தற்போது தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் நாயகனாக இருக்கும் சூர்யா, நயன்தாரா, வடிவேலு மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்கு ரமேஷ் கண்ணா கதை எழுத , திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். படத்தின் பாடல்களைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம.நாராயணன் வெளியிட, இயக்குநர் ஷஙகர் பெற்றுக்கொண்டார். படத்தின் முன்னோட்டத்தைத் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி வெளியிட, நடிகர் விஜய் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் இயக்குநர்கள் அமிர்தம், கெளதம் மேனன், ஹரி, தரணி, கே.வி.ஆனந்த், சசிகுமார், தயாரிப்பாளர் அமிராமி ராமநாதன், நடிகர் விவேக் ஆகியோர் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அத்தனை பேரும் சூர்யாவின் முன்னேற்றத்தையும் அவர் தற்போது நடித்து வரும் படங்களின் வெற்றிகளைப் பற்றியும் பேசினார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், இதுவரை உலக சினிமா வரலாற்றில் செய்யாத ஒரு விசயமாக சூர்யாவை பத்து வயது சிறுவனாக நடிக்க வைத்திருக்கின்றேன் என்றார். மேலும் படத்தில் 20 நிமிடங்கள் வரும் இக்காட்சிக்காக ஹாலிவுட்டில் விசாரித்ததில் இதைச் செய்ய 15 கோடி வரை செலவாகும் என்றிருக்கிறார்கள். பிறகு அதைக் கைவிட நினைத்த இயக்குநர் எப்படியோ தன் முயற்சியினாலும் சூர்யாவின் உழைப்பாலும் செய்து முடித்திருக்கிறாராம். இக்காட்சிக்காக சூர்யா காட்டிய ஈடுபாடு என்னை மெய் சிலிர்க்க வைத்தது என்று கூறிய கே.எஸ்.ரவிகுமார் இது ஒரு புது முயற்சி என்றும் இதை ஹாலிவுட் படங்களில் கூட இதுவரை செய்ததில்லை என்றும் கூறினார்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இதுவரை எந்தப் படத்திற்கும் நான்கு மாதங்களில் படத்தின் முழுப் பாடல்களையும் முடித்ததில்லையாம். முதல் முறையாக 'ஆதவன்' படத்திற்காகத்தான் குறுகிய காலக்கட்டத்தில் அனைத்துப் பாடல்களையும் முடித்திருக்கிறாராம். இதற்குக் காரணம் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரும், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினும் தான் என்று கூறிய ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு சிறந்த தயாரிப்பாளர் என்றார்.
No comments:
Post a Comment