புலிகளின் தலைவர் மலேசியா ராஜன் கைது

கொழும்பு, ஜன.30 (டிஎன்எஸ்) விடுதலைப்புலிகள் இயக்கத்தில் மூத்த தலைவராக திகழ்பவர் மலேசியா ராஜன். மலேசியா ராஜனை கடந்த ஜன.28 அன்று போலீசார் இலங்கை கொண்டு வந்ததாகத் தெரிகிறது. அவரை கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்ததாக அறிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இவர் மிகவும் நெருக்கமானவர். இவர் பத்மநாதன் போல வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி விடுதலைப்புலிகளுக்கு அனுப்பும் பணியை செய்து வந்தார். மேலும் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினரை கொழும்பு நகருக்கு அழைத்து வரும் பணியை செய்து வந்தார்.

முன்னதாக வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாதன், மலேசிய ராஜன் பற்றி எல்லா தகவல்களையும் சிங்கள போலீசாரிடம் தெரிவித்ததன் பேரில் மலேசியா ராஜனை கைது செய்ய சிங்கள பயங்கரவாத தடுப்புப்பிரிவு போலீசார் வலை விரித்தனர்.

இந்த நிலையில் மலேசியா ராஜனை கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மலேசியா அல்லது தாய்லாந்து நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 42 வயதாகும் இவருக்கு கண்ணன், செல்லத்துரை, சுப்பிரமணியம், சிவக்குமார், சாந்தகுமார் என்று பல பெயர்கள் உண்டு. (டிஎன்எஸ்)

Jan 30, 2010

No comments:

Post a Comment