ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உடல் அடக்கம்

ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் உடல் அவரது சொந்த ஊரில் உள்ள அவரது தோட்டத்தில் இன்று மாலை முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி அடக்கம் செய்யப்படும் குழிக்குள் வைக்கப்பட்டது. இதையடுத்து ராணுவ வீரர்கள் சோக இசையை இசைக்க, வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு ராணுவ மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவரது உடல் மீது மலர்களையும், மண்ணையும் போட்டு ராணுவ வீரர்கள் மூடினர்.

ஒய்.எஸ்.ஆர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கான மக்கள் கூடினர். இறுதி ஊர்வலத்திலும், உடல் அடக்கம் நடைபெறும் இடத்திலும் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

No comments:

Post a Comment