இந்தியா-அமெரிக்கா கூட்டணி உலக நன்மைக்கானது.. அமெரிக்க அமைச்சர்களை சந்தித்த மோடி! சொன்னதை பாருங்க

 டெல்லி: 2+2 மீட்டிங்கின் ஒருபகுதியாக இன்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் மற்றும் அமெரிக்கா பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்த போட்டோக்களை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி பெருமைப்பட கூறியுள்ளார். இந்தியா-அமெரிக்கா இடையே நல்ல உறவு உள்ளது. பல்வேறு கூட்டமைப்புகளில் இரு நாடுகளும் அங்கம் வகித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இந்தியா-அமெரிக்கா இடையேயான வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை குறித்து உறவுக்காக 2+2 மீட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.



இந்த மீட்டிங்கில் இருநாட்டின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் பங்கேற்று முக்கிய விஷயங்கள் பற்றி விவாதிப்பார்கள். குறிப்பாக இருநாடுகள் இடையேயான பாதுகாப்பு கொள்கை, வெளியுறவு கொள்கை குறித்து விவாதிக்கப்படும். மேலும் முக்கியமான இந்த 2 துறைகளில் இருநாடுகள் இடையேயான உறவின் முக்கியத்துவம், உறவுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்படும். மேலும் பிராந்தியம் வாரியான வளர்ச்சி பற்றி விவாதிக்கப்படும். அதோடு இந்தோ-பசிபிக் பிராந்திய பிரச்சனைகள் பற்றி ஆலோசிக்கப்படும். இந்நிலையில் தான் 2+2 மீட்டிங்கிற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர்.

இதற்கிடையே தான் பிரதமர் மோடி அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டனி பிளிங்கன் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் ஆகியோர் இடையேயான சந்தித்து பேசினார். அப்போது ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் உடன் இருந்தனர். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் போட்டோ வெளியிட்டு கூறியுள்ளதாவது: உலகளவில் இந்தியா-அமெரிக்காவின் வியூக கூட்டணியை வலுப்படுத்துவது தான் 2+2 எனும் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும். ஜனநாயகம், பன்முகத்தன்மை, சட்டத்தின் ஆட்சி உள்ளிட்டவற்றோடு பல்வேறு துறைகளில் பரஸ்பர நன்மை கிடைக்கும் வகையில் நாங்கள் செயல்படுகிறோம். இந்தியா-அமெரிக்கா கூட்டணி என்பது உண்மையிலேயே உலக நன்மைக்கான சக்தியாக இருக்கிறது'' என தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment