மக்கா பள்ளி ஈரானியர்களால் கைப்பற்றப்பட்டதாக செய்தி
முதலாம் உலகயுத்தத்தில் தோல்வி பிரித்தானியாவை நெருங்கிக்கொண்டிருந்த பொழுது, ஒரு அதிசம் நிகழ்ந்தது
சுமார் 4 வருடங்கள் நடைபெற்ற இந்த யுத்தத்தின் பொழுது பிரித்தானியா ஒரு பெரிய சங்கடத்தைச் சந்திக்க நேர்ந்தது. பிரித்தானியா சந்தித்த அந்த சங்கடமும், அந்தச் சங்கடத்தை சமாளிக்க ஒரு யூதன் செய்த உதவியும்தான், யூதர்கள் தமக்கென ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ளக் காரணமாக இருந்தது.
முதலாம் உலக யுத்தத்தின் ஆரம்பத்தில் மிகவும் வெற்றிகரமாக முன்னேறிய ஜேர்மணியப் படைகள் ஐரோப்பாவின் பல பகுதிகளையும் கைப்பற்றியிருந்தார்கள். குறிப்பாக ஐரோப்பாவின் கரையோரப் பிரதேசங்களை ஜேர்மனிப்படைகள் ஆக்கிரமிப்பதில் வெற்றி கண்டன.
இது பிரித்தானியாவிற்கு பெருத்த ஆயுதத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருந்தது.
எப்படியென்றால், அந்தக் காலத்தில் பீரங்கிகளை இயக்குவதற்குத் தேவையான அசிடோன் என்ற வெடிமருந்துக்கான மூலப்பொருட்களை ஐரோப்பாவில் காணப்படும் ஒருவகை மரங்களில் இருந்துதான் பிரித்தானியா பெற்றுவந்தது. ஜேர்மனியப் படைகள் ஐரோப்பாவின் பல பகுதிகளையும் கைப்பற்றியிருந்ததால், அசிடோன் வெடிமருந்தை தயாரிக்கமுடியாமல் பிரித்தானியா திண்டாடியது.
ஒரு சந்தர்பத்தில் பிரித்தானியா தனது பீரங்கிகளை இயக்குவதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டது. பீரங்கித்தாக்குதல்களைத்; தவிர்த்து யுத்தம் புரியும் நிலைக்கு பிரித்தானியப்படைகள் தள்ளப்பட்டன.
முதலாம் உலகயுத்தத்தில் தோல்வி பிரித்தானியாவை நெருங்கிக்கொண்டிருந்த பொழுது, ஒரு அதிசம் நிகழ்ந்தது.
சோளம் விதைகளை மூலப்பொருளாகக்கொண்டு அசிடோன் என்ற வெடிமருந்தைத் தயாரித்து பிரித்தானியாவுக்குக் கொடுத்தார் வைஸ்மைன்.
பிரிட்டிஷ் மன்னராட்சி முறை முட்டாள்தனமானது: சல்மான் ருஷ்டி பேட்டி
லண்டனில் இருந்து வெளிவரும் "த சண்டே டைம்ஸ்" பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பின்னர் ஏன் நீங்கள் "நைட்ஹுட்" பட்டத்தை ஏற்றுக் கொண்டீர்கள் என்று கேட்டதற்கு, "இலக்கியத்துக்காக பிரான்ஸ் நாட்டின் பட்டத்தை நான் ஏற்கெனவே பெற்றுள்ளேன். இந்நிலையில், எனது நாட்டின் பட்டத்தை மறுப்பது சரியாக இருக்காது என்பதால் 'நைட்ஹுட்' பட்டத்தை ஏற்றுக்கொண்டேன். இதற்கு எனது நன்றி." என்றார் ருஷ்டி.
இந்தியாவில் மும்பையில் பிறந்த சல்மான் ருஷ்டி, பிரிட்டன் குடியுரிமை பெற்று லண்டனில் வசிக்கிறார். சென்னையைச் சேர்ந்த பத்மா லட்சுமி உட்பட 4 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து செய்தவர். (டிஎன்எஸ்
ஈரான் அணு உலை மைய கம்ப்யூட்டர்களை தாக்கிய புதிய வைரஸ்
இந்த வைரசுக்கு 'ஸ்டக்ஸ்நெட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. புஷெர் மையம் மூலம் ஒரு குழு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பல்வேறு கம்ப்யூட்டர்களில் வைரஸ் கொன்ட புரோகிராமை நீக்குவதற்கு முயற்சி நடந்து வருகிறது. ஜெர்மனியை சேர்ந்த கம்ப்யூட்டர் வல்லுனர்கள் இந்த வைரஸினை ஜுலை மாதம் கண்டுபிடித்தனர்.
அந்த வைரஸ் ஈரான், இந்தோனேஷியா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களை பெரிதும் தாக்கியுள்ளதாக தெரிகிறது. ஆகஸ்டு மாத நிலவரப்படி, ஈரானில் 60,000 கம்ப்யூட்டர்களும், இந்தோனேஷியாவில் ஏறத்தாழ 10,000 கம்ப்யூட்டர்களும் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (டிஎன்எஸ்)
அமெரிக்கா தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்று - சிஐஏ ரிப்போர்ட்டை வெளியிட்டது விக்கிலீக்ஸ்
தீவிரவாதத்தின் பிறப்பிடங்களில் ஒன்றாக அமெரிக்கா மாறியுள்ளதாக கூறும் சிஐஏ ரிப்போர்ட்டை அம்பலப்படுத்தி அடுத்த குண்டைப் போட்டுள்ளது விக்கிலீக்ஸ்.3 பக்கங்களைக் கொண்ட இந்த சிஐஏ அறிக்கை 2010, பிப்ரவரி 2ம் தேதியிட்டது. இதை நேற்று வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.
அதில்,டேவிட் ஹெட்லி உள்ளிட்ட பல அமெரிக்கர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று பல்வேறு வன்முறைக் காரியங்களுக்கு உதவியுள்ளனர் அல்லது நிகழ்த்தியுள்ளனர். இவர்களில் ஹெட்லி, மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவராக இருக்கிறார்.
இன்னொரு அமெரிக்கரான பரூச் கோல்ட்ஸ்டீன் என்பவர் ஒரு யூத தீவிரவாதி ஆவார். இவர் 1994ம் ஆண்டு ஹெப்ரானில் 12க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்படக் காரணமாவார் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ், வெளிநாட்டுக்காரர்கள் கண்களில் தீவிரவாதத்தின் ஏற்றுதியாளராக அமெரிக்கா தெரிவதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் தன் வசம் சிக்கியுள்ள மேலும் 15,000 போர் ரகசிய அறிக்கைகளை விரைவில் வெளியிடப் போவதாகவும் அது கூறியுள்ளது.
சிஐஏ அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;
மற்றவர்கள் நினைப்பது போல அமெரிக்காவிலிருந்து தீவிரவாதம் பரவுவது சமீப காலமாக அல்ல. மாறாக இது மிக நீண்ட காலமாக நடந்து வருகிறது. மேலும் தீவிரவாதத்தின் பிறப்பிடமாக இதுவரை மத்திய கிழக்கு, கிழக்கு, ஆப்பிரிக்க, தெற்காசிய நாடுகள் மட்டுமே கருதப்பட்டு வந்தன. ஆனால் அமெரிக்காவும் இதில் ஒன்றாக திகழ்கிறது.
உள்நாட்டுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அல் கொய்தா உள்ளிட்ட அமைப்புகளை அமெரிக்கா வேட்டையாடி வரலாம்.
ஆனால் நிஜத்தில், தங்களது தீவிரவாத காரியங்களுக்கு அமெரிக்கர்களை பல அமைப்புகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அறிக்கை அமெரிக்காவை குற்றம் சாட்டி தயாரிக்கப்பட்டதல்ல, மாறாக மாறி வரும் சூழல்கள் குறித்த சிந்தனையை ஏற்படுத்தவே இதை தயாரித்தோம் என்று சிஐஏ கூறியுள்ளது.
இதுகுறித்து சிஐஏ செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறுகையில், இவை ஒரு சாதாரண அறிக்கைதான். இப்படிப்பட்ட சூழல் உள்ளதை என்பதை சுட்டிக் காட்டும் வகையிலான விழிப்புணர்வு அறிக்கை மட்டு்மே என்றார்.
சமீபத்தில் ஆப்கானிஸ்தான் போர் தொடர்பாக 92,000 பக்கங்களைக் கொண்ட ராணுவ ரகசிய ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டு அமெரிககாவை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது என்பது நினைவிருக்கலாம்.
இதையடுத்து விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அஸ்ஸான்ஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு கிளப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் தன்னை கற்பழித்ததாக அன்னா ஆர்டின் என்ற பெண் குற்றம் சாட்டினார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜூலியன், இதன் பின்னணியில் அமெரிக்க பாதுகாப்புத்துறை உள்ளதாக குற்றம் சாட்டியதும் நினைவுகூறத்தக்கது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரான ஜூலியன் ஸ்வீடனில் வசித்து வருகிறார். அமெரிக்கா-சிஐஏவின் போர் ரகசியங்கள் குறித்து தன்னிடம் மேலும் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளதாகவும் அதையும் விரைவில் வெளியிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம்
பேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது
பின் குறிப்பு: தகவல்களை உடனுக்குடன் தந்துதவும் சமூக அக்கறையாளர்களின் துணையுடன் தான், இதை நாம் மக்கள் முன் அம்பலப்படுத்த முடிகின்றது. போர்க் குற்றங்கள் தொடர்பான தகவல்கள், ஆவணங்களை எமக்கு தந்துதவுங்கள். இதை மக்களுக்கு முன்னால் எடுத்துச் செல்லவேண்டிய சொல்லவேண்டிய பணியில், எம்முடன் இணையுமாறு சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரிடமும் தோழமையுடன் கோருகின்றோம்.



கருணைக்கொலை தூக்கு தண்டனை விதிக்க சட்டம்- மத்திய அரசு ஆலோசனை
வட மாநிலங்களில் இத்தகைய கொலைகளை கருணைக்கொலை என்கிறார்கள். இதைத் தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
தற்போதுள்ள சட்டப்படி கருணைக்கொலை செய்பவர்களுக்கு 5 ஆண்டு அல்லது ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம். எனவே கருணை கொலைகளை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
கருணைக்கொலை செய்பவர்களுக்கு தூக்குத்தண்டனை கொடுக்க, சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜுலை.8) நடந்தது. அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
அமைச்சர்கள் குழு ஒன்று கருணை கொலைகளை தடுக்க சட்டதிருத்தம் செய்வது தொடர்பாக முடிவு எடுக்க அமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அம்பிகா சோனி இன்று நிருபர்களிடம் கூறினார்.
