சென்னை விமான நிலையத்திற்கு காலதாமதமாகச் சென்றதால் நடிகர் ரஜினிகாந்த் தான் செல்ல இருந்த விமானத்தை தவறவிட்டார்.
இன்று (ஜன.11) காலை 9.30 மணியளவில் திருவனந்தபுரம் செல்வதற்காக தனியார் விமானம் ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் டிக்கெட் புக் செய்திருந்தார். இதற்காக அவர் இன்று காலை 9.25 மணியளவில் விமான நிலையத்திற்கு வந்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் செல்ல வேண்டிய விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறிவிட்டதால் அந்த விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தது.
அந்த விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விமானத்திற்குள் பயணிகள் செல்லும் கால இடைவெளிக்குள் நடிகர் ரஜினிகாந்த் போர்டிங் பாயிண்ட்டுக்கு வராததால் அவரை விமானத்தில் ஏற்ற அந்த நிறுவனம் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அந்த விமானத்தில் செல்ல முடியவில்லை. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் காலை 10 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு சென்ற மற்றொரு தனியார் விமானத்தில் ஏறி சென்றார். இதனை நடிகர் ரஜினிகாந்த் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார். (டிஎன்எஸ்)
No comments:
Post a Comment