சச்சின் சாதனை: இந்தியா ரன் குவிப்பு 401/3

குவாலியர், பிப்.24 (டிஎன்எஸ்) இந்தியாவின் நட்சத்திர நாயகன் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதத்தை தொட்டு புதிய உலக சாதனையைப் படைத்தார்.




குவாலியரில் தொடங்கிய 2வது ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை படைத்தார். 200 ரன்களைக் குவித்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் சர்வதேச வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் ஜிம்பாப்வேயின் சார்லஸ் கவண்ட்ரி மற்றும் பாகிஸ்தானின் அன்வர் ஆகியோர் எடுத்த 194 ரன்களே அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.



இன்றைய ஆட்டத்தில், முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்தது.



இந்தியா-தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் 2வது ஒரு நாள் போட்டி குவாலியரில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்தது. சச்சின் இரட்டை சதம் விளாசினார்.



இந்தியாவின் நட்சத்திர நாயகன் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதத்தை தொட்டு புதிய உலக சாதனையைப் படைத்தார். 147 பந்துகளில் 200 ரன்களைத் தொட்டார் சச்சின். இது சச்சினுக்கு 442ஆவது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.



சயீத் அன்வர் கடந்த 1997ம் ஆண்டு சென்னையில் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 194 ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்தார். இந்த சாதனையை கடந்த ஆண்டு ஜிம்பாப்வே வீரர் கோவன்ட்ரி சமன் செய்தார். இந்த சாதனையை சச்சின் உடைத்தெறிந்தார்.



தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக்கும், சச்சினும் இறங்கினர். ஷேவாக், இன்று விரைவிலேயே அவுட் ஆகி விட்டார். 11 பந்துகளைச் சந்தித்து 9 ரன்களுடன் அவர் நடையைக் கட்டினார்.



இருப்பினும் சச்சினும், தினேஷ் கார்த்திக்கும் இணைந்து பின்னி எடுத்து விட்டனர். சச்சினைப் போலவே தினேஷ் கார்த்திக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.



சிறப்பாக ஆடிய தினேஷ், 85 பந்துகளில் 79 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். முதல் ஒரு நாள் போட்டியிலும் திணேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.



இந்தியா நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 401 ரன் குவித்துள்ளது. முன்னதாக ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



147 பந்துகளில் அவர் 200 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 25 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும்.



சச்சின் 200 ரன்களுடனும் தோனி 68 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.



சச்சினின் இன்றைய ஆட்டம், புதிய உலக சாதனையையும் படைத்ததுடன், கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது என்றால்

No comments:

Post a Comment