இது தொடர்பாக மாநில அரசுகளிடமும் கருத்துக்கள் கேட்டு சட்ட திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. விரைவில் பாராளுமன்றச் கூட்டத்தொடரில் இந்த சட்டத்திருத்தத்துக்கு ஒப்புதல் பெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது. (டிஎன்எஸ்
'பக்கா' ரஜினி படமாக உருவாகிறது சுல்தான்
செளந்தர்யா ரஜினிகாந்த் தனது ஆக்கர் ஸ்டுடியோஸ் மூலமாக தயாரித்து வரும் அனி்மேஷன் படம்
ஆனால் படம் முடிவடைவதாக தெரியவில்லை. இடையில் பல சிரமங்கள். இந்த நிலையில் தற்போது இப்படத்தை முழுமையான ரஜினி படமாக எடுக்கவுள்ளார் செளந்தர்யா. இன்னொரு விஷயம், படத்தை முழுமையாக ரஜினிகாந்த்தே டேக் ஓவர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் இப்படம் முழுமையான ரஜினி படமாக மாறுகிறது. அதாவது அனிமேஷன் படமாக இது இருக்காது. மாறாக வழக்கமான, பிரமாண்டமான ரஜினி படமாக இது இருக்கும். படத்தின் இடை இடையே அனிமேஷன் காட்சிகள் வருவது போல மாற்றவுள்ளனராம்.
மேலும் படத்தின் பட்ஜெட்டும் பல கோடிகள் கூடியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினிகாந்த்தின் மிகப் பிரமாண்டமான படங்களில் ஒன்றாக சுல்தான் மாறவுள்ளது.
எந்திரன் தொடர்பான வேலைகள் முழுமையாக முடிந்த பின்னர் சுல்தானுக்கு முழு வீச்சில் நேரம் கொடுக்கவுள்ளாராம் ரஜினி.
மைக்கேல் ஜாக்சனுக்கு முதலாமாண்டு நினைவு அஞ்சலி
சென்ற ஆண்டு இதே நாளில்தான் மைக்கேல் ஜாக்சன் காலமானார். இந்நாளையொட்டி உலகம் முழுவதும் உள்ள பாப் இசை ரசிகர்கள் மைக்கேல் ஜாக்சனுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். மேலும் பல நகரங்களில் அவரின் நினைவை கூறும் வகையில் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
பல நகரங்களில் அவரை நினைவு கூறும் வகையில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மைக்கேல் ஜாக்சன் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். (டிஎன்எஸ்)
மீண்டும் பெக்காம்
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் கேலக்சி அணிக்காக விளையாடி வருகிறார். உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக, அவர் ஏ.சி.மிலான் அணிக்காக 6 மாத காலம் லோனில் விளையாடினார்.கடந்த சீசன் சீரி 'ஏ' போட்டியில் ஜெனோவா அணியுடன் ஏ.சி.மிலான் மோதியது. இந்த போட்டியின் போது,பெக்காமுக்கு கனுக்காலில் தசைநார் கிழிந்து 6 மாதகாலம் ஓய்வெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அவர் விளையாடவில்லை. ஆனால் அணியின் துணை பயிற்சியாளராக அவர் தென்ஆப்பிரிக்கா சென்றிருந்தார்.
இதற்கிடையே அவரது காயம் விரைவாக குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து 2012ம் ஆண்டு ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி தகுதி சுற்று ஆட்டங்களில் அவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவார் எனத் தெரிகிறது. ஐரோப்பிய கோப்பை தகுதி சுற்று போட்டியில் வருகிற செப்டம்பர் 3ந் தேதி பல்கேரியாவுடனும் 7ந் தேதி சுவிட்சர்லாந்து அணியுடனும் இங்கிலாந்து மோதுகிறது.மேலும் பெக்காம் மீண்டும் இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. (நன்றி tamilsportsnews.com)
மக்கள் கலாச்சாரத்துக்கு (சினிமா) வழிகாட்டும் ஒரு ஊடகமா? : மனித கலாச்சாரம்
பார்ப்பனியம் மீதான போர் : ஆரியம் பார்ப்பனியமாக சிதைந்தது எப்படி? சாதியம் தோன்றியது எப்படி? : சாதியம் குறித்து
சுல்தான் படத்துக்கு எதிராக ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு!
ரூ 11.59 கோடியைத் திருப்பித் தருமாறு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் நிறுவனமும் சவுந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோவும் இணைந்து ரஜினியின் முதல் அனிமேஷன் படமான சுல்தான் தி வாரியரை தயாரிக்க திட்டமிட்டது.
2008-ல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. 2009- ஏப்ரலில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் படம் இதுவரை வெளிவரவில்லை. தாமதமாவது தொடர்ந்ததால் ஒப்பந்தத்தை முறித்து, படத்திலிருந்து விலகிக் கொண்டது ரிலையன்ஸ்.
இப்போது சுல்தான் படத்தை வரும் ஜூன் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம் சவுந்தர்யா. இதனை அறிந்த ரிலையன்ஸ் உடனடியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
அதில் பழைய பாக்கியை முடிக்காமல் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்றும், உடனடியாக தங்களின் ரூ 11.59 கோடியை 12 சதவிகித வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஆனால் இதுபற்றி ஆக்கர் ஸ்டுடியோ நிறுவனத் தலைவர் லதா ரஜினியிடம் கேட்ட போது, 'வழக்கெல்லாம் ஏதுமில்லை. பேச்சுவார்த்தை நடக்கிறது. அனைத்தும் சுமூகமாக முடிந்துவிடும்' என்றார்.
