வசுந்தரா 3நாளில் பதவி விலக உத்தரவு

ராஜஸ்தான் மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து இன்னும் 3 நாளில் விலகுமாறு வசுந்தர ராஜேவுக்கு பாரதிய ஜனதா கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்தது. தேர்தல் தோல்விக்கு காரணம் காட்டி, கட்சியின் மூத்த தலைவர்கள் களை எடுக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கட்சித் தலைமைக்கு எதிராக பலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இதுதொடர்பாக, ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜேவுக்கும், கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்குக்கும் இடையே மோதல் வெடித்தது. ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும்படி வசுந்தர ராஜேவுக்கு ராஜ்நாத் சிங் உத்த்ரவிட்டார்.

இதையடுத்து, டெல்லி சென்று ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசிய வசுந்தர ராஜே, பதவி விலக சம்மதம் தெரிவித்து 3 நிபந்தனைகளை விதித்தார். அந்த நிபந்தனைகள் இன்னும் ஏற்கப்படாத நிலையில், வசுந்தர ராஜே இன்னும் பதவி விலகவில்லை.

இந்நிலையில், இன்னும் 3 தினங்களுக்குள் ராஜஸ்தான் மாநில எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வசுந்தர ராஜேவுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment