உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்காகவும், அதன் பிறகு அனைத்து தமிழ் மேடைகளிலும் ஒலிப்பதற்காகவும் ஒரு புதிய தமிழ் வாழ்த்துப் பாடலை உருவாக்குகிறது தமிழக அரசு.
இந்தப் பாடலுக்கு இசையமைக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானையும், பாடலை உருவாக்குவதற்கு இயக்குநர் ஷங்கரையும் தேர்வு செய்துள்ளனர். பல கோடி செலவில் உருவாகும் இந்தப் பாடலுக்கு கவிதை எழுதித் தருபவர் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் தான்
இப்படியொரு யோசனையை தமிழக முதல்வருக்குச் சொன்னவர் 'சன் நெட்வொர்க்' அதிபர் கலாநிதி மாறன்தானாம். இதனை உடனே ஒப்புக் கொண்ட முதல்வர், யாரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்கலாம் என யோசித்தபோது, இயக்குநர்கள் மணிரத்னம் அல்லது ஷங்கர் இவர்களின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டதாம்.
இசைக்கு இளையராஜா அல்லது ஏ.ஆர்.ரஹ்மான் என்ற யோசனை சொல்லப்பட்டதாம், இதற்கிடையில் கலாநிதி மாறன், ஷங்கர்- ரஹ்மான் கூட்டணி சிறப்பாக இருக்கும் என்று கூறி, அவர்களிடம் இந்த பொருப்பை அளிக்க சம்மதிக்க வைத்தாராம்.
No comments:
Post a Comment