இந்நிலையில் வரும் மார்ச் 29-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருவதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
படக்காட்சியில் வருவது நித்யானந்தா இல்லை: ஆஸ்ரம நிர்வாகி, வழக்கறிஞர் பேட்டி
இது தொடர்பாக இவர்கள் இருவரும் சென்னையில் கூட்டாக நிருபர்களிடம் கூறியது:
கிராபிக்ஸ் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஒளிப்பதிவுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நித்யானந்தத்தின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இதை வெளியிட்டவர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் தொலைக்காட்சியினர் தங்களுக்கு கிடைத்த படக்காட்சிகளில் இருப்பவர் நித்யானந்தாதானா என்பதை எங்களிடம் கேட்டு உறுதிப்படுத்தவில்லை. அந்த காட்சிகளில் இருப்பது நித்யானந்தா இல்லை.
முதல்நாளில் அதில் வரும் பெண்ணின் முகத்தை மறைத்து வெளியிட்டவர்கள் அடுத்தநாள் அவரது முகத்தை தெளிவாகக் காட்டினர். இதற்கு இடைப்பட்ட சமயத்தில் நடந்தது என்ன?
இந்த படக்காட்சிகள் யாரால், எங்கு, எப்போது, எதற்காக எடுக்கப்பட்டது என்பது குறித்து தனியார் தொலைக்காட்சி சார்பில் உறுதியான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அந்த படக்காட்சியில் இருப்பவர் நித்யானந்தா இல்லை. ஆனால், இதை இப்போதைய சூழலில் நிருபிக்கும் நிலையில் நாங்கள் இல்லை.
அடையாளம் தெரியாத சிலர் நித்யானந்தா வேறு பெண்களுடன் இருப்பது போல கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட படங்களை இ-மெயில் மூலம் அனுப்பி வந்தனர். இவ்வாறு அனுப்பி எங்களை தொந்தரவு செய்த கும்பலே இந்த சதியின் பின்னணியிலும் இருப்பார்கள் என தெரியவந்துள்ளது. அந்த கும்பலை கண்டுபிடிக்க வேண்டியது காவல் துறையின் பொறுப்பு.
கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ள நித்யானந்தா விரைவில் மக்கள் முன்பு தோன்றி இது தொடர்பாக உரிய விளக்கம் அளிப்பார் என்று அவர்கள் தெரிவித்தனர்.
சச்சின் சாதனை: இந்தியா ரன் குவிப்பு 401/3
குவாலியரில் தொடங்கிய 2வது ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை படைத்தார். 200 ரன்களைக் குவித்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் சர்வதேச வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் ஜிம்பாப்வேயின் சார்லஸ் கவண்ட்ரி மற்றும் பாகிஸ்தானின் அன்வர் ஆகியோர் எடுத்த 194 ரன்களே அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆட்டத்தில், முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்தது.
இந்தியா-தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் 2வது ஒரு நாள் போட்டி குவாலியரில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்தது. சச்சின் இரட்டை சதம் விளாசினார்.
இந்தியாவின் நட்சத்திர நாயகன் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதத்தை தொட்டு புதிய உலக சாதனையைப் படைத்தார். 147 பந்துகளில் 200 ரன்களைத் தொட்டார் சச்சின். இது சச்சினுக்கு 442ஆவது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
சயீத் அன்வர் கடந்த 1997ம் ஆண்டு சென்னையில் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 194 ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்தார். இந்த சாதனையை கடந்த ஆண்டு ஜிம்பாப்வே வீரர் கோவன்ட்ரி சமன் செய்தார். இந்த சாதனையை சச்சின் உடைத்தெறிந்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக்கும், சச்சினும் இறங்கினர். ஷேவாக், இன்று விரைவிலேயே அவுட் ஆகி விட்டார். 11 பந்துகளைச் சந்தித்து 9 ரன்களுடன் அவர் நடையைக் கட்டினார்.
இருப்பினும் சச்சினும், தினேஷ் கார்த்திக்கும் இணைந்து பின்னி எடுத்து விட்டனர். சச்சினைப் போலவே தினேஷ் கார்த்திக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சிறப்பாக ஆடிய தினேஷ், 85 பந்துகளில் 79 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். முதல் ஒரு நாள் போட்டியிலும் திணேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்தியா நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 401 ரன் குவித்துள்ளது. முன்னதாக ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
147 பந்துகளில் அவர் 200 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 25 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும்.
சச்சின் 200 ரன்களுடனும் தோனி 68 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
சச்சினின் இன்றைய ஆட்டம், புதிய உலக சாதனையையும் படைத்ததுடன், கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது என்றால்
ஓபன் மென்டார்: இணைய வழியில் இலவசக் கல்வி
ஆசிரியர் தினத்தையும் சென்னை ஆன்லைன் 13ஆம் ஆண்டுத் தொடக்கத்தையும் முன்னிட்டு, இந்த இ-கல்வி முறை, சென்னையில் உள்ள இரண்டு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இ-கல்வி முறையைச் சென்னை, அம்பத்தூர், சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் டாக்டர் சேது குமணன், 2009 செப்.5 அன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனத் தலைவர் நாகராஜன், அதன் பொது மேலாளர் முருகானந்தம், சென்னை ஆன்லைன் நிறுவனத் தலைவர் இல.ரவிச்சந்திரன், அதன் ஆசிரியர் அண்ணாகண்ணன், சேது பாஸ்கரா பள்ளியின் முதல்வர் செல்வகுமார், துணை முதல்வர் அமரேந்திரன், சேது பாஸ்கரா பள்ளியின் பழைய மாணவர் சங்கத் தலைவர் சுதர்சன் சாந்தியப்பன்.... உள்ளிட்ட பலரும் பங்கேற்றார்கள்.
செப். 5 அன்று காலை 10 மணிக்குச் சென்னை அம்பத்தூர், சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கார்த்திகேயன், ஆங்கில வழியில் 12ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்குக் கணிதத்தில் நிகழ்தகவு குறித்துப் பாடம் நடத்தினார். அதே நாள் காலை 11 மணியளவில் சென்னை, அயப்பாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ரவிச்சந்திரன், மரபணுப் பொறியியல் குறித்துப் பாடம் நடத்தினார்.
இந்த இணையவழி வகுப்புகளை இரு பள்ளிகளிலும் உள்ள 12ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் திரை முன் அமர்ந்து கவனித்தார்கள். மாணவர்கள், ஆசிரியருடன் எழுத்து மூலமும் குரல் வழியாகவும் உரையாடினார்கள். கேள்வி கேட்டுப் பதில் பெற்றார்கள். சேது பாஸ்கரா பள்ளி மாணவர்கள், வெங்கடேஸ்வரா பள்ளியின் ஆசிரியர் பாடம் நடத்துகையில் திரையில் அவரை நேரடியாகப் பார்த்தே கற்றார்கள்.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இந்த முறையை நடைமுறைப்படுத்தினால் பற்பல பயன்கள் விளையும். இருந்த இடத்திலிருந்தே ஆசிரியர் பாடம் நடத்தலாம். அதை மாணவர்களும் இருந்த இடத்திலிருந்தே கவனிக்கலாம். இருவருக்கும் பயணம், நேரம், செலவு, அலைச்சல் மிச்சமாகும்.
இன்னொரு வசதி, ஒரு பள்ளியின் மாணவர்கள், வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களைக் கவனிக்க முடியும். இதன் மூலம் குறிப்பிட்ட துறையில் ஆசிரியர்களின் நிபுணத்துவம், உலகம் முழுக்கப் பயன்படுகிறது. வேறு மாநிலங்களில், வேறு நாடுகளில் உள்ள ஆசிரியர்களையும் இந்த வகையில் நம் உள்ளூர் மாணவர்களுடன் இணைக்க முடியும். வீடுகளில் இருந்து மாணவர்கள் கற்கும் போது, அவர்களின் பெற்றோரும் இந்த வகுப்புகளைக் கவனிக்க வாய்ப்புண்டு. இதன் மூலம் கல்வியின் வீச்சினை அவர்களும் அறிய முடியும்.
ஆசிரியர் பற்றாக்குறை உள்ள இடங்கள், பல உண்டு. ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் என்றே பல உண்டு. இத்தகைய பள்ளிகளுக்கு இந்தக் கல்வி முறை, அற்புத வரம் என்றே கொள்ளலாம். அவர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் இதனால் நிறைய பயன்கள் உண்டு.
வகுப்பறையில் மாணவர்கள் முன்பு நின்று வகுப்பு எடுக்கையில் சில கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் கணினி முன் இருந்து, இணைய வழியில் கல்வி கற்பிக்கையில் மேலும் பல சாத்தியங்கள் உண்டு. ஆசிரியர் குரல் மூலமும் பேசலாம்; கரும்பலகையில் எழுதுவது போலவே, pen tablet என்ற கணிப் பலகையில் எழுதலாம்; ஒலி-ஒளிக் கோப்புகளைத் திரையிட்டுக் காட்டலாம்; பவர் பாய்ன்ட் முறையில் சில வகுப்புகளை நடத்தலாம்; அனிமேஷன், கிராஃபிக்ஸ் காட்சிகளையும் திரையில் காட்டலாம்; பாடங்களை மாணவர்களுக்கு எளிதில் விளக்க இந்தக் காட்சி வழிக் கற்பித்தல் பெரிதும் உதவும்.
இ-வகுப்பு இல்லாத நேரத்திலும் மின்னஞ்சலில் கேள்விகளை அனுப்பிப் பதில்களைப் பெறலாம். நல்ல அகலக்கற்றை வசதி இருக்குமானால், மாணவர்களும் ஆசிரியரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தே 'வீடியோ சாட்' மூலம் உரையாட முடியும். அத்தகைய வசதி, எல்லா இடங்களிலும் கிடைக்கும் காலமும் மிக அருகில்தான் உள்ளது.
ஆசிரியர் பயன்படுத்தும் கணினித் திரை, இணையம் வழியாக அனைத்து மாணவர்களின் கணினித் திரையில் தெரியும். அதேபோல், அவர் தன் கணினியில் செய்து காட்டும் அனைத்தும், மாணவர்களின் கணித் திரையிலும் தெரியும். இது, கிட்டத்தட்ட இணையவழி வகுப்பறை (Virtual Class Room) போன்றதே.
இப்படி எண்ணற்ற சாத்தியங்களைக் கொண்ட இந்த இ-கற்பித்தலுக்கு ஏற்ப ஆசிரியர்களும் பள்ளி - கல்லூரி - பல்கலைக்கழகங்களும் தங்களைத் தகவமைத்துக் கொண்டால் பெரிய கல்விப் புரட்சியே நிகழும் என்பது உறுதி. மாணவர்கள் மட்டுமின்றி, வேலைக்குச் செல்பவர்கள், இல்லத்தரசிகள், வாழ்நாள் முழுதும் படிப்பவர்கள் எனப் பலரும் இந்தக் கல்வியைப் பெறலாம். ஒவ்வொரு வகையான மாணவர்க்கும் அவர்களுக்கு ஏற்ற விஷயங்கள் சொல்லித் தரப்படுகின்றன. தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) மாணவர்கள், Java, C, Oracle, SAP, PHP, டாட் நெட் போன்ற பாடங்களைக் கற்கலாம்; கணக்கியல் மாணவர்கள் Tally, பரஸ்பர நிதி, வரி விதிப்பு, காப்பீடு போன்ற பாடங்களைக் கற்கலாம்.
மேலும் கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம், வாஸ்து உள்பட பல பாடங்களையும் இங்கு கற்றுத் தருகிறார்கள். ஆங்கிலத்திலும் இந்தியிலும் உரையாடக் கற்கலாம்; லினக்ஸ் இயங்கு தளத்தின் அடிப்படைகள், ·போட்டோஷாப், எக்ஸ்செல், வேர்ட், நேர மேலாண்மை, ஆளுமைத் திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றையும் கற்கலாம்; இவை அல்லாமல் உங்களுக்கு ஏதும் புதிய பாடங்களைக் கற்க வேண்டும் என்றால் அது குறித்த உங்கள் ஆர்வத்தினையும் தெரிவிக்கலாம். அதற்கு உரிய ஆசிரியர்கள் கிடைத்ததும் அந்தப் பாடமும் கற்பிக்கப்படும். ஒரே மாணவர் எவ்வளவு வகுப்புகளில் வேண்டுமானாலும் சேர்ந்து பயன் பெறலாம்.
அதே போன்று ஏதேனும் ஒரு துறையில் நல்ல அனுபவம் உள்ளவர்கள், தாங்கள் அறிந்தவற்றைக் கற்றுத் தர வேண்டும் என விரும்பினால், அவர்களும் ஆசிரியர்களாக இதில் பங்கு பெறலாம். புகைப்படக் கலை, சமையல் கலை, தோட்டக் கலை, விவசாயம்.... என உங்களுக்கு எந்தத் துறையைப் பற்றியாவது ஆழ்ந்த அறிவும் அனுபவமும் இருக்குமானால் அவற்றையும் இந்தத் தளத்தின் மூலம் முழு உலகிற்கும் எடுத்துரைக்கலாம். இதில் கற்பவர்களுக்குக் கட்டணம் இல்லை; அது போலவே கற்பிப்பவர்களுக்கும் ஊதியம் இல்லை. ஆனால், ஒருவர் தன் முழு நேரத்தையும் இதற்குச் செலவிட வேண்டியதில்லை. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் என்ற வகையில் வாரத்திற்குச் சில மணி நேரங்கள் செலவிட்டால் போதும். அவரது அறிவு, பலரின் உள்ளத்தில் ஒளிகூட்டும்.
இதற்கென்று தனிச் செலவு ஏதுமில்லை. மாணவர் நோக்கில், அவரிடம் ஒரு கணினியும் இணைய இணைப்பும், தலைப்பேசி (ஹெட்போன்) வசதியும் இருக்க வேண்டும். அகலக்கற்றை இணைய இணைப்பு (பிராட்பேண்ட்), அவசியத் தேவை. dialup இணைப்பு, இந்த இ-வகுப்புக்குப் போதாது. இந்த அடிப்படை வசதிகள் இருந்தால் போதும். அவர், இ-வகுப்புக்குத் தயார்.
அவர், www.openmentor.net என்கிற இணையதளத்திற்குச் சென்று தன் பெயர், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களைக் கொண்டு பதிய வேண்டும். அந்தத் தளத்தில் ஒவ்வொரு மாதமும், பல்வேறு விதமான பாடங்களில், நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைப்படி வகுப்புகள் நடைபெறும். அதில் எந்தப் பாடங்களில் அவருக்கு ஆர்வம் இருக்கிறதோ, அதில் சேர்ந்து கற்கலாம். அவர் தேர்ந்தெடுக்கும் பாடம் நடைபெறும் வகுப்பு குறித்த தகவலை அவருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பார்கள்.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழங்களிலும் கிட்டதட்ட இதே முறைதான். அங்கு கணினி, இணைய இணைப்புடன் அரங்கு, ஒலிபெருக்கி வசதி, LCD Projector, திரை ஆகியவை இருந்தால் போதும். அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள், ஒரே வகுப்பில் இணைந்துகொள்ளலாம்.
இணையவழி வகுப்பு மட்டுமின்றி, இணையவழித் தேர்வுகள் (online examinations) நடத்தும் வசதியும் இந்தத் தளத்தில் உள்ளது. எல்லாப் பாடங்களிலும், வினாக்கள் தரப்படும், 30 வினாக்களை மாணவர்கள் 30 நிமிடங்களில் விடையளிக்க வேண்டும். இது objective type questions என்று சொல்லப்படுகின்றது. எவ்வளவு மதிப்பெண் பெற்றனர் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இது போன்ற மாதிரி வினாக்களினால் அவர்கள் தங்கள் திறமையையும், நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள முடியும்.
இந்த இணையவழித் தேர்வு வசதியைச் செல்பேசி மூலமும் இலவசமாகப் பெறலாம். GPRS வசதியுள்ள செல்பேசி ஒன்றின் மூலம் இணையவழித் தேர்விற்கான மென்பொருளைத் தரவிறக்கினால் போதும். பிறகு தேவையான கேள்வித்தாள் தொகுப்பை Openmentor.net தளத்தின் மூலம் நீங்கள் அவ்வப்போது இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளலாம்.
இதுதவிர, இதே இணையதளம் மூலமாக வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களையும் பெறத் திட்டங்கள் வகுத்து வருகிறார்கள். கற்போர், தங்கள் சுயவிவரங்களைப் பதிவு செய்யலாம்; பணியமர்த்த விரும்பும் நிறுவனங்கள், அந்த விவரங்களைக் கவனிப்பார்கள். அதன் மூலம் தகுதி வாய்ந்த நபர்களை நேர்முகத்திற்கு அழைத்துப் பணியில் அமர்த்தும் வாய்ப்பு உண்டு. இந்த நேர்முகத்திற்கு மாணவர்களைத் தகுதிப்படுத்தும் விதமாக மாதிரி நேர்முகத் தேர்வுகளையும் இந்த இணைய தளம் வழங்கி வருகிறது.
முதலில் அடிப்படைக் கல்வி, துறை சார்ந்த படிப்புகள், மொழித் திறன், அது தொடர்பான ஆளுமைப் பயிற்சி, பின்னர் மாதிரி நேர்முகத் தேர்வு, பின்னர் வேலை வாய்ப்பு என அனைத்துச் சேவைகளையும் ஓபன் மென்டார்.காம் ஒருங்கிணைத்து அளிக்கிறது. இவை அனைத்தும் இலவசம் என்பது, நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். ஆனால், அதுவே உண்மை.
இந்த ஓபன் மென்டார்.காம் இணையதளத்தினை வடிவமைத்துள்ள சாஃப்ட்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனம், ISO 9001:2000 சான்றிதழ் பெற்றது; பல்வேறு மென்பொருள் சேவைகளை வழங்கி வருகிறது. மென்பொருள் தரச் சோதனை, மென்பொருள் மேம்பாட்டுத் தீர்வுகள் உள்ளிட்ட பல நிலைகளிலான சேவைகளை ஒரு கூரையின் கீழ் சாஃப்ட்ஸ்மித் நிறுவனம் அளித்து வருகிறது. வணிகக் கூரறிவுத் தீர்வுகள், செல்பேசி நுட்பச் சேவைகள், அயலகப் பணி ஒப்படைப்பின் மூலம் பொருள் மேம்பாட்டுத் தீர்வுகள் உள்ளிட்ட சேவைகளையும் வழங்குகிறது. இதன் தலைவர் நாகராஜனும் பொது மேலாளர் முருகானந்தமும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறார்கள்.
சாஃப்ட்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனத்துடன் கை கோத்துள்ள சென்னை ஆன்லைன்.காம், 1997 முதல் இயங்கி வருகிறது. இந்தியாவின் முதன்மையான மாநகர இணையதளமாக விளங்குகிறது. 'வாழ்வை எளிதாக்கு' என்பதே சென்னை ஆன்லைனின் இலக்கு. ஏற்கெனவே 10, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் உள்பட, பல்கலைக்கழகங்கள் பலவற்றின் தேர்வு முடிவுகளையும் பத்தாண்டுகளுக்கும் மேலாக வழங்கி வருகிறது. கல்வியின் மூலம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என இதன் தலைவர் இல.ரவிச்சந்திரன் ஆழமாக நம்புகிறார்.
ஆசிரியர்கள், கல்வி நிறுவன அதிபர்கள், நிர்வாகிகள், மாணவர்கள், பெற்றோர்கள்.... உள்ளிட்ட ஒவ்வொருவரையும் அழைக்கிறோம். இந்த ஓபன் மென்டார் தளத்தினைப் பயன்படுத்த வாருங்கள். இதில் உங்கள் நண்பர்களையும் இணையுங்கள். கல்வி கற்க இனி எந்தத் தடையும் இல்லை என்ற செய்தியைப் பரப்புங்கள். பட்டணங்கள் முதல் பட்டி தொட்டிகள் வரை கல்விச் சுடர் ஒளிரட்டும்; அறிவு வெளிச்சம், அகிலம் எங்கும் பரவட்டும்.
ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 'கிராமி' விருது
இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியரான ஏ.ஆர்.ரகுமானுக்கு மற்றோரு உலக அங்கிகாரம் கிடைத்துள்ளது. உலக அளவில் இசைக்காக வழங்கப்படும் புகழ் பெற்ற 'கிராமி' விருது போட்டியில், இரண்டு பிரிவிகளில் ஏ.ஆர்.ரகுமான், 2 கிராமி விருதுகளை வென்றுள்ளார்.
