ரஜினிகாந்தின் இளைய மகளும் தயாரிப்பாளருமான சவுந்தர்யா, விரைவில் மணப்பெண் ஆகிறார். 2010, பிப்ரவரி 14ஆம் தேதியன்று நிச்சயதார்த்தம் செய்ய ரஜினிகாந்த் நாள் குறித்திருக்கிறாராம்.
தனது முதல் தமிழ்ப்படத் தயாரிப்பின் மூலம் கடனாளியாகி கஷ்டப்பட்ட சவுந்தர்யாவின் தயாரிப்பாளர் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த், அவருக்குத் திருமணம் செய்யவும் ஏற்பாடு செய்துவிட்டார்.
சென்னையில் பிரபல கட்டுமான தொழிலதிபர் ராம்குமார் என்பவரின் மகன்தான் சவுந்தர்யாவைக் கரம் பிடிக்க இருப்பவர். பெயர் அஸ்வின். அமெரிக்காவில் எம்.எஸ். படித்தவராம். தற்போது கட்டுமானத் தொழிலைக் கவனித்து வரும் அஸ்வின், சவுந்தர்யாவை வெகுகாலமாகக் காதலித்து வருகிறாராம்.
இரு வீட்டாரின் சம்பிரதாய பேச்சு வார்த்தைகள் முடிந்து, பிப்ரவரியில் நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்து விட்டார்கள். அதற்குள் தனது சினிமா தொழிலுக்குச் சவுந்தர்யா, ஒரு முடிவு கட்டி விடுவாராம்
ரஜினியின் பெருந்தன்மை
சென்னை விமான நிலையத்திற்கு காலதாமதமாகச் சென்றதால் நடிகர் ரஜினிகாந்த் தான் செல்ல இருந்த விமானத்தை தவறவிட்டார்.
இன்று (ஜன.11) காலை 9.30 மணியளவில் திருவனந்தபுரம் செல்வதற்காக தனியார் விமானம் ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் டிக்கெட் புக் செய்திருந்தார். இதற்காக அவர் இன்று காலை 9.25 மணியளவில் விமான நிலையத்திற்கு வந்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் செல்ல வேண்டிய விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறிவிட்டதால் அந்த விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தது.
அந்த விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விமானத்திற்குள் பயணிகள் செல்லும் கால இடைவெளிக்குள் நடிகர் ரஜினிகாந்த் போர்டிங் பாயிண்ட்டுக்கு வராததால் அவரை விமானத்தில் ஏற்ற அந்த நிறுவனம் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அந்த விமானத்தில் செல்ல முடியவில்லை. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் காலை 10 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு சென்ற மற்றொரு தனியார் விமானத்தில் ஏறி சென்றார். இதனை நடிகர் ரஜினிகாந்த் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார். (டிஎன்எஸ்)

முதல்வருடன் கைகோர்க்கும் ரஹ்மான், ஷங்கர்
உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்காகவும், அதன் பிறகு அனைத்து தமிழ் மேடைகளிலும் ஒலிப்பதற்காகவும் ஒரு புதிய தமிழ் வாழ்த்துப் பாடலை உருவாக்குகிறது தமிழக அரசு.
இந்தப் பாடலுக்கு இசையமைக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானையும், பாடலை உருவாக்குவதற்கு இயக்குநர் ஷங்கரையும் தேர்வு செய்துள்ளனர். பல கோடி செலவில் உருவாகும் இந்தப் பாடலுக்கு கவிதை எழுதித் தருபவர் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் தான்
இப்படியொரு யோசனையை தமிழக முதல்வருக்குச் சொன்னவர் 'சன் நெட்வொர்க்' அதிபர் கலாநிதி மாறன்தானாம். இதனை உடனே ஒப்புக் கொண்ட முதல்வர், யாரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்கலாம் என யோசித்தபோது, இயக்குநர்கள் மணிரத்னம் அல்லது ஷங்கர் இவர்களின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டதாம்.
இசைக்கு இளையராஜா அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் என்ற யோசனை சொல்லப்பட்டதாம், இதற்கிடையில் கலாநிதி மாறன், ஷங்கர்- ரஹ்மான் கூட்டணி சிறப்பாக இருக்கும் என்று கூறி, அவர்களிடம் இந்த பொருப்பை அளிக்க சம்மதிக்க வைத்தாராம்.

ஐயாயிரம் போலீஸ் குவிப்பு: உயர்அதிகாரி சென்னை வருகை
சென்னை, ஜன.12 (டிஎன்எஸ்) தேசிய பாதுகாப்புப்படை இயக்குனர் அலாக் இன்று திடீரென சென்னைக்கு வருகை தந்தார். மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகளின் நடமாட்டும் மற்றும் ஊடுருவலை தடுக்க தேசிய பாதுகாப்புப்படை மையங்கள் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் அமைக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை, நடைபெற உள்ள குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சி மேற்கொள்ள கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் புதுதில்லியிலிருந்து தேசிய பாதுகாப்புப் படை இயக்குனர் அலாக், ஐஜி பரத்வாஜ் ஆகியோர் இன்று காலை 9.30 மணி அளவில் சென்னைக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் உயர் அதிகாரிகளுடன் இன்று பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என தெரிகிறது.
போலீஸ் குவிப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றிலும் மெரீனா போன்ற கடற்கரைகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை நகர போலீசார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாளை போகி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கும், சுகாதாரத்திற்கும் தீங்கு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள், பழைய டயர்கள், டியூப்கள் போன்றவற்றை தீயிட்டு கொளுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காற்றை மாசுப்படுத்தும் இத்தகைய செயல்கள் தண்டனைக்குரியதாகும். மேலும் குடிசைப் பகுதிகள், பெட்ரோல் பங்க்குகள் ஆகியவற்றில் தீ விபத்து ஏற்பட வழி வகுக்கும். எனவே பொதுமக்கள் இந்த விஷயத்தில் விழிப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும்.
எனினும் மாட்டுச்சாணம், பழைய மரக்கட்டைகள் போன்றவற்றை பாதுகாப்பாக எரித்து போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு எவ்வித தடையும் இல்லை.

15ஆம் தேதி திருவள்ளூவர் தினத்தன்று மதுக்கடைகள் அடைக்கப்படுகின்றன. 16ஆம் தேதி காணும் பொங்கலையொட்டி மக்கள் கூடும் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மெரினா கடற்கரையில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள், கேமராக்கள் பொருத்தப்பட்டு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உழைப்பாளர் சிலைக்கு பின்புறம் உடைந்த கப்பல் உள்ள பகுதியிலும், மெரினா கடலிலும் மக்கள் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படு கிறது. கடலில் படகு சவாரியும் தடை செய்யப்பட்டுள்ளது.பொதுமக்களின் நலன் கருதி கடற்கரை பகுதிகளில் 35 மீனவர்கள் அடங்கிய உயிர் காக்கும் நீச்சல் மீட்புக் குழுக்களும், முதலுதவி அளிக்க மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
சமூக விரோதிகள் மற்றும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கையும், களவுமாக பிடிக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். அவசர உதவிக்கு 95000 99100 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் தகவல் கொடுக்கும்படி காவல் துறை கேட்டுக் கொள்கிறது. (டிஎன்எஸ்)

அமெரிக்க சாலைக்கு இந்தியர் பெயர்
நியூ ஜெர்சி. ஜன.12 (டிஎன்எஸ்) அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள சாலை ஒன்றுக்கு முதல் முறையாக இந்தியர் ஒருவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
எடிசன் என்ற நகரில் உள்ள முக்கிய சாலைக்கு மேத்தானி சாலை என்று பெயரிடப்பட்டு, அதற்கான பெயர்ப்பலகையை நியூ ஜெர்சி எடிசன் மேயர் ஜுன் சோய் திறந்து வைத்தார்.
கடந்த 1970ல் அமெரிக்காவில் குடியேறிய மேத்தானி முதலில் காப்பீட்டு முகவராக பணியாற்றி வந்தார். பின்னர் இந்த உணவக சங்கிலித் தொடரை அவர் தனது மனைவி ஸ்னேகாவுடன் சேர்ந்து தொடங்கினார்.
நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட இடங்கில் உணவக சங்கிலித் தொடரை தொடங்கி அவற்றை வெற்றிகரமாக நடத்தி வருவதுடன், கலாச்சார மேம்பாட்டிற்கு பணியாற்றி வரும் மேத்தானியை கவுரவிக்கும் வகையில் இந்த சாலைக்கு மேத்தானியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்

Subscribe to:
Comments (Atom)