அதற்குப் பதில் அளித்த திரிஷா, "சிம்பு மீது ஏன் இப்படி ஒரு வதந்தி பரவியது என்று புரியவில்லை. உண்மையில் சிம்பு ரொம்ப நல்லவர். கடந்த ஆறு ஆண்டுகளாக அவரை எனக்குத் தெரியும். பழக இனிமையானவர். ஏற்கனவே சிம்புவுடன் நடித்து இருக்கிறேன். இப்போது மீண்டும் சேர்ந்து நடிக்கிறோம். மற்ற கதாநாயகிகள் பற்றித் தெரியாது. என்னைப் பொறுத்த வரை சிம்பு நல்லவர்" என்றாராம்.
மேலும் தெலுங்கு ரசிகர்களை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறிய திரிஷா, தன்னைப் பற்றி வரும் கிசுகிசுக்களைப் பற்றிப் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லையாம். "நான் பொதுவாக எல்லா விஷயங்களிலும் வெளிப்படையாக இருப்பேன். இதனால் நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் ஒளிவு மறைவாக இருக்கமாட்டேன். இதனால் அடிக்கடி என் மீது கிசுகிசுக்கள் வருகின்றன" என்றார் திரிஷா.
கிசுகிசுக்கள் எல்லாம் தனக்குப் பழகிவிட்டதால், அவற்றையெல்லாம் ஒரு விளம்பரமாகவே எடுத்துக்கொள்கிறாராம்.
ஜோகனஸ்பர்க், செப்.26 சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போடடித் தொடரில் இன்று நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவு அணிகள் மோதுகின்றன.முன்னணி சீனியர் வீரர்கள் இல்லாமல் 2ஆம் தர அணியாக பங்கேற்றுள்ள மேற்கு இந்திய தீவு அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்திருந்தது. எனவே அந்த அணி வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏதாவது அதிர்ச்சி அளித்தால் மட்டுமே இங்கு ஆச்சரியப்படலாம்.
மேற்கு இந்திய தீவு அணியில் பந்து வீச்சு ஓரளவு சிறப்பாக உள்ளது. ஆனால் பேட்டிங் சரியில்லை. இங்கிலாந்துடன் ஒரு நாள் தொடரை 6-1 என்ற கணக்கில் வென்று கம்பீரமாக வந்திருக்கும் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் உள்ளது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது.
அணிகள் விவரம்:
ஆஸ்திரேலியா: வாட்சன், டிம் பெய்ன், பாண்டிங் (கேப்டன்), மைக்கேல் கிளார்க், மைக் ஹஸ்ஸி, பெர்குசன், கேமரூன் ஒயிட், ஜான்சன், பிரெட்லீ, நாதன் ஹவுரிட்ஸ், பீட்டர் சிடில்.
மேற்கு இந்திய தீவு: டேல் ரிச்சர்ட்ஸ், பிளட்சர், டேவோன் சுமித், டிரைவிஸ் டவ்லின், பிளாய்ட் ரீபர் (கேப்டன்), பெர்னர்ட், டேரன் சேமி, சாட்விக் வால்டன், நிகிதா மில்லர், டினோ பெஸ்ட், காவின் டோங்.
No comments:
Post a Comment