இந்த ஆண்டுக்கான சர்வதேச கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்ஏன்ஜெல்ஸ் நகரில் 2010, ஜனவரி 31ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த தபேலா மேதை ஜாகிர் உசேன், சரோத் மேதை அம்ஜத் அலி கான், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 'ஸ்லம் டாக் மிலினியர்' படம் சிறந்த இசைக்கான பிரிவு, சிறந்த பாடலுக்கான பிரிவும் என இரு பிரிவிகளில் போட்டியிட்டது.
சர்வதேச அளவிலான ஆங்கில திரைப்படங்களின் கடும் போட்டிகளுக்கிடையில் ஸ்லம் டாக் மிலினியர் படத்தில் சிறந்த இசையமைத்தற்கான விருதை ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். மேலும் சிறந்த சவுண்ட் டிராக் இசைக்கான விருது அதே படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ... பாடலுக்காக எ.ஆர்.ரகுமானுக்கு வழங்கப்பட்டது.
சர்வதேச இசை விருதுகளில் மிகப்பெரிய விருதாக கருதப்படும் கிராமி விருதுகளை பெற்ற 4ஆவது இந்தியர் ஏ.ஆர்.ரகுமான். 2 விருதுகளை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை ஏ.ஆர்.ரகுமானையே சாரும்.
விருதை பெற்றுக்கொண்ட ஏ.ஆர்.ரகுமான் "கடவுள் இரண்டாவது முறையாக எனக்கு அருள் பாவித்திருக்கிறார்" என்று குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் இந்திய இசைக் கலைஞர்கள் ரவிசங்கர், ஜாகிர் உசேன், விஸ்வ மோகன் பட், விக்கு வினாயக் ஆகியோர் கிராமி விருதுகள் வென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (டிஎன்எஸ்)
Feb 01, 2010
புலிகளின் தலைவர் மலேசியா ராஜன் கைது
கொழும்பு, ஜன.30 (டிஎன்எஸ்) விடுதலைப்புலிகள் இயக்கத்தில் மூத்த தலைவராக திகழ்பவர் மலேசியா ராஜன். மலேசியா ராஜனை கடந்த ஜன.28 அன்று போலீசார் இலங்கை கொண்டு வந்ததாகத் தெரிகிறது. அவரை கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்ததாக அறிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இவர் மிகவும் நெருக்கமானவர். இவர் பத்மநாதன் போல வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்கி விடுதலைப்புலிகளுக்கு அனுப்பும் பணியை செய்து வந்தார். மேலும் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினரை கொழும்பு நகருக்கு அழைத்து வரும் பணியை செய்து வந்தார்.
முன்னதாக வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாதன், மலேசிய ராஜன் பற்றி எல்லா தகவல்களையும் சிங்கள போலீசாரிடம் தெரிவித்ததன் பேரில் மலேசியா ராஜனை கைது செய்ய சிங்கள பயங்கரவாத தடுப்புப்பிரிவு போலீசார் வலை விரித்தனர்.
இந்த நிலையில் மலேசியா ராஜனை கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மலேசியா அல்லது தாய்லாந்து நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. 42 வயதாகும் இவருக்கு கண்ணன், செல்லத்துரை, சுப்பிரமணியம், சிவக்குமார், சாந்தகுமார் என்று பல பெயர்கள் உண்டு. (டிஎன்எஸ்)
சென்னை, பிப்.3 (டிஎன்எஸ்) 'அசல்' படத்தில் நாயகன் அஜீத்குமார் புகைப்பிடிப்பது போன்ற காட்சிக்கு பாமக சார்பில் கூறப்பட்ட புகாருக்கு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தரப்பில் நடிகர் பிரபு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அன்புமணிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
'அசல்' படத்தில் இடம் பெறும் புகை பிடிப்பது போன்ற காட்சி தொடர்பாக நீங்கள் எழுதிய கடிதம் எங்கள் பார்வைக்கு வந்தது. எங்கள் தந்தை சிவாஜி கணேசன் பெயரை தாங்கியுள்ள நிறுவனம் 50 வருட பாரம்பரியத்தை கொண்டது. எங்கள் தயாரிப்பான அசல் திரைப் படம் தணிக்கைக் குழுவினரால் உன்னிப்பாக பார்க்கப்பட்டு திரையிட தகுதியான சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் தணிக்கைக்கு போவதற்கு முன்பே அதன் டிரைலர் படத்திலும், திரைப்படத்திலும் புகைப்பிடித்தல் உடல் நலனுக்கு தீங்கானது என்ற அறிவிப்பை படத்தின் துவக்கத்திலேயே பதிவு செய்துள்ளோம்.
அஜீத்குமார் புகைப்பிடிப்பதனால் வரும் தீங்கை இந்த படத்தின் துவக்கத்திலேயே செய்தியாக அறிவித்திருக்கிறார். தணிக்கைக் குழு செய்ய சொல்லி கேட்டுக் கொண்டது அனைத்தையும் நிறைவு செய்திருக்கிறோம். எங்கள் தந்தையின் வழியில் எப்போதுமே இந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடந்து வருகிறோம். தமிழ் திரைப்படத் துறையின் நெருக்கடியை நன்கு உணர்ந்த தாங்கள் ஒரு இயக்கத்திற்கு பொறுப்பான தலைவராக இருப்பதால் எந்த திரைப்படத்திற்கும் குந்தகம் விளையாமல் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இயக்குனர் சரண், நாயகன் அஜீத் சார்பில் இந்த பதிலை எழுதியிருக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். (டிஎன்எஸ்)



















