மாதம் 2 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம்!: பிரகாஷ் ராஜிடம் கேட்கிறார் மனைவி

நடிகர் பிரகாஷ் ராஜுக்கும், அவரின் மனைவி லலிதா குமாரிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் மூலம், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில் பிரகாஷ் ராஜ், லலிதா குமாரியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் லலிதா குமாரி கணவருடன் சேர்ந்து வாழவே தான் விரும்புவதாக மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு 2009, ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. இதனால் நீதி மன்றத்திற்கு வந்த பிரகாஷ் ராஜ், லலிதா குமாரி இருவரிடமும் குடும்ப நல நீதி மன்றத்தில் உள்ள ஆலோசனை மைய உறுப்பினர்கள் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்; இருவரிடமும் சமாதானம் செய்ய முயன்றனர். இருப்பினும் எந்தத் தீர்வும் ஏற்படாத நிலையில். இந்த வழக்கின் விசாரணையை 2009, செப்டம்பர் 4ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

இந்நிலையில், தன் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார் லலிதா குமாரி. அந்த மனுவில் அவர் கூறியிருப்பாதாவது, "என் கணவர் பிரிந்து சென்றுவிட்டதால், நான் வாழ்க்கை நடத்த மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். என் 2 பெண் குழந்தைகளையும் நான் தான் கவனித்து வருகிறேன். அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கவும், கல்விச் செலவுக்கும் பணம் தேவைப்படுகிறது. என் கணவர் பிரகாஷ்ராஜ் தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார்.

எனவே இந்த வழக்கு முடியும்வரை எனக்கும், என் 2 பெண் குழந்தைகளுக்கும் மாதம் சுமார் 2 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment