ரஜினிகாந்தின் இளைய மகளும் தயாரிப்பாளருமான சவுந்தர்யா, விரைவில் மணப்பெண் ஆகிறார். 2010, பிப்ரவரி 14ஆம் தேதியன்று நிச்சயதார்த்தம் செய்ய ரஜினிகாந்த் நாள் குறித்திருக்கிறாராம்.
தனது முதல் தமிழ்ப்படத் தயாரிப்பின் மூலம் கடனாளியாகி கஷ்டப்பட்ட சவுந்தர்யாவின் தயாரிப்பாளர் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த், அவருக்குத் திருமணம் செய்யவும் ஏற்பாடு செய்துவிட்டார்.
சென்னையில் பிரபல கட்டுமான தொழிலதிபர் ராம்குமார் என்பவரின் மகன்தான் சவுந்தர்யாவைக் கரம் பிடிக்க இருப்பவர். பெயர் அஸ்வின். அமெரிக்காவில் எம்.எஸ். படித்தவராம். தற்போது கட்டுமானத் தொழிலைக் கவனித்து வரும் அஸ்வின், சவுந்தர்யாவை வெகுகாலமாகக் காதலித்து வருகிறாராம்.
இரு வீட்டாரின் சம்பிரதாய பேச்சு வார்த்தைகள் முடிந்து, பிப்ரவரியில் நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்து விட்டார்கள். அதற்குள் தனது சினிமா தொழிலுக்குச் சவுந்தர்யா, ஒரு முடிவு கட்டி விடுவாராம்
No comments:
Post a Comment