2009 செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் சென்னையில் நடக்கவிருக்கும் இவ்விழாவிற்கான அறிமுக விழா, 2009 ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குநர்கள் சேரன், மிஷ்கின், ஏ.ஆர்.முருகதாஸ், யூகி சேது, ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், நடிகை குஷ்பு, தயாரிப்பாளர் எஸ்.பி.பி சரண் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், நடிப்பால் சக கலைஞர்களையும் ஈர்த்தவர் நடிகர் கமல்ஹாசன், அவரை நான் எப்போது சந்தித்தாலும் உங்களுடன் சேர்ந்து படம் நடிக்க வேண்டும் என்று கேட்பேன். இப்போதும் அவர் தனக்கே உரிய சுறுசுறுப்புடன் பத்து வேடங்களில் தசாவதாரம் போன்று சாதித்து கொண்டுதான் இருக்கிறார். மேலும் பொன்விழா ஆண்டில் நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கும் அவருக்குக் கெளரவம் சேர்க்கும் விதத்தில் அவர் வசிக்கும் சென்னை எல்டாம்ஸ் சாலைக்கு டாக்டர் கமல்ஹாசன் சாலை என்று அரசு பெயர் சூட்ட வேண்டும். இதற்காக நடிகர் சங்க சார்பில் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைக்க இருக்கிறோம் என்றார்
No comments:
Post a Comment