மேலும் தனது அரசியல் ஆர்வத்தை ராகுல் காந்தியிடம் தெரிவித்ததாகவும், காங்கிரஸ் கட்சியில் சேருகிற தனது விருப்பத்தைத் தெரிவித்ததோடு, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் தலைவராகத் தன்னை நியமிக்கும் படியும் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. இதற்கு ராகுல் காந்தி தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்துப் பதில் சொல்வதாகத் தெரிவித்துள்ளாராம்.
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவுடன் தனது ரசிகர் மன்றங்களையும், மக்கள் இயக்கத்தையும் காங்கிஸ் கட்சியில் இணைக்க முடிவு செய்துள்ளாராம் விஜய்.
இதைப் பற்றி நடிகர் விஜய் பேசாத நிலையில் அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இதைப் பற்றிக் கூறுகையில் "விஜய் - ராகுல் காந்தி சந்திப்பு நடந்தது உண்மைதான்; நீண்ட நேரம் இரண்டு பேரும் உரையாடியுள்ளனர். ஆனால் என்ன பேசினார்கள் என்று இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது" என்றார்.
இதைப் பற்றிச் செய்தியாளர்கள் கேட்டதற்கு “அவர் வந்தால் எங்களுக்குப் பெரிய சந்தோஷம்” என்று பதில் அளித்திருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.
இதையெல்லம் வைத்துப் பார்க்கும் போது, இன்னும் சில தினங்களில் திரைப்படத் துறையில் இளைய தளபதியாக இருந்த விஜய், காங்கிரஸ் கட்சியின் தளபதியாக மகுடம் சூட்டிக்கொள்வார் போலிருக்கிறது.
No comments:
Post a Comment