நடிகர் வடிவேலு முதல் முறையாக ஜீவாவுடன் இணைந்து நடிக்கும் இப்படத்தின் கதைப்படி, கிராமத்திலிருந்து வேலை தேடி வரும் ஜீவாவுக்கு சரியான வேலை கிடைக்காததால், பர்மா பஜாரில் கடை வைத்திருக்கும் வடிவேலுவிடம் வேலைக்குச் சேர்கிறார். அவர் அங்கு எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தான் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்றார், இதன் இயக்குநர் திரைவண்ணன்.
படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் காட்சிகளைப் பர்மா பஜாரிலே படம் பிடிக்க இயக்குநர் நினைத்திருக்கிறார். அங்கு படப்பிடிப்பு நடத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகமாக இருந்ததால் சென்னை பிலிம் சிட்டியில் 25 லட்சம் செலவில் பர்மா பஜார் போன்ற செட் போட்டு, இம்மாதம் 23ஆம் தேதி முதல் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
'சர்வம்' படத்தில் அமைதியான வில்லனாக நடித்துக் கலக்கிய பிரபல தெலுங்கு நடிகர் ஜெ.டி.சக்கரவர்த்தி, இப்படத்தில் வில்லனாக நடிக்க, டி.இமான் இசையமைக்கிறார்.
No comments:
Post a Comment