'ஸ்கை டைவிங்': 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதிக்கிறார் அருண் விஜய்
'மலை மலை' படத்திற்காகத் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளுக்குச் சென்று அங்கு ரசிகர்களைச் சந்தித்தவரிடம். இதே படக் குழுவினர் மீண்டும் ஒரு படத்தில் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டார்களாம். எனவே இக்குழுவின் அடுத்த படமானது இன்னும் அதிகமாக ரசிகர்களைத் திருப்திபடுத்த வேண்டும் என்று இதுவரை தமிழ்த் திரைப்படங்களில் யாரும் செய்யாத சாகச சண்டைக் காட்சிகளை இப்படத்தில் செய்ய அருண் விஜய் முடிவு செய்துள்ளார்.
இதற்காக 'மாஞ்சா வேலு' படத்தில் 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதிப்பது போன்ற ஒரு காட்சியை அமைத்திருக்கின்றனர். இந்திய திரைப்பட உலகில் எந்த நடிகரும் நடித்திராத இந்தக் காட்சியில் நடிப்பதற்காக 'ஸ்கை டைவிங்' பயிற்சி பெற அருண் விஜய் லண்டன் சென்றுள்ளார். அங்கு 15 நாட்கள் பயிற்சி பெற்று சென்னைக்குத் திரும்பும் அருண் விஜய். 2009, செப்டம்பர் 19ஆம் தேதியன்று தொடங்கவிருக்கும் 'மாஞ்சா வேலு' படத்தில் நடிக்கவுள்ளார்.
மாதம் 2 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம்!: பிரகாஷ் ராஜிடம் கேட்கிறார் மனைவி
இதற்கிடையில் பிரகாஷ் ராஜ், லலிதா குமாரியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் லலிதா குமாரி கணவருடன் சேர்ந்து வாழவே தான் விரும்புவதாக மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு 2009, ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. இதனால் நீதி மன்றத்திற்கு வந்த பிரகாஷ் ராஜ், லலிதா குமாரி இருவரிடமும் குடும்ப நல நீதி மன்றத்தில் உள்ள ஆலோசனை மைய உறுப்பினர்கள் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்; இருவரிடமும் சமாதானம் செய்ய முயன்றனர். இருப்பினும் எந்தத் தீர்வும் ஏற்படாத நிலையில். இந்த வழக்கின் விசாரணையை 2009, செப்டம்பர் 4ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
இந்நிலையில், தன் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார் லலிதா குமாரி. அந்த மனுவில் அவர் கூறியிருப்பாதாவது, "என் கணவர் பிரிந்து சென்றுவிட்டதால், நான் வாழ்க்கை நடத்த மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். என் 2 பெண் குழந்தைகளையும் நான் தான் கவனித்து வருகிறேன். அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கவும், கல்விச் செலவுக்கும் பணம் தேவைப்படுகிறது. என் கணவர் பிரகாஷ்ராஜ் தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார்.
எனவே இந்த வழக்கு முடியும்வரை எனக்கும், என் 2 பெண் குழந்தைகளுக்கும் மாதம் சுமார் 2 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உடல் அடக்கம்
அவரது உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி அடக்கம் செய்யப்படும் குழிக்குள் வைக்கப்பட்டது. இதையடுத்து ராணுவ வீரர்கள் சோக இசையை இசைக்க, வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு ராணுவ மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் மீது மலர்களையும், மண்ணையும் போட்டு ராணுவ வீரர்கள் மூடினர்.
ஒய்.எஸ்.ஆர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கான மக்கள் கூடினர். இறுதி ஊர்வலத்திலும், உடல் அடக்கம் நடைபெறும் இடத்திலும் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இயக்குநர்கள் நடிப்பதை விரும்பாத விக்ரம்
தற்போது விக்ரமின் நடிப்பில் வெளியான 'கந்தசாமி' படத்தில். இயக்குநர் சுசி கணேசன் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை மக்கள் ஏற்றுக்கொண்டாலும் அப்படத்தின் நாயகன் விக்ரம் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஏன் என்று அதற்கு விக்ரம் சொன்ன காரணம், "இயக்குநர்கள் எல்லாம் நடிகர்கள் ஆகிறார்கள். ஆனால் நடிகர்களால் ஒரு படத்தை இயக்க முடியாது. 'கந்தசாமி'யில் இயக்குநர் சுசி கணேசன் நடித்ததற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் படத்தைப் பார்த்தபோது வேறு யாரோ நடிப்பதற்குச் சுசி நடித்தது சரிதான் என்று தோன்றியது. இருந்தாலும் அதற்காக இயக்குநர்கள் நடிகர்கள் ஆவதை நான் விரும்பவில்லை. என்னைப் போன்ற நடிகர்கள் பலரை வைத்து நல்ல நல்ல படங்களை இயக்குநர்கள் இயக்க வேண்டும்" என்றார்
'பொம்மாயி' - திரை விமர்சனம்
தொழில் ரீதியாக ஏற்பட்ட பகையினால். கதாநாயகனின் மகளைப் பழி வாங்க நினைக்கும் தம்பதியினர், அதற்குச் சூனியத்தின் உதவியை நாடுகின்றனர். கதாநாயகனின் பெண் குழந்தையின் காலடி மண்ணை எடுத்துச் செய்யும் சூனியத்தால் குழந்தை பாதிக்கப்படுகிறாள். கடவுள் நம்பிக்கை இல்லாத நாயகன், தன் குழந்தைக்கு நேர்ந்ததை மருத்துவ ரீதியாகத் தான் தீர்வு காண முடியும் என்று, மருத்துவர்களிடம் செல்ல, அவர்கள் புதுப் புது வியாதிகளின் பெயர்களைச் சொல்லி, அதைக் குணப்படுத்த முடியும் என்ற உத்திரவாதத்தையும் தருகின்றனர்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமி, திடீரென்று ஆண் குரலில் பேசுவது, அந்தரத்தில் பறப்பது எனப் பெற்றோர்களைப் பதற வைக்கிறார். ஒரு வழியாக இது சூனியத்தின் வேலை தான் என்று, தன் நண்பனின் மூலம் தெரிந்துகொண்டு சூனியத்தை முறியடிக்க மந்திரவாதியை நாடும் நாயகனுக்கு, "உன் மகள் இன்னும் சிறிது நேரத்தில் இறக்கப் போகிறாள்" என்று அதிர்ச்சியைத் தருகிறார் சாமியார் மந்திரவாதி. தன் மகளைக் காப்பாற்ற சூனியம் வைத்த தன் எதிரிகளின் இடத்திற்குச் சென்று போராடும் நாயகன், தன் மகளைக் காப்பாற்றினாரா, இல்லையா என்பது தான் படத்தின் முடிவு.
திகில் படம் என்பதால் படத்தில் வரும் நல்ல கதாபாத்திரங்களைக் கூட சில காட்சிகளில் கண்டு அஞ்சும் அளவிற்கு இயக்குநர் சித்திரித்திருக்கிறார். சூனியத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி படும் அவஸ்தையைப் பார்க்கும் போது, மனதே அதிர்ந்து போகிறது.
பொதுவாகத் திகில் படங்கள் என்றாலே இரவுக் காட்சிகளும், அதில் பயமுறுத்தும் காட்சிகளும் இருக்கும். ஆனால் இப்படத்தில் பகல் காட்சியில் பயமுறுத்தும் காட்சிகளை அமைத்தது இயக்குநரின் எதார்த்தத்தைக் காண்பித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளரின் 'குளோஸ் -அப்' காட்சிகளில் விளையாட்டு பொம்மைகள் கூட விபரீத உருவங்களாகத் தெரிவது திகில் படத்திற்கே உரிய அம்சம். திகில் படம் என்றாலே அதில் பின்னணி இசைக்குத்தான் முக்கியத்துவம். இப்படத்தின் இசையமைப்பாளரும் அதை உணர்ந்து ரசிகர்களைத் தன் பின்னணி இசையின் மூலம் அலற வைத்திருக்கிறார்.
இக்காலக்கட்டத்தில் சூனியமா? என்று சந்தேகப்படுபவர்களைக் கூட சிறிது நேரம், 'உண்மையாக இருக்குமோ!' என யோசிக்க வைக்கிறாள் இந்த 'பொம்மாயி'.
அக்காலத்து நடிகைக்கு இக்காலத்துச் சம்பளம்
இப்படத்தில் கதாநாயகியின் அம்மாவுக்கும் கதாநாயகனுக்கும் நடக்கும் நீயா? நானா? போட்டியே படத்தின் முக்கிய அம்சம். முந்தைய 'மாப்பிள்ளை' படத்தில் ரஜினிக்கு மாமியாராக நடித்தவர் ஸ்ரீவித்யா, இப்போதைய 'மாப்பிளை' படத்தில் தனுஷுக்கு மாமியாராக நடிகைகள் பலரைப் பரிசீலித்து. கடைசியாக ஸ்ரீதேவி நடித்தால் நன்றாக இருக்கும் எனத் தீர்மானித்து அவரிடம் கேட்டிருக்கிறார்கள்.
இதற்கு ஸ்ரீதேவியும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம். அவர் தெரிவித்த சம்மதத்திற்குக் கேட்டிருக்கும் சம்பளம், ஒரு கோடியாம். முந்நாள் நடிகையாக இருந்தாலும் இந்நாள் நடிகையின் சம்பளமா! என்று தமிழ்த் திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார் நடிகை ஸ்ரீதேவி