நிர்வாணப்படுத்தி தமிழர்களை சுட்டுக்கொன்ற வீடியோ காட்சி

தமிழர்களை நிர்வாணப்படுத்தி, கண்களையும் கைகளையும் கட்டிப் போட்டுவிட்டு, சிங்களப் படையினர் தமிழர்களை சுட்டுக்கொல்லும் வீடியோ காட்சிகளை 'சேனல் -4' என்ற பிரிட்டன் செய்திச் சேவை தொலைக்காட்சி அம்பலப்படுத்தி உள்ளது.

இந்த வீடியோ காட்சியில், தமிழர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் கீழே உட்காரவைத்தும், படுக்கவும் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு தமிழரை தனது பூட்ஸ் காலால் தோளில் உதைத்து சிங்கள சிப்பாய் உட்கார வைக்கிறான். பிறகு அவருடைய தலையில் சுட்டு கொல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் தலையில் இருந்து ரத்தம் வெளியேறி தரையை நனைக்கிறது. இப்படி சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கும் 8 பேரின் உடல்கள் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட இனப் படுகொலைக்கு இந்த வீடியோ அத்தாட்சியாகும்.

No comments:

Post a Comment