பிடித்தது மட்டும் அல்லாமல் தேசிய விருது வாங்கிய நடிகைகளின் பட்டியலிலும் இடம் பிடித்தார்.'பருத்தி வீரன்' படம் வெளியான பிறகு அப்படத்திற்குத் தனக்குச் சம்பளமாகப் பேசிய தொகை மிகவும் குறைவு என்றும் அதையே சரியான நேரத்தில் தரவில்லை என்றும் பிரியாமணி பத்திரிகைகளில் பேட்டியளிக்க, இவருக்கும் இயக்குநர் அமீருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்நிலையில் இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் 'யோகி' படத்தையடுத்து இயக்கவிருக்கும் 'கண்ணபிரான்' படத்தின் ஆரம்பக் கட்ட வேலைகளைத் துவங்கிவிட்டார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியாமணியை நடிக்க வைக்கலாம் என்ற முடிவில் இருந்தாராம். "எனக்கும் பியாமணிக்கும் சண்டை தீர்ந்துவிட்டது. நாங்கள் சமாதானம் ஆகிவிட்டோம்" என்று பெரிய மனதோடு பத்திரிகை நிருபர்களிடம் கூறினாராம் அமீர்.
இதைப் பற்றி பிரியாமணியிடம் கேட்டபோது, "அமீர் என்னிடம் 'கண்ணபிரான் குறித்து எதுவும் பேசவில்லை. எனக்குக் கதை பிடித்திருந்தால் அப்படத்தில் நடிப்பேன்" என்று பிரியாமணி சொல்ல, இதைக் கேள்விப்பட்ட அமீர், இவ்வளவு வாய் பேசும் பிரியாமணி, தன் படத்திற்கு வேண்டாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டாராம்.
No comments:
Post a Comment