'ஈரம்' படத்தைப் பார்த்து அழுத இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட தமிழ்ப் படங்களைத் தயாரித்து வருகிறார். தற்போது இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் உருவான 'ஈரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில பேசியா ஷங்கர், இதுவரை எஸ் பிக்சர்ஸ் தயாரித்த படங்களில் இருந்து மிகவும் மாறுபட்ட ஒரு படமாக 'ஈரம்' இருக்கும். நல்ல படத்தைத் தயாரித்ததன் மூலம் திருப்தியும் சந்தோஷமும் அடைகிறேன் என்றார்.

மேலும் இப்படத்தைப் பார்த்த போது என்னையும் அறியாமல் சில இடங்களில் கை தட்டியிருக்கிறேன், அழுதும் இருக்கிறேன் என்ற ஷங்கர் 'ஈரம்' படத்தின் அறிவழகனைப் பாராட்டிய போது இயக்குநர் இப்படத்தின் அனைத்துத் துறைகளிலும் தனது ஈடுபாட்டைப் புகுத்தியிருப்பது படம் பார்த்த போதே உணரமுடிகிறது என்றும்,

திகில் படங்கள் என்றாலே ஹிட்ச்காக் படங்கள் தான் பிரபலம் அவருடைய படங்களில் தான் திகில் படமாக இருந்தாலும் அதில் ஆழமான கதையிருக்கும், 'ஈரம்' படத்தைப் பார்த்தபோது ஹிட்ச்காக் படத்தைப் பார்த்த அனுபவம் கிடைத்தது என்று கூறிய இயக்குநர் ஷங்கர், இப்படம் ரசிகர்களை மயக்கும் ஒரு படமாக அமையும் என்றும் தெரிவித்தார்.

'ஈரம்' படத்தின் இயக்குநர் அறிவழகன், திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவர் என்பதும், இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்', 'அந்நியன்' ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment