இயக்குநர்கள் நடிப்பதை விரும்பாத விக்ரம்

இயக்குநர்கள் தங்கள் படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றி, பிறகு கதாநாயகனாவே நடிக்கத் தொடங்கிவிட்டனர். இதை விரும்பாத நடிகர்கள் மத்தியில் வெளிப்படையாகவே, "இயக்குநர்கள் நடிகர்களாவது எனக்குப் பிடிக்காது" என்று கூறியிருக்கிறார் விக்ரம்.

தற்போது விக்ரமின் நடிப்பில் வெளியான 'கந்தசாமி' படத்தில். இயக்குநர் சுசி கணேசன் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை மக்கள் ஏற்றுக்கொண்டாலும் அப்படத்தின் நாயகன் விக்ரம் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏன் என்று அதற்கு விக்ரம் சொன்ன காரணம், "இயக்குநர்கள் எல்லாம் நடிகர்கள் ஆகிறார்கள். ஆனால் நடிகர்களால் ஒரு படத்தை இயக்க முடியாது. 'கந்தசாமி'யில் இயக்குநர் சுசி கணேசன் நடித்ததற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் படத்தைப் பார்த்தபோது வேறு யாரோ நடிப்பதற்குச் சுசி நடித்தது சரிதான் என்று தோன்றியது. இருந்தாலும் அதற்காக இயக்குநர்கள் நடிகர்கள் ஆவதை நான் விரும்பவில்லை. என்னைப் போன்ற நடிகர்கள் பலரை வைத்து நல்ல நல்ல படங்களை இயக்குநர்கள் இயக்க வேண்டும்" என்றார்

No comments:

Post a Comment