பணம் மீட்பது அவ்வளவு சுலபமல்ல

புதுடில்லி : "நாட்டின் மொத்த சேமிப்பில், 10 சதவீதம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கறுப்புப் பணத்தில் பெரும்பகுதி, நாட்டில் உள்ள மக்களில் மூன்று சதவீதத்தினர் கையில்தான் உள்ளது. கறுப்புப் பண நடவடிக்கைகளால் நாட்டின் வளர்ச்சி 5 சதவீதம் வரை பாதிக்கப்படுகிறது' என, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சுவிஸ் உட்பட வெளிநாட்டு வங்கிகள் சிலவற்றில், இந்திய அரசியல்வாதிகளும் மற்றும் பலரும் ஏராளமான அளவில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ளனர். இந்தப் பணம் பல லட்சம் கோடி இருக்கும் என்றும், அதை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும், இதுதொடர்பாக, மத்திய அரசு பெரிய அளவில் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

இந்நிலையில், டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிபுணர் கள், கறுப்புப் பண விவகாரம் குறித்து கூறியதாவது: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 50 சதவீத அளவுக்கு கருப்புச் சந்தை நடவடிக்கைகள் மூலம் பணம் வருகிறது. அரசு பின்பற்றும் கொள்கைகளில் ஏற்பட்ட தோல்வியே இதற்கு காரணம். 2009 -10ம் ஆண்டில், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள கறுப்புப்பணம் எல்லாம் கணக்கில் கொண்டு வரப்பட்டால், உள்நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சியானது, உண்மையில் 12 சதவீதத்தை எட்டி விடும். நாட்டின் மொத்த சேமிப்பில் 10 சதவீதம் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நாட்டில் உள்ள மக்களில் 3 சதவீதம் பேர் கைகளில் தான், முழுமையான கறுப்புப் பண புழக்கம் உள்ளது. இந்தியாவின் முதன்மையான மற்றும் இரண்டாம் மட்டத் துறைகளை விட, பெரியதாக கறுப்புப் பண பொருளாதார சந்தை உள்ளது.

ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் மற்றும் பங்குச் சந்தை போன்ற சட்ட ரீதியான பரிவர்த்தனைகள் மூலமும், ஹவாலா பரிமாற்றம், நிதி மோசடிகள், லஞ்சம் கொடுத்தல், தேர்தல்களுக்கு அளவுக்கு அதிகமாக செலவிடுதல், நன்கொடைகள் வசூலிப்பது போன்ற சட்ட விரோத பரிமாற்றங்கள் மூலமும் கறுப்புப் பணம் உருவாகிறது. கறுப்புப் பணத்தின் வளர்ச்சியை புதிய பொருளாதார கொள்கைகள் கட்டுப்படுத்தும் என, எதிர்பார்த்தாலும் அது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சுவிஸ் நாட்டு வங்கியில் பணத்தை டிபாசிட் செய்திருக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரின் விவரத்தை பெற வேண்டும் எனில், அது எளிதில் நடக்கக் கூடிய காரியம் அல்ல. அதற்கு தகுந்த ஆதாரத்தை சுவிஸ் நிர்வாகத்திடம் காண்பிக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு நபர் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு பணம் சேர்த்திருந்தாலோ அல்லது வரி ஏய்ப்பு செய்திருந்தாலோ அல்லது வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கான முழுமையான தகவல்களை அளிக்க வேண்டும். அப்படி கொடுத்தால் மட்டுமே, அந்த நபருக்கு தங்கள் நாட்டு வங்கியில் கணக்கு உள்ளதா என்பதை சுவிஸ் நிர்வாகம் தெரிவிக்கும். இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்

லஞ்சம்பட்டியல் இங்கே

புதுடில்லி : லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் யார் யார் என்ற பெயர் பட்டியலை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் முதல் முறையாக தனது இணையதளத்தில் அதிரடியாக வெளியிட்டு அம்பலப் படுத்தியுள்ளது. இதில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 123 அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களை விசாரித்து தகுந்த தண்டனை தரவும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

அரசுத் துறைகளில் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மேற்கொண்டுள்ளது. ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் எத்தனை பேர், அவர்கள் எந்த துறைகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த பட்டியல் மட்டும் இதுவரை, ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வந்தது. தற்போது, அதிக அளவு ஊழல் புரிந்த 123 அதிகாரிகளின் பெயர்களையும், அவர்கள் பணிபுரிந்த துறைகளையும் முதல் முறையாக இணையதளத்தில் வெளியிட்டு அம்பலப் படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தி, தகுந்த தண்டனை வழங்குமாறும் பரிந்துரைத்துள்ளது.

கடந்த ஜூலையில் 101 அதிகாரிகள் பெயர் வெளியிடப்பட்டது. அவர்களில் 17 பேர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள்; 13 பேர், டில்லி மேம்பாட்டு வாரிய அதிகாரிகள்; 11 பேர், டில்லி கார்ப்பரேஷன் அதிகாரிகள். இவர்கள் தவிர, மத்திய உள்துறை அமைச்சகத்தில் ஏழு அதிகாரிகள், நேரடி வரி விதிப்பு மைய அலுவலகத்தில் ஏழு அதிகாரிகள், இந்திய வெளியுறவுத் துறையில் இரண்டு அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ளவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ரயில்வே துறை மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒன்பது அதிகாரிகள், ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் 11 அதிகாரிகளுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 134 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஊழல் கண்காணிப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதில், அதிக அளவாக பொதுத் துறை வங்கிகளைச் சேர்ந்த 46 அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். டில்லி மாநகராட்சி அதிகாரிகள் 25 பேர், ரயில்வே துறையைச் சேர்ந்த 13 பேர், காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தை சேர்ந்த ஏழு பேர், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவரும் இதில் இடம் பெற்றுள்ளனர். தற்போது, ஊழல் கண்காணிப்பு ஆணையம், ஊழல் புரிந்த அதிகாரிகளின் பெயர் பட்டியலை முதல் முறையாக வெளியிட்டுள்ளது, பொதுத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பட்டியல் இங்கே.. http://www.cvc.nic.in/pn0709.pdf

குரு கே.பாலச்சந்தரை இயக்குகிறார் கமல்ஹாசன்

கமல்ஹாசன் நடிக்கும் 'உன்னைப்போல் ஒருவன்' படத்தின் பாடல்கள் வெளிவந்து, படம் வெளியாகும் நாளையும் அறிவித்துவிட்டார்கள். 2009, செப்டம்பர் 18 அன்று வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்குவார் என்றும் அது ஒரு சரித்திரப் படமாக இருக்கும் என்றும் செய்திகள் வெளியாயின. இதற்கிடையில் கமல்ஹாசன் அடுத்ததாக நடிப்பதற்கு முன்பு ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்றும் அதில் இயக்குநர் கே.பாலச்சந்தர் நடிக்க உள்ளார் என்றும் செய்திகள் வந்துள்ளன.

இதைக் கமல்ஹாசனும் உறுதிப்படுத்தி இருக்கிறார். 'உன்னைப்போல் ஒருவன்' படத்தின் இசை வெளியீட்டுக்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல்ஹாசனிடம் இந்தக் கேள்வியைக் கேட்ட நிருபர்களுக்கு, 'உன்னைப்போல் ஒருவன்' படத்திற்குப் பிறகு ஒரு படத்தை இயக்கப் போவதாகவும், அதில் கே.பாலச்சந்தர் நடிப்பார் என்றும் தெரிவித்தார். மேலும் அந்த படத்தின் கதையைக் கமல்ஹாசன், கே.பாச்சந்தரிடம் சொன்னதாகவும் பாலச்சந்தருக்குக் கதை பிடித்துவிட, உடனே நடிக்கவும் ஒப்புக்கொண்டாராம்.

இப்போது கமல்ஹாசன் அக்கதைக்குத் திரைக்கதை எழுதுவதில் ஈடுபட்டுள்ளாராம். மேலும் மிஷ்கின் இயக்கப் போகும் சரித்திரக் காலப் படத்திற்காக, மிஷ்கின் கொஞ்சம் அவகாசம் கேட்டிருக்கிறாராம். ஆகவே 'உன்னைப்போல் ஒருவன்' படம் வெளியான பிறகு கே.பாலச்சந்தரை இயக்கும் கமல்ஹாசன், பிறகு மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம்.

விக்ரமின் புதிய திட்டம்

திரையுலகில் பல ஆண்டுகளாகப் போராடி வெற்றி பெற்றவர், நடிகர் விக்ரம். தன்னால் எந்த வேடத்திலும் நடிக்க முடியும் என்று நிரூபித்தவர். ஆனால் சமீப காலமாக இவர் நடித்த படங்களின் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியாக, ஆண்டுகள் தேவைப்படுகின்றன. தற்போது விக்ரமின் நடிப்பில் வெளியான 'கந்தசாமி' படம் வெளியாவதற்கு ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஆயின. இதனால் பல பட வாய்ப்புகளைக் கைவிட நேர்ந்ததால் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

இந்த இரண்டு படங்களில் 'யாவரும் நலம்' படத்தை இயக்கிய விக்ரம் குமார் ஒரு படத்தையும். இயக்குநர் செல்வராகவன் ஒரு படத்தையும் இயக்கவுள்ளார்கள். இப்படங்களில் நடிப்பதற்கான தேதியையும் பிரித்துக் கொடுத்துவிட்டாராம்.

இதில் விக்ரம் குமார் இயக்கவுள்ள படத்திற்கு '24' என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதாநாயகியாக, தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கும் இலியானவை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறதாம். இதில் நடித்தபடியே செல்வராகவனின் படத்திலும் நடிக்கவுள்ளார் விக்ரம். இன்னும் தலைப்பு வைக்காத இப்படத்தில் கதாநாயகியாக 'சுப்ரமணியபுரம்' படத்தில் நடித்த சுவாதி நடிக்கிறார்.


விவாகரத்து வழக்குக்குப் பின், சோனியா அகர்வால் நடிக்கிறார்

நடிகை சோனியா அகர்வாலும் இயக்குநர் செல்வராகவனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இதன் மூலம் செல்வராகவனை விட்டுப் பிரிந்து வாழும் சோனியா அகர்வால், தான் மறுபடியும் திரைப்படங்களில் நடிக்க விரும்புவதாகப் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்குப் படத்தில் நடிக்கச் சோனியா அகர்வாலுக்கு வாய்ப்பு வந்துள்ளது. நடிகர் உபேந்திரா நடிக்கும் படத்தில் விதவை கேரக்டரில் நடிக்க அழைத்துள்ளார்களாம். இப்படம் தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளில் தயாராகிறது. நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரம் என்பதால் சோனியா அகர்வால் சம்மதம் தெரிவித்துள்ளாராம்

சிம்புவுக்கு ஆதரவாகப் பேசும் திரிஷா

சிம்பு, திரிஷா இணைந்து 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றனர். படப்பிடிப்புக்காக திரிஷா, ஐதராபாத் சென்றுள்ளார். அங்கு அவரைச் சந்தித்த நிருபர்கள், "சிம்பு மோசமானவர் என்று கூறுகிறார்களே. நீங்கள் எப்படி அவருடன் சேர்ந்து நடிக்க சம்மதித்தீர்கள்?" என்று கேள்வி கேட்டார்களாம்.

அதற்குப் பதில் அளித்த திரிஷா, "சிம்பு மீது ஏன் இப்படி ஒரு வதந்தி பரவியது என்று புரியவில்லை. உண்மையில் சிம்பு ரொம்ப நல்லவர். கடந்த ஆறு ஆண்டுகளாக அவரை எனக்குத் தெரியும். பழக இனிமையானவர். ஏற்கனவே சிம்புவுடன் நடித்து இருக்கிறேன். இப்போது மீண்டும் சேர்ந்து நடிக்கிறோம். மற்ற கதாநாயகிகள் பற்றித் தெரியாது. என்னைப் பொறுத்த வரை சிம்பு நல்லவர்" என்றாராம்.

மேலும் தெலுங்கு ரசிகர்களை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறிய திரிஷா, தன்னைப் பற்றி வரும் கிசுகிசுக்களைப் பற்றிப் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லையாம். "நான் பொதுவாக எல்லா விஷயங்களிலும் வெளிப்படையாக இருப்பேன். இதனால் நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் ஒளிவு மறைவாக இருக்கமாட்டேன். இதனால் அடிக்கடி என் மீது கிசுகிசுக்கள் வருகின்றன" என்றார் திரிஷா.

கிசுகிசுக்கள் எல்லாம் தனக்குப் பழகிவிட்டதால், அவற்றையெல்லாம் ஒரு விளம்பரமாகவே எடுத்துக்கொள்கிறாராம்.

ஜோகனஸ்பர்க், செப்.26 சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போடடித் தொடரில் இன்று நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவு அணிகள் மோதுகின்றன.

முன்னணி சீனியர் வீரர்கள் இல்லாமல் 2ஆம் தர அணியாக பங்கேற்றுள்ள மேற்கு இந்திய தீவு அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்திருந்தது. எனவே அந்த அணி வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏதாவது அதிர்ச்சி அளித்தால் மட்டுமே இங்கு ஆச்சரியப்படலாம்.

மேற்கு இந்திய தீவு அணியில் பந்து வீச்சு ஓரளவு சிறப்பாக உள்ளது. ஆனால் பேட்டிங் சரியில்லை. இங்கிலாந்துடன் ஒரு நாள் தொடரை 6-1 என்ற கணக்கில் வென்று கம்பீரமாக வந்திருக்கும் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் உள்ளது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது.

அணிகள் விவரம்:

ஆஸ்திரேலியா: வாட்சன், டிம் பெய்ன், பாண்டிங் (கேப்டன்), மைக்கேல் கிளார்க், மைக் ஹஸ்ஸி, பெர்குசன், கேமரூன் ஒயிட், ஜான்சன், பிரெட்லீ, நாதன் ஹவுரிட்ஸ், பீட்டர் சிடில்.

மேற்கு இந்திய தீவு: டேல் ரிச்சர்ட்ஸ், பிளட்சர், டேவோன் சுமித், டிரைவிஸ் டவ்லின், பிளாய்ட் ரீபர் (கேப்டன்), பெர்னர்ட், டேரன் சேமி, சாட்விக் வால்டன், நிகிதா மில்லர், டினோ பெஸ்ட், காவின் டோங்.

ரஜினி, கமலுக்கு தமிழக அரசு விருது

சென்னை, செப்.29 2007-2008ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 2007ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது, 'சிவாஜி' படத்துக்காக ரஜினிகாந்துக்கும், 2008ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது, 'தசாவதாரம்' படத்துக்காக கமல்ஹாசனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கருணாநிதிக்கு சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது உளியின் ஓசை படத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு, திரைப்பட விருதுகளுக்கான பரிந்துரைகளை வழங்கிட நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு விருதுகளுக்கான விவரங்களை தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.

விருதுகளுக்கான விவரம் வருமாறு:- சிறந்த படம்: முதல் பரிசு- சிவாஜி, இரண்டாம் பரிசு-மொழி, மூன்றாம் பரிசு-பள்ளிக்கூடம், சிறப்பு பரிசு-பெரியார். பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் - சிறப்பு பரிசு- மிருகம், அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம் - முதல் பரிசு- தூவானம். சிறந்த நடிகர்- ரஜினிகாந்த் (சிவாஜி), சிறந்த நடிகை- ஜோதிகா (மொழி), சிறந்த நடிகர்- சிறப்பு பரிசு- சத்யராஜ் (பெரியார்), சிறந்த நடிகை சிறப்பு பரிசு- பத்மப்பிரியா (மிருகம்), சிறந்த வில்லன் நடிகர்- சுமன் (சிவாஜி), சிறந்த நகைச்சுவை நடிகர்- விவேக் (சிவாஜி), சிறந்த குணசித்திர நடிகர்- எம்.எஸ்.பாஸ்கர் (மொழி), சிறந்த குணசித்திர நடிகை- அர்ச்சனா (ஒன்பது ரூபாய் நோட்டு), சிறந்த இயக்குநர்- தங்கர் பச்சான் (பள்ளிக்கூடம்), சிறந்த கதையாசிரியர்- எஸ்.எம்.வசந்த் (சத்தம் போடாதே), சிறந்த உரையாடல் ஆசிரியர்- பாலாஜி சக்திவேலு (கல்லூரி), சிறந்த இசையமைப்பாளர்- வித்யாசாகர் (மொழி), சிறந்த பாடலாசிரியர்- வைரமுத்து (பெரியார் மற்றும் பல படங்கள்), சிறந்த பின்னணி பாடகர்- ஸ்ரீநிவாஸ் (ஒன்பது ரூபாய் நோட்டு), சிறந்த பின்னணி பாடகி- சின்மயி (சிவாஜி), சிறந்த ஒளிப்பதிவாளர்- நீரவ்ஷா (பில்லா), சிறந்த ஒலிப்பதிவாளர்- யு.கே.அய்யப்பன் (பில்லா), சிறந்த எடிட்டர்- சதீஷ் குரோசோவா (சத்தம் போடாதே). சிறந்த கலை இயக்குநர்- தோட்டா தரணி (சிவாஜி), சிறந்த சண்டை பயிற்சியாளர்- அனல் அரசு (கருப்பசாமி குத்தகைதாரர்), சிறந்த நடன ஆசிரியர்- பிருந்தா (தீபாவளி), சிறந்த ஒப்பனைக் கலைஞர்- ராஜேந்திரன் (பெரியார்), சிறந்த தையல் கலைஞர்- அனுவர்தன் (பில்லா), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்- (ஆண்) கே.பி.சேகர் (மலரினும் மெல்லிய), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்- (பெண்) மகாலட்சுமி (மிருகம்) 2008ஆம் ஆண்டுக்கான விருதுகள்: சிறந்த படம்: முதல் பரிசு- தசாவதாரம், இரண்டாம் பரிசு- அபியும் நானும், மூன்றாம் பரிசு- சந்தோஷ் சுப்பிரமணியம், சிறப்பு பரிசு- மெய்ப்பொருள், பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம்:- சிறப்பு பரிசு- பூ. அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம்- முதல் பரிசு- வல்லமை தாராயோ, அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம்:- இரண்டாம் பரிசு- வண்ணத்துப் பூச்சி. சிறந்த நடிகர்- கமல்ஹாசன் (தசாவதாரம்), சிறந்த நடிகை- சிநேகா (பிரிவோம் சந்திப்போம்), சிறந்த நடிகர்- சிறப்பு பரிசு- சூர்யா (வாரணம் ஆயிரம்), சிறந்த நடிகை சிறப்பு பரிசு- திரிஷா (அபியும் நானும்), சிறந்த வில்லன் நடிகர்- ராஜேந்திரன் (நான் கடவுள்). சிறந்த நகைச்சுவை நடிகர்- வடிவேலு (காத்தவராயன்), சிறந்த நகைச்சுவை நடிகை- கோவை சரளா (உளியின் ஓசை), சிறந்த குணசித்திர நடிகர்- பிரகாஷ்ராஜ் (பல படங்கள்), சிறந்த குணசித்திர நடிகை- பூஜா (நான் கடவுள்), சிறந்த இயக்குநர்- ராதா மோகன் (அபியும் நானும்), சிறந்த கதையாசிரியர்- தமிழ்ச்செல்வன் (பூ). சிறந்த உரையாடல் ஆசிரியர்- கலைஞர் மு.கருணாநிதி (உளியின் ஓசை), சிறந்த இசையமைப்பாளர்- இளையராஜா (அஜந்தா), சிறந்த பாடலாசிரியர்- வாலி (தசாவதாரம்), சிறந்த பின்னணி பாடகர்- பெள்ளிராஜ் (சுப்பிரமணியபுரம்), சிறந்த பின்னணி பாடகி- மஹதி (நெஞ்சத்தைக் கிள்ளாதே). சிறந்த ஒளிப்பதிவாளர்- ஆர்தர் ஏ.வில்சன் (நான் கடவுள்), சிறந்த ஒலிப்பதிவாளர்- ரவி (வாரணம் ஆயிரம்), சிறந்த எடிட்டர்-பிரவீன்- ஸ்ரீகாந்த் (சரோஜா), சிறந்த கலை இயக்குநர்- ராஜீவன் (வாரணம் ஆயிரம்), சிறந்த சண்டை பயிற்சியாளர்- கனல் கண்ணன் (சிலம்பாட்டம்). சிறந்த நடன ஆசிரியர்- சிவசங்கர் (உளியின் ஓசை), சிறந்த ஒப்பனைக் கலைஞர்- மைக்கேல் வெஸ்ட்மோர்- கோதண்டபாணி (தசாவதாரம்), சிறந்த தையல் கலைஞர்- ரவீந்திரன் (பிரிவோம் சந்திப்போம்). சிறந்த குழந்தை நட்சத்திரம்- ஸ்ரீலட்சுமி (வண்ணத்துப்பூச்சி), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)- எம்.ஏ.பிரகாஷ் (கி.மு.), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)- சவீதா (பல படங்கள்) 2006-2007ஆம் ஆண்டுக்கான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்: சிறந்த இயக்குநர்- ச.அன்பு (அரிதாரம்), சிறந்த ஒளிப்பதிவாளர்- பா.தினேஷ் கிருஷ்ணன் (திற), சிறந்த ஒலிப்பதிவாளர்- எம்.ராம்குமார் (தாய்), சிறந்த எடிட்டர்- பி.சசிகுமார் (தாய்), சிறந்த படம் பதனிடுபவர்- ரா.முருகன் (அகத்திணை) 2007-2008ஆம் ஆண்டுக்கான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்: சிறந்த இயக்குநர்- மு.கண்ணன் (அச்சுப்பிழை), சிறந்த ஒளிப்பதிவாளர்- ஆனந்தகுமார் (பழைய படம், சிறந்த ஒலிப்பதிவாளர்- லட்சுமி நாராயணன் (கனா), சிறந்த எடிட்டர்- பி.மர்பி (கனவு மெய்ப்பட), சிறந்த படம் பதனிடுபவர்- வெங்கடேஷ் பிரசாத் (கனா). இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரஜினியும் நானும் சிறந்த நண்பர்கள்- கம‌ல்

செ‌ன்னை, செப்.29 ரஜினிகாந்தும் நானும் சிறந்த நண்பர்களாக இருந்து வருகிறோம். எங்களை போல திரையுலகில் சிறந்த நண்பர்களாக வேறுயாராவது விளங்க முடியுமா என்று நடிகர் கமல்ஹாசன் சவால் விட்டுள்ளார்.

‌‌விஜ‌ய் டி‌வி நட‌த்‌தி பாராட்டு விழாவி‌ல் நடிக‌ர் கமல்ஹாச‌ன் பேசுகை‌யி‌ல், நான் சினிமாவிற்கு வரும்போது நிறைய கனவுகளோடு வந்தேன். ஆனால் அது ஒன்று கூட நிறைவேறவில்லை. என்னால் நிறைவேற்ற முடியவில்லை.

50 வருடம் சாதித்துள்ளேன் என்று கூறுகிறீர்கள். அதற்கு அன்புதான் காரணம். ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார். அவர் தன்னை தாழ்த்தி என்னை உயர்த்தி உள்ளார். அவர் உண்மையான சூப்பர் ஸ்டார்தான். எனக்கும் அவருக்கும் இடையே உள்ள நட்பு ஆழமானது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நட்பு இல்லை, அதையும் தாண்டியது.

ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் தேடுகிறார். நான் சமூகத்தில் தேடுகிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. நாத்திகன் என்று கூறுகிறார்கள். அந்த வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை. பகுத்தறிவாளன் என்று கூற வேண்டும். என் மகள் எனக்காக தினமும் கடவுளிடம் வேண்டுகிறார். ஆனால் அவரின் அன்பை நேசிக்கிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கு வரும் போது அழக்கூடாது, சீக்கிரம் முடிந்து விட வேண்டும் என்று நினைத்து கொண்டேன். இது இரண்டுமே நடக்கவில்லை. இங்கு திரையுலக பிரமுகர்கள் அனைவரும் வந்துள்ளனர். என் மீதுள்ள அன்பு காரணமாகவே வந்துள்ளனர். அவர்கள் கால்களை தொட்டு வணங்கி நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மம்முட்டியோடு பேசும் போது இருவரும் 3 தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறோம். அடுத்த விருது யார் வாங்குகிறோம் பார்க்கலாம் என மம்முட்டி என்னிடம் கூறினார். இந்த போட்டியில் நான் ஜெயிப்பேனா என்பது தெரியவில்லை.

ஆனால் நானும் ரஜினிகாந்தும் சிறந்த நண்பர்களாக இருந்து வருகிறோம். எங்களை போல திரையுலகில் சிறந்த நண்பர்களாக வேறுயாராவது விளங்க முடியுமா என்று நான் பதில் சவால் விடுகிறேன் எ‌ன்று கம‌ல்ஹாச‌ன் பே‌சினா‌ர்.

வாயால் வாய்ப்பைத் தவறவிட்ட பிரியாமணி

நடிகை பிரியாமணி இயக்குநர் அமீரின் 'பருத்தி வீரன்' படத்தின் மூலம் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்தது மட்டும் அல்லாமல் தேசிய விருது வாங்கிய நடிகைகளின் பட்டியலிலும் இடம் பிடித்தார்.

'பருத்தி வீரன்' படம் வெளியான பிறகு அப்படத்திற்குத் தனக்குச் சம்பளமாகப் பேசிய தொகை மிகவும் குறைவு என்றும் அதையே சரியான நேரத்தில் தரவில்லை என்றும் பிரியாமணி பத்திரிகைகளில் பேட்டியளிக்க, இவருக்கும் இயக்குநர் அமீருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்நிலையில் இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் 'யோகி' படத்தையடுத்து இயக்கவிருக்கும் 'கண்ணபிரான்' படத்தின் ஆரம்பக் கட்ட வேலைகளைத் துவங்கிவிட்டார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியாமணியை நடிக்க வைக்கலாம் என்ற முடிவில் இருந்தாராம். "எனக்கும் பியாமணிக்கும் சண்டை தீர்ந்துவிட்டது. நாங்கள் சமாதானம் ஆகிவிட்டோம்" என்று பெரிய மனதோடு பத்திரிகை நிருபர்களிடம் கூறினாராம் அமீர்.

இதைப் பற்றி பிரியாமணியிடம் கேட்டபோது, "அமீர் என்னிடம் 'கண்ணபிரான் குறித்து எதுவும் பேசவில்லை. எனக்குக் கதை பிடித்திருந்தால் அப்படத்தில் நடிப்பேன்" என்று பிரியாமணி சொல்ல, இதைக் கேள்விப்பட்ட அமீர், இவ்வளவு வாய் பேசும் பிரியாமணி, தன் படத்திற்கு வேண்டாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டாராம்.