பணம் மீட்பது அவ்வளவு சுலபமல்ல

புதுடில்லி : "நாட்டின் மொத்த சேமிப்பில், 10 சதவீதம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கறுப்புப் பணத்தில் பெரும்பகுதி, நாட்டில் உள்ள மக்களில் மூன்று சதவீதத்தினர் கையில்தான் உள்ளது. கறுப்புப் பண நடவடிக்கைகளால் நாட்டின் வளர்ச்சி 5 சதவீதம் வரை பாதிக்கப்படுகிறது' என, பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சுவிஸ் உட்பட வெளிநாட்டு வங்கிகள் சிலவற்றில், இந்திய அரசியல்வாதிகளும் மற்றும் பலரும் ஏராளமான அளவில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ளனர். இந்தப் பணம் பல லட்சம் கோடி இருக்கும் என்றும், அதை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும், இதுதொடர்பாக, மத்திய அரசு பெரிய அளவில் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

இந்நிலையில், டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிபுணர் கள், கறுப்புப் பண விவகாரம் குறித்து கூறியதாவது: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 50 சதவீத அளவுக்கு கருப்புச் சந்தை நடவடிக்கைகள் மூலம் பணம் வருகிறது. அரசு பின்பற்றும் கொள்கைகளில் ஏற்பட்ட தோல்வியே இதற்கு காரணம். 2009 -10ம் ஆண்டில், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள கறுப்புப்பணம் எல்லாம் கணக்கில் கொண்டு வரப்பட்டால், உள்நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சியானது, உண்மையில் 12 சதவீதத்தை எட்டி விடும். நாட்டின் மொத்த சேமிப்பில் 10 சதவீதம் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நாட்டில் உள்ள மக்களில் 3 சதவீதம் பேர் கைகளில் தான், முழுமையான கறுப்புப் பண புழக்கம் உள்ளது. இந்தியாவின் முதன்மையான மற்றும் இரண்டாம் மட்டத் துறைகளை விட, பெரியதாக கறுப்புப் பண பொருளாதார சந்தை உள்ளது.

ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் மற்றும் பங்குச் சந்தை போன்ற சட்ட ரீதியான பரிவர்த்தனைகள் மூலமும், ஹவாலா பரிமாற்றம், நிதி மோசடிகள், லஞ்சம் கொடுத்தல், தேர்தல்களுக்கு அளவுக்கு அதிகமாக செலவிடுதல், நன்கொடைகள் வசூலிப்பது போன்ற சட்ட விரோத பரிமாற்றங்கள் மூலமும் கறுப்புப் பணம் உருவாகிறது. கறுப்புப் பணத்தின் வளர்ச்சியை புதிய பொருளாதார கொள்கைகள் கட்டுப்படுத்தும் என, எதிர்பார்த்தாலும் அது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சுவிஸ் நாட்டு வங்கியில் பணத்தை டிபாசிட் செய்திருக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஒருவரின் விவரத்தை பெற வேண்டும் எனில், அது எளிதில் நடக்கக் கூடிய காரியம் அல்ல. அதற்கு தகுந்த ஆதாரத்தை சுவிஸ் நிர்வாகத்திடம் காண்பிக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு நபர் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு பணம் சேர்த்திருந்தாலோ அல்லது வரி ஏய்ப்பு செய்திருந்தாலோ அல்லது வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கான முழுமையான தகவல்களை அளிக்க வேண்டும். அப்படி கொடுத்தால் மட்டுமே, அந்த நபருக்கு தங்கள் நாட்டு வங்கியில் கணக்கு உள்ளதா என்பதை சுவிஸ் நிர்வாகம் தெரிவிக்கும். இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்

லஞ்சம்பட்டியல் இங்கே

புதுடில்லி : லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் யார் யார் என்ற பெயர் பட்டியலை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் முதல் முறையாக தனது இணையதளத்தில் அதிரடியாக வெளியிட்டு அம்பலப் படுத்தியுள்ளது. இதில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 123 அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களை விசாரித்து தகுந்த தண்டனை தரவும் ஊழல் கண்காணிப்பு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

அரசுத் துறைகளில் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மேற்கொண்டுள்ளது. ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் எத்தனை பேர், அவர்கள் எந்த துறைகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த பட்டியல் மட்டும் இதுவரை, ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வந்தது. தற்போது, அதிக அளவு ஊழல் புரிந்த 123 அதிகாரிகளின் பெயர்களையும், அவர்கள் பணிபுரிந்த துறைகளையும் முதல் முறையாக இணையதளத்தில் வெளியிட்டு அம்பலப் படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தி, தகுந்த தண்டனை வழங்குமாறும் பரிந்துரைத்துள்ளது.

கடந்த ஜூலையில் 101 அதிகாரிகள் பெயர் வெளியிடப்பட்டது. அவர்களில் 17 பேர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள்; 13 பேர், டில்லி மேம்பாட்டு வாரிய அதிகாரிகள்; 11 பேர், டில்லி கார்ப்பரேஷன் அதிகாரிகள். இவர்கள் தவிர, மத்திய உள்துறை அமைச்சகத்தில் ஏழு அதிகாரிகள், நேரடி வரி விதிப்பு மைய அலுவலகத்தில் ஏழு அதிகாரிகள், இந்திய வெளியுறவுத் துறையில் இரண்டு அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ளவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ரயில்வே துறை மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒன்பது அதிகாரிகள், ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் 11 அதிகாரிகளுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 134 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஊழல் கண்காணிப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதில், அதிக அளவாக பொதுத் துறை வங்கிகளைச் சேர்ந்த 46 அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். டில்லி மாநகராட்சி அதிகாரிகள் 25 பேர், ரயில்வே துறையைச் சேர்ந்த 13 பேர், காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தை சேர்ந்த ஏழு பேர், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவரும் இதில் இடம் பெற்றுள்ளனர். தற்போது, ஊழல் கண்காணிப்பு ஆணையம், ஊழல் புரிந்த அதிகாரிகளின் பெயர் பட்டியலை முதல் முறையாக வெளியிட்டுள்ளது, பொதுத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பட்டியல் இங்கே.. http://www.cvc.nic.in/pn0709.pdf

குரு கே.பாலச்சந்தரை இயக்குகிறார் கமல்ஹாசன்

கமல்ஹாசன் நடிக்கும் 'உன்னைப்போல் ஒருவன்' படத்தின் பாடல்கள் வெளிவந்து, படம் வெளியாகும் நாளையும் அறிவித்துவிட்டார்கள். 2009, செப்டம்பர் 18 அன்று வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்குவார் என்றும் அது ஒரு சரித்திரப் படமாக இருக்கும் என்றும் செய்திகள் வெளியாயின. இதற்கிடையில் கமல்ஹாசன் அடுத்ததாக நடிப்பதற்கு முன்பு ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்றும் அதில் இயக்குநர் கே.பாலச்சந்தர் நடிக்க உள்ளார் என்றும் செய்திகள் வந்துள்ளன.

இதைக் கமல்ஹாசனும் உறுதிப்படுத்தி இருக்கிறார். 'உன்னைப்போல் ஒருவன்' படத்தின் இசை வெளியீட்டுக்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல்ஹாசனிடம் இந்தக் கேள்வியைக் கேட்ட நிருபர்களுக்கு, 'உன்னைப்போல் ஒருவன்' படத்திற்குப் பிறகு ஒரு படத்தை இயக்கப் போவதாகவும், அதில் கே.பாலச்சந்தர் நடிப்பார் என்றும் தெரிவித்தார். மேலும் அந்த படத்தின் கதையைக் கமல்ஹாசன், கே.பாச்சந்தரிடம் சொன்னதாகவும் பாலச்சந்தருக்குக் கதை பிடித்துவிட, உடனே நடிக்கவும் ஒப்புக்கொண்டாராம்.

இப்போது கமல்ஹாசன் அக்கதைக்குத் திரைக்கதை எழுதுவதில் ஈடுபட்டுள்ளாராம். மேலும் மிஷ்கின் இயக்கப் போகும் சரித்திரக் காலப் படத்திற்காக, மிஷ்கின் கொஞ்சம் அவகாசம் கேட்டிருக்கிறாராம். ஆகவே 'உன்னைப்போல் ஒருவன்' படம் வெளியான பிறகு கே.பாலச்சந்தரை இயக்கும் கமல்ஹாசன், பிறகு மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம்.

விக்ரமின் புதிய திட்டம்

திரையுலகில் பல ஆண்டுகளாகப் போராடி வெற்றி பெற்றவர், நடிகர் விக்ரம். தன்னால் எந்த வேடத்திலும் நடிக்க முடியும் என்று நிரூபித்தவர். ஆனால் சமீப காலமாக இவர் நடித்த படங்களின் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியாக, ஆண்டுகள் தேவைப்படுகின்றன. தற்போது விக்ரமின் நடிப்பில் வெளியான 'கந்தசாமி' படம் வெளியாவதற்கு ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஆயின. இதனால் பல பட வாய்ப்புகளைக் கைவிட நேர்ந்ததால் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

இந்த இரண்டு படங்களில் 'யாவரும் நலம்' படத்தை இயக்கிய விக்ரம் குமார் ஒரு படத்தையும். இயக்குநர் செல்வராகவன் ஒரு படத்தையும் இயக்கவுள்ளார்கள். இப்படங்களில் நடிப்பதற்கான தேதியையும் பிரித்துக் கொடுத்துவிட்டாராம்.

இதில் விக்ரம் குமார் இயக்கவுள்ள படத்திற்கு '24' என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதாநாயகியாக, தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கும் இலியானவை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறதாம். இதில் நடித்தபடியே செல்வராகவனின் படத்திலும் நடிக்கவுள்ளார் விக்ரம். இன்னும் தலைப்பு வைக்காத இப்படத்தில் கதாநாயகியாக 'சுப்ரமணியபுரம்' படத்தில் நடித்த சுவாதி நடிக்கிறார்.


விவாகரத்து வழக்குக்குப் பின், சோனியா அகர்வால் நடிக்கிறார்

நடிகை சோனியா அகர்வாலும் இயக்குநர் செல்வராகவனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இதன் மூலம் செல்வராகவனை விட்டுப் பிரிந்து வாழும் சோனியா அகர்வால், தான் மறுபடியும் திரைப்படங்களில் நடிக்க விரும்புவதாகப் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்குப் படத்தில் நடிக்கச் சோனியா அகர்வாலுக்கு வாய்ப்பு வந்துள்ளது. நடிகர் உபேந்திரா நடிக்கும் படத்தில் விதவை கேரக்டரில் நடிக்க அழைத்துள்ளார்களாம். இப்படம் தெலுங்கு, கன்னடம் ஆகிய இரு மொழிகளில் தயாராகிறது. நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரம் என்பதால் சோனியா அகர்வால் சம்மதம் தெரிவித்துள்ளாராம்

சிம்புவுக்கு ஆதரவாகப் பேசும் திரிஷா

சிம்பு, திரிஷா இணைந்து 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றனர். படப்பிடிப்புக்காக திரிஷா, ஐதராபாத் சென்றுள்ளார். அங்கு அவரைச் சந்தித்த நிருபர்கள், "சிம்பு மோசமானவர் என்று கூறுகிறார்களே. நீங்கள் எப்படி அவருடன் சேர்ந்து நடிக்க சம்மதித்தீர்கள்?" என்று கேள்வி கேட்டார்களாம்.

அதற்குப் பதில் அளித்த திரிஷா, "சிம்பு மீது ஏன் இப்படி ஒரு வதந்தி பரவியது என்று புரியவில்லை. உண்மையில் சிம்பு ரொம்ப நல்லவர். கடந்த ஆறு ஆண்டுகளாக அவரை எனக்குத் தெரியும். பழக இனிமையானவர். ஏற்கனவே சிம்புவுடன் நடித்து இருக்கிறேன். இப்போது மீண்டும் சேர்ந்து நடிக்கிறோம். மற்ற கதாநாயகிகள் பற்றித் தெரியாது. என்னைப் பொறுத்த வரை சிம்பு நல்லவர்" என்றாராம்.

மேலும் தெலுங்கு ரசிகர்களை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறிய திரிஷா, தன்னைப் பற்றி வரும் கிசுகிசுக்களைப் பற்றிப் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லையாம். "நான் பொதுவாக எல்லா விஷயங்களிலும் வெளிப்படையாக இருப்பேன். இதனால் நான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் ஒளிவு மறைவாக இருக்கமாட்டேன். இதனால் அடிக்கடி என் மீது கிசுகிசுக்கள் வருகின்றன" என்றார் திரிஷா.

கிசுகிசுக்கள் எல்லாம் தனக்குப் பழகிவிட்டதால், அவற்றையெல்லாம் ஒரு விளம்பரமாகவே எடுத்துக்கொள்கிறாராம்.

ஜோகனஸ்பர்க், செப்.26 சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போடடித் தொடரில் இன்று நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவு அணிகள் மோதுகின்றன.

முன்னணி சீனியர் வீரர்கள் இல்லாமல் 2ஆம் தர அணியாக பங்கேற்றுள்ள மேற்கு இந்திய தீவு அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்திருந்தது. எனவே அந்த அணி வலுவான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏதாவது அதிர்ச்சி அளித்தால் மட்டுமே இங்கு ஆச்சரியப்படலாம்.

மேற்கு இந்திய தீவு அணியில் பந்து வீச்சு ஓரளவு சிறப்பாக உள்ளது. ஆனால் பேட்டிங் சரியில்லை. இங்கிலாந்துடன் ஒரு நாள் தொடரை 6-1 என்ற கணக்கில் வென்று கம்பீரமாக வந்திருக்கும் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் உள்ளது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது.

அணிகள் விவரம்:

ஆஸ்திரேலியா: வாட்சன், டிம் பெய்ன், பாண்டிங் (கேப்டன்), மைக்கேல் கிளார்க், மைக் ஹஸ்ஸி, பெர்குசன், கேமரூன் ஒயிட், ஜான்சன், பிரெட்லீ, நாதன் ஹவுரிட்ஸ், பீட்டர் சிடில்.

மேற்கு இந்திய தீவு: டேல் ரிச்சர்ட்ஸ், பிளட்சர், டேவோன் சுமித், டிரைவிஸ் டவ்லின், பிளாய்ட் ரீபர் (கேப்டன்), பெர்னர்ட், டேரன் சேமி, சாட்விக் வால்டன், நிகிதா மில்லர், டினோ பெஸ்ட், காவின் டோங்.

ரஜினி, கமலுக்கு தமிழக அரசு விருது

சென்னை, செப்.29 2007-2008ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 2007ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது, 'சிவாஜி' படத்துக்காக ரஜினிகாந்துக்கும், 2008ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது, 'தசாவதாரம்' படத்துக்காக கமல்ஹாசனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கருணாநிதிக்கு சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது உளியின் ஓசை படத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு, திரைப்பட விருதுகளுக்கான பரிந்துரைகளை வழங்கிட நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு விருதுகளுக்கான விவரங்களை தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.

விருதுகளுக்கான விவரம் வருமாறு:- சிறந்த படம்: முதல் பரிசு- சிவாஜி, இரண்டாம் பரிசு-மொழி, மூன்றாம் பரிசு-பள்ளிக்கூடம், சிறப்பு பரிசு-பெரியார். பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் - சிறப்பு பரிசு- மிருகம், அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம் - முதல் பரிசு- தூவானம். சிறந்த நடிகர்- ரஜினிகாந்த் (சிவாஜி), சிறந்த நடிகை- ஜோதிகா (மொழி), சிறந்த நடிகர்- சிறப்பு பரிசு- சத்யராஜ் (பெரியார்), சிறந்த நடிகை சிறப்பு பரிசு- பத்மப்பிரியா (மிருகம்), சிறந்த வில்லன் நடிகர்- சுமன் (சிவாஜி), சிறந்த நகைச்சுவை நடிகர்- விவேக் (சிவாஜி), சிறந்த குணசித்திர நடிகர்- எம்.எஸ்.பாஸ்கர் (மொழி), சிறந்த குணசித்திர நடிகை- அர்ச்சனா (ஒன்பது ரூபாய் நோட்டு), சிறந்த இயக்குநர்- தங்கர் பச்சான் (பள்ளிக்கூடம்), சிறந்த கதையாசிரியர்- எஸ்.எம்.வசந்த் (சத்தம் போடாதே), சிறந்த உரையாடல் ஆசிரியர்- பாலாஜி சக்திவேலு (கல்லூரி), சிறந்த இசையமைப்பாளர்- வித்யாசாகர் (மொழி), சிறந்த பாடலாசிரியர்- வைரமுத்து (பெரியார் மற்றும் பல படங்கள்), சிறந்த பின்னணி பாடகர்- ஸ்ரீநிவாஸ் (ஒன்பது ரூபாய் நோட்டு), சிறந்த பின்னணி பாடகி- சின்மயி (சிவாஜி), சிறந்த ஒளிப்பதிவாளர்- நீரவ்ஷா (பில்லா), சிறந்த ஒலிப்பதிவாளர்- யு.கே.அய்யப்பன் (பில்லா), சிறந்த எடிட்டர்- சதீஷ் குரோசோவா (சத்தம் போடாதே). சிறந்த கலை இயக்குநர்- தோட்டா தரணி (சிவாஜி), சிறந்த சண்டை பயிற்சியாளர்- அனல் அரசு (கருப்பசாமி குத்தகைதாரர்), சிறந்த நடன ஆசிரியர்- பிருந்தா (தீபாவளி), சிறந்த ஒப்பனைக் கலைஞர்- ராஜேந்திரன் (பெரியார்), சிறந்த தையல் கலைஞர்- அனுவர்தன் (பில்லா), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்- (ஆண்) கே.பி.சேகர் (மலரினும் மெல்லிய), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்- (பெண்) மகாலட்சுமி (மிருகம்) 2008ஆம் ஆண்டுக்கான விருதுகள்: சிறந்த படம்: முதல் பரிசு- தசாவதாரம், இரண்டாம் பரிசு- அபியும் நானும், மூன்றாம் பரிசு- சந்தோஷ் சுப்பிரமணியம், சிறப்பு பரிசு- மெய்ப்பொருள், பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம்:- சிறப்பு பரிசு- பூ. அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம்- முதல் பரிசு- வல்லமை தாராயோ, அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம்:- இரண்டாம் பரிசு- வண்ணத்துப் பூச்சி. சிறந்த நடிகர்- கமல்ஹாசன் (தசாவதாரம்), சிறந்த நடிகை- சிநேகா (பிரிவோம் சந்திப்போம்), சிறந்த நடிகர்- சிறப்பு பரிசு- சூர்யா (வாரணம் ஆயிரம்), சிறந்த நடிகை சிறப்பு பரிசு- திரிஷா (அபியும் நானும்), சிறந்த வில்லன் நடிகர்- ராஜேந்திரன் (நான் கடவுள்). சிறந்த நகைச்சுவை நடிகர்- வடிவேலு (காத்தவராயன்), சிறந்த நகைச்சுவை நடிகை- கோவை சரளா (உளியின் ஓசை), சிறந்த குணசித்திர நடிகர்- பிரகாஷ்ராஜ் (பல படங்கள்), சிறந்த குணசித்திர நடிகை- பூஜா (நான் கடவுள்), சிறந்த இயக்குநர்- ராதா மோகன் (அபியும் நானும்), சிறந்த கதையாசிரியர்- தமிழ்ச்செல்வன் (பூ). சிறந்த உரையாடல் ஆசிரியர்- கலைஞர் மு.கருணாநிதி (உளியின் ஓசை), சிறந்த இசையமைப்பாளர்- இளையராஜா (அஜந்தா), சிறந்த பாடலாசிரியர்- வாலி (தசாவதாரம்), சிறந்த பின்னணி பாடகர்- பெள்ளிராஜ் (சுப்பிரமணியபுரம்), சிறந்த பின்னணி பாடகி- மஹதி (நெஞ்சத்தைக் கிள்ளாதே). சிறந்த ஒளிப்பதிவாளர்- ஆர்தர் ஏ.வில்சன் (நான் கடவுள்), சிறந்த ஒலிப்பதிவாளர்- ரவி (வாரணம் ஆயிரம்), சிறந்த எடிட்டர்-பிரவீன்- ஸ்ரீகாந்த் (சரோஜா), சிறந்த கலை இயக்குநர்- ராஜீவன் (வாரணம் ஆயிரம்), சிறந்த சண்டை பயிற்சியாளர்- கனல் கண்ணன் (சிலம்பாட்டம்). சிறந்த நடன ஆசிரியர்- சிவசங்கர் (உளியின் ஓசை), சிறந்த ஒப்பனைக் கலைஞர்- மைக்கேல் வெஸ்ட்மோர்- கோதண்டபாணி (தசாவதாரம்), சிறந்த தையல் கலைஞர்- ரவீந்திரன் (பிரிவோம் சந்திப்போம்). சிறந்த குழந்தை நட்சத்திரம்- ஸ்ரீலட்சுமி (வண்ணத்துப்பூச்சி), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)- எம்.ஏ.பிரகாஷ் (கி.மு.), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)- சவீதா (பல படங்கள்) 2006-2007ஆம் ஆண்டுக்கான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்: சிறந்த இயக்குநர்- ச.அன்பு (அரிதாரம்), சிறந்த ஒளிப்பதிவாளர்- பா.தினேஷ் கிருஷ்ணன் (திற), சிறந்த ஒலிப்பதிவாளர்- எம்.ராம்குமார் (தாய்), சிறந்த எடிட்டர்- பி.சசிகுமார் (தாய்), சிறந்த படம் பதனிடுபவர்- ரா.முருகன் (அகத்திணை) 2007-2008ஆம் ஆண்டுக்கான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்: சிறந்த இயக்குநர்- மு.கண்ணன் (அச்சுப்பிழை), சிறந்த ஒளிப்பதிவாளர்- ஆனந்தகுமார் (பழைய படம், சிறந்த ஒலிப்பதிவாளர்- லட்சுமி நாராயணன் (கனா), சிறந்த எடிட்டர்- பி.மர்பி (கனவு மெய்ப்பட), சிறந்த படம் பதனிடுபவர்- வெங்கடேஷ் பிரசாத் (கனா). இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரஜினியும் நானும் சிறந்த நண்பர்கள்- கம‌ல்

செ‌ன்னை, செப்.29 ரஜினிகாந்தும் நானும் சிறந்த நண்பர்களாக இருந்து வருகிறோம். எங்களை போல திரையுலகில் சிறந்த நண்பர்களாக வேறுயாராவது விளங்க முடியுமா என்று நடிகர் கமல்ஹாசன் சவால் விட்டுள்ளார்.

‌‌விஜ‌ய் டி‌வி நட‌த்‌தி பாராட்டு விழாவி‌ல் நடிக‌ர் கமல்ஹாச‌ன் பேசுகை‌யி‌ல், நான் சினிமாவிற்கு வரும்போது நிறைய கனவுகளோடு வந்தேன். ஆனால் அது ஒன்று கூட நிறைவேறவில்லை. என்னால் நிறைவேற்ற முடியவில்லை.

50 வருடம் சாதித்துள்ளேன் என்று கூறுகிறீர்கள். அதற்கு அன்புதான் காரணம். ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார். அவர் தன்னை தாழ்த்தி என்னை உயர்த்தி உள்ளார். அவர் உண்மையான சூப்பர் ஸ்டார்தான். எனக்கும் அவருக்கும் இடையே உள்ள நட்பு ஆழமானது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நட்பு இல்லை, அதையும் தாண்டியது.

ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் தேடுகிறார். நான் சமூகத்தில் தேடுகிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. நாத்திகன் என்று கூறுகிறார்கள். அந்த வார்த்தை எனக்கு பிடிக்கவில்லை. பகுத்தறிவாளன் என்று கூற வேண்டும். என் மகள் எனக்காக தினமும் கடவுளிடம் வேண்டுகிறார். ஆனால் அவரின் அன்பை நேசிக்கிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கு வரும் போது அழக்கூடாது, சீக்கிரம் முடிந்து விட வேண்டும் என்று நினைத்து கொண்டேன். இது இரண்டுமே நடக்கவில்லை. இங்கு திரையுலக பிரமுகர்கள் அனைவரும் வந்துள்ளனர். என் மீதுள்ள அன்பு காரணமாகவே வந்துள்ளனர். அவர்கள் கால்களை தொட்டு வணங்கி நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மம்முட்டியோடு பேசும் போது இருவரும் 3 தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறோம். அடுத்த விருது யார் வாங்குகிறோம் பார்க்கலாம் என மம்முட்டி என்னிடம் கூறினார். இந்த போட்டியில் நான் ஜெயிப்பேனா என்பது தெரியவில்லை.

ஆனால் நானும் ரஜினிகாந்தும் சிறந்த நண்பர்களாக இருந்து வருகிறோம். எங்களை போல திரையுலகில் சிறந்த நண்பர்களாக வேறுயாராவது விளங்க முடியுமா என்று நான் பதில் சவால் விடுகிறேன் எ‌ன்று கம‌ல்ஹாச‌ன் பே‌சினா‌ர்.

வாயால் வாய்ப்பைத் தவறவிட்ட பிரியாமணி

நடிகை பிரியாமணி இயக்குநர் அமீரின் 'பருத்தி வீரன்' படத்தின் மூலம் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்தது மட்டும் அல்லாமல் தேசிய விருது வாங்கிய நடிகைகளின் பட்டியலிலும் இடம் பிடித்தார்.

'பருத்தி வீரன்' படம் வெளியான பிறகு அப்படத்திற்குத் தனக்குச் சம்பளமாகப் பேசிய தொகை மிகவும் குறைவு என்றும் அதையே சரியான நேரத்தில் தரவில்லை என்றும் பிரியாமணி பத்திரிகைகளில் பேட்டியளிக்க, இவருக்கும் இயக்குநர் அமீருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்நிலையில் இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் 'யோகி' படத்தையடுத்து இயக்கவிருக்கும் 'கண்ணபிரான்' படத்தின் ஆரம்பக் கட்ட வேலைகளைத் துவங்கிவிட்டார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியாமணியை நடிக்க வைக்கலாம் என்ற முடிவில் இருந்தாராம். "எனக்கும் பியாமணிக்கும் சண்டை தீர்ந்துவிட்டது. நாங்கள் சமாதானம் ஆகிவிட்டோம்" என்று பெரிய மனதோடு பத்திரிகை நிருபர்களிடம் கூறினாராம் அமீர்.

இதைப் பற்றி பிரியாமணியிடம் கேட்டபோது, "அமீர் என்னிடம் 'கண்ணபிரான் குறித்து எதுவும் பேசவில்லை. எனக்குக் கதை பிடித்திருந்தால் அப்படத்தில் நடிப்பேன்" என்று பிரியாமணி சொல்ல, இதைக் கேள்விப்பட்ட அமீர், இவ்வளவு வாய் பேசும் பிரியாமணி, தன் படத்திற்கு வேண்டாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டாராம்.


'ஸ்கை டைவிங்': 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதிக்கிறார் அருண் விஜய்

'மலை மலை' பெற்ற வெற்றியின் மூலம் உற்சாகத்தில் இருக்கும் அருண் விஜய், மேலும் பல வெற்றிகளைக் குவிக்கத் தயாராகி வருகிறார். 'மலை மலை' படத்தில் பணிபுரிந்த குழுவுடன் மறுபடியும் கைகோர்த்து 'மாஞ்சா வேலு' என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

'மலை மலை' படத்திற்காகத் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளுக்குச் சென்று அங்கு ரசிகர்களைச் சந்தித்தவரிடம். இதே படக் குழுவினர் மீண்டும் ஒரு படத்தில் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டார்களாம். எனவே இக்குழுவின் அடுத்த படமானது இன்னும் அதிகமாக ரசிகர்களைத் திருப்திபடுத்த வேண்டும் என்று இதுவரை தமிழ்த் திரைப்படங்களில் யாரும் செய்யாத சாகச சண்டைக் காட்சிகளை இப்படத்தில் செய்ய அருண் விஜய் முடிவு செய்துள்ளார்.

இதற்காக 'மாஞ்சா வேலு' படத்தில் 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதிப்பது போன்ற ஒரு காட்சியை அமைத்திருக்கின்றனர். இந்திய திரைப்பட உலகில் எந்த நடிகரும் நடித்திராத இந்தக் காட்சியில் நடிப்பதற்காக 'ஸ்கை டைவிங்' பயிற்சி பெற அருண் விஜய் லண்டன் சென்றுள்ளார். அங்கு 15 நாட்கள் பயிற்சி பெற்று சென்னைக்குத் திரும்பும் அருண் விஜய். 2009, செப்டம்பர் 19ஆம் தேதியன்று தொடங்கவிருக்கும் 'மாஞ்சா வேலு' படத்தில் நடிக்கவுள்ளார்.

மாதம் 2 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம்!: பிரகாஷ் ராஜிடம் கேட்கிறார் மனைவி

நடிகர் பிரகாஷ் ராஜுக்கும், அவரின் மனைவி லலிதா குமாரிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் மூலம், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில் பிரகாஷ் ராஜ், லலிதா குமாரியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் லலிதா குமாரி கணவருடன் சேர்ந்து வாழவே தான் விரும்புவதாக மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு 2009, ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. இதனால் நீதி மன்றத்திற்கு வந்த பிரகாஷ் ராஜ், லலிதா குமாரி இருவரிடமும் குடும்ப நல நீதி மன்றத்தில் உள்ள ஆலோசனை மைய உறுப்பினர்கள் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்; இருவரிடமும் சமாதானம் செய்ய முயன்றனர். இருப்பினும் எந்தத் தீர்வும் ஏற்படாத நிலையில். இந்த வழக்கின் விசாரணையை 2009, செப்டம்பர் 4ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

இந்நிலையில், தன் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார் லலிதா குமாரி. அந்த மனுவில் அவர் கூறியிருப்பாதாவது, "என் கணவர் பிரிந்து சென்றுவிட்டதால், நான் வாழ்க்கை நடத்த மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். என் 2 பெண் குழந்தைகளையும் நான் தான் கவனித்து வருகிறேன். அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கவும், கல்விச் செலவுக்கும் பணம் தேவைப்படுகிறது. என் கணவர் பிரகாஷ்ராஜ் தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார்.

எனவே இந்த வழக்கு முடியும்வரை எனக்கும், என் 2 பெண் குழந்தைகளுக்கும் மாதம் சுமார் 2 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உடல் அடக்கம்

ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் உடல் அவரது சொந்த ஊரில் உள்ள அவரது தோட்டத்தில் இன்று மாலை முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி அடக்கம் செய்யப்படும் குழிக்குள் வைக்கப்பட்டது. இதையடுத்து ராணுவ வீரர்கள் சோக இசையை இசைக்க, வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு ராணுவ மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவரது உடல் மீது மலர்களையும், மண்ணையும் போட்டு ராணுவ வீரர்கள் மூடினர்.

ஒய்.எஸ்.ஆர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கான மக்கள் கூடினர். இறுதி ஊர்வலத்திலும், உடல் அடக்கம் நடைபெறும் இடத்திலும் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இயக்குநர்கள் நடிப்பதை விரும்பாத விக்ரம்

இயக்குநர்கள் தங்கள் படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றி, பிறகு கதாநாயகனாவே நடிக்கத் தொடங்கிவிட்டனர். இதை விரும்பாத நடிகர்கள் மத்தியில் வெளிப்படையாகவே, "இயக்குநர்கள் நடிகர்களாவது எனக்குப் பிடிக்காது" என்று கூறியிருக்கிறார் விக்ரம்.

தற்போது விக்ரமின் நடிப்பில் வெளியான 'கந்தசாமி' படத்தில். இயக்குநர் சுசி கணேசன் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை மக்கள் ஏற்றுக்கொண்டாலும் அப்படத்தின் நாயகன் விக்ரம் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏன் என்று அதற்கு விக்ரம் சொன்ன காரணம், "இயக்குநர்கள் எல்லாம் நடிகர்கள் ஆகிறார்கள். ஆனால் நடிகர்களால் ஒரு படத்தை இயக்க முடியாது. 'கந்தசாமி'யில் இயக்குநர் சுசி கணேசன் நடித்ததற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் படத்தைப் பார்த்தபோது வேறு யாரோ நடிப்பதற்குச் சுசி நடித்தது சரிதான் என்று தோன்றியது. இருந்தாலும் அதற்காக இயக்குநர்கள் நடிகர்கள் ஆவதை நான் விரும்பவில்லை. என்னைப் போன்ற நடிகர்கள் பலரை வைத்து நல்ல நல்ல படங்களை இயக்குநர்கள் இயக்க வேண்டும்" என்றார்

'பொம்மாயி' - திரை விமர்சனம்

பில்லி சூனியத்தின் அட்டகாச, ஆர்ப்பாட்டத்தில் ரசிகர்களை அலற வைக்கும் ஒரு திகில் படம். ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில், இந்தியில் 'பூங்க்' என்ற பெயரில் வெளியான இப்படத்தை, தமிழில் 'பொம்மாயி' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டுள்ளார்கள்.

தொழில் ரீதியாக ஏற்பட்ட பகையினால். கதாநாயகனின் மகளைப் பழி வாங்க நினைக்கும் தம்பதியினர், அதற்குச் சூனியத்தின் உதவியை நாடுகின்றனர். கதாநாயகனின் பெண் குழந்தையின் காலடி மண்ணை எடுத்துச் செய்யும் சூனியத்தால் குழந்தை பாதிக்கப்படுகிறாள். கடவுள் நம்பிக்கை இல்லாத நாயகன், தன் குழந்தைக்கு நேர்ந்ததை மருத்துவ ரீதியாகத் தான் தீர்வு காண முடியும் என்று, மருத்துவர்களிடம் செல்ல, அவர்கள் புதுப் புது வியாதிகளின் பெயர்களைச் சொல்லி, அதைக் குணப்படுத்த முடியும் என்ற உத்திரவாதத்தையும் தருகின்றனர்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமி, திடீரென்று ஆண் குரலில் பேசுவது, அந்தரத்தில் பறப்பது எனப் பெற்றோர்களைப் பதற வைக்கிறார். ஒரு வழியாக இது சூனியத்தின் வேலை தான் என்று, தன் நண்பனின் மூலம் தெரிந்துகொண்டு சூனியத்தை முறியடிக்க மந்திரவாதியை நாடும் நாயகனுக்கு, "உன் மகள் இன்னும் சிறிது நேரத்தில் இறக்கப் போகிறாள்" என்று அதிர்ச்சியைத் தருகிறார் சாமியார் மந்திரவாதி. தன் மகளைக் காப்பாற்ற சூனியம் வைத்த தன் எதிரிகளின் இடத்திற்குச் சென்று போராடும் நாயகன், தன் மகளைக் காப்பாற்றினாரா, இல்லையா என்பது தான் படத்தின் முடிவு.

திகில் படம் என்பதால் படத்தில் வரும் நல்ல கதாபாத்திரங்களைக் கூட சில காட்சிகளில் கண்டு அஞ்சும் அளவிற்கு இயக்குநர் சித்திரித்திருக்கிறார். சூனியத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி படும் அவஸ்தையைப் பார்க்கும் போது, மனதே அதிர்ந்து போகிறது.

பொதுவாகத் திகில் படங்கள் என்றாலே இரவுக் காட்சிகளும், அதில் பயமுறுத்தும் காட்சிகளும் இருக்கும். ஆனால் இப்படத்தில் பகல் காட்சியில் பயமுறுத்தும் காட்சிகளை அமைத்தது இயக்குநரின் எதார்த்தத்தைக் காண்பித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளரின் 'குளோஸ் -அப்' காட்சிகளில் விளையாட்டு பொம்மைகள் கூட விபரீத உருவங்களாகத் தெரிவது திகில் படத்திற்கே உரிய அம்சம். திகில் படம் என்றாலே அதில் பின்னணி இசைக்குத்தான் முக்கியத்துவம். இப்படத்தின் இசையமைப்பாளரும் அதை உணர்ந்து ரசிகர்களைத் தன் பின்னணி இசையின் மூலம் அலற வைத்திருக்கிறார்.

இக்காலக்கட்டத்தில் சூனியமா? என்று சந்தேகப்படுபவர்களைக் கூட சிறிது நேரம், 'உண்மையாக இருக்குமோ!' என யோசிக்க வைக்கிறாள் இந்த 'பொம்மாயி'.

அக்காலத்து நடிகைக்கு இக்காலத்துச் சம்பளம்

ஒரு காலத்தில் தமிழ், இந்தி எனக் கொடி கட்டிப் பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். ரஜினிகாந்த், அமலா நடித்த 'மாப்பிள்ளை' படத்தை ரீமேக் செய்ய உள்ளனர். இதில் கதாநாயகனாக ரஜினியின் மாப்பிள்ளையான, தனுஷ் நடிக்கிறார்.

இப்படத்தில் கதாநாயகியின் அம்மாவுக்கும் கதாநாயகனுக்கும் நடக்கும் நீயா? நானா? போட்டியே படத்தின் முக்கிய அம்சம். முந்தைய 'மாப்பிள்ளை' படத்தில் ரஜினிக்கு மாமியாராக நடித்தவர் ஸ்ரீவித்யா, இப்போதைய 'மாப்பிளை' படத்தில் தனுஷுக்கு மாமியாராக நடிகைகள் பலரைப் பரிசீலித்து. கடைசியாக ஸ்ரீதேவி நடித்தால் நன்றாக இருக்கும் எனத் தீர்மானித்து அவரிடம் கேட்டிருக்கிறார்கள்.

இதற்கு ஸ்ரீதேவியும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம். அவர் தெரிவித்த சம்மதத்திற்குக் கேட்டிருக்கும் சம்பளம், ஒரு கோடியாம். முந்நாள் நடிகையாக இருந்தாலும் இந்நாள் நடிகையின் சம்பளமா! என்று தமிழ்த் திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார் நடிகை ஸ்ரீதேவி

சோனியாவிடமிருந்து விவாகரத்து ஏன்?: செல்வராகவன் விளக்கம்

திரையுலகத் தம்பதிகளான இயக்குநர் செல்வராகவன், நடிகை சோனியா அகர்வால் ஆகியோரின் விவாகரத்துக்குக் காரணம் கருத்து வேறுபாடுதான். இதை இயக்குநர் செல்வராகவனே தெரிவித்துள்ளார் .

இதைப் பற்றிப் பேசிய செல்வராகவன், 'சோனியா அகர்வால் தொலைக்காட்சித் தொடரில் நடித்தது எனக்குப் பிடிக்கவில்லை; அதனால் தான் எங்களுக்குள் பிரச்சினை உருவானது என்பதெல்லாம் உன்மை இல்லை. சோனியாவைத் தொலைக்காட்சித் தொடரில் நடிக்க உற்சாகப்படுத்தியதே நான் தான்' என்றார்.

'என் தொழிலுக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்த நான் சோனியாவுக்காக நேரம் ஒதுக்கவில்லை. இதை அவர் என்னிடம் எதிர் பார்த்திருக்கலாம். அது மட்டும் இன்றி, தேனியைச் சேர்ந்தவன் நான்; சோனியா சண்டிகரைச் சார்ந்தவர். எங்களுக்குள் இருக்கும் கலாசார வேறுபாடும் ஒரு வகையில் எங்களுக்குப் பிரச்சினையாக இருந்திருக்கலாம்' என்றார்.

'இருப்பினும் சோனியா அகர்வாலை விட்டுப் பிரிந்து சென்றாலும் அவர் என்னுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். நாங்கள் கணவன் மனைவியாக இல்லாவிட்டாலும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.

'மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பமும் எனக்கில்லை. அப்படி திருமணம் செய்துகொள்ளாமல் போனால் வாரிசு இல்லாமல் போய்விடும் என்ற கவலையும் எனக்கில்லை, நான் இயக்கும் படங்கள் தான் என்னுடைய வாரிசுகள்' என்று தெரிவித்தார்

தமிழக காங்கிரஸின் தளபதியாகும் இளைய தளபதி விஜய்

நடிகர் விஜய் தனக்கு உள்ள அரசியல் ஆசையின் காரணமாகத் தனது ரசிகர் மன்றங்களை, 'மக்கள் இயக்கம்' என மாற்றினார். இதற்கிடையில் டெல்லி சென்ற விஜய் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

மேலும் தனது அரசியல் ஆர்வத்தை ராகுல் காந்தியிடம் தெரிவித்ததாகவும், காங்கிரஸ் கட்சியில் சேருகிற தனது விருப்பத்தைத் தெரிவித்ததோடு, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் தலைவராகத் தன்னை நியமிக்கும் படியும் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. இதற்கு ராகுல் காந்தி தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்துப் பதில் சொல்வதாகத் தெரிவித்துள்ளாராம்.

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவுடன் தனது ரசிகர் மன்றங்களையும், மக்கள் இயக்கத்தையும் காங்கிஸ் கட்சியில் இணைக்க முடிவு செய்துள்ளாராம் விஜய்.

இதைப் பற்றி நடிகர் விஜய் பேசாத நிலையில் அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இதைப் பற்றிக் கூறுகையில் "விஜய் - ராகுல் காந்தி சந்திப்பு நடந்தது உண்மைதான்; நீண்ட நேரம் இரண்டு பேரும் உரையாடியுள்ளனர். ஆனால் என்ன பேசினார்கள் என்று இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது" என்றார்.

இதைப் பற்றிச் செய்தியாளர்கள் கேட்டதற்கு “அவர் வந்தால் எங்களுக்குப் பெரிய சந்தோஷம்” என்று பதில் அளித்திருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.

இதையெல்லம் வைத்துப் பார்க்கும் போது, இன்னும் சில தினங்களில் திரைப்படத் துறையில் இளைய தளபதியாக இருந்த விஜய், காங்கிரஸ் கட்சியின் தளபதியாக மகுடம் சூட்டிக்கொள்வார் போலிருக்கிறது.

'ஜகன் மோகினி' படத்திற்காக 40 நிமிடத்திற்கு 2 கோடி செலவு

ஜெயமாலினி நடிப்பில் 1978ஆம் ஆண்டு வெளியான மாயா ஜாலத் திரைப்படம் 'ஜகன் மோகினி' படத்தை, 31 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தயாரித்து வருகின்றனர்.

இதில் நமீதா ஜெயமாலினி கதாபாத்திரத்திலும், நிலா இளவரசியாகவும் நடிக்கிறார்; கதாநாயகனாக தெலுங்கு நடிகர் ராஜா நடிக்கிறார். இப்படத்திற்க்காக 100 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறதாம். அதில் நமீதா இடம் பெறும் காட்சிகள் மட்டும் 70 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதாம்.

பழைய 'ஜகன் மோகினி' படத்தின் கருவை மட்டும் எடுத்துக்கொண்டு, இக்காலக்கட்டத்திற்கு தகுந்தாற் போல் உருவாக்கியிருக்கும் 'ஜகன் மோகினி'யில். 40 நிமிடங்கள் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகின்றனவாம். இதற்காக 2 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாம். படத்தில் இடம் பெறும் கதாபாத்திரங்களின் உடை அலங்காரத்திற்கு மட்டும் 50 லட்சம் ரூபாய் செலவு என்கிறார்கள். இப்படம் 10 கோடி ரூபாயில் தயாராகியுள்ளது.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ முன்வந்த நடிகர் விஷால்!

கருப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் இனி அந்தக் கொடிய நோயை மூன்றே ஊசிகளில் குணமாக்கிக் கொள்ள முடியும் என ஹீலியாஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. அத்தகைய சிகிச்சை பெறும் பெண்களுக்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக்கொள்ள நடிகர் விஷால் முன்வந்துள்ளார்.

சென்னை, வேளச்சேரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஹீலியாஸ் மருத்துவமனை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக டாக்டர் மஞ்சுளா தேவியும் தலைவராக டாக்டர் நந்தகுமாரும் பொறுப்பேற்றுள்ளனர்.

விழாவின் சிறப்பு விருந்தினர்களாக சன் நெட்வொர்க் துணைத் தலைவர் ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, இயக்குநர் பி வாசு, நடிகர் விஷால், நடிகை ஷோபனா, அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மனைவி மணிமேகலை தங்கம் தென்னரசு மற்றும் காவல்துறை கூடுதல் ஆணையர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷால் பேசுகையில், "என்னுடைய குடும்ப நண்பர்கள்தான் இந்த மருத்துவமனையை ஆரம்பித்துள்ளனர். படப்பிடிப்பில் எனக்கு எக்கச்சக்கமாக அடிபட்டிருக்கிறது. எனக்கு அடிபட்டால், என்னுடைய டிரைவர், நேராக இவர்களிடம் தூக்கிக்கொண்டு வந்துவிடுவார். என் உடம்பு முழுக்க 25 இடங்களில் தையல் போடப்பட்டுள்ளது. அத்தனையும் டாக்டர் நந்தகுமார் போட்டதுதான்" என்றார்

மேலும், "பெண்கள் பெரிதும் பாதிக்கப்படும் கருப்பை வாய் புற்று நோயை மூன்றே ஊசிகளில் குணப்படுத்தி விடுவதாக ஹீலியாஸ் மருத்துவமனையினர் அறிவித்துள்ளனர். இந்த நோயால் பாதிக்கப்படும் ஏழைப் பெண்கள் இந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றால் அதற்கான செலவை நானே ஏற்றுக்கொள்கிறேன்" என்று நடிகர் விஷால் தெரிவித்தார். இந்த ஊசியை ஒரு முறை போட்டுக்கொண்டால் பின்னர் வாழ்நாள் முழுக்க கருப்பைப் புற்றுநோய் தாக்காது, பக்க விளைவுகளும் கிடையாது என ஹீலியாஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.

ராகுல்காந்தியுடன் நடிகர் விஜய் சந்திப்பு

நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை, விஜய் டெல்லியில் திடீரென சந்தித்து பேசயுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை துவங்கி சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் ஏழை மாணவ- மாணவிகளுக்காக இலவச கம்ப்யூட்டர் மையங்களையும் துவங்கி வருகிறார். விரைவில் அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் ராகுல்காந்தியை டெல்லியில் திடீரென்று சந்தித்து பேசி உள்ளார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் நீண்ட நேரம் பேசியுள்ளனர்.

இந்த சந்திப்பு பற்றி பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. விஜய்யை காங்கிரசில் சேரும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. காங்கிரசில் சேரும்பட்சத்தில் அவருக்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி தரப்படும் என்று ராகுல் உறுதிமொழி அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தனிக் கட்சி துவங்குவதானால் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் அப்போது கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழக காங்கிரசை வலுப்படுத்த ராகுல்காந்தி, அக்கறை காட்டுகிறார். 37 வருடங்களாக இங்கு காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியவில்லை. கோஷ்டி சண்டைகளால் கட்சி பலவீனமுற்று உள்ளது. காங்கிரசை தமிழகத்தில் பலமான கட்சியாக மாற்றி காட்டுவேன் என்று ராகுல் சமீபத்தில் சூளுரைத்தார்.

அதன் அடிப்படையில் தான் தமிழக இளைஞர் காங்கிரசுக்கு நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படுகின்றன. இதற்கான உறுப்பினர் சேர்ப்பு பணி மும்முரமாக நடக்கிறது. ராகுல்காந்தி நேரடி மேற்பார்வையில் இந்த தேர்தல் நடைபெறுவதால் தமிழக காங்கிரசின் முன்னணி தலைவர்கள் தங்களையும் இணைத்து கொண்டு உறுப்பினர் சேர்ப்பிலும் தேர்தல் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

பா.ஜ.க. தலைமைக்கு எதிராக கந்தூரி போர்க்கொடி

பாரதிய ஜனதா கட்சியின் தலைமைக்கு எதிராக, அக்கட்சியின் பல்வேறு தலைவர்களும் குரல் கொடுத்து வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவருமான கந்தூரியும் தற்போது போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

இதுதொடர்பாக, கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாடாளுமன்ற தோதலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டதற்காக என்னை பதவி நீக்கம் செய்தது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"மொத்தமுள்ள 35 எம்.எல்.ஏ.க்களில் 27 பேர் எனக்கு ஆதரவாக இருந்த நிலையில் என்னை பதவி நீக்கம் செய்தது, ஜனநாயகத்துக்கு எதிரானது" என்றும் அவர் குற்றம் சாற்றியுள்ளார். இது தொடர்பாக, தனக்கு விளக்கம் அளிக்க வேண்டும் கந்தூரி வலியுறுத்தியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக இருந்த கந்தூரி, நாடாளுமன்ற தேர்தலில் கட்சி தோல்வியடைந்த பின்னர் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிய ஜனதா தலைவர்களான வசுந்தரா ராஜே, அருண் ஜோரி, ஜஸ்வந்த் சிங் ஆகியோர் கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய நிலையில், தற்போது கந்தூரியும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது கட்சி வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வசுந்தரா 3நாளில் பதவி விலக உத்தரவு

ராஜஸ்தான் மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து இன்னும் 3 நாளில் விலகுமாறு வசுந்தர ராஜேவுக்கு பாரதிய ஜனதா கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்தது. தேர்தல் தோல்விக்கு காரணம் காட்டி, கட்சியின் மூத்த தலைவர்கள் களை எடுக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கட்சித் தலைமைக்கு எதிராக பலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இதுதொடர்பாக, ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜேவுக்கும், கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்குக்கும் இடையே மோதல் வெடித்தது. ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும்படி வசுந்தர ராஜேவுக்கு ராஜ்நாத் சிங் உத்த்ரவிட்டார்.

இதையடுத்து, டெல்லி சென்று ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசிய வசுந்தர ராஜே, பதவி விலக சம்மதம் தெரிவித்து 3 நிபந்தனைகளை விதித்தார். அந்த நிபந்தனைகள் இன்னும் ஏற்கப்படாத நிலையில், வசுந்தர ராஜே இன்னும் பதவி விலகவில்லை.

இந்நிலையில், இன்னும் 3 தினங்களுக்குள் ராஜஸ்தான் மாநில எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வசுந்தர ராஜேவுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

ர‌ஜி‌‌னி ர‌சிக‌ர்களை சேர்க்க வேண்டும்

''காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த ரஜினி ரசிகர்களை இளைஞர் காங்கிரசில் சேர்க்க வேண்டும்'' என்று அகில இந்திய காங்கிரஸ் க‌ட்‌சி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கும் முகாம் தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் இன்று (ஆகஸ்ட் 26) நடைபெற்றது. முகாமை தொடங்கி வைத்து கார்த்தி ப.சிதம்பரம் பேசுகை‌யி‌ல் கூறியதாவது:

"அரசியல் மீது நடுத்தர மக்களுக்கு வெறுப்பு ஏ‌ற்படுவ‌த‌ற்கு பல காரணங்கள் உள்ளன. திரைப்படங்களில் அரசியலை தரக்குறைவாக காட்டுவதும், சில அரசியல்வாதிகள் நடந்துகொள்ளும் முறையும் இதற்கு காரணங்களாகின்றன.

பொதுவாக நகரத்தில் உள்ள நடுத்தர மக்களிடம் அரசியல்வாதிகள் மீதும், அரசியல் கட்சிகள் மீதும் நம்பிக்கை குறைந்துவிட்டது. நல்லவர்கள், படித்தவர்கள், பண்பாளர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும். கட்சியில் சேர்ந்தவர்கள் எல்லாம் 25 ஆண்டுகள் ஆகியும் எந்த பலனும் இல்லாமல் இருக்கிறார்கள். அதனால் அரசியலுக்கு வந்து என்ன ஆகப் போகிறது என்று சிலர் நினைக்கலாம். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில்தான் ராகுல் காந்தி இளைஞர் காங்கிரஸ் தேர்தலை கொண்டு வந்துள்ளார்.

இந்த தேர்தல் உண்மையாக நடக்கக்கூடிய தேர்தல். முன்பெல்லாம் புதிய உறுப்பினர் சேர்ப்பு என்றால், வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை எழுதி இத்தனை லட்சம் உறுப்பினர்கள் சேர்த்துள்ளோம் என்று கணக்கு காட்டுவார்கள். ஆனால் தற்போது இளைஞர் காங்கிரஸ் புதிய உறுப்பினர் படிவத்தில் புகை‌ப்பட‌ம் இணைப்பதோடு தனது வயது சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவைகளையும் இணைக்க வேண்டும்.

புதிய உறுப்பினர்களை சேர்க்கும் போது காங்கிரசாரை மட்டுமல்லாமல், மற்றவர்களையும், திரைப்பட நடிகர்களின் ரசிகர்களையும், நற்பணி மன்றத்தினரையும் இணைக்க வேண்டும். குறிப்பாக ர‌ஜினி ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சி ஆரம்பிக்காத திரையுலக ரசிகர்களையும் காங்கிரசில் நாம் இணைக்க வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்த் காங்கிரஸ் கட்சி மீது அதிக பற்று கொண்டவர். அவர் த.மா.கா.வுக்கு ஆதரவு தந்தவர். அவருடைய ரசிகர்கள் தீவிரமாக சமுதாய பணியாற்றுபவர்கள். அதனால் ரஜினி ரசிகர்களை நாம் கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். ஒரு கட்சியில் உறுப்பினராக இருப்பவர்களைத்தான் மற்ற கட்சியில் உறுப்பினராக சேர்க்கக் கூடாது. ஆனால் ரசிகர் மன்றத்தில் இருப்பவர்களை கட்சியில் சேர்க்கலாம். அதில் எந்த தவறும் இல்லை.

பொதுத்தேர்தலில் நாம் வீடு வீடாக சென்று எவ்வாறு வாக்கு சேரிக்கிறமோ, அதேபோல் வீடு வீடாக சென்று ஆண்கள் மட்டுமல்லாமல், பெண்களையும் இளைஞர் காங்கிரசில் சேர்க்க வேண்டும். வருங்காலத்தில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் பேச்சை அரசு நிர்வாகம் கேட்கும் நிலை வரும். ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்துங்கள். வரும் காலத்தில் பிரதான கட்சியாக காங்கிரஸ் கட்சி செயல்படும்" எ‌ன்று கா‌ர்‌த்‌தி‌ ‌சித‌ம்பர‌ம் பே‌சினா‌ர்.

நிர்வாணப்படுத்தி தமிழர்களை சுட்டுக்கொன்ற வீடியோ காட்சி

தமிழர்களை நிர்வாணப்படுத்தி, கண்களையும் கைகளையும் கட்டிப் போட்டுவிட்டு, சிங்களப் படையினர் தமிழர்களை சுட்டுக்கொல்லும் வீடியோ காட்சிகளை 'சேனல் -4' என்ற பிரிட்டன் செய்திச் சேவை தொலைக்காட்சி அம்பலப்படுத்தி உள்ளது.

இந்த வீடியோ காட்சியில், தமிழர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் கீழே உட்காரவைத்தும், படுக்கவும் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு தமிழரை தனது பூட்ஸ் காலால் தோளில் உதைத்து சிங்கள சிப்பாய் உட்கார வைக்கிறான். பிறகு அவருடைய தலையில் சுட்டு கொல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் தலையில் இருந்து ரத்தம் வெளியேறி தரையை நனைக்கிறது. இப்படி சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கும் 8 பேரின் உடல்கள் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட இனப் படுகொலைக்கு இந்த வீடியோ அத்தாட்சியாகும்.

'ஆதவன்' படத்தில் 10 வயது சிறுவனாக நடித்த சூர்யா: கே.எஸ்.ரவிகுமார் பெருமிதம்

உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் மூலம் சூர்யாவை நாயகனாக வைத்துத் தயாரித்திருக்கும் படம், 'ஆதவன்'. இப்படத்தின் இசை மற்றும் படத்தின் முன்னோட்டம் 2009, ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று சென்னையில் வெளியிடப்பட்டது.

தற்போது தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் நாயகனாக இருக்கும் சூர்யா, நயன்தாரா, வடிவேலு மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்திற்கு ரமேஷ் கண்ணா கதை எழுத , திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். படத்தின் பாடல்களைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம.நாராயணன் வெளியிட, இயக்குநர் ஷஙகர் பெற்றுக்கொண்டார். படத்தின் முன்னோட்டத்தைத் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி வெளியிட, நடிகர் விஜய் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் இயக்குநர்கள் அமிர்தம், கெளதம் மேனன், ஹரி, தரணி, கே.வி.ஆனந்த், சசிகுமார், தயாரிப்பாளர் அமிராமி ராமநாதன், நடிகர் விவேக் ஆகியோர் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அத்தனை பேரும் சூர்யாவின் முன்னேற்றத்தையும் அவர் தற்போது நடித்து வரும் படங்களின் வெற்றிகளைப் பற்றியும் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், இதுவரை உலக சினிமா வரலாற்றில் செய்யாத ஒரு விசயமாக சூர்யாவை பத்து வயது சிறுவனாக நடிக்க வைத்திருக்கின்றேன் என்றார். மேலும் படத்தில் 20 நிமிடங்கள் வரும் இக்காட்சிக்காக ஹாலிவுட்டில் விசாரித்ததில் இதைச் செய்ய 15 கோடி வரை செலவாகும் என்றிருக்கிறார்கள். பிறகு அதைக் கைவிட நினைத்த இயக்குநர் எப்படியோ தன் முயற்சியினாலும் சூர்யாவின் உழைப்பாலும் செய்து முடித்திருக்கிறாராம். இக்காட்சிக்காக சூர்யா காட்டிய ஈடுபாடு என்னை மெய் சிலிர்க்க வைத்தது என்று கூறிய கே.எஸ்.ரவிகுமார் இது ஒரு புது முயற்சி என்றும் இதை ஹாலிவுட் படங்களில் கூட இதுவரை செய்ததில்லை என்றும் கூறினார்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இதுவரை எந்தப் படத்திற்கும் நான்கு மாதங்களில் படத்தின் முழுப் பாடல்களையும் முடித்ததில்லையாம். முதல் முறையாக 'ஆதவன்' படத்திற்காகத்தான் குறுகிய காலக்கட்டத்தில் அனைத்துப் பாடல்களையும் முடித்திருக்கிறாராம். இதற்குக் காரணம் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரும், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினும் தான் என்று கூறிய ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு சிறந்த தயாரிப்பாளர் என்றார்.

'அழகர் மலை' - திரை விமர்சனம்

தமிழ் சினிமாவின் அன்றாட வாடிக்கையில் ஒன்றான அண்ணன் தம்பி பாசத்தை, அலுப்புத் தட்டாத வகையில் சொல்லியிருக்கும் படம் 'அழகர் மலை'.

பாசமிக்க அண்ணன் நெப்போலியனுக்கு அடிதடி, குடி, என ஊர் சுற்றி வரும் தம்பியாக ஆர்.கே. அடாவடியான அண்ணனான லாலுக்கு அடங்காபிடாரியான தங்கை என இரண்டு குடும்பங்களுக்கும் இடையே நடக்கும் மோதல் தான் படத்தின் ஆரம்பம்.

இப்படிப்பட்ட பாசமுள்ள அண்ணன்களான நெப்போலியனும் லாலும் எப்போதும் காவி வேட்டி கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஏன் என்பது தான் இயக்குநர் மறைத்து வைத்திருக்கும் மையக் கரு. குடி, அடிதடி எனச் சுற்றி வரும் தன் தம்பிக்குத் திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவான் என்று ஆர்.கே.வுக்குப் பெண் பார்க்கிறார் நெப்போலியன். நெப்போலியனிடம் வேலை பார்ப்பவரே ஆர்.கே.விற்குப் பெண் கொடுக்க மறுக்கிறார். அந்த அளவிற்கு நல்ல பெயர் எடுத்திருக்கும் ஆர்.கே.விற்கும் பானுவுக்கும் காதல் வருகிறது. பெற்றோர்களின் சம்மதமும் கிடைக்கிறது.

ஆர்.கே., பானுவிற்குத் திருமணம் நடக்கும் சமயத்தில், லாலின் தங்கை திருமணத்தை தடுத்து நிறுத்த முயலும் சமயத்தில் ஆத்திரம் அடையும் நெப்போலியனின் வேலைக்காரரான மணிவண்ணன், இரண்டு காவி வேட்டிகளின் கதையைத் திருமண மண்டபத்தில் உள்ள ஊர் மக்களிடம் அவிழ்த்து விடுகிறார்.

இதைக் கேட்ட லாலின் தங்கை, அவமானம் தாங்க முடியாமல் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொள்கிறார். இந்தச் சம்பவத்தை அறிந்தவுடன் இந்த ரகசியத்தைத் தெரிந்தவர்கள் யாரும் உயிருடன் இருக்கக் கூடாது என்று அரிவாளுடன் கிளம்பும் லால் யார் யாரை வெட்டிச் சாய்த்தார், மணிவண்ணன் கூறிய ஃபிளாஷ் பேக் என்ன என்பது தான் படத்தின் முடிவு.

ஆர்.கே. சண்டைக் காட்சிகள், நடனம், நகைச்சுவைக் காட்சிகள்... எனத் தன் இரண்டாவது படத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெற்றிருக்கிறார். வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் 'நச்'சென்று தன் பங்கிற்கு முக பாவங்களையும், டைமிங்கையும் வெளிப்படுத்தி இருக்கிறார் ஆர்.கே. பார்த்ததும் காதல், டூயட் எனப் பானு, ஆர்.கே பகுதி, ஓர் இனிய அத்தியாயம்.

வடிவேலுவின் வெடிகுண்டு காமெடியில் திரையரங்கே சிரிப்புச் சத்ததால் சிதறுகிறது. வடிவேலுவும் ஆர்.கே.வும் டீக் கடை பென்ச்சில் தண்ணி அடிப்பதும் அதே டீக் கடையில் மது அருந்துபவரைத் தனது ஒரே வார்த்தையால் ஆர்.கே. திருத்துவதும் ரசிகர்கள் சிரித்துச் சிரித்து வயிற்று வலியால் மருத்துவரிடம் செல்லாமல் இருந்தால் சரி.

நெப்போலியன், ஆர்.கே.வின் அண்ணன் என்ற கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தன் தம்பிக்காக ஊர் மக்களிடம் மன்னிப்பு கேட்பது, அதே சமயம் லாலைப் புரட்டி எடுப்பது என ஆர்.கே.வின் அண்ணன் என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுதிருக்கிறார்.

இசைஞானி தனது 'கருகுமணி... கருகுமணி...' என்ற பாடலை முணுமுணுக்க வைப்பதோடு. படத்தின் தலைப்புப் பாடலில் தோன்றியும் இருக்கிறார்.

'அழகர் மலை' ஏற ஏறக் கால் வலிக்கிறதோ இல்லையோ, சிரிக்கச் சிரிக்க வயிறு வலிக்கும்.


நாடோ டிகள் - திரைவிமர்சனம்

சென்னை, ஜுலை 03 இயக்குனர் சமுத்திரக்கனி தனது 18 வருட போராட்டத்திற்கு பிறகு வெற்றிப்பட இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார். அரசாங்க வேலை கிடைத்தால் போதும் மாமா பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கவர்மென்ட் வேலையை தேடிக்கொண்டிருப்பவர் சசிகுமார். பாங்க் லோன் கிடைத்தவுடன் கம்ப்யூட்டர் சென்டர் வைத்து செட்டிலாகிவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருப்பவர் விஜய். பாஸ்போர்ட் கிடைத்தால் போதும் வெளிநாட்டிற்கு பறந்துவிடலாம் என்று பாஸ்போர்டிற்காக அலைந்து கொண்டிருப்பவர் பரணி. இவர்கள் மூன்று பேரும் இணைபிரியா நண்பர்கள்.

ஜாலியாக போகும் இவர்களின் வாழ்க்கையில் வருகிறார் சரவணன். இவர் சசிகுமாரின் நண்பர், அதனால் மற்ற இருவருக்கும் நண்பனாகிறார். (இதை தான் என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் என்கிறார் இயக்குனர்) சரவணன் திடீரென்று ஒருநாள் தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறார். என்ன காரணம் என்றால், தனது காதலியை தன்னிடமிருந்து பிரித்துவிட்டார்கள் என்கிறார். தன் நண்பனின் காதலியை அவருடன் சேர்த்து வைப்பதற்காக மூன்று நண்பர்களும் புறப்படுகிறார்கள். இப்பிரச்சினையில் சசிகுமார் தனது கண் பறிபோகும் அளவிற்கு காயம் அடைவதுடன், தனது மாமா பெண்ணையும் இழக்கிறார். விஜய் தனது காலையும், பரணி இரண்டு காதுகளும் கேளாத செவிடனாகிறார். இவ்வாறு நண்பனின் காதலுக்காக தங்களது வாழ்க்கையில் பெரிய இழப்பை பெறுகின்றனர்.

இவ்வாறு சேர்த்து வைத்த காதலர்கள் பிரிந்துவிடுகின்றனர். இதை அறிந்த மூவரும் மறுபடியும் கிளம்புகிறார்கள். அவ்வாறு புறப்பட்டவர்கள் காதலர்களை என்ன செய்கிறார்கள் என்பது தான் இறுதி காட்சி.

சசிகுமார் தனக்கு எந்த கதாபாத்திரம் பொருந்தும் என்பதில் தெளிவாக இருக்கிறார். இப்படத்தில் நடனமாடுவது, காதல், காமெடி செய்வது என தனது முதல் படத்திலிருந்து ஒரு படி மேலே சென்றிருக்கிறார்.

விஜய் தனது அப்பாவுடன் சேர்ந்து செய்யும் காதல் லூட்டி, அவரின் கதாபாத்திரத்திற்கு அதுவே ரொம்ப பியூட்டி. இருந்தாலும் சில காட்சிகளில் அவரின் தந்தையாக நடித்தவா மேலோங்கி நிற்கிறார்.

கல்லூரி படத்தில் பரணி, இதில் காமெடியில் கலைகட்டியிருக்கிறார். படத்தின் முதல் பாதியில் கவலை மறந்து காமெடி செய்வதிலிருந்து, இறுதி காட்சியில் அவரின் கோபத்தை வெளிப்படுத்துவது வரை நடிப்பில் கல்லூரியை பாஸ் பண்ணிவிட்டார்.

தன் தங்கை காதலை தெரிந்தும், தெரியாததுபோல் இருக்கும் சசிகுமாரின் கதாபாத்திரத்தைப் போல தன் காதலிக்கு அண்ணன் இல்லையே என்று காதலர்களை ஏங்கச் செய்திருக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி.

அனன்யா, அபிநயா என்ற இரண்டு நாயகிகளும் தனது அளவான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள். வாய் பேசாத, காதுகேட்காத அபிநயாவை நடிக்கவைத்த இயக்குனருக்கு ஒரு ஓ........ போடலாம்.

சுந்தர் சி பாபு-வின் இசையில் சம்போ..... பாடல் காட்சிகளுக்கு விறுவிறுப்பு கொடுப்பதுடன், ரசிகர்களுக்கும் உற்சாகம் கொடுத்திருக்கிறது.

எஸ் ஆர் கதிர் தனது கேமராக்கு கால்கள் பொருத்தி காட்சிகளுடன் ஓடவிட்டிருக்கிறார்.

சின்னமணி கதாபாத்திரத்தில் வரும் நமோநாராயணன் எந்த பெரிய டயலாக்கும் பேசாமல், சிரிக்க மறந்தவர்களைக் கூட சிரிக்க வைத்திருக்கிறார். கஞ்சா கருப்பு சைலன்டான தனது வசனங்களில், ரசிகர்களின் வயலன்டான கைத்தட்டலைப் பெறுகிறார்.

இயக்குனர் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பக்காவாக கையாண்டு பாராட்டுப் பெறுகிறார். படத்தின் கிளைமாக்ஸை கொஞ்சம் இழுத்திருக்கிறார். (சின்னத்திரையின் பாதிப்போ) இருந்தாலும் இயக்குனரின் முடிவு எதார்த்தமானது.

தேசிய விருது வாங்கும் அளவிற்கு சிறந்த படம் இல்லை என்றாலும், ரசிகர்களின் பணத்திற்கு பெரிய திருப்தியை கொடுத்திருக்கிறார்கள் இந்த நாடோ டிகள்.

'வாமனன்' திரைவிமர்சனம்

சென்னை, ஜுலை 14, நடிகர் ஜெய் முதன் முறையாக தனித்து ஹீரோவாக நடித்திருக்கும் படம் 'வாமனன்'.

மாடல் லஷ்மிராய் நீச்சல் உடையில் வலம் வருவதை படம் பிடித்துக் கொண்டிருக்கும் கேமரா பொருந்திய ஹெலிகாப்டர் பழுதடைவதால் தனது கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மாட்டிக் கொள்கிறது. அதன் அருகே முதல்வராக பதவியேற்கவிருக்கும் டெல்லிகணேஷை சம்பத் கொலை செய்கிறார். இந்த காட்சி கேமராவில் பதவி செய்யப்படுகிறது. அந்த வீடியோ டேப் லஷ்மிராய் மற்றும் அவருடைய நண்பரிடம் அறிந்த சம்பத்தின் ஆட்களும், போலீசும் துரத்துகின்றன.

லஷ்மிராயும், அவரது நண்பரும் கொலை செய்யப்படுகின்றனர். இதற்கிடையில் பெரிய நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வரும் ஜெய், இந்த கொலை வழக்கில் மாட்டிக் கொள்கிறார். போலீஸ் ஜெய்-ஐ துரத்த ஓடி..... ஓடி........ ஓய்ந்து போன நிலையில், தம்மை இக்கொலை வழக்கில் திட்டமிட்டு சிக்கவைத்துள்ளார்கள் என்பதை அறிந்து, அவற்றிலிருந்து எப்படி விடுபடுகிறார் என்பது தான் கதை.

கதை ஆரம்பிதிலிருந்தே லஷ்மிராயை சுற்றித்தான் நடக்கிறது. ஜெய் பாட்டின் மூலம் அறிமுகமாகி சுற்றிக் கொண்டிருக்கிறார். ஜெய்-ஐ கதைக்குள் கொண்டுவர இயக்குனர் பயன்படுத்தி ரகுமான் கதாபாத்திரம் படத்திற்கு ப்ளஸ்ஸாக இருந்தாலும், தாமதமாக செய்ததினால் அதை பொறுத்துக் கொள்ளும் மனநிலையில் மக்கள் இல்லை. அதுவரை ஆர்டியன்ஸை காமெடி காட்சிகளில் கவர் பண்ணலாம் என்று நினைத்த இயக்குனருக்கு தோல்வி தான். சந்தானம் ஜெய் முதல் பாதியில் காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்கள். அதனுடைய பயன் சந்தானம் ஊர்வசியுடன் சேர்ந்து சமையல் செய்யும் காட்சியில் மட்டும் தான் கிடைக்கிறது.

ஜெய் தனது இரண்டு படங்களிலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியவர். இப்படத்தில் தனக்கென்று ஒரு ஸ்டைலை கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார். ஆனால் பாவம் நடிகர் விஜய்-யையே அவரது நடிப்பு ஞாபகப்படுத்துகிறது.

லஷ்மிராய் முதல் காட்சியிலேயே பிகினி நீச்சல் உடையில் தோன்றி ஆர்டியன்ஸை நிமிரச் செய்ய வைக்கிறார். தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துவிட்டு இறந்துவிடுகிறார்.

புதுமுகம் ப்ரியா, தனக்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லை, ஜெய்க்கும் தனக்கும் தான் சம்பந்தம் என்பது போல இரண்டு பாடல்கள் ஜெய்யுடன் நடப்பது என சில காட்சிகளில் தோன்றுகிறார்.

ஊர்வசி எப்பவும் போல வெகுளித்தனமான அம்மாவாக வந்து வெறுப்பேற்றுகிறார். சந்தானம் தலைவாசல் விஜய், ரோகினி என நடிகர் பட்டாளம் ஒருபுறம் இருக்க, ரகுமானின் என்ட்ரி படத்தில் கொஞ்சம் விறுவிறுப்பை சேர்க்கிறது. ரகுமான் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ப கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

யுவன்சங்கர் ராஜா அண்மையில் வெளிவந்த தமது படங்களைக் காட்டிலும், பரவாயில்லை என்னும் அளவிற்கு இப்படத்தில் மெட்டுக்கள் போட்டிருக்கிறார். பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது தெரிகிறது. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு பலம். டாப் ஆங்கில் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் உழைப்பு தெரிகிறது.

இயக்குனர் அகமது, வாமனனை படத்தின் இடைவேளைக்கு பின்புதான் காண்பிக்கிறார். அதுவரை காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். பீகார் கடத்தில் கும்பலை மாட்டிவிட்டு, ஜெய் தப்பிப்பது நாயகிக்கு பிறந்தநாள் பரிசாக கொடுக்கும் மணல் ஓவியம் போன்றவை இயக்குனரின் அனுபவத்தை காட்டுகிறது. ரகுமானின் கதாபாத்திரத்தில் உள்ள விறுவிறுப்பு போன்றவை படத்தின் காட்சிகளில் இல்லாமல் போயிற்று.

ஜெய் தாம் நடிக்கும் படங்களிலேயே வாமனன் தான் 100 நாட்களை தாண்டும் என்ற நம்பிக்கை வைத்திருந்தார். வாமனன் அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டது.

மோதி விளையாடு - திரை விமர்சனம்

சென்னை, ஜுலை 28, திரைக்கதையில் எவ்வித மோதலும் இல்லாமல் விளையாடி, ஆற்று நீரைப் போல பளிச்சென்று ஒரு படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சரண்.

ராஜன் வாசுதேவ் (கலாபவன் மணி), உலக பணக்காரர்களில் ஒருவர்; லண்டனில் வீடு, இந்தியாவில் தொழில் என உலகத்தையே சுற்றி வந்து கொண்டிருப்பவருக்குத் தொழில் ரீதியாக எதிரிகள் அதிகம். தன் எதிரிகளால் தன் மகன் உதய் வாசுதேவுக்கு (வினய்) எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்று தன் மகனுடன் பாதுகாப்பாளர் ஒருவரையும், தன் மகனின் பொழுது போக்கிற்காகத் தன்னால் அனாதை இல்லத்தில் இருந்து எடுத்து வளர்க்கப்பட்டு வரும் மதன் (யுவா) என்பவனையும் எப்போதும் தன் மகன் உடன் இருக்கச் செய்கிறார் கலாபவன் மணி.

அனாதையான மதன், ராஜன் வாசுதேவினால் வளர்க்கப்பட்டு வந்தாலும் ராஜன் வாசுதேவ் மகனான உதய் வாசுதேவிற்கு கொடுக்கப்படும் அனைத்து சலுகைகளுடனும் வாழ்ந்து வருகிறார். காதலிலும் அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது.

மதன், உதய் வாசுதேவ் இருவரும் ஒரே பெண்ணைக் காதலிக்கின்றனர். தாங்கள் காதலிக்கும் பெண் இருவரில் யாரைக் காதலிக்கிறாள் என்று அறிவதற்காக சம்பந்தப்பட்ட பெண்ணிடமே கேட்கச் செல்லும் நேரத்தில் ராஜன் வாசுதேவினால் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்ட நபர் ராஜன் வாசுதேவின் மகனான உதய் வாசுதேவைக் கொலை செய்ய முயல்கிறார். அந்தச் சம்பவத்தில் ராஜன் வாசுதேவினால் வளர்க்கப்பட்டு வரும் மதன் கொலை செய்யப்படுகிறார்.

தன் மகன் உயிர் பிழைத்ததை அறிந்து சந்தோஷப்படுவதைக் காட்டிலும் தன்னால் வளர்க்கப்பட்டு வரும் மதன் இறந்ததைக் கண்டு மிகவும் வருத்தம் அடைகிறார் ராஜன் வாசுதேவ். அது மட்டும் இன்றி ராஜன் வாசுதேவின் சொந்த மகனான உதய் வாசுதேவிடம் இருந்து அவன் வாழ்ந்து வந்த சுக போக வாழ்க்கை, பணம், வீடு, கார் என அத்தனையையும் பறித்துக்கொள்கிறார் ராஜன் வாசுதேவ்.

ஏன் அப்படி தன் மகனிடமே நடந்து கொள்கிறார்? அதற்கு என்ன காரணம்? அதை வினய் எவ்வாறு கண்டறிந்து தனது வாழ்க்கையை மீண்டும் பெறுகிறார் என்பதைப் பல திருப்பங்களோடு சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கும் படம், 'மோதி விளையாடு'.

சரண் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனது படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் சரண் படங்களுக்கென்று ஒரு தனி இடம் உண்டு. அந்த இடத்திலேயே இப்படமும் உள்ளது.

வினய் முதல் முறையாக தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசி இருக்கிறார். சில இடங்களில் குறையாக இருந்தாலும் படத்தில் வரும் வினயின் கதாபாத்திரத்திற்கு நிறைவாகவே உள்ளது. உலக பணக்காரரின் மகன் என்ற கதாபத்திரத்திற்கு ஏற்றவாறு இருக்கும் வினய், தன் தந்தையே தனக்கு வில்லன் எனத் தெரிந்ததும் அவருக்கு எதிராக வினை செய்யும் வில்லத்தனம் படத்திற்கு சுவாரஸ்யம்.

அழகான ராட்சஸி என்பது போல வந்து எல்லோருடைய உள்ளங்களையும் அள்ளிக்கொள்கிறார் எல்.ஆர்.ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் வரும் காஜல் அகர்வால். படத்தில் காஜல் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும் இவர் வரும்போதெல்லாம் கொண்டாட்டம் அடைகின்றனர் ரசிகர்கள்.

எப்போதும் போல தனது கோமாளித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி அறிமுகமாகும் கலாபவன் மணி, போகப் போகத் தன் கதாபாத்திரத்திற்குத் தேவையானது எது என்பதைப் புரிந்துகொண்டு அளவாக நடித்திருக்கிறார். நகைச்சுவைக்காக சந்தானம், எப்போதும் போல கதாநாயகனின் நண்பனாக வருகிறார். ஆனால் ரசிகர்களுக்குச் சிரிப்பு தான் வரவில்லை. அந்த வேலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று காமெடி களத்தில் புகுந்து கலாய்த்து இருக்கிறார்கள் வி.எம்.சி.ஹனிபாவும் மயில்சாமியும். வினய், ஹனிபா மற்றும் மயில் சாமி ஆகியோர் கூட்டணியில் வரும் ஒயின்ஷாப் காமெடி திரையரங்குகளில் காதைப் பிளக்கும் சிரிப்புச் சத்தத்தை ஏற்படுத்துகிறது.

ஹரிஹரன் மற்றும் லெஸ்லி இவர்களின் இசையில் 'வெள்ளைக்காரி...' என்ற பாடலும் 'பாதிக் காதல்...' என்ற பாடலும் முணுமுணுக்க வைக்கின்றன. தேவா, ஹரிஹரன், லெஸ்லி ஆகியோரின் குரலில் வரும் 'மோதி விளையாடு...' என்ற பாடல் வைரமுத்துவின் வைர வார்த்தைகளுக்குப் பட்டை தீட்டியது போல் உள்ளது. பின்னணி இசை, பெரிதாகச் சொல்லும் அளவிற்கு இல்லை.

படத்திற்கு இயக்குநர் சரண் ஒரு கண் என்றால் ஒளிப்பதிவாளர் கருண் ஒரு கண்; பளிச்சென்ற தன் படப்பிடிப்பின் மூலம் பந்தாவான பல காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்.

எஸ்.ராமகிருஷ்ணனின் கதைக்குக் கச்சிதமான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் சரண். நடிகையிடம் கவர்ச்சியைத் தவிர்த்து விட்டு, படத்தில் கவர்ச்சியைக் காண்பித்து ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் இயக்குநர் சரண்.

படத்தின் முதல் பாதியில் கலகலப்பாகவும் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாகவும் செல்லும் திரைக்கதை, வெற்றி என்னும் இடத்தில் போய் நிற்கிறது.

உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

தமிழ்த் திரையுலகினரைத் தற்போது பிரமிக்க வைக்கும் தயாரிப்பாளர், உதயநிதி ஸ்டாலின். இவரின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் பிரமாண்டமான தமிழ்ப் படங்களைத் தயாரித்து வருகிறார். இவர் தன் தாத்தா அரசியலில் அமைக்கும் வலுவான கூட்டணியைப் போல தான் தயாரித்து வரும் ஒவ்வொரு படத்திற்கும் மாபெரும் வெற்றிக் கூட்டணியை அமைத்து வருகிறார்.

விஜய், திரிஷா, நடிக்க, இயக்குநர் தரணி இயக்கத்தில், மிகப் பெரிய பொருட்செலவில் 'குருவி' யைத் தனது முதல் படமாகத் தயாரித்த உதயநிதி ஸ்டாலின், தற்போது தயாரித்து வரும் படம் 'ஆதவன்'. சூர்யா, நயன்தாரா நடிக்க, கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஏராளமான பொருட்செலவில் தயாராகும் இப்படத்தின் இசை, திரை முன்னோட்டம் ஆகியவை அண்மையில் வெளியாயின, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனச் சொல்லும் அளவிற்குப் படத்தின் பாடல்களும், திரை முன்னோட்டமும் படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துவிட்டன. தீபாவளியன்று இப்படம் வெளியாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் மூன்றாவது படத்தை இயக்கப் போகிறவர், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தனது 'கஜினி'யின் மூலம் தமிழ்த் திரையுலகத்தையும் தாண்டி, இந்தித் திரையுலகையும் தன் பக்கம் ஈர்த்தவர். இப்படத்திற்கு நாயகனும் சூர்யா தான். இசை ஹரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவு ரவி கே.சந்திரன் என முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களை ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்தின் தலைப்பு, நாயகி, மற்ற நடிகர்கள் ஆகியோர் இன்னும் முடிவாகவில்லையாம்.

'கஜினி' படத்திற்குப் பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசும், நடிகர் சூர்யாவும் இணையும் படம் என்பதாலும், படத்தைத் தயாரிப்பது உதயநிதி ஸ்டாலின் என்பதாலும் மாபெரும் வெற்றிப் படமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க

பன்றிக் காய்ச்சல் நோய் (எச்1 என்1 வைரஸ்) வராமல் தடுக்க சில யோசனைகளை மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:

* நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி கொண்ட சோப்பால் அடிக்கடி கைகளை கழுவுங்கள். குழாய் தண்ணீரில் குறைந்த பட்சம் 15 வினாடிகள் கைகளை அலசுங்கள்.

* இரவில் குறைந்த பட்சம் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும்.

* ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

* சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு தானிய வகைகள், பசுமையான காய்கறிகள், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுங்கள்.

* மது அருந்தினால் உடலில், பன்றி காய்ச்சல் நோய்க்கிருமி போன்ற வைரஸ் கிருமிகள் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதால், மது அருந்துவதை தவிர்த்து விடுங்கள்.

* மிதமான உடற்பயிற்சி உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் என்பதால், தினசரி 30 முதல் 40 நிமிடம் வேகமான நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருங்கள்.

* இருமுவதன் மூலமும், தும்முவதன் மூலமும் பன்றி காய்ச்சல் நோய்க்கிருமி ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதால், நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து விலகி இருங்கள். உடல் ரீதியாகவும் தொடர்பு வைத்துக் கொள்ளாதீர்கள்.

* இருமல், காய்ச்சல் இருந்தால் டாக்டரை சந்தித்து ஆலோசித்து, அவரது யோசனைகளின்படி மருந்து சாப்பிடுங்கள்.

* தேவை இல்லாமல் வெளியில் செல்வதையும், கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதையும் தவிருங்கள். கண்கள், மூக்கு, வாய் மூலம் நோய்க் கிருமிகள் உடலுக்குள் செல்லும் என்பதால் அவற்றை தொடுவதையும் தவிருங்கள்.

* பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க அவ்வப்போது அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை தெரிந்து கொண்டு, அதன்படி நடந்து கொள்ளுங்கள்.

தமிழில் 'யு', தெலுங்கில் 'யு/எ' - கந்தசாமியின் தணிக்கைச் சான்றிதழ்

பல அம்சங்களில் ரசிகர்களையும், திரைத் துறையினரையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருக்கும் 'கந்தசாமி', 2009, ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்திற்காக அண்மையில் தணிக்கைச் சான்றிதழ் வாங்குவதற்காக சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்ட படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், கந்தசாமிக்கு 'யு' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதே படம் தெலுங்கில் 'மல்லண்ணா' என்ற பெயரில் வெளியாக உள்ளது. மல்லண்ணாவுக்கு 'யு/ஏ' சான்றிதல் வழங்கப்பட்டுள்ளதாம்.

இதுவரை எந்தத் தமிழ்ப் படத்துக்கும் போடாத அளவுக்குத் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளுக்கும் சேர்த்து உலகம் முழுவதும் வெளியிட மொத்தம் 900 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளதாம். சென்னையில் மட்டும் முப்பது திரையரங்குகளில் வெளியாகும் 'கந்தசாமி' டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட சிறிது நேரத்திலே ஒரு வாரத்திற்கான டிக்கெட்டுகள் முன் பதிவு ஆகியுள்ளதாம்.

'ஈரம்' படத்தைப் பார்த்து அழுத இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட தமிழ்ப் படங்களைத் தயாரித்து வருகிறார். தற்போது இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் உருவான 'ஈரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில பேசியா ஷங்கர், இதுவரை எஸ் பிக்சர்ஸ் தயாரித்த படங்களில் இருந்து மிகவும் மாறுபட்ட ஒரு படமாக 'ஈரம்' இருக்கும். நல்ல படத்தைத் தயாரித்ததன் மூலம் திருப்தியும் சந்தோஷமும் அடைகிறேன் என்றார்.

மேலும் இப்படத்தைப் பார்த்த போது என்னையும் அறியாமல் சில இடங்களில் கை தட்டியிருக்கிறேன், அழுதும் இருக்கிறேன் என்ற ஷங்கர் 'ஈரம்' படத்தின் அறிவழகனைப் பாராட்டிய போது இயக்குநர் இப்படத்தின் அனைத்துத் துறைகளிலும் தனது ஈடுபாட்டைப் புகுத்தியிருப்பது படம் பார்த்த போதே உணரமுடிகிறது என்றும்,

திகில் படங்கள் என்றாலே ஹிட்ச்காக் படங்கள் தான் பிரபலம் அவருடைய படங்களில் தான் திகில் படமாக இருந்தாலும் அதில் ஆழமான கதையிருக்கும், 'ஈரம்' படத்தைப் பார்த்தபோது ஹிட்ச்காக் படத்தைப் பார்த்த அனுபவம் கிடைத்தது என்று கூறிய இயக்குநர் ஷங்கர், இப்படம் ரசிகர்களை மயக்கும் ஒரு படமாக அமையும் என்றும் தெரிவித்தார்.

'ஈரம்' படத்தின் இயக்குநர் அறிவழகன், திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவர் என்பதும், இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்', 'அந்நியன்' ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவேலுவா? விவேக்கா? 'குட்டி பிசாசு' படத்தில் யார்?

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம.நாராயணன் தற்போது இயக்கித் தயாரித்துக்கொண்டிருக்கும் 'குட்டி பிசாசு' என்ற தனது 113ஆவது படத்தில் சங்கீதா கதாநாயகியாகவும், நடன இயக்குநர் ராம்ஜி கதாநாயகனாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படத்தில் நாயகன், நாயகியை விட கார் ஒன்றுக்குத் தான் அதிகம் முக்கியத்துவம் உள்ளதாம். அந்தக் காரே படத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் கதாபாத்திரமாக இருந்தாலும் காமெடி என ஒன்று இருக்கிறதே, லட்டு இல்லாத திருப்பதியா? நகைச்சுவை இல்லாத தமிழ் சினிமாவா?

இராம.நாரயணன் எடுத்துக்கொண்டிருக்கும் படம், மந்திரக் காட்சிகள் நிறைந்த திகில் படமாக இருந்தாலும் நகைச்சுவையும் இப்படத்தில் உண்டு. தமிழ் சினிமாவின் தற்போது முன்னணியில் இருக்கும் நகைச்சுவை நடிகர்களான வடிவேல், விவேக் இவ்விருவரில் ஒருவர் கண்டிப்பாக 'குட்டி பிசாசு' படத்தில் நடிப்பார்களாம். ஆனால் அவர் யார் என்பது தான் இன்னும் முடிவாகவில்லையாம்.

யார் நடிக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்

சென்னை எல்டம்ஸ் சாலைக்கு நடிகர் கமல்ஹாசனின் பெயர்- சரத்குமார் கோரிக்கை

1959ஆம் ஆண்டில் 'களத்தூர் கண்ணம்மா' படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்த உலக நாயகன் கமல்ஹாசன், நடிப்புத் துறையில் தனது 50ஆம் ஆண்டினை நிறைவு செய்கிறார். இதனையொட்டி அவருக்குப் பிரமாண்ட விழா எடுக்க விஜய் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளது.

2009 செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் சென்னையில் நடக்கவிருக்கும் இவ்விழாவிற்கான அறிமுக விழா, 2009 ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குநர்கள் சேரன், மிஷ்கின், ஏ.ஆர்.முருகதாஸ், யூகி சேது, ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், நடிகை குஷ்பு, தயாரிப்பாளர் எஸ்.பி.பி சரண் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், நடிப்பால் சக கலைஞர்களையும் ஈர்த்தவர் நடிகர் கமல்ஹாசன், அவரை நான் எப்போது சந்தித்தாலும் உங்களுடன் சேர்ந்து படம் நடிக்க வேண்டும் என்று கேட்பேன். இப்போதும் அவர் தனக்கே உரிய சுறுசுறுப்புடன் பத்து வேடங்களில் தசாவதாரம் போன்று சாதித்து கொண்டுதான் இருக்கிறார். மேலும் பொன்விழா ஆண்டில் நடிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கும் அவருக்குக் கெளரவம் சேர்க்கும் விதத்தில் அவர் வசிக்கும் சென்னை எல்டாம்ஸ் சாலைக்கு டாக்டர் கமல்ஹாசன் சாலை என்று அரசு பெயர் சூட்ட வேண்டும். இதற்காக நடிகர் சங்க சார்பில் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைக்க இருக்கிறோம் என்றார்

'கச்சேரி ஆரம்பம்' படத்திற்காகச் சென்னையில் பர்மா பஜார் செட்

பல வெற்றி படங்களைத் தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி, தற்போது பல கோடி செலவில் பிரமாண்டமான முறையில் தயாரித்து வரும் படம் 'கச்சேரி ஆரம்பம்'. இதில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாகப் பூனம் பஜ்வா நடிக்கிறார்.

நடிகர் வடிவேலு முதல் முறையாக ஜீவாவுடன் இணைந்து நடிக்கும் இப்படத்தின் கதைப்படி, கிராமத்திலிருந்து வேலை தேடி வரும் ஜீவாவுக்கு சரியான வேலை கிடைக்காததால், பர்மா பஜாரில் கடை வைத்திருக்கும் வடிவேலுவிடம் வேலைக்குச் சேர்கிறார். அவர் அங்கு எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தான் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்றார், இதன் இயக்குநர் திரைவண்ணன்.

படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் காட்சிகளைப் பர்மா பஜாரிலே படம் பிடிக்க இயக்குநர் நினைத்திருக்கிறார். அங்கு படப்பிடிப்பு நடத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் அதிகமாக இருந்ததால் சென்னை பிலிம் சிட்டியில் 25 லட்சம் செலவில் பர்மா பஜார் போன்ற செட் போட்டு, இம்மாதம் 23ஆம் தேதி முதல் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

'சர்வம்' படத்தில் அமைதியான வில்லனாக நடித்துக் கலக்கிய பிரபல தெலுங்கு நடிகர் ஜெ.டி.சக்கரவர்த்தி, இப்படத்தில் வில்லனாக நடிக்க, டி.இமான் இசையமைக்கிறார்.

செளந்தர்யா ரஜினி படத்தில் விஜய்

'சுல்தான் தி வாரியர்' என்ற அனிமேஷன் படம், 'கோவா' என்ற தமிழ்ப் படம் ஆகியவற்றைத் தயாரித்து வரும் செளந்தர்யா ரஜினிகாந்த், மேலும் பல படங்களைத் தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இதற்கிடையில் அண்மையில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'சர்க்கஸ்' என்ற கன்னடப் படத்தைப் பார்த்த செளந்தர்யா, ஒரு பெரிய தொகையைக் கொடுத்து, அப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறாராம். கணேஷ் என்பவர் கதாநாயகனாக நடித்திருக்கும் 'சர்க்கஸ்' படத்திற்கு, எந்தக் கன்னடப் படத்திற்கும் செய்யாத செலவைச் செய்து எடுத்திருக்கிறார்களாம். இதனாலே இப்படத்தைப் பார்த்த செளந்தர்யா. இதைத் தமிழில் மிக பிரமாண்டமாக எடுக்க முடிவு செய்திருக்கிறாராம்.

'கோவா' படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ள செளந்தர்யா, இதில் விஜய் அல்லது தனுஷ் இருவரில் ஒருவரை நடிக்க வைக்க முயன்று வருகிறாராம்

இலங்கையின் வரலாறு

CXjÛL›Á YWXÖ¼½¥ J£ ˜efVUÖ] LÖXLyP• C‰.

TX BLºeh ˜ÁÚT ``R–² DZ•'' ÚLÖ¡eÛL, CXjÛL† R–ZŸL[Ö¥ GµTTyP‰. ``CXjÛL† R–ZŸL¸Á R‹ÛR'' GÁ¿• ``CXjÛL›Á LÖ‹‡'' GÁ¿• ÚTÖ¼\TyP ÙN¥YSÖVL•,

R–ZŸL¸Á E¡ÛUeLÖL AÛU‡VÖ] ˜Û\›¥ ÚTÖWÖz TÖŸ†RÖŸ. CXjÛL AWrLºPÁ TX JT‹RjL· ÙNš‰ ÙLցPÖŸ. TVÁ C¥ÛX. ÛLÙVµ†‡yP ÛU EX£YR¼h ˜Á JT‹RjLÛ[ f³†‰ ÚTÖyP]Ÿ, pjL[ BypVÖ[ŸL·.

G]ÚY, ``CXjÛL R–ZŸL· UÖ]†ÚRÖ YÖZ `rR‹‡W R–² DZ•'RÖÁ JÚW Y³'' GÁ¿ UÖSÖ iyz A½«†RÖŸ.

AYŸ C\TR¼h pX UÖRjLºeh ˜Á ÚTÖPTyP ˆŸUÖ]• C‰.

CXjÛL›Á YWXÖ¿

``R–ZŸL· Y›¼¿‘ÛZ“eLÖL CXjÛLeh ÚTÖ]YŸL·RÖÚ]! AYŸL· RÂSÖ ÚLyT‡¥ GÁ] ŒVÖV• C£ef\‰?'' GÁ¿ CÁ¿• TXŸ ÚLyf\ÖŸL·. AYŸL· CXjÛL›Á YWXÖ¼Û\ A½VÖRYŸL·.

CXjÛL›Á ”ŸY hzL· R–ZŸL·. CXjÛL›Á "U‚Á ÛU‹RŸL·.'' R–² UÁ]ŸL· TXŸ CXjÛLÛV Bz£ef\ÖŸL·. C‰ YWXÖ¼½¥ Œ¤‘eLTyP EÛU.

hU¡ ˜Û]eh ÙR¼ÚL E·[ C‹‰ ULÖ N˜†‡W• J£ LÖX†‡¥ ŒXTWTÖL C£‹R‰ GÁ¿•, A‰ ÙX™¡VÖ (hU¡eLP•) GÁ¿ AÛZeLTyP‰ GÁ¿• ÚU¥SÖy BWÖšopVÖ[ŸL· i¿f\ÖŸL·.

``ÙX™¡VÖ LP¦¥ ™²f «yP‰. AÚTÖ‰ R–²SÖyPÁ CXjÛL• Jyze ÙLցz£‹R‰. SÖ[ÛP«¥ R ˆYÖL ‘¡‹‰ «yP‰'' GÁT‰• BWÖšopVÖ[ŸL¸Á L‘z“. C‹‡VÖ°eh•, CXjÛLeh• CÛPÚV E·[ LP¥ BZ–Á½ C£TR¼h C‰RÖÁ LÖWQ•.

BRÖWjL·

‡£ÙS¥ÚY¦eh ÙRÁfZeÚL 15 ÛU¥ ŠW†‡¥ E·[ B‡oNS¥©¡¥, 1876-¥ ”–ÛV† ÚRցz SP†RTyP AL²YÖWÖšop›¥, TXYÛLVÖ] U TցPjL· fÛP†R]. AÛY sÛ[›¥ SÁ\ÖL ÚYL ÛYeLTy, S¥X ÙU£hPÁ LÖQTfÁ\]. C\‹RYŸL¸Á EP¥LÛ[ ÛY†‰ “ÛRTR¼LÖ] ``RÖ³''L· CÛY.

CÚRÚTÖÁ\ ``RÖ³''L·, CXjÛL›Á YPTh‡›¨• ”–eLz›¥ C£‹‰ ÚRցz GeLTy·[].

A‰UyU¥X, “WÖR] R–ZŸL· ETÚVÖf†R TX SÖQVjL·, AWN CXypÛ]L·, ˜RXÖ]ÛY CXjÛL›Á T¥ÚY¿ CPjL¸¥ ÚRցz GeLTy·[]. CXjÛL›Á ”ŸYhzL· R–ZŸL· GÁTR¼h C‰ÚY BRÖW• GÁ¿ BWÖšopVÖ[ŸL· ryzeLÖyf\ÖŸL·.

r£eLUÖLo ÙNÖÁ]Ö¥, TÛZV L¼LÖX†‡¨•, “‡V L¼LÖX†‡¨• R–²SÖyz¥ R–ZŸL· G†RÛLV SÛP- EÛP- TÖYÛ]PÁ YÖ²‹RÖŸLÚ[Ö, AÚR UÖ‡¡RÖÁ CXjÛL† R–ZŸLº• YÖ²‹‡£ef\ÖŸL·. C£Y£eh• `ÙR֐“· ÙLÖz' E\° C£‹‡£ef\‰.

YWXÖ¿ i¿Y‰ GÁ]?

CXjÛL›¥, “†RUR• TW°YR¼h ˜Á pY Y³TÖRÖÁ SP‹‰ Y‹‡£ef\‰. ”–›¥ C£‹‰ ÚRցz GeLTyP pYÁ pÛXLº•, S‹‡ pÛXLº• CÛR E¿‡T†‰fÁ\]. pYÛ] Y³TyPYŸL· R–ZŸL·RÖÁ; pjL[ŸL· A¥X.

f.˜. ™Á\Ö• ¼\ցL¸¥, YP C‹‡VÖ«¥ Byp “¡‹R U°¡V ÚTWWNÁ AÚNÖLÁ, L¦jL ÚTÖ¡Á ˜z«¥ T°†R UR†ÛR† Rµ«]ÖŸ. AYŸ “†R UR†ÛR TW“YR¼LÖL, Uf‹R ÚRÚW GÁ\ “†R UR h£ RÛXÛU›¥ J£ hµÛY CXjÛLeh AĐ‘]ÖŸ. Aehµ CXjÛLeh Y‹RÚTÖ‰, AÄWÖR“W†ÛR RÛXSLWUÖLe ÙLց BP R–² UÁ]Á ÙTVŸ ‡ÛNVÁ GÁ¿•, AÚNÖLÁ «£TTz AYÁ “†RUR†ÛR Rµ«]ÖÁ GÁ¿•, AYÄeh ``ÚRY S•‘'' GÁ\ TyP†ÛR AÚNÖLŸ YZjf]ÖŸ GÁ¿•, TÖ¦ ÙUÖ³›¥ GµRTyP YWXÖ¼¿ ¦¥ h½‘PTy·[‰. ‡ÛNVÁ C\‹R ‘\h, ÚN]Á, h†RÁ GÁ\ C£ R–² UÁ]ŸL· 22 Y£PjL·, AÄWÖR“W†‡¥ S¥XÖyp SP†‡]ÖŸL· GÁ¿ AÚR ¦¥ h½‘PTy·[‰.

™Á¿ WÖÇÈVjL·

B‡LÖX†‡¥, CXjÛL JÚW SÖPÖL C£‹R‰ C¥ÛX. TX AWNŸLº•, p¼\WNŸLº• h½‘yP Th‡LÛ[ B Y‹R]Ÿ.
IÚW֐‘VŸL· CXjÛLeh Y‹RÚTÖ‰, CXjÛL›¥ ™Á¿ WÖÇÈVjL· C£‹R]:

( 1 ) ÙRÁ ÚLÖz›¥, ÙLÖµ•“ Th‡ÛV E·[PefV ÚLÖyÛP WÖÇÈV•. C‹R ÚLÖyÛPÛV H¼T†‡VYÚ] AZheÚLÖÁ GÁ\ R–ZÁ.
( 2 ) Lz WÖÇÈV•.
( 3 ) VÖ²TÖQ WÖÇÈV•.

CY¼½¥ VÖ²TÖQ WÖÇÈV†ÛR GeLÖX†‡¨• pjL[ŸL· BP‰ C¥ÛX. ÚLÖyÛPÛV• LzÛV• R–ZŸLº•, pjL[ŸLº• UÖ½ UÖ½ B Y‹‡£ef\ÖŸL·.

TX WÖÇÈVjL[ÖL C£‹R C‹‡VÖÛY J£ hÛP›Á g² ÙLց Y‹R BjfÚXVŸL·, CXjÛLÛV• JÚW SÖPÖL UÖ¼½]ÖŸL·. pÚXÖÁ (CXjÛL) GÁ\ ÙTVÛW• syz]ÖŸL·.

ரமணிசந்திரன் படைப்புகள்

காக்கும் இமை நானுனக்கு

1

எப்போதும் போலவே அந்தப் பெரிய கடைக்குள் நுழையும் போது, நளினியின் மனதில் ஒரு பெருமிதம் எட்டிப் பார்த்தது.

'உன்னதம்.'

இந்தப் பெரிய பல்பொருள் அங்காடியில் அவள் வேலை செய்கிறாள்.

அகன்ற சலவைக் கல் படிக்கட்டுகளுடன் கம்பீரமாய் மூன்று மாடிக் கட்டடம். எத்தனை கோடி பெறுமோ?

படியேறும் போதே, ஓர் அரண்மனைக்குள் அடியெடுத்து வைக்கும் பிரமிப்பு.

எண்ணம் தொடரும் போதே, அவளது மனதுக்குள் நெருஞ்சியாய் உறுத்தலும் தொடங்கி விட்டது.

தோற்றத்தில் மட்டும் அந்தக் கட்டடம் அரண்மனையாக இருக்கவில்லை! உள்ளே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களும் அரண்மனைவாசிகளுக்கு ஏற்றவை தான். ஏன்? அவர்கள் மட்டும் தான் வாங்கக் கூடியவையும் கூட.

தரத்தால் மட்டும் அல்ல. விலையும் அப்படித்தான்.

துணிகளா? மீட்டர் எண்ணூறு ஆயிரம் எல்லாம் சர்வ சாதாரணம். ஐந்நூறுக்குக் குறைவாக ஒன்றுமே கிடையாது.

அதே போல, மரச் சாமான்கள் பகுதி ஒன்று உண்டு. சோஃபா செட் ஒரு லட்சம் என்பார்கள். என்ன? அங்கங்கே தந்தம் இழைத்திருக்கும்! நல்ல வைரம் பாய்ந்த தேக்காக இருக்கும்.

அசல் நவரத்தினங்கள் பதித்த நகைகள். வைரமிழைத்த கைக்கடிகாரங்கள். அவற்றிலும், செய்கூலியே ஆளைச் சாப்பிட்டுவிடும். கூலி எவ்வளவு, சேதாரம் எவ்வளவு என்று கணக்குப் பார்க்கிறவர்களால், இங்கே வாங்க முடியாது.

அதனாலேயே, சாதாரண மக்கள் இந்தக் கடையின் பக்கம் வருவதில்லை. அப்படியே வந்தாலும், இந்தப் பணக்காரச் சீமான்கள் வாங்கும் பொருட்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்று பார்த்துப் போவதற்காகத்தான். அதுவும் அபூர்வமாகத்தான். ஏனெனில், வாங்க இயலாத பொருட்களைப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விட எத்தனை பேருக்குப் பிடிக்கும்?

யாரும் அறியாமல் தட்டிக் கொண்டு போய்விடும் திட்டத்துடன் வருவோரும் உண்டு. ஆனால் அங்கங்கே சாதாரண உடையில் காவலுக்கு ஆட்கள் இருந்ததால், அது பலித்தது இல்லை. அன்றுவரை!

அந்தக் காலத்தில், பெரிய பெரிய பிரபுக்கள், வெள்ளைக்காரத் துரைகள், ராஜ குடும்பத்தினர், ஜமீந்தாரர்கள் போன்றோருக்கு ஏற்ற பொருட்களை, ஒரே இடத்தில் வாங்குவதற்கு வசதி செய்யும் பொருட்டுச் சில மாதங்களுக்கு முன் வரை இதை நடத்திய பெரியம்மாவுடைய மாமனார், இந்த அங்காடியைத் தொடங்கியதாகச் சொல்லுவார்கள்.

இந்தத் தரம் குறையாமல் காப்பதுதான் முக்கியக் கொள்கையாக இருந்தது.

எனவே, அங்கொருவர், இங்கொருவர் தவிர, இந்தக் கடையில் வாடிக்கையாளர் அலைமோதி, நளினி பார்த்ததே கிடையாது.

குறைந்த பட்சமாக, அவள் இங்கே வேலைக்குச் சேர்ந்த இந்த மூன்று மாத காலமாக. அதைப் பற்றி, அங்கே யாரும் கவலைப்படுவதும் கிடையாது.

தளத்துக்கு ஒருவராக, மூன்று தளங்களுக்கும், மூன்று வயதான நிர்வாகிகள். ரொம்ப காலமாக இங்கேயே பணி புரிகிறார்களாம்.

விற்பனை, இருப்புக் கணக்கு எடுப்பதும், புதிய பொருட்களுக்கு ஆர்டர் கொடுப்பதும் அவர்களது பொறுப்பு.

அவர்களிடம் நளினி மோதிப் பார்த்திருக்கிறாள். அதை விடக் கற்பாறையில் மோதினால், ஏதோ பாறை கொஞ்சம் அசையக் கூடும் என்று புரிந்தும் இருக்கிறாள்.

புருவங்களைத் தூக்கி வைத்துக் கொண்டு, மூக்கு நுனியில் நிற்கும் கண்ணாடி வழியே, ஒரு தூசியைப் போலப் பார்த்து, "இந்தக் கடையின் பாரம்பரியம் பற்றிச் சின்னப் பெண் உனக்கு என்ன தெரியும்? எழுபது ஆண்டுகளாக, எனக்குத் தெரியவே நாற்பத்தைந்து வருஷங்களாக மதிப்பும் மரியாதையுமாக நடத்தப்படுகிற கடை! பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் காரில் வந்து இறங்கி, மறு விலை கேளாமல் வாங்கிப் போகிற இடம்! இதில் போய், உன் ஐந்து ரூபாய், பத்து ரூபாய்ப் பொருட்களைக் கொட்டிக் கேவலப்படுத்துவதா? பெரியம்மா மட்டும் இருந்து, அவர்கள் காதில் உன் பேச்சும் விழுந்திருக்கட்டும், உன்னை அப்போதே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருப்பார்கள். முதலில், வேலை பார்க்கக் கூட, நீ இங்கே உள்ளே நுழைந்திருக்க முடியுமா? இப்போதுதான் என்ன? உன்னை நாங்களே வெளியேற்றி விடுவோம்! என்னவோ புதுசாய் வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள் என்று விட்டு வைத்திருக்கிறோம்," என்று மிரட்டுவார் ஒருவர்.

"உன் வேலை என்ன? அங்கங்கே, தளத்துக்குத் தளம் பொருட்களைக் கவர்ச்சிகரமாகக் கண்ணுக்கு அழகாக அடுக்கி வைப்பதுதானே? அத்தோடு நிறுத்திக் கொள். அதற்கு மேல், அதிகப் பிரசங்கித்தனம் செய்யாமல், வாயை மூடிக் கொண்டிரு. மீறினால், வேலைக்கே வேட்டு வைத்து விடுவோம்," என்பார் அடுத்தவர்.

"பெரியம்மா பார்த்து வைத்த ஆட்கள் நாங்கள். எங்களுக்கு வேலை தெரியாது என்று, நீ வந்து சொல்கிறாயா? வயதுக்கு மரியாதை கொடுக்கக் கூடத் தெரியவில்லையே!" என்று ஆளாளுக்கு அவளை மிரட்டினார்களே தவிர, வளாகத்தில் உள்ள கடைப் பொருட்களின் விற்பனைப் பெருக்கத்துக்காக, உருப்படியாக எதையும் செய்யக் காணோம்.

இந்த அழகில், மதிய உணவுக்காக மூடுவது வேறு. பன்னிரண்டு மணிக்கு எடுத்து வைக்கத் தொடங்கினால், மீண்டும் கடை திறக்க நாலு மணி ஆகும்.

வாடிக்கையாளர்கள் வீட்டில் சாப்பிட்டுத் தூங்கி எழுந்து, கடை கண்ணிக்குக் கிளம்பி வர, அவ்வளவு நேரமேனும் ஆகாதா என்று கேள்வி வேறு.

தூக்கம் தேவைப்படுவது, கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு அல்ல, வளாகத்தின் முதிய நிர்வாகிகளுக்குத் தான் என்பது, நளினியின் அபிப்பிராயம்.

ஆனால், யாரிடம் முறையிடுவது?

அவளுக்கும் அலுத்து விட்டது.

எப்படியோ போகிறார்கள்.

இந்த வளாகத்துடைய உரிமையாளர்கள், பல தலைமுறைகளாகப் பெரிய பணக்காரர்கள். எங்கெங்கோ பங்களாக்கள், சொத்துக்கள், பெரிய வருமானங்கள் உண்டு என்று கேள்வி.

இந்தக் கடையிலிருந்து வந்து, நிறைய வேண்டியதில்லை. சும்மா ஒரு கௌரவத்துக்காக நடத்துகிறார்கள் என்றும்.

அப்புறமென்ன?

விற்பனைப் பகுதிப் பொறுப்பாளரிடமிருந்து, கணக்குச் சொல்லி எடுத்த பொருட்களுக்குக் கையெழுத்திட்டு விட்டுப் பொருட்களோடு வந்து, அவற்றை இயன்றவரை கவர்ச்சிகரமாகக் கண்ணாடித் தட்டுகளில் அடுக்கத் தொடங்கிய போது, வளாகத்துடைய காவல் பொறுப்பாளரான பூவலிங்கம் வந்தார்.

"என்னம்மா, நீ அடுக்கிறதைப் பார்த்து, கண்ணாடி அலமாரியோடு தந்துவிடுங்கள் என்று கேட்டு விடுவார்கள் போல இருக்கிறதே!" என்று கிண்டலடித்துவிட்டு, "ஜாக்கிரதை அம்மா! எந்தப் பொருளும் தவறிவிடாமல் பார்த்துக் கொள்," என்று எச்சரித்து விட்டுப் போனார்.

ஆமாம் என்று அவளுக்கும் அலுப்பாகத்தான் இருந்தது.

ஏதோ செய்வன திருந்தச் செய்வது என்ற பழக்கத்தில் செய்து கொண்டிருந்தாளே தவிர, நளினிக்கு, அவளது வேலையில் ஈடுபாடு கொஞ்சம் குறைந்து தான் போயிற்று எனலாம்!

கொஞ்சமென்ன? ரொம்பவே.
எவ்வளவு காலம்தான் இருப்பதையே மாற்றி அமைத்துக் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருப்பது?

விற்க விற்க, விதம் விதமாகப் பொருட்களைப் புதிது புதிதாக அன்றைய நாகரீகத்துக்கு ஏற்ப வாங்கி வாங்கி வைத்தால், அவளும் புதிது புதிதாகக் கண்ணைக் கவரும்படி விதம் விதமாக அடுக்க முடியும்!

அதுவும், இன்றைய நாகரீகத்துக்கு ஏற்ப என்றால், எண்ணில் அடங்காத வகைகள் எத்தனையோ கிடைக்கும். அவைகளை வாங்கிக் கொடுத்தால்...

ஆனால், அதெங்கே இங்கே நடக்கும்? அப்புறம், மழை கொட்டோ கொட்டென்று கொட்டி, ஊரெல்லாம் வெள்ளத்தில் முழுகிப் போய்விடாதா?

எண்ணத்திற்கு ஏற்ப, சிறு ஏளனத்துடன் தோளைக் குலுக்கியவாறு திரும்பியபோது தான், நளினி முதலில் அவனைப் பார்த்தது!

நல்ல உயரம்! உயரத்துக்குச் சற்றே மெலிவுதான் என்றாலும், உடல் கட்டில், நடையில் உறுதி தெரிந்தது.

அவள் அடிக்கடி ஆசையாக ஏறி இறங்கும், அழகிய அரண்மனைப் படிக்கட்டுகளின் வழியே வராமல், லிஃப்டின் கதவைத் திறந்து வெளியே வந்து கொண்டிருந்தான்.

அவன் மட்டுமல்ல, அவனோடு இன்னும் சிலரும்... மொத்தம் மூன்று பேர்.

அவனுக்கு முன்னும் பின்னுமாக வந்த மற்ற இரண்டு பேரும், பந்தாவாகப் பாக்கெட்டுக்குள் ஒரு கையை விட்டபடி, இங்கும் அங்குமாகத் திருதிருவென்று விழித்துப் பார்த்தவிதம் அவளுக்குச் சிரிப்பூட்டியது.

பின்னே கடைக்கு வந்தால், என்னென்ன சாமான் இருக்கிறது என்று பாராமல், இங்கே யாரேனும் திருடன் இருக்கிறானா என்று கண்களை உருட்டி உருட்டித் தேடுவது போலப் பார்த்தால்...?

இவர்கள் தேடுவது, திருடனையா... அல்லது காவலாளியையா?

ஒருவேளை, இவர்களே திருடர்களாக இருந்தால்... இருந்தாலும், அப்படி ஒன்றும் பயப்படத் தேவையில்லை! இந்தக் கடை வளாகத்தின் பாதுகாப்பு ஏற்பாடு வலுவானது. பில் போட்டுப் பணம் தராத எதையும் எளிதில் வெளியே கொண்டு போய்விட முடியாது. அத்தோடு, அந்தத் தளத்தின் விற்பனை ஆட்களோடு, இவர்களோடு வந்த அந்த மனிதனும் இருக்கிறான்!

நேர் நடையுடன் வந்த அவன் உதவ மாட்டானா, என்ன? பார்த்துக் கொள்ளலாம்.

தன்னையறியாமல் ஓரப் பார்வை அந்தப் புதியவனிடம் ஓடவும், கட்டுப்படுத்திக் கொண்டு திரும்ப முயன்றவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

ஏனெனில், அவன் தனது பழைய கைக்கடிகாரத்தைக் கழற்றி வைத்துவிட்டு, அங்கிருந்த விலை உயர்ந்த ஒன்றை எடுத்துத் தன் கையில் கட்டிக் கொண்டிருந்தான்.

அதன் முள், எண்கள் எல்லாம் வைரங்கள்! விலை லட்சத்துக்கும் மேல்! அதைப் பார்த்ததும், தன் பழைய ஓட்டைக் கடிகாரம் பிடிக்காமல் போய் விட்டது போல!

ஆனால் அதற்காகத் திருடலாமா?

அதுவும் திருடர்களைப் பிடிக்க யார் உதவுவான் என்று நினைத்திருந்தாளோ, அவனே அல்லவா, அங்கே திருடிக் கொண்டிருந்தான். என்ன அநியாயம்!

இருந்திருந்து, அவனைப் போய் நல்லவன் என்று நினைத்தாளே.

நல்லவன் போல வேஷமிடும் அயோக்கியன்.

இவனது முகத்திரையைக் கிழித்து, இவனது உண்மைத் தோற்றத்தை ஊர் உலகத்துக்கு அம்பலப்படுத்த வேண்டும்.

அவன் கைக்கடிகாரம் திருடியதை அறியாதவள் போன்று, அவனை நெருங்கினாள் நளினி.

அமரர் கல்கியின் படைப்புகள்

ஒற்றை ரோஜா

முதல் அத்தியாயம்
ஒரு சமயம் நான் பாபநாசத்துக்குச் சென்றிருந்தேன். எதற்காகப் போனேன் என்று கேட்டால் நீங்கள் ஒரு வேளை சிரிப்பீர்கள்; சிலர் அநுதாபப்படுவீர்கள். பி.ஏ. பரீட்சைக்கு மூன்று தடவை போய் மூன்று தடவையும் தவறிவிட்டேன். இதனால் வாழ்க்கை கசந்து போயிருந்தது. ஒரு மாதிரி பிராணத் தியாகம் செய்துவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். திடீர் திடீர் என்று நமக்குத் தெரிந்தவர்கள் யார் யாரோ இறந்து போய்விட்டதாகக் கேள்விப்படுகிறோம். ஆனால் நாம் அவர்களைப் பின்பற்றலாம் என்றால், அதற்கு வழிவகை தெரிவதில்லை. யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். பாபநாசத்தில் கல்யாணி தீர்த்தம் என்பதாக ஓர் இடம் இருக்கிறதென்றும், அதிலேதான் ஆசிரியர் வ.வே.சு. ஐயர் விழுந்து உயிரை இழந்தார் என்றும் கேள்விப்பட்டிருந்தேன். அந்தப் பெரியாரைப் பின்பற்றலாம் என்று எண்ணிக்கொண்டுதான் பாபநாசம் போனேன்.

இரண்டு காரணங்களினால் நான் உத்தேசித்த காரியத்தை நிறைவேற்ற முடியவில்லை. முதலாவது, அந்தக் கல்யாணி தீர்த்தம் இருக்கிறதே, அது பார்க்க மிகப் பயங்கரமாயிருந்தது. தென்னைமர உயரத்திலிருந்து மூன்று தண்ணீர்த் தாரைகள் 'சோ' என்ற சத்தத்துடன் கீழேயுள்ள அகண்ட பள்ளத்தில் விழுந்து கொண்டிருந்தன. அந்தப் பள்ளத்தில் தண்ணீர் நிறைந்து ததும்பி அலை மோதிக்கொண்டிருந்தது. சிறிய மரக்கிளை ஒன்று அத்தடாகத்தில் விழுந்து அங்குமிங்கும் சுழன்று அலைக்கப்படுவதைப் பார்த்தேன். இதிலே விழுந்தால் நம்முடைய தேகமும் இப்படித்தானே அலைக்கப்படும் என்று நினைத்தபோது என் தைரியம் குலைந்துவிட்டது. அன்னை பெற்றெடுத்த நாளிலிருந்து எத்தனை கஷ்டப்பட்டு வளர்த்த உடம்பு இது! இதற்கு எத்தனை எண்ணெய், எத்தனை சோப்பு! எத்தனை ஆடை அலங்காரம், எத்தனை வகை வகையான அன்னபானம்-அடடா! இதைப் புகைப்படம் பிடிப்பதற்காக மட்டும் எத்தனை செலவு! இவ்வாறெல்லாம் பேணி வளர்த்த உடம்பு அந்தப் பயங்கரமான தடாகத்தில் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பது என்னும் எண்ணத்தை என்னால் கொஞ்சங்கூடச் சகிக்கவே முடியவில்லை.

அங்கிருந்து இறங்கி வந்து கீழே பாபநாசம் கோவிலுக்குப் பக்கத்தில் பளிங்கு போன்று தெளிந்த நீரோடும் நதியின் கரையில் உட்கார்ந்து யோசித்தபோது, எதற்காக உயிரை விடவேண்டும் என்றே தோன்றிவிட்டது. நதியின் வெள்ளத்தில் மந்தை மந்தையாகத் தங்கநிற மீன்கள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன. அவை மேலே வரும்போதும் புரண்டு விழும்போதும் என்னமாக ஜொலித்தன! இந்த மீன்கள் இவ்வளவு குதூகலமாக விளையாடிக் கொண்டு திரிகின்றனவே, பி.ஏ. பரீட்சையில் தேறாததனாலே இவற்றுக்கு என்ன குறைவு வந்துவிட்டது! இதோ இந்த மரங்களில் எத்தனை விதமான பட்சிகள் எவ்வளவு ஆனந்தமாகப் பாடிக்கொண்டு வாழ்கின்றன! இவை பி.ஏ. பரீட்சையில் தேறவில்லையே! இதோ இந்தக் குரங்குகளைத் தான் பார்க்கலாமே! பி.ஏ. பட்டம் பெறவில்லையே! என்று அவை கொஞ்சமாவது கவலைப்படுகின்றனவா? ஆணும் பெண்ணும் எவ்வளவு உல்லாசமாக மரங்களின் மீது ஏறியும் இறங்கியும் கிளைக்குக் கிளை பாய்ந்தும் வாழ்கின்றன! தாய்க்குரங்கு அந்தக் குட்டிக்குரங்கையும் சேர்ந்து அணைத்துக் கொண்டு மரத்துக்கு மரம் தாவுகிற அழகை என்னவென்று சொல்வது!

அறிவில்லாத பிராணிகளும் பட்சிகளும் இவ்வளவு உல்லாசமாக வாழ்க்கை நடத்தும்போது நாம் மட்டும் பி.ஏ. பரீட்சை தேறவில்லை என்பதற்காக ஏன் உயிரை விட முயல வேண்டும்?

இத்தகைய முடிவுக்கு வந்து திரும்பித் திருநெல்வேலி போய்ச் சேர்ந்தேன். சென்னைக்கு இரண்டாம் வகுப்பு டிக்கட் எடுத்துக்கொண்டு ரயில் வண்டியில் ஏறினேன்.

ரயில் என்னமோ வேகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், என் மனம் அதைவிட வேகமாக எங்கெங்கேயோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது! ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது கஷ்டமாயிருந்தது. அன்றைக்குப் பாருங்கள், என்ன காரணத்தினாலோ அந்த வண்டியில் கூட்டமே இல்லை. உயர்ந்த வகுப்பு வண்டிகளை வழக்கத்தைவிட அதிகமாகவே கோத்திருந்தார்கள், போலிருக்கிறது. நான் ஏறி இருந்த இரண்டாம் வகுப்பு வண்டியில் நான் ஒருவனேதான். ஆகையால், உட்கார்ந்து உட்கார்ந்து அலுத்துப் போய் விட்டது. ரயில் நின்ற ஒவ்வொரு நிலையத்திலும் வண்டியிலிருந்து கீழே இறங்கிப் பிளாட்பாரத்தில் சிறிது நேரம் உலாவிவிட்டு ரயில் புறப்படும் சமயத்தில் மறுபடியும் ஏறிக் கொண்டேன். ரயில் நிலையங்களில் சாதாரணமாய் நடமாடும் பலதரப்பட்ட ஜனங்களைப் பார்ப்பதில் ஒருவித உற்சாகம் ஏற்பட்டது.

விருதுநகர் சந்திப்பில் அந்த உற்சாகம் சிகரத்தை அடைந்தது. ஆம்; முதலில் நான் பார்த்தது-என் கண்ணையும் கவனத்தையும் கவர்ந்தது-ஓர் ஒற்றை ரோஜாப்பூ தான்! அந்த ஒற்றை ரோஜாப்பூ ஒரு பெண்மணியின் எடுத்துக் கட்டிய கூந்தல் மீது வீற்றிருந்தது. 'கொலு வீற்றிருந்தது' என்றும் சொல்லலாம். அவ்வளவு இலட்சணமாயிருந்தது. தலைநிறைய ஒரு சுமைப் பூவைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு அலையும் சென்னை நகர்ப் பெண்மணிகள் பலரை நான் பார்த்திருக்கிறேன். "என்ன அநாகரிகம்! தலையில் புல்லுக் கட்டைச் சுமப்பதுபோல் சுமக்கிறார்களே!" என்று எண்ணியிருக்கிறேன். அதற்கெல்லாம் மாறாக இவ்வளவு நாஸுக்காகவும் நாகரிகமாகவும் கூந்தலில் ஒற்றை ரோஜாப்பூ அணிந்திருக்கும் பெண்மணி யாரோ? என்று அறிய ஆவல் உண்டாயிற்று. ரயிலில் நான் இருந்த வண்டிக்கு இரண்டு வண்டிக்கு அப்பால் அவள் இருந்தாள். அவள் தலை வெளியில் நீட்டப்பட்டிருந்தது. ஆனால், முகம் எனக்கு நேர் எதிர்ப்புறமாகத் திரும்பியிருந்தது. அந்தப் பெண்மணியின் முகம் எப்படியிருக்குமோ, கூந்தலில் சூடிய ஒற்றை ரோஜாப்பூவினால் ஏற்பட்ட நல்ல அபிப்பிராயம் முகத்தைப் பார்த்ததும் மாறிவிடுமோ என்ற ஐயத்துடனேயே அந்தப் பக்கம் போனேன். ஏதோ ஒரு கதையில் படித்திருக்கிறேன். ஒருவன் ஒரு பெண்ணின் கரத்தைப் பார்த்து அதன் அழகில் சொக்கிப் போனான்! அவள் முகத்தைப் பார்த்ததும் பயங்கரமும் அருவருப்பும் அடைந்தான். இம்மாதிரி கதி எனக்கும் ஏற்பட்டுவிடுமோ?

அருகில் சென்றபோது சட்டென்று அவள் முகம் என் பக்கம் திரும்பியது. ஆகா! நான் பயந்தது என்ன முட்டாள்தனம்! பார்க்கிறவர்களின் கண்ணில் வந்து தாக்கி வேதனை உண்டாக்கும் சௌந்தரியமும் உண்டோ ! அத்தகைய அபூர்வ சௌந்தரியமுள்ள முகத்தை அவள் என் பக்கம் திருப்பினாள். ஒரு புன்னகையும் புரிந்தாள். நிலா வெளிச்சத்தில் முல்லை பளீரென்று மலர்ந்தது போலிருந்தது. நான் எப்போதும் சங்கோசமோ கூச்சமோ அதிகம் இல்லாதவன் தான். ஆயினும், அவளிடம் அப்போது நானாக ஒரு வார்த்தை பேச முயன்றிருந்தால் என் பிராணனே போயிருக்கும். பாபநாசத்தில் நடந்திருக்க வேண்டியது விருதுநகர் ரயில்வே நிலையத்தில் நடந்திருக்கும். அந்த மாதரசி அதற்கு இடம் வையாமல் என்னிடம் அவளாகவே பேசிவிட்டாள். "தயவு செய்து சிற்றுண்டிச் சாலைக்காரனை எனக்கு ஒரு கப் டீ கொண்டுவரும்படி சொல்ல முடியுமா?" என்றாள். "பேஷாகச் சொல்கிறேன்!" என்று சொல்லி விட்டு, வேகமாக நடந்து போய் ஸ்பென்ஸர் ஆள் ஒருவனைப் பிடித்து, பிஸ்கோத்தும் டீயும் கொண்டுபோய்க் கொடுக்கும்படி சொன்னேன். அப்புறம் ஏதோ சந்தேகம் தோன்றவே இந்தியச் சிற்றுண்டிச் சாலைக்கும் போய்ச் சிற்றுண்டி காப்பி கொண்டு போய்க் கொடுக்கும்படியும் சொன்னேன். பிறகு சற்றுத் தூரம் பிளாட்பாரத்தில் நடந்துவிட்டுத் திரும்பினேன். திரும்புகையில் அந்தப் பெண்ணின் வண்டிக்கருகில் நின்று, "டீ வந்ததா?" என்று கேட்டேன். அவள் திரும்பிப் பார்த்து முகமலர்ச்சியுடன், "ஓ! ஒன்றுக்கு இரண்டு மடங்காக வந்தது. நீங்கள் கூட வந்து சாப்பிடலாம்!" என்றாள்.

ஒரு கணம் அந்த வண்டியில் ஏறிக்கொள்ளலாமா என்ற பைத்தியக்கார எண்ணம் உண்டாயிற்று. நல்ல வேளையாக, வண்டியின் வெளிப்புறத்தில் 'பெண்களுக்கு மட்டும்' என்று போட்டிருப்பதை பார்த்திருந்தேன். ஆகையால், "இல்லை! நான் சாப்பிட்டாயிற்று!" என்று சொல்லிவிட்டு என் வண்டியில் போய் ஏறிக்கொள்வதற்கு நகர்ந்தேன். அந்தப் பெண் மறுபடியும், "இன்னும் ஓர் உதவி எனக்காகச் செய்யமுடியுமா? இந்த ரயிலில் காக்கி புஷ்கோட் அணிந்த மூன்று மனிதர்கள் எந்த வண்டியிலாவது இருக்கிறார்களா? அவர்களில் ஒருவர் கடற்படையைச் சேர்ந்தவர் மாதிரி தொப்பி அணிந்திருப்பார்! ஆனால்... ஒரு வேளை, வண்டி புறப்படும் சமயம் ஆகிவிட்டதோ, என்னவோ?" என்றாள்.

"வண்டி புறப்படப் போகிறது! அதனால் பாதகமில்லை. நீங்கள் சொல்வது போன்ற மூன்று ஆசாமிகள் இந்த வண்டியில் இருக்கிறார்கள். என்ஜினுக்குப் பக்கத்து வண்டியில் அவர்கள் இருப்பதைச் சற்று முன்னால் பார்த்தேன்!" என்றேன். நான் சொன்னது உண்மையேதான். அதைக் கேட்ட அந்தப் பெண்ணின் புருவங்கள் வெகு இலேசாக நெரிந்தன. "சரி, ரொம்ப வந்தனம்" என்றாள். நான் போய் என் வண்டியில் ஏறிக்கொண்டேன்.

விருதுநகரிலிருந்து மதுரைக்கு ரயில்போனதே எனக்குத் தெரியவில்லை. அப்படியாக என் மனம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. என்ன சிந்தனை என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா? அந்தப் பெண் யார்? எங்கிருந்து எங்கே போகிறாள்? தனியாகப் பிரயாணம் செய்வதன் காரணம் என்ன? பார்த்தால் நாகரிகமான, படித்த பெண்ணாகத் தோன்றுகிறாளே! 'புஷ்கோட்' அணிந்த மூன்று மனிதர்களைப் பற்றி எதற்காக விசாரித்தாள்?-என்றெல்லாம் எனக்கு நானே கேள்விகளைப் போட்டுக் கொண்டேன். ஆனால் பதில் ஒன்றும் கிடைக்கவில்லை. எனினும், பொழுது மட்டும் சிறிதும் நில்லாமல் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது.

மதுரைச் சந்திப்பு வந்தது. நாட்டில் எத்தனையோ ரயில் நிலையங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி உருவமும் இருக்கிறது. மதுரை நிலையம் ஒரு தனி ரகம். நிலையத்துக்குள் ரயில் வரும்போது ஜனங்கள் சுவர் வைத்த மாதிரி வரிசை வரிசையாக நின்று உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். என்னத்தைத்தான் பார்ப்பார்களோ தெரியாது. வந்த ரயிலில் ஏறுவோர் இறங்குவோர் அதிகம் உண்டா என்றால், அதுவும் இல்லை. மாலை நேரத்தில் பொழுது போகாமல் ரயில் நிலையத்துக்கு வந்து, வருகிற போகிற வண்டிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜனங்களைப் போலத் தோன்றும். சிறுபிள்ளைகள் சிலர் கையில் கையெழுத்து வாங்கும் சிறிய புத்தகங்களை வைத்துக் கொண்டு, ரயிலில் யாராவது பிரமுகர்கள் வருகிறார்களா என்று ஆவலுடன் பார்த்துக்கொண்டு போவார்கள். பத்திரிக்கை விற்பவர்கள், ஒரு நகரும் பெட்டியில் ஆபாசமான படங்கள் போட்ட மஞ்சள் இலக்கியங்களை வைத்துக்கொண்டு பிரயாணிகள் எதிரே நின்றுவிடுவார்கள். "பிச்சர் போஸ்டு வேண்டுமா?" "இல்லஸ்ட்ரேடட் வீக்லி வேண்டுமோ?" என்று கேட்டுக் கொண்டு நிற்பார்கள். வேண்டாம் என்று சொன்னாலும் போகமாட்டார்கள். பெட்டியிலுள்ள ஆபாச புத்தகங்களின் மேலட்டையைப் பிரயாணிகள் பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். ஏதாவது ஒரு அட்டையில் மேல் அவர்களுக்கு ஆசை விழாதா என்ற நோக்கம்.

என் முன்னால் அப்படி ஒரு பெட்டி வந்து நின்றதும் "இதேதடா தொல்லை?" என்று நான் கீழே இறங்கினேன். கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு பிளாட்பாரத்தில் உலாவத் தொடங்கினேன். 'பெண்கள் வண்டி'யில் அந்தப் பெண்ணைக் காணவில்லை. சிறிது ஏமாற்றத்துடன் மேலே நடந்தேன். என்ஜினுக்கு அருகில் பிளாட்பாரத்தில் ஒரு சிறிய கும்பல் நின்றது. யாருக்கோ மாலை போட்டு வழியனுப்பிக் கொண்டிருந்தார்கள். 'ஹிப் ஹிப் ஹுரே!' என்ற கோஷமிட்டார்கள். அதில் என் கவனம் செல்லவில்லை. அந்தக் கும்பலுக்குச் சற்று அப்பால் நாலு பேர் நின்று பேசிக்கொண்டிருந்த இடத்தில் என் கவனம் சென்றது. அவர்களில் மூன்று பேர் காக்கி 'புஷ்கோட்' ஆசாமிகள். நாலாவது நபர், என்னையறியாமல் என் கண்கள் தேடிக்கொண்டிருந்த பெண். அப்போது அவள் என்பக்கம் பார்க்கவில்லை. தலையில் அணிந்த ஒற்றை ரோஜாவிலிருந்துதான் அவள் என்று தெரிந்துகொண்டேன். அவள் ஏதோ வேடிக்கையாகப் பேசியிருக்கவேண்டும். மற்ற மூன்று பேரும் நகைத்தார்கள். எனக்கு ஒரே எரிச்சலாயிருந்தது. அவர்களிடையே போவதற்கும் தைரியமில்லை. அங்கிருந்து நகருவதற்கும் மனம் வரவில்லை. அவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள ஆவல் உண்டாயிற்று. நிற்கலாமா நகரலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அவள் திரும்பினாள். என்னைப் பார்த்துவிட்டாள். உடனே பழையபடி ஒரு முல்லைப்புன்னகை அவள் முகத்தில் பூத்தது. மறுபடி திரும்பி அவர்களுடன் பேசத் தொடங்கினாள். அங்கிருந்து அகல்வதே நலம் என்று தீர்மானித்தேன். திரும்பிப்போய் என் வண்டியில் ஏறிக்கொண்டேன். என்ஜின் இருந்த திக்கையே பார்த்துக் கொண்டிருந்தேன். எதற்காக என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா!

வண்டி புறப்படும் நேரம் ஆகிவிட்டது. இன்னும் அவள் ஏன் திரும்பி வரவில்லை? அந்த 'புஷ்கோட்' மனிதர்களுடன் அவர்களுடைய வண்டியில் ஏறி விட்டாளா என்ன?... இல்லை, அதோ அவள் வருகிறாள். வேகமாகவே நடந்து வருகிறாள். என்ன அழகான நடை! அவள் நடப்பதாகவே தோன்றவில்லை; மிதப்பதாகத் தோன்றியது. என் வண்டிக்கு அருகில் வந்ததும் என்னைப் பார்த்தாள். சற்றுத் தயங்கி நின்றாள். "வண்டி புறப்படப் போகிறதே!" என்றேன். என்னத்தைச் சொல்ல. அவள் சட்டென்று வண்டிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். வந்தவள் எனக்கு எதிரில் உட்கார்ந்து, என்னை ஏறிட்டுப் பார்த்தாள்.

என் நெஞ்சு அபார வேகமுள்ள விமான என்ஜினைப் போல் அடித்துக் கொண்டது.

"பாருங்கள்! இப்போதெல்லாம் ரயிலில் தனியாகப் பிரயாணம் செய்வது அபாயம் என்று சொல்கிறார்களே! பெண்கள் வண்டியில் இன்னும் யாராவது பெண்கள் ஏறுவார்கள் என்று பார்த்தேன். ஒருவரும் ஏறவில்லை. ரயிலில் கொலைகூட நடக்கிறது என்று சொல்லுகிறார்கள். நானும் இந்த வண்டிக்கே வந்துவிடலாமா என்று பார்க்கிறேன். நீங்கள் மதராசுக்குத் தானே போகிறீர்கள்!" என்று கேட்டாள்.

எல்லையில்லாத உற்சாகத்துடன் நான், "ஆமாம்; மதராஸுக்குத்தான் போகிறேன். நீங்கள் பேஷாக இந்த வண்டிக்கே வரலாம். சாமான்களை கொண்டுவரச் சொல்லட்டுமா? ஏ, போர்ட்டர்!" என்றேன்.

"இப்போது வேண்டாம்; அடுத்த ஸ்டேஷனில் பார்த்துக்கொள்ளலாம்!" என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் இறங்கிச் சென்றாள்.

அவள் இறங்கிய உடனே, யாரோ ஒருவர் சடக்கென்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார். கையில் ஒரு பிரயாணப் பெட்டியும் வைத்துக்கொண்டிருந்தார். பெட்டியைப் பலகையில் வைத்து விட்டு என்னையும் போய் கொண்டிருந்த பெண்ணையும் இரண்டு மூன்று தடவை மாற்றி மாற்றிப் பார்த்தார். தொண்டையைக் கனைத்துக் கொண்டு "மன்னிக்க வேண்டும்! ஒரு வேளை இந்த வண்டி ரிஸர்வ் ஆகியிருக்கிறதோ?" என்றார்.

"ஆமாம்" என்று ஒரு பொய் சொல்லி அவரை இறங்கிப் போகச் சொல்லலாமா என்று என் மனத்தில் ஒரு கெட்ட எண்ணம் உதித்தது.

இதற்குள், கார்டு குழல் ஊதும் சத்தம் கேட்டது. ரயில் புறப்படுவதற்குள் அவள் வண்டியில் ஏறிவிடுகிறாளா என்று எட்டிப் பார்த்தேன். அந்த அழகிய ஒற்றை ரோஜாப்பூ கண்ணைக் கவர்ந்தது. அந்தப் பூவை அணிந்தவள் வண்டியில் ஏறியதும், ரயிலும் நகர்ந்தது.

இரண்டாம் அத்தியாயம்

என் வண்டியில் ஏறிய மனிதர் "அப்பா! பயங்கரம்!" என்றார். அவரை ஏறிட்டுப் பார்த்தேன். படித்த நாகரிக மனிதராகக் காணப்பட்டார். வயது நாற்பது இருக்கும். ஐரோப்பிய உடை தரித்திருந்தார். அவருடைய கண்கள் ரயிலின் அபாய அறிவிப்பு விளக்கைப் போல் சிவப்பாக ஜொலித்தன.

சட்டைப் பையிலிருந்து ஒரு புட்டியை எடுத்து அதிலிருந்த பானத்தைக் கடகடவென்று வாயில் விட்டுக் கொண்டு குடித்தார்.

"ஐயோ! என்ன வெப்பம்! மரண தாகம் எடுத்துவிட்டது!" என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டார்.

பிறகு, என்னை நோக்கி, "அந்த அற்புதத்தைப் பார்த்தீரா?" என்றார்.

"எந்த அற்புதத்தை?" என்று கேட்டேன்.

"இந்த ஒற்றை ரோஜாப் பூவைத்தான்!" என்றார்.

"அதில் அற்புதம் என்ன?" என்று சிறிது கோபமான குரலில் கேட்டேன்.

"அற்புதம் என்னவா! ஆம், உமக்குத் தெரியாது. தெரிகிறதற்கு நியாயம் இல்லை. அந்த ஒற்றை ரோஜாப் பூவிலேதான் என் உயிர் இருக்கிறது?" என்று சொல்லிவிட்டு, ஒரு விகாரமான புன்னகை புரிந்தார்.

அவர் ஏதோ அநுசிதமான பரிகாசம் செய்யப் போகிறார் என்று எண்ணினேன். ஆகையால் ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது.

"இன்னமும் எனக்குப் புரியவில்லை!" என்று கடுமையான குரலில் கூறினேன்.

"ஆமாம்; அந்த ஒற்றை ரோஜாப்பூவில்தான் என் உயிர் இருக்கிறது. ஆகையினாலே மூன்று நாளாகியும் அது வாடாமலிருக்கிறது!" என்றார்.

நான் சிறு பிள்ளையாக இருந்த போது, ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த போது, ஒரு தடவை எங்கேயோ பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன். வாத்தியார் பிரம்பினால் சுளீர் என்று முதுகில் அடித்தார். அச்சமயம் என் தலையிலிருந்து ஆயிரம் மின்னல்கள் கிளம்பி வெளியில் சென்றது போலத் தோன்றியது. அத்தகைய உணர்ச்சி இப்போதும் உண்டாயிற்று. அந்த ஒற்றை ரோஜாப்பூ சிறிதும் வாடாமலிருப்பதின் அதிசயத்தை அதுவரையில் நான் எண்ணிப் பார்க்கவில்லை. அது நிஜ ரோஜாப் பூவாயிருக்க முடியாது; நிஜ ரோஜாவைப் போல் அபூர்வ வேலைப்பாட்டுடன் செய்த செயற்கை ரோஜாப் பூவாகத்தான் இருக்க வேண்டும். அதனால் என்ன! நிஜ ரோஜாப் பூவுக்குப் பதில் செயற்கை ரோஜாப் பூவை வைத்துக் கொள்வதில் என்ன தவறு? உடனே அவளுடைய தந்த வர்ணக் கழுத்தில் அணிந்திருந்த இரட்டை வட முத்துமாலை என் கவனத்துக்கு வந்தது. அதுவும் செயற்கை முத்துமாலைதான். அதானால் என்ன? அவர்களுடைய கையில் அணிந்திருந்த இரண்டு அழகிய சங்கு வளையல்களும் என் நினைவுக்கு வந்தன. தங்கத்தினாலும் வைரத்தினாலும் மற்றும் விலை உயர்ந்த ரத்தினங்களினாலும் ஆபரணங்களைச் செய்து சில ஸ்திரீகள் போட்டுக் கொள்கிறார்கள். அதனால் அவர்களுடைய அழகு அதிகமாகி விடுகிறதா? அவலட்சணந்தான் அதிகமாகிறது!...
இம்மாதிரிச் சிந்தனையில் நான் ஆழ்ந்திருந்தபோது அந்த மனிதர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, "இது இரண்டாம் வகுப்பு வண்டியா?" என்று கேட்டார்.

"ஆமாம்!" என்றேன்.

"அதுதானே பார்த்தேன்! என்னிடம் முதல் வகுப்பு டிக்கெட் இருக்கிறது. திண்டுக்கல்லில் முதல் வகுப்பு வண்டிக்குப் போய்விடுகின்றேன்" என்றார்.

உடனே எனக்கு ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று. அதை அவரும் தெரிந்துகொண்டார். "அதற்குள் உமக்கு ஒரு எச்சரிக்கை செய்துவிட விரும்புகிறேன்."

"என்ன எச்சரிக்கை?" என்று கேட்டேன்.

"அந்த ஒற்றை ரோஜாப் பூக்காரிப் பற்றித்தான். அவளுடைய ஊர், பெயர் உமக்குத் தெரியுமா?" என்றார்.

"தெரியாது. தெரிந்துகொள்ள விரும்பவும் இல்லை!" என்றேன்.

ஆனாலும் அந்த மனிதர் விடவில்லை. "அவள் பெயர் மனோகரி; அவளுடைய ஊர் கொழும்பு!" என்றார்.

மனோகரி என்ற பெயரைக் கேட்டதும் என் உள்ளம் பூரித்தது. என்ன அழகான பெயர்! 'மனோகரி', 'மனோகரி' என்று இரண்டு மூன்று தடவை வாய்க்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.

கொழும்பு நகரைப் பற்றி நான் எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், பார்த்ததில்லை. நவநாகரிகத்தில் சிறந்த அந்த நகரத்திலேதான் இத்தகைய பெண் பிறந்து வளர்ந்திருக்கக்கூடும். அதில் ஆச்சரியம் என்ன?

அந்த மனிதருடைய பேச்சைக் கேட்பதில் எனக்கு ஏற்பட்டிருந்த அருவருப்பு மாறிவிட்டது. திண்டுக்கள் ஸ்டேஷன் வருவதற்குள் அவரிடமிருந்து அந்தப் பெண்ணைப் பற்றிக் கூடிய வரையில் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும் உண்டாகிவிட்டது.

அடடா! அந்த ஆசையின் விளைவு என்ன கோரபயங்கரம்! முதலில் நினைத்தபடியே அவருடன் நான் பேச்சுக் கொடுக்காமல் இருந்திருக்கக் கூடாதா?

"உங்களுக்கும் கொழும்புதான் போலிருக்கிறது. அந்தப் பெண் கொழும்பில் உங்கள் அக்கம் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவளோ?" என்று கேட்டு விட்டேன்.

உடனே அவர் தம்முடைய கதையை ஆரம்பித்தார். பயங்கரமான விஷயங்களைப் படிக்க விருப்ப மில்லாத வாசகர்கள் இந்தப் பகுதியை இங்கேயே விட்டுவிட்டு, அடுத்த பகுதியிலிருந்து படிக்கத் தொடங்குவது நலம்.

அவர் கூறியதாவது:

"அவளும் நானும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அல்ல. கொழும்பு நகரம் மிகப்பெரியது. அதில் நான் ஒரு பக்கத்திலும் அவள் ஒரு பக்கத்திலும் இருக்கிறோம். கண்டியிலிருந்து கொழும்புக்கு வரும் ரயிலில்தான் அவளை முதலில் சந்தித்தேன். அந்தப் பாதையில் வரும் போது இரு பக்கத்திலும் உள்ள அழகிய காட்சிகளைப் பற்றிப் பேசாவிட்டால் நெஞ்சு வெடித்துவிடும்! நீர் இலங்கைக்கு வந்ததில்லை. வந்திருந்தால், கண்டி-கொழும்புப் பாதையில் பிரயாணம் செய்திருந்தால், உமக்கு நான் சொல்வது விளங்கும். அவ்வளவு அழகான இயற்கைக் காட்சிகளை உலகில் வேறு எங்கும் காணமுடியாது."

"நாங்கள் ஏறியிருந்த வண்டியில் எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. ஆகையால், அவளுடனே நான் பேச வேண்டியதாயிற்று. அவளும் உற்சாகமாகவே பேசிக்கொண்டு வந்தாள். கொழும்பு ஸ்டேஷன் சமீபத்ததும் ஒருவருடைய விலாசத்தை ஒருவர் கேட்டுத் தெரிந்துகொண்டோ ம். அவளுடைய வாசம் வெள்ளவத்தை என்று தெரிந்துகொண்டேன். மதராஸுக்கு மாம்பலம் எப்படியோ, அப்படி கொழும்புக்கு வெள்ளவத்தை. தன்னுடைய வீட்டுக்கு ஒரு நாள் வரும்படி கேட்டுக்கொண்டாள். 'அடுத்த ஞாயிற்றுக்கிழமை வருகிறேன்,' என்று ஒப்புக்கொண்டேன். அந்தப்படியே மறு ஞாயிற்றுக்கிழமை வெள்ளவத்தை சென்று, அவளுடைய வீட்டைத் தேடிக் கண்டு பிடித்தேன். நான் போனபோது அவள் வீட்டில் இல்லை. வேலைக்காரன் ஒருவன் இருந்தான். 'இப்போது வந்து விடுவார்கள்; உட்காருங்கள்!' என்றான். வீட்டுத் தாழ்வாரத்தில் போட்டிருந்த சாய்மான நாற்காலி ஒன்றில் அமர்ந்தேன். கடற்காற்று சுகமாக வந்து கொண்டிருந்தது. வீட்டு வாசலில் இருந்த சிறிய தோட்டத்தில் புஷ்பச் செடிகளும் அலங்கார குரோட்டன்ஸ் செடிகளும் கொழு கொழுவென்று வளர்ந்திருந்தன! அவற்றில் ஒரே ஒரு ரோஜாச் செடியும் இருந்தது. அந்தச் செடியில் ஒற்றை ரோஜா ஒன்று மலர்ந்தது. 'நான் தான் புஷ்பங்களின் ராஜா' என்று பறையறைந்து கொண்டிருந்தது."

"நேரமாக ஆக என் மனத்தில் ஒரு பதை பதைப்பு ஏற்பட்டது. 'இது யார் வீடோ , என்னவோ? அந்தப் பெண்ணுக்குச் சொந்தக்காரர்கள் எப்படிப் பட்டவர்களோ? அவள் அழைத்தாள் என்று நாம் வந்துவிட்டோ மே! இது சரியான காரியமா?' என்ற எண்ணங்கள் தோன்றி என் உள்ளத்தைக் குழப்பின."

"சிறிது நேரத்துக்கெல்லாம் மனோகரி வந்தாள்! என்னைப் பார்த்ததும் அவள் "வாருங்கள்! வாருங்கள், நீங்கள் வருவதாகச் சொன்னதை மறந்து விட்டேன்" என்றாள். பிறகு, அவளுடன் வந்தவருக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தாள். பிறகு, என்னை உள்ளே அழைத்துப்போய், விருந்தினரை வரவேற்பதற்குரிய விசாலமான முன் அறையில் உட்கார வைத்தாள். சிறிது நேரத்துக்கெல்லாம் அவளும் வந்து எதிரில் உட்கார்ந்து கொண்டாள். வேலைக்காரன் டீ கொண்டு வந்து கொடுத்தான். நான் டீ சாப்பிட்டுக் கொண்டேயிருக்கையில் என் பின்னால் வந்து யாரோ நிற்பதை உணர்ந்தேன். உடனே என் மண்டையில் 'படீர்' என்று ஒரு அடி விழுந்தது. அவ்வளவுதான்; செத்து விழுந்துவிட்டேன்.... ஆமாம், ஐயா, ஆமாம்! செத்துதான் விழுந்தேன். உமக்கு நம்பிக்கைப்படாதுதான். கதையைப் பூராவும் கேட்டுவிடும். செத்து விழுந்த என்பேரில் ஒரு கம்பளத்தைப் போட்டு மூடினார்கள். நான் செத்துப் போய்விட்டேன் என்று எனக்கு நன்றாகத் தெரிந்தது. ஆனால், என் உயிர் மட்டும் அங்கேயே சுற்றி வந்து கொண்டிருந்தது. என் உடம்பை இவர்கள் என்ன தான் செய்யப்போகிறார்கள் என்று அறிந்து கொள்ள விரும்பினேன். அதனால் தான் அங்கேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தேன். அன்று நள்ளிரவில் இந்தப் பெண்ணும் அவளோடு வந்த ஆடவனும் என் உடலைத் தூக்கிக் கொண்டு போனார்கள். தோட்டத்தில் ஒரு பெரிய குழி வெட்டப்பட்டிருந்தது. அதில் என் உடம்பைப் போட்டுப் புதைத்தார்கள். எல்லாம் முடிந்ததும் மனோகரி ஒரு பெரு மூச்சு விட்டு "ஐயோ! பாவம்!" என்றாள்; அவள் கண்களில் கண்ணீர் துளிகளும் வந்தன. எனக்கு என்னவோ பரமதிருப்தி ஆகிவிட்டது. பிறகு, அவர்கள் கொஞ்ச தூரத்தில் பூச்சட்டியில் இருந்த ஒரு ரோஜாச் செடியைப் பெயர்த்து எடுத்து, என்னைப் புதைத்த இடத்தின் மேல் அதை நட்டுவிட்டார்கள். மனோகரி ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றினாள். அந்தத் தண்ணீரோடு அவளுடைய கண்ணீர் துளிகளும் கலந்ததாக எனக்குத் தோன்றியது."

"என் உயிருக்கு இன்னமும் அவ்விடத்தை விட்டுப் போக மனமில்லை. அந்தக் குழியையும் அதன் மேலிருந்த செடியையும் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. கொஞ்ச நாளைக்கெல்லாம் அந்த ரோஜா செடியில் ஒரு மொட்டு விட்டது. அந்த மொட்டுக்குள் போய் என் உயிர் புகுந்து கொண்டது. மொட்டு மலர்ந்து பூவாயிற்று. நானும் அதிலேயே காத்திருந்தேன். மனோகரி அந்த ரோஜாவைப் பறித்துத் தன் கூந்தலில் சூடிக்கொள்வாள் என்ற ஆசையோடு காத்திருந்தேன். அம்மம்மா! அப்படி காத்திருக்கும்போது ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாக இருந்தது. கடைசியில், அவள் வந்து, தன் தங்கக் கரத்தினால் அந்த ரோஜாவைப் பறித்துத் தன் தலையிலே சூடிக்கொண்டாள். அப்புறந்தான் என் ஆத்மா சாந்தி அடைந்தது."

"தம்பி! உன்னைப் பார்த்தால் நல்ல அறிவாளியாகத் தோன்றுகிறது. ஆகையால், நீயே ஒருவேளை ஊகித்துக் கொண்டிருப்பாய். அவர்கள் வீட்டுத் தாழ்வாரத்தில், சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டு சிறிது நேரம் தூங்கிவிட்டேன். அப்போது நான் கண்ட கனவையே இத்தனை நேரம் சொன்னேன். மனோகரி திரும்பி வந்த பிறகு அப்படியெல்லாம் என்னை ஒன்றும் செய்துவிடவில்லை. மரியாதையாகப் பேசித் திருப்பி அனுப்பினாள். அதன் பிறகு அடிக்கடி நாங்கள் சந்திப்பதுண்டு. இருந்தபோதிலும், அவளுடைய கூந்தலில் ஒற்றை ரோஜாப்பூவைக் கண்டால் மாத்திரம் எனக்கு ஒரு திகில் உண்டாகி விடுகிறது. அன்று கண்ட கனவு நினைவுக்கு வந்துவிடுகிறது..."
அம்மனிதர் பாதிக் கதை சொல்லிக் கொண்டு வந்த போது, அவர் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலிருந்து தப்பி வந்தவராயிருக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன். அவரிடம் இவ்வண்டியில் தனியாக மாட்டிக் கொண்டோ மே என்று கொஞ்சம் கவலையாகவும் இருந்தது. அவ்வளவும் கனவு என்று அவர் கதையை முடித்தபோது என்னையறியாமலே பெருமூச்சு விட்டேன். இவர் ஒரு விளையாட்டு மனிதர் என்று முடிவு செய்து கொண்டேன். ஆயினும், இப்படியெல்லாம் பயங்கரமாக ஏன் கற்பனை செய்ய வேண்டும்? அவருடைய மூளையில் ஏதேனும் கொஞ்சம் கோளாறு இருந்தாலும் இருக்கலாம்.

ரயில் வண்டி தண்டவாளம் மாறும் கடபுட சத்தம் கேட்கலாயிற்று. திண்டுக்கல் ஸ்டேஷனுக்குள் வண்டி போய்க் கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.

"இதோ பாரும்! நான் திண்டுக்கல்லில் இறங்கி, முதல் வகுப்பு வண்டி ஏதாவது காலியிருக்கிறதா என்று பார்த்து வருகிறேன். அது வரையில் இந்தப் பெட்டி இங்கேயே இருக்கட்டும். ஒரு விஷயம்; அந்தப் பெண் உம்முடன் பேச மறுபடியும் வருவாள் என்று தோன்றுகிறது. அவள் கூந்தலில் உள்ள ஒற்றை ரோஜாப் பூவை எப்படியாவது நீர் எடுத்து வைத்திருந்து என்னிடம் ஒப்பித்தால், ஆயிரம் ரூபாய் உமக்குக் கொடுக்கிறேன். இல்லை; ஆயிரம் ரொம்பக் குறைவு, இரண்டாயிரம் ரூபாய் தருகிறேன். சரிதானே! ஆனால் அவளுக்கு மட்டும் தெரியக் கூடாது. தெரிந்தால் உயிருக்கே ஆபத்து தெரிந்ததா?"

இந்த மனிதருக்கு மூளைக் கோளாறு தான்! சந்தேகமில்லை, பெட்டியையும் எடுத்துக் கொண்டு தொலைந்து போகக் கூடாதோ! மறுபடியும் இவர் இங்கேயே வருவதாயிருந்தால் நாம் இறங்கி வேறு வண்டி பார்த்துக் கொள்ள வேண்டியது தான் என்று தீர்மானித்தேன்.

மூன்றாம் அத்தியாயம்

திண்டுக்கல் ஸ்டேஷனில் வண்டி நின்றது. "சிறுமலை வாழைப்பழம்", "சாம்பார் சாதம்" "பிரியாணி" என்னும் கூக்குரல்கள் காதைத் துளைத்தன. அந்த மனிதர் இறங்கி அவசரமாகப் போனார். பெட்டியை வைத்து தொலைத்து விட்டுதான் போனார். அந்தப் பெண் ஒரு வேளை இந்த வண்டியில் ஏறிக் கொள்ளலாம் என்று வந்தால், இந்தப் பெட்டி ஒரு தடையாயிருக்கலாமல்லாவா? அவர் கூறியவற்றில் ஏதேனும் கொஞ்சமாவது உண்மையிருக்குமா? அந்தப் பெண்ணின் ஊர் கொழும்பு, அவள் பெயர் மனோகரி என்பவையேனும் நிஜமாயிருக்குமோ?

அதிக நேரம் நான் யோசிக்க முடியவில்லை. அவளே வந்து விட்டாள். என் வண்டியின் அருகில் வந்து நின்றாள். நானும் மரியாதைக்காகக் கீழே இறங்கினேன்.

"இங்கே ரயில் எத்தனை நேரம் நிற்கும்?" என்று கேட்டாள்.

"ஐந்து நிமிஷந்தான் நிற்கும்."

"அப்படியானால் என் சாமான்கள் இங்கே ஏற்ற முடியாது. திருச்சினாப்பள்ளியில் தான் மாற்ற வேண்டும். இந்த வண்டியில் வந்து ஒருவர் ஏறினாரே, அவர் இறங்கிப்போவதைப் பார்த்தேன். அவர் என்னைப் பற்றி ஏதாவது சொன்னாரா?" என்றாள்.

"ஆம் ஏதேதோ சொன்னார். அதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை."

"அவர் என்னதான் சொன்னார்?" என்று கேட்டாள்.

"உங்கள் ஊர் கொழும்பு என்றும், பெயர் மனோகரி என்றும் சொன்னார். உங்களை அவருக்குப் பழக்கம் உண்டு என்றும் கூறினார்."

"அவ்வளவு வரை அவர் கூறியவை உண்மைதான். வேறு ஒன்றும் சொல்லவில்லையா?"

"இன்னும் ஏதோ உளறினார்! அதையெல்லாம் ஏன் கேட்கிறீர்கள்?"

"ஆம், என்னைப் பற்றி ஏதாவது அவதூறு சொல்லியிருப்பார். அதையெல்லாம் நீங்கள் நம்பாததற்கு ரொம்ப வந்தனம்! நான் பயந்தது உண்மை ஆயிற்று. அங்கே புஷ்கோட் மனிதர்கள் மூன்று பேர்; இங்கே ஸுட் போட்ட ஒருவர். ஆக, நாலு பேர் என்னைத் தொடர்ந்து இந்த வண்டியில் வருகிறார்கள். நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்!"