளித்தது.
ஆனால் ட்ரம்பின் கோபம் தணிந்ததாகத் தெரியவில்லை. ஏற்கனவே கூடுதல் வரி விதித்து தானே அமெரிக்க சீன வர்த்தகப் போரே வந்தது. அந்த வர்த்தகப் போர் உடன்படிக்கையிலும் பிரச்சனை வந்தது. டிரேட் டீல் ஒப்பந்தம் இந்த வர்த்தகப் போரை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், கடந்த ஜனவரி 2020-ல் தான் சீனா மற்றும் அமெரிக்கா டிரேட் டீலின் முதல் பாகத்தை ஒப்புக் கொண்டு கையெழுத்து போட்டார்கள். அந்த டீலின் படி, சீனா, அமெரிக்காவிடம் இருந்து 200 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும், என்பது தான் டீலின் மிக முக்கிய அம்சம். மொத்த டீலையும் காலி செய்துவிடுவேன் சில வாரங்களுக்கு முன்பு "சீனா முறையாக டிரேட் டீலில் சொல்லி இருப்பது போல அமெரிக்க பொருட்களை வாங்க வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி அமெரிக்க பொருட்களை, சீனா வாங்க மறுத்தால், மொத்த டிரேட் டீலையும் ரத்து செய்து விடுவேன்" என மிரட்டினார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். உறவை முறித்துக் கொள்வேன் சில வாரங்களுக்கு முன்பு,
"அமெரிக்கா, சீனா உடனான உறவை, முழுமையாக முறித்துக் கொள்ள முடியும். அப்படி முறித்துக் கொண்டால், அமெரிக்காவுக்கு சுமார் 500 பில்லியன் டாலர் இறக்குமதி செலவுகள் குறையும்" எனச் சொல்லி உலக பொருளாதார அமைப்புகள் & பொருளாதார வல்லுநர்களுக்கே பகீர் கிளப்பினார் அதிபர் ட்ரம்ப். மக்கள் போராட்டம் அதே போல சமீபத்தில், மினிசொடா மாகாணத்தில் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு ஆதரவாகவும், கருப்பின மக்களின் உரிமைக்காகவும், வீதிகளில் களம் இறங்கி போராடும் மக்களைக் கட்டுப்படுத்த ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பயமுறுத்தும் விதத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியது இன்னும் சர்ச்சைக்கு உள்ளானது. ரெசசன் இப்படி சர்வதேச மற்றும் அமெரிக்க அரசியல் களம் 100 டிகிரியில் கொதித்துக் கொண்டிருக்க, அமெரிக்க பொருளாதாரமும் சமமாக கொதித்துக் கொண்டு இருக்கிறது. அமெரிக்கா, கடந்த பிப்ரவரி 2020-லேயே, ரெசசனுக்குள் வந்துவிட்டது என ஒரு தனியார் பொருளாதார ஆராய்ச்சிக் குழு அமெரிக்க அரசை எச்சரித்து இருக்கிறது. அமெரிக்க பங்குச் சந்தைகளில் எதிரொலி இப்படி ட்ரம்பின் பகீர் பேச்சுக்கள், அமெரிக்க பொருளாதார பிரச்சனைகள் எல்லாம் சேர்ந்து, அமெரிக்காவின் பங்குச் சந்தைகளில் உரக்க எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது. நேற்று ஜூன் 09, 2020 அன்று அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் 1.09 %, எஸ் & பி 500 இண்டெக்ஸ் 0.78 %, டவ் ஜோன்ஸ் யுடிலிட்டி ஆவரேஜ் 2.00 %, நியூ யார்க் பங்குச் சந்தை 1.69 % என பல சந்தைகளும் சரிவில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன. அமைதி இல்லை என்றால் எப்படி ஒரு நாட்டில் அமைதியாக பொருளாதாரம் இயங்கினால் தானே, பங்குச் சந்தைகள் நல்ல படியாக ஏற்றம் காணும், அமெரிக்கா கலவர பூமியாக இருந்தால் எப்படி வியாபாரம் செழிக்கும். அதே போல சர்வதேச அளவில் ஒரு நாடு, எல்லா தரப்பான நாடுகளோடும் நல்லுறவை பாதுகாத்தால் தானே ஏற்றுமதி இறக்குமதி செழிக்கும். அதுவிட்டு, அமெரிக்கா அதிகம் வர்த்தகம் செய்யும் சீனா உடனேயே எல்லா விஷயங்களிலும் மல்லுகட்டிக் கொண்டிருந்தால் எப்படி வியாபாரம் அதிகரிக்கும்? எப்படி பங்குச் சந்தைகள் ஏற்றம் காணும்? எல்லாம் ட்ரம்புக்கு தான் வெளிச்சம்.

No comments:
Post a Comment