நியூ ஜெர்சி. ஜன.12 (டிஎன்எஸ்) அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள சாலை ஒன்றுக்கு முதல் முறையாக இந்தியர் ஒருவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
எடிசன் என்ற நகரில் உள்ள முக்கிய சாலைக்கு மேத்தானி சாலை என்று பெயரிடப்பட்டு, அதற்கான பெயர்ப்பலகையை நியூ ஜெர்சி எடிசன் மேயர் ஜுன் சோய் திறந்து வைத்தார்.
கடந்த 1970ல் அமெரிக்காவில் குடியேறிய மேத்தானி முதலில் காப்பீட்டு முகவராக பணியாற்றி வந்தார். பின்னர் இந்த உணவக சங்கிலித் தொடரை அவர் தனது மனைவி ஸ்னேகாவுடன் சேர்ந்து தொடங்கினார்.
நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட இடங்கில் உணவக சங்கிலித் தொடரை தொடங்கி அவற்றை வெற்றிகரமாக நடத்தி வருவதுடன், கலாச்சார மேம்பாட்டிற்கு பணியாற்றி வரும் மேத்தானியை கவுரவிக்கும் வகையில் இந்த சாலைக்கு மேத்தானியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்
No comments:
Post a Comment