ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 'கிராமி' விருது


இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியரான ஏ.ஆர்.ரகுமானுக்கு மற்றோரு உலக அங்கிகாரம் கிடைத்துள்ளது.  உலக அளவில் இசைக்காக வழங்கப்படும் புகழ் பெற்ற 'கிராமி' விருது போட்டியில், இரண்டு பிரிவிகளில் ஏ.ஆர்.ரகுமான், 2 கிராமி விருதுகளை வென்றுள்ளார்.

இந்த ஆண்டுக்கான சர்வதேச கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்ஏன்ஜெல்ஸ் நகரில் 2010, ஜனவரி 31ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த தபேலா மேதை ஜாகிர் உசேன், சரோத் மேதை அம்ஜத் அலி கான், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 'ஸ்லம் டாக் மிலினியர்' படம் சிறந்த இசைக்கான பிரிவு, சிறந்த பாடலுக்கான பிரிவும் என இரு பிரிவிகளில் போட்டியிட்டது.

சர்வதேச அளவிலான ஆங்கில திரைப்படங்களின் கடும் போட்டிகளுக்கிடையில் ஸ்லம் டாக் மிலினியர் படத்தில் சிறந்த இசையமைத்தற்கான விருதை ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். மேலும் சிறந்த சவுண்ட் டிராக் இசைக்கான விருது அதே படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ... பாடலுக்காக எ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்டது.

சர்வதேச இசை விருதுகளில் மிகப்பெரிய விருதாக கருதப்படும் கிராமி விருதுகளை பெற்ற 4ஆவது இந்தியர் ஏ.ஆர்.ரகுமான். 2 விருதுகளை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை ஏ.ஆர்.ரகுமானையே சாரும்.

விருதை பெற்றுக்கொண்ட ஏ.ஆர்.ரகுமான் "கடவுள் இரண்டாவது முறையாக எனக்கு அருள் பாவித்திருக்கிறார்" என்று குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் இந்திய இசைக் கலைஞர்கள் ரவிசங்கர், ஜாகிர் உசேன், விஸ்வ மோகன் பட், விக்கு வினாயக் ஆகியோர் கிராமி  விருதுகள் வென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (டிஎன்எஸ்)
Feb 01, 2010

No comments:

Post a Comment