டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. கடந்த அக்.7ஆம் தேதி ஹமாஸ் படை இஸ்ரேல் நாட்டில் புகுந்து சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் நாட்டில் இறங்கிய ஹமாஸ் படை அவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. மேலும், பல இஸ்ரேல் நாட்டவரையும் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியது. காசா மீது முதலில் ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்த நிலையில், அடுத்து இப்போது படையெடுப்பையும் ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ்: இப்படிக் காசா மீது இஸ்ரேல் முழு வீச்சில் தனது தாக்குதலை ஆரம்பித்துள்ளது.. அமெரிக்கா தொடங்கி உலகின் பல நாடுகளும் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கி உள்ளது, இருப்பினும், இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என்றே இஸ்ரேல் இதுவரை தொடர்ந்து கூறி வந்தது. இதற்கிடையே இஸ்ரேல் திடீரென இப்போது தனது முடிவை மாற்றியுள்ளது.
அதாவது ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. வடக்கு காசாவில் உள்ள சில பகுதிகளில் இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் அறிவிக்கப்படும் இந்த போர் நிறுத்தங்கள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியும். மேலும், பிணையக் கைதிகள் பாதுகாப்பாக வெளியேறவும் இந்த போர் நிறுத்தம் பயன்படும் என்று வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
நெதன்யாகு: இருப்பினும், இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு இது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் தொடர்ச்சியான போர் நிறுத்தங்கள் இருக்கும் என்பதில் இஸ்ரேல் எந்தவொரு உத்தரவாதமும் அளிக்கவில்லை. இஸ்ரேல் போர் தொடரும் நிலையில், இது குறித்து அந்நாட்டின் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், "ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டை தொடர்கிறது, ஆனால் குறிப்பிட்ட இடங்களில் போர் நிறுத்தம் செய்ய நாங்கள் ரெடியாக இருக்கிறோம். சில மணி நேரங்கள் ஆங்காங்கே போர் நிறுத்தம் செய்யத் தயாராக இருக்கிறோம். இதன் மூலம் பொதுமக்கள் போரில் இருந்து பாதுகாப்பாக வெளியேற முடியும். இஸ்ரேல் திட்டம்: எங்கள் சண்டை ஹமாஸுக்கு எதிராகத் தான் நடந்து வருகிறது. இதனால் பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்வதை நாங்கள் தடுக்கவில்லை. மேலும், வலுக்கட்டாயமாக பாலஸ்தீனர்களை இடமாற்றம் செய்யவும் நாங்கள் முயலவில்லை என்பதையும் திட்டவட்டமாகச் சொல்லிக் கொள்கிறோம். இப்போது வடக்கு காசா பகுதியில் நாங்கள் ஒரு வலயத்தை உருவாக்கியுள்ளோம்.
அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டால் களத்தில் சிகிச்சை அளிக்கவும் மருத்துவமனைகளை ரெடி செய்து வருகிறோம். பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறவும் அனுமதித்தே வருகிறோம். எங்கள் போரை நாங்கள் இப்படிதான் நடத்தி வருகிறோம். காசா இப்போது முழுக்க முழுக்க ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர்களை விடுவித்து மீண்டும் அங்கே மக்கள் ஆட்சியை ஏற்படுத்துவதே இப்போது நமக்கு நோக்கம். இதையெல்லாம் நம்மால் நிச்சயம் சாதிக்க முடியும். எங்கள் திட்டம் என்ன: காசாவைக் கைப்பற்ற நாங்கள் முயலவில்லை. காசாவை ஆக்கிரமிக்கும் திட்டமோ அல்லது அவர்களை வெளியேற்றும் திட்டமோ எங்களுக்கு இல்லை. அங்குள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிப்பது மட்டுமே எங்கள் நோக்கம். இஸ்ரேல் மீது தேவையற்ற தாக்குதல்கள் நடத்தும் ஆபத்துகளை இது குறைக்கும்" என்றார்.
No comments:
Post a Comment