ஜாலியாக போகும் இவர்களின் வாழ்க்கையில் வருகிறார் சரவணன். இவர் சசிகுமாரின் நண்பர், அதனால் மற்ற இருவருக்கும் நண்பனாகிறார். (இதை தான் என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் என்கிறார் இயக்குனர்) சரவணன் திடீரென்று ஒருநாள் தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறார். என்ன காரணம் என்றால், தனது காதலியை தன்னிடமிருந்து பிரித்துவிட்டார்கள் என்கிறார். தன் நண்பனின் காதலியை அவருடன் சேர்த்து வைப்பதற்காக மூன்று நண்பர்களும் புறப்படுகிறார்கள். இப்பிரச்சினையில் சசிகுமார் தனது கண் பறிபோகும் அளவிற்கு காயம் அடைவதுடன், தனது மாமா பெண்ணையும் இழக்கிறார். விஜய் தனது காலையும், பரணி இரண்டு காதுகளும் கேளாத செவிடனாகிறார். இவ்வாறு நண்பனின் காதலுக்காக தங்களது வாழ்க்கையில் பெரிய இழப்பை பெறுகின்றனர்.
இவ்வாறு சேர்த்து வைத்த காதலர்கள் பிரிந்துவிடுகின்றனர். இதை அறிந்த மூவரும் மறுபடியும் கிளம்புகிறார்கள். அவ்வாறு புறப்பட்டவர்கள் காதலர்களை என்ன செய்கிறார்கள் என்பது தான் இறுதி காட்சி.
சசிகுமார் தனக்கு எந்த கதாபாத்திரம் பொருந்தும் என்பதில் தெளிவாக இருக்கிறார். இப்படத்தில் நடனமாடுவது, காதல், காமெடி செய்வது என தனது முதல் படத்திலிருந்து ஒரு படி மேலே சென்றிருக்கிறார்.
விஜய் தனது அப்பாவுடன் சேர்ந்து செய்யும் காதல் லூட்டி, அவரின் கதாபாத்திரத்திற்கு அதுவே ரொம்ப பியூட்டி. இருந்தாலும் சில காட்சிகளில் அவரின் தந்தையாக நடித்தவா மேலோங்கி நிற்கிறார்.
கல்லூரி படத்தில் பரணி, இதில் காமெடியில் கலைகட்டியிருக்கிறார். படத்தின் முதல் பாதியில் கவலை மறந்து காமெடி செய்வதிலிருந்து, இறுதி காட்சியில் அவரின் கோபத்தை வெளிப்படுத்துவது வரை நடிப்பில் கல்லூரியை பாஸ் பண்ணிவிட்டார்.
தன் தங்கை காதலை தெரிந்தும், தெரியாததுபோல் இருக்கும் சசிகுமாரின் கதாபாத்திரத்தைப் போல தன் காதலிக்கு அண்ணன் இல்லையே என்று காதலர்களை ஏங்கச் செய்திருக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி.
அனன்யா, அபிநயா என்ற இரண்டு நாயகிகளும் தனது அளவான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள். வாய் பேசாத, காதுகேட்காத அபிநயாவை நடிக்கவைத்த இயக்குனருக்கு ஒரு ஓ........ போடலாம்.
சுந்தர் சி பாபு-வின் இசையில் சம்போ..... பாடல் காட்சிகளுக்கு விறுவிறுப்பு கொடுப்பதுடன், ரசிகர்களுக்கும் உற்சாகம் கொடுத்திருக்கிறது.
எஸ் ஆர் கதிர் தனது கேமராக்கு கால்கள் பொருத்தி காட்சிகளுடன் ஓடவிட்டிருக்கிறார்.
சின்னமணி கதாபாத்திரத்தில் வரும் நமோநாராயணன் எந்த பெரிய டயலாக்கும் பேசாமல், சிரிக்க மறந்தவர்களைக் கூட சிரிக்க வைத்திருக்கிறார். கஞ்சா கருப்பு சைலன்டான தனது வசனங்களில், ரசிகர்களின் வயலன்டான கைத்தட்டலைப் பெறுகிறார்.
இயக்குனர் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பக்காவாக கையாண்டு பாராட்டுப் பெறுகிறார். படத்தின் கிளைமாக்ஸை கொஞ்சம் இழுத்திருக்கிறார். (சின்னத்திரையின் பாதிப்போ) இருந்தாலும் இயக்குனரின் முடிவு எதார்த்தமானது.
தேசிய விருது வாங்கும் அளவிற்கு சிறந்த படம் இல்லை என்றாலும், ரசிகர்களின் பணத்திற்கு பெரிய திருப்தியை கொடுத்திருக்கிறார்கள் இந்த நாடோ டிகள்.
No comments:
Post a Comment