குரு கே.பாலச்சந்தரை இயக்குகிறார் கமல்ஹாசன்

கமல்ஹாசன் நடிக்கும் 'உன்னைப்போல் ஒருவன்' படத்தின் பாடல்கள் வெளிவந்து, படம் வெளியாகும் நாளையும் அறிவித்துவிட்டார்கள். 2009, செப்டம்பர் 18 அன்று வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்குவார் என்றும் அது ஒரு சரித்திரப் படமாக இருக்கும் என்றும் செய்திகள் வெளியாயின. இதற்கிடையில் கமல்ஹாசன் அடுத்ததாக நடிப்பதற்கு முன்பு ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்றும் அதில் இயக்குநர் கே.பாலச்சந்தர் நடிக்க உள்ளார் என்றும் செய்திகள் வந்துள்ளன.

இதைக் கமல்ஹாசனும் உறுதிப்படுத்தி இருக்கிறார். 'உன்னைப்போல் ஒருவன்' படத்தின் இசை வெளியீட்டுக்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல்ஹாசனிடம் இந்தக் கேள்வியைக் கேட்ட நிருபர்களுக்கு, 'உன்னைப்போல் ஒருவன்' படத்திற்குப் பிறகு ஒரு படத்தை இயக்கப் போவதாகவும், அதில் கே.பாலச்சந்தர் நடிப்பார் என்றும் தெரிவித்தார். மேலும் அந்த படத்தின் கதையைக் கமல்ஹாசன், கே.பாச்சந்தரிடம் சொன்னதாகவும் பாலச்சந்தருக்குக் கதை பிடித்துவிட, உடனே நடிக்கவும் ஒப்புக்கொண்டாராம்.

இப்போது கமல்ஹாசன் அக்கதைக்குத் திரைக்கதை எழுதுவதில் ஈடுபட்டுள்ளாராம். மேலும் மிஷ்கின் இயக்கப் போகும் சரித்திரக் காலப் படத்திற்காக, மிஷ்கின் கொஞ்சம் அவகாசம் கேட்டிருக்கிறாராம். ஆகவே 'உன்னைப்போல் ஒருவன்' படம் வெளியான பிறகு கே.பாலச்சந்தரை இயக்கும் கமல்ஹாசன், பிறகு மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம்.

No comments:

Post a Comment