பா.ஜ.க. தலைமைக்கு எதிராக கந்தூரி போர்க்கொடி

பாரதிய ஜனதா கட்சியின் தலைமைக்கு எதிராக, அக்கட்சியின் பல்வேறு தலைவர்களும் குரல் கொடுத்து வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவருமான கந்தூரியும் தற்போது போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

இதுதொடர்பாக, கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாடாளுமன்ற தோதலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டதற்காக என்னை பதவி நீக்கம் செய்தது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"மொத்தமுள்ள 35 எம்.எல்.ஏ.க்களில் 27 பேர் எனக்கு ஆதரவாக இருந்த நிலையில் என்னை பதவி நீக்கம் செய்தது, ஜனநாயகத்துக்கு எதிரானது" என்றும் அவர் குற்றம் சாற்றியுள்ளார். இது தொடர்பாக, தனக்கு விளக்கம் அளிக்க வேண்டும் கந்தூரி வலியுறுத்தியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக இருந்த கந்தூரி, நாடாளுமன்ற தேர்தலில் கட்சி தோல்வியடைந்த பின்னர் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிய ஜனதா தலைவர்களான வசுந்தரா ராஜே, அருண் ஜோரி, ஜஸ்வந்த் சிங் ஆகியோர் கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய நிலையில், தற்போது கந்தூரியும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது கட்சி